loader

All News

தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். பொங்கலும் தைத்திங்களும்
இரட்டிப்புக் கொண்டாட்டம். இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நலம், வளம், அன்பைக் கொண்டு வர மனமார்ந்த வாழ்த்துகள்.

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியத் திருநாள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும். 

இயற்கைக்கும், விளைச்சலுக்கும் நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் கொண்டாட்டம் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் விளங்குகிறது. பொங்கல் என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது காலங்காலமாய் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று. வாழ்வின் சிறப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் இந்த விழா தமிழர்களின் அடையாளம், 
விவசாயிகளின் உழைப்பு. இப்படிப் பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வின் சிறப்பைக் கொண்டாடும் அற்புதமான திருநாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பொங்கலைக் கொண்டாடுங்கள். உங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். இந்தப் புத்தாண்டில் புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். பொங்கல் பண்டிகையை ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்வைச் சிறப்பாக வாழுங்கள்.

புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள், புதிய மகிழ்ச்சி. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல் வாழ்த்துகள்.

மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் தின நல்வாழ்த்துகளைத்
கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹேங் தெரிவித்துக் கொண்டார்.
.
விவசாயிகளின் உழைப்பையும் இயற்கையின் அருளையும் போற்றும் இந்த பொங்கல் திருநாளில், அனைவரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எல்லா வளங்களுடனும் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்றார்.

புதிய ஆண்டான 2026 ஆம் ஆண்டு  அனைவருக்கும் வெற்றியும் முன்னேற்றமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும். குறிப்பாக, இந்திய சமூகத்தினர் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் மேலும் சிறப்பாக வளர்ந்து உயர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற தகவலை கூறி மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தே லாய் ஹேங் தெரிவித்தார்.

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்திய சமுதாயத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், தன்னுடைய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கழனியில் ஏரோட்டினாலும் வீதியில் தேரோட்டிய செம்மாந்த இனம் தமிழினம். அத்தகைய தமிழ் முன்னோர் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வேளாண் தொழிலின் வினை பயனான அறுவடையைக் கொண்டாடும் விதமாகவும் ஒற்றுமை விழாவாகவும் காலந்தோறும் தை மாத முதல் நாளில் கடைபிடிக்கின்றனர்

வேளாண் தொழிலுக்கு அடியும் முதலுமாக இருந்து துணை நிற்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லவும் வாழ்வின் எல்லா கட்டத்திலும் துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி பாராட்டவும் பொங்கல் நாளை வகுத்துள்ளனர்.

இந்த இருநாள் விழாவுக்கும் முன்னதாக போகிப்பண்டிகை என்னும் பெயரில் தீ தீயதை விளக்கி, நன்மையை கைக்கொள்ளும் விதமாக கொண்டாடிய அதேவேளை நிறைவு நாளாக காணும் பொங்கல் அல்லது  கன்னிப் பொங்கல் என்னும் வகையில் ஒரு சமூக கூட்டு விழாவாக நான்கு நாள் திருவிழாவை ஒற்றுமைத் திருவிழாவாக பொங்கல் சமயத்தில் கொண்டாடி குதூகலிக்கும் பாங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகின்ற இனம் தமிழினம்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பொங்கல் விழாவும் மலேசிய இந்திய சமுதாயத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னுறுத்தி நம் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நம்முடைய எதிர்காலம் இந்த மண்ணில் மிகவும் கேள்விக்குறியாக தெரிவதையும் இந்திய சமுதாயத்தினர் அவதானிக்க வேண்டும்.

எனவே மலேசியாவில் வாழ்கின்ற இந்திய சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து  வேறுபாட்டையும் மறந்து ஒற்றுமை என்ற ஒரே எண்ணத்தை மனதில் கொண்டு அனைத்து சமூக மக்களோடும் ஒன்றிணைந்து இந்த
பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம் என்று தன்னுடைய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர்,ஜன.14-
மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம். சரவணன் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2026 கல்வியாண்டிற்கான அண்மைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 10,330 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 11,021 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையை ஒப்பிடுகையில் 691 மாணவர்கள் குறைவாகும்.

தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக உள்ளன. இப்பள்ளிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மஇகா உறுதியாக உள்ளது.

ஆனால் இதை தனித்து செய்வது சாத்தியமில்லை என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இந்தச் சூழலை மாற்றுவதற்கு தமிழ் சார்ந்த அரசு சாரா அமைப்புகள், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கூடுதல் செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர் சேர்க்கையில் பெற்றோரின் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் டத்தோஸ்ரீ சரவணன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்க் கல்வியின் நீண்டகால மதிப்பை பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

2026ஆம் ஆண்டின் நிலவரப்படி, மலேசியாவில் 528 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 155 பள்ளிகள் 30 அல்லது அதற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கி வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது வெறும் எண்ணிக்கைகள் பற்றிய விஷயம் அல்ல. நமது மொழி, பண்பாடு மற்றும் சமூக வலிமையை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜன.12-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமாக விளங்கும் Public Gold, உலகம் முழுவதிலுமிருந்து வந்த Public Gold Business Owners (PGBOs)-ஐ FY
2024/25 Triple Diamond Recognition Ceremony என்ற உயரிய விருது விழாவிற்கு, பண்டார் உத்தாமாவில் உள்ள One World Hotel-இல் சிறப்பாக வரவேற்றது.

இந்த பிரமாண்ட விழாவில், மொத்தம் 14 சிறந்த சாதனையாளர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கௌரவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை Public Gold Group-இன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் Dato’ Seri Louis Ng அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB)-இன் மேலாண்மை இயக்குநர் Datin Seri Yvonne Lim மற்றும் PGMall-இன் செயல்பாட்டு தலைமை அதிகாரியும், இந்த உயரிய விழாவின் ஏற்பாட்டுத் தலைவருமான Jerry Ng ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2008ஆம் ஆண்டு பினாங்கில் எளிய முறையில் தொடங்கப்பட்ட Public Gold, இன்று உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மலேசியாவில் 30 கிளைகள், இந்தோனேசியாவில் 7 கிளைகள், மேலும் சிங்கப்பூர், துபாய் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களுடன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது, 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன், மதிப்புமிக்க உலோகத் துறையில் பிராந்திய அளவில் முன்னணி இடத்தை Public Gold உறுதியாக தக்க வைத்துள்ளது.
புதுமையை அடிப்படையாகக் கொண்ட பிராண்டாக விளங்கும் Public Gold, 2023ஆம் ஆண்டு முதல் மலேசியா முழுவதும் உலகின் முதல் ஃபின்டெக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Gold ATM-ஐ அறிமுகப்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

அதன் சமீபத்திய முன்னேற்றமாக, Emirates Gold நிறுவனத்துடன் மேற்கொண்ட மூலோபாய கூட்டாண்மையின் மூலம், Dubai Precious Metals Conference (DPMC) 2025-இல் இந்த ஃபின்டெக் Gold ATM-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி தங்கத்தை எளிதில் அணுகக்கூடிய புதிய காலகட்டத்தைத் தொடங்குவதோடு, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை முக்கியமான ஃபின்டெக் புதுமை மையங்களாகவும் நிலைநிறுத்துகிறது.

2008ஆம் ஆண்டு தொடக்கம் முதல், Public Gold RM23.5 பில்லியன் மொத்த விற்பனை வருவாயை ஈட்டியுள்ளதுடன், தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதுவரை 88 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 52 டன் தங்கம் மீள வாங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட சமீபத்திய வணிக விரிவாக்கங்களின் மூலம், Public Gold ஒரு நம்பகமான பிராந்திய பிராண்டாக மட்டுமல்லாது, உலகளாவிய நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இன்றைய Public Gold-இன் வெற்றிக்கு, அதன் Public Gold Business Owners (PGBOs)-இன் அசாதாரண அர்ப்பணிப்பும், விசுவாசமான வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே முக்கிய காரணங்களாகும்.

அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.

இந்த மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ‘From Vision to Legendary Leadership’ என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாண்டின் Triple Diamond Recognition Ceremony நடத்தப்பட்டு, சிறந்த சாதனைகளும் தலைமைத்துவ திறமைகளும் வெளிச்சமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஜன.11-

என் இனம் என் மக்கள் சாதிக்க வேண்டும். நம் சமுதாயத்தின் உருமாற்றம்  கல்வி வாயிலாக நடக்க வேண்டும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன்  எஸ்.எம்.சி கல்வி நிலையத்தின் கந்த வேள்வி நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக துவக்கி வைத்து பேசும் போது இதனை  தெரிவித்தார்.

அந்த வகையில் கடந்த 40 ஆண்டு காலமாக  டான்ஸ்ரீ தம்பிராஜா செய்த  கல்வி புரட்சியால் 60 ஆயிரம் பட்டதாரிகள்  இங்கு உருவாகி உள்ளனர்.

கல்வி விவகாரத்தில் சமரசமே  கிடையாது. அந்த வகையில் எஸ்.எம்.சி மற்றும்  மக்கள் குரல் எனக்கு புரிகிறது. (யூ.பி.எஸ்.ஆர் - பி.டி 3)
வேண்டும் என்ற குரலை நிச்சயம்  நான் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

கை ஏந்தும் சமுதாயமாக நாம் இருக்க கூடாது, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு  கை கொடுக்கும் சமுதாயமாக  நாம் திகழ வேண்டும்.

அந்த வகையில் நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

சில மாணவர்களுக்கு  கல்வி சரியாக பிடி கொடுக்கவில்லையா? கவலை வேண்டாம் அவர்களை தொழில் கல்விக்கு  வழி நடத்துங்கள், வன்முறை  என்ற சாயம் நம்மை விட்டு செல்ல வேண்டும் அதற்கு பெற்றோர்கள் மிக பெரிய பங்கை வகுக்க வேண்டும் எனவும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஷா ஆலம், ஜனவரி 6 –
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் தைப்பூசத் திருநாளன்று, சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே மதுபான பயன்பாட்டைத் தடுப்பது உறுதி செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, சில தினங்களுக்கு பத்துமலை வட்டாரத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது. குறிப்பாக, பத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.
மேலும், செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் மதுபான விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.
மலேசிய திருநாட்டில் தைப்பூசத் தினத்தன்று பத்துமலை, பினாங்கு, ஈப்போ, கெர்லிங், சுங்கை பட்டாணி உள்ளிட்ட முருகப் பெருமான் திருத்தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
ஆகவே, பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு மட்டுமல்லாது, நாடு தழுவிய அளவில் நடைபெறும் தைப்பூச விழாக்களின் போது ஆலய வளாகங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதையும், அருந்துவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உறுதியாக உள்ளது.
தைப்பூசத் திருவிழா காலத்தில் மதுபான விற்பனைக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் முழுமையான ஆதரவை வழங்குவதாக டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜன.6-
செலாயாங் கெப்பிட்டல் ஹாலிலும் மற்றும் செனாவாங் ஹாலிலும் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் தன் பிறந்தநாளை முன்னிட்டு வெ.500ஐ மொய்யாகா வழங்கவுள்ளதாக இந்த இரு ஹால்களின் உரிமையாளரான டத்தோஸ்ரீ ஹாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இந்த சலுகை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

சாதாராண ஹால் அலங்காரங்களை காட்டிலும் வித்தியாசமான அலங்காரங்களை பிரமாண்ட முறையில் தன் வாடிக்கையாளர் இவர் வழங்கி வருகிறார். என் வாடிக்கையாளர்கள் என் குடும்ப உறுப்பினர்கள்தான் என நான் கருதுகிறேன். ஆகையால் அவர்களுக்கு இந்த சலுகையை வழங்கவுள்ளதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செலாயாங் கெப்பிட்டல் ஹாலில் டத்தோஸ்ரீ ஹரியின் 40ஆவது பிறந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தொழிலதிபர் டத்தோஸ்ரீ புலேந்திரன், ரத்தன வள்ளி அம்மையார் உட்பட பல தொழிலதிபர்களும் போலீஸ் அதிகாரிகளும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தன் பிறந்தநாள் விழாவிற்கு வருகையளித்த அனைவருக்கும் தான் நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

கோலாலம்பூர்,ஜன.5-
பத்துமலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக பாப்பா ராயுடு உண்மை நிலை அறியாமல் கருத்து தெரிவித்து வருவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்கும் திட்டத்தை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. இதற்கான அனுமதி பெற கோம்பாக் நில அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில் தேவஸ்தானத்தின் பெயரிலேயே விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதாலும், அதற்கு ஆர்ஓஎஸ் பதிவு எண் இல்லாததாலும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, நில அலுவலகத்தின் ஆலோசனைப்படி ஆலயத் தலைவர் பெயரில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. தனிநபர் பெயரில் விண்ணப்பித்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, ஆலயத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி, தேவஸ்தான அறங்காவலர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, அதற்கான நீதிமன்ற ஒப்புதலையும் பெற்ற பின்னரே புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேவஸ்தானம் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வலியுறுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினாலேயே நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் பாப்பா ராயுடு, உண்மை நிலையை அறியாமல் பேசுவது வருத்தமளிப்பதாக டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார். சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களிடம் கேட்கலாம் என்றும், தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்ததாக கூறி விவகாரத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முடிந்தால் உதவி செய்யுங்கள்; இல்லையெனில் அமைதியாக இருங்கள். தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என டத்தோ ந. சிவக்குமார் கடுமையாக வலியுறுத்தினார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கெஅடிலான் சார்பில் 10 பேரும் டிஏபியை பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியை சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.

ப.புவனேஸ்வரன், வீ.முருகன், ச.ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய உறுப்பினர்களாவர்.

டிஏபியை பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவர் உட்பட அமானா கட்சியை சேர்ந்த துரை அன்பழகன் என்பவரும் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின்  தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

கோலாலம்பூர், ஜன.4-
நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பா கட்டுமானம், பராமரிப்பு துறையில் நீண்ட கால அனுபவமும் நம்பிக்கையும் பெற்றவர் GREAT BATH SDN. BHD. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாதன் மனோகரன் (வயது 43).

இன்றைய காலகட்டத்தில், வீடுகள், தங்கும் விடுதிகள், ரிசோட்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்களில் நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் அத்தியாவசிய வசதியாக மாறி வருகின்றன. ஆனால், ஒரு நீச்சல் குளத்தை கட்டுவதும் அதன் தொடர்ச்சியான பராமரிப்பும் சாதாரண பணியல்ல. இதில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சரியான திட்டமிடல் அவசியமாகின்றன.

அந்த அடிப்படையில், தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக தரமான மற்றும் நம்பகமான சேவைகளை Great Bath Sdn. Bhd. நிறுவனத்தின் மூலம் வழங்கி வருவதாக தொழிலதிபர் நாதன் தெரிவித்தார்.
சேராஸ் பகுதியைச் சேர்ந்த கிரேட் பாத் Great Bath Sdn. Bhd. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாதனின் வாழ்க்கைப் பயணம், சாதாரண பின்னணியிலிருந்து உயரங்களை எட்டிய ஒரு ஊக்கமளிக்கும் கதையாகத் திகழ்கிறது.

இன்று, நீச்சல் குளம் மற்றும் ஸ்பா துறையில் முன்னணி நிறுவனமாக கிரேட் பாத் உருவாகியிருப்பது, அவரது விடாமுயற்சியின் சான்றாகும்.
சேராஸில் உள்ள ஒரு எளிய அடுக்குமாடி குடியிருப்பில், பல இனங்களைச் சேர்ந்த சமூக சூழலில் வளர்ந்த நாதன், அந்த அனுபவங்களே தனது வாழ்க்கைப் பாதையை வடிவமைத்ததாகக் கூறுகிறார்.

சிறுவயதிலிருந்தே பல்வேறு இன மக்களுடன் பழகிய அனுபவம், தன்னம்பிக்கையையும் பரந்த சமூக வட்டாரத் தொடர்புகளையும் உருவாக்க உதவியதாக அவர் நினைவுகூர்கிறார்.
“என் தந்தை தான் எனக்கு முதல் ஊக்கமாக இருந்தவர். நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அர்த்தத்தை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன், என நாதன் கூறுகிறார்.

2008ல் தொடங்கிய தொழில் பயணம்
2008ஆம் ஆண்டு, பெரிய முதலீடு இன்றியே, ஒரு நீச்சல் குளம் பராமரிப்பாளராக தனது தொழில் பயணத்தை நாதன் தொடங்கினார். வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவும் நம்பிக்கையும் காரணமாக, பின்னர் அவர் நீச்சல் குளம் கட்டுமானத் துறையில் முழுமையாக கவனம் செலுத்தினார். அதன் விளைவாகவே, இன்று “கிரேட் பாத்” நிறுவனம், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா தேவைகளுக்கான ஒரே இட தீர்வாக வளர்ந்து நிற்கிறது.
இந்நிறுவனம் தற்போது
• ஆடம்பர வீட்டு உரிமையாளர்கள்
• முதல் முறையாக நீச்சல் குளம் அமைப்போர்
• ஏற்கனவே குளம் வைத்திருப்போர்
• வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு மேலாண்மை நிறுவனங்கள்
ஆகியோருக்குச் சேவையளித்து வருகிறது.

கோலாலம்பூர், சிலாங்கோர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் நிறுவனத்தின் சேவை விரிந்துள்ளது.
“நீச்சல் குளங்களில் சரியான சுத்திகரிப்பு இல்லாவிட்டால், ஏடிஸ் கொசுக்கள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் பாதுகாப்பே எங்களின் முதன்மை கொள்கை. இந்த அடிப்படையிலேயே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறோம், என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையே உண்மையான வெற்றி
இன்று கிரேட் பாத் நிறுவனத்தில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நிறுவனம் SSM மற்றும் CIDB பதிவுகளைப் பெற்றுள்ளது. மேலும், மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆடம்பர வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் விருப்பமான நிறுவனமாகவும் திகழ்கிறது.

என் வெற்றி என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையல்ல. 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் தொடரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே என் உண்மையான வெற்றி,என நாதன் பெருமிதத்துடன் கூறினார்.

தொழில்நுட்பமும் சமூக பொறுப்பும்
நீச்சல் குளம் துறையில் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கற்றுக்கொள்வது அவசியம் என வலியுறுத்தும் நாதன், வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப நூல்கள் வாங்குதல், பயிற்சிகளில் பங்கேற்பது, சர்வதேச கண்காட்சிகளில் கலந்துகொள்வது போன்ற வழிகளில் தனது அறிவையும் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.

வணிகத்துடன் மட்டுமல்லாமல், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளிலும் கிரேட் பாத் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் அன்பளிப்பு பொருட்கள் விநியோகம், விளையாட்டு அணிகளுக்கு ஆதரவு, விலங்குகள் தத்தெடுப்பு திட்டங்கள் ஆகியவை அதன் முக்கிய முயற்சிகளாகும்.

நாங்கள் வணிகத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை. முதலில் மனிதர்களை உருவாக்குகிறோம். அந்த மனிதர்களே எங்கள் வணிகத்தை உருவாக்குகிறார்கள்,என நாதன் தனது வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்தினார்.

நீச்சல் குளம் கட்டுமானத்தில் உள்ள முக்கிய சவால்கள்:

1. வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் சிக்கல்கள்
நிலத்தின் தன்மை, நீர்மட்டம், காலநிலை, பயன்பாட்டு நோக்கம் ஆகியவற்றை சரியாக மதிப்பீடு செய்யாமல் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, எதிர்காலத்தில் கசிவு மற்றும் கட்டமைப்பு சேதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
2. தரமான பொருட்களின் பயன்பாடு
தரமற்ற டைல்ஸ், பைப் லைன்கள் மற்றும் வாட்டர் ப்ரூஃபிங் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், குறுகிய காலத்திலேயே பழுதுகள் ஏற்பட்டு அதிக பராமரிப்பு செலவுகள் உருவாகும்.
3. தொழில்நுட்ப அறிவு பற்றாக்குறை
நவீன நீச்சல் குளங்கள் வெறும் கான்கிரீட் அமைப்புகள் அல்ல. அவை வடிகட்டும் முறை (Filtration System), நீர் சுத்திகரிப்பு (Water Treatment) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கியவை. இதற்கான தொழில்நுட்ப அறிவு இல்லையெனில் தரமான குளம் உருவாகாது.

இந்தத் துறையில் அதிக அனுபவமும் சிறந்த திட்டமிடல் திறனும் கொண்டவர் நாதன். ஆகவே, நீண்ட காலமாக தனது வீட்டில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள், தரம் மற்றும் அனுபவம் இல்லாத இடங்களில் ஏமாற வேண்டாம் என்றும், தேவையான வழிகாட்டுதலுக்கு தாம் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்பு கொள்ள விரும்புவோர்
012-499 0031 என்ற தொலைபேசி எண்ணில் நாதனை தொடர்பு கொள்ளலாம்.

 

ஷா ஆலம், ஜன 2-
மலேசிய திராவிடர் இயக்கத்தின் ஏற்பாட்டில்,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்
52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மனிதர்கள் பகுத்தறிவுடன் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற வழிக்காட்டலை உலகிற்கு எடுத்துரைத்தவர் தந்தை பெரியார்.
அவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவர் வகுத்துச் சென்ற சுயமரியாதை வழிக்காட்டலும் கொள்கைகளும் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று,
ஷா ஆலம் மாப்பிளை உணவக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார்.

கழகத்தின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பா. சோமசம்பந்தனார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, நெறியாளர் பொன். வெண்முல்லை சிறப்பாக வழிநடத்தினார்.

தமிழ் வாழ்த்து மற்றும் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, இளைஞர் மாணவர் படைப்புகளாக யு. இன்பகீரன் மற்றும் யு. இயல்வளவன் ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, கழகத்தின் பொறுப்பாளர்களின் படைப்புகளாக
கவிதைகள், சிறப்புரைகள், கலந்துரையாடல், ஆத்திச்சூடி, ஓவியப் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கழகத்தின் தேசியத் தலைவர் சா. இரா. பாரதி அன்பளிப்புகளை வழங்கினார்.

சிறப்பு நிகழ்ச்சியாக, மலேசிய திராவிடர் கழக காற்பந்து குழு அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விளையாட்டு சீருடையை தேசியத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இரவு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில்,
தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும்,
சுய மேம்பாட்டிற்கும்
நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டிய நேரம் இது.


சவால்கள் நிச்சயமாக வரும்;
ஆனால் ஒன்றிணைந்த சக்தி,
திடமான மனப்பாங்கு
மற்றும் உறுதியான தீர்மானத்துடன்
அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.


2026 ஆம் ஆண்டு,
தடைகளை உடைத்து, எல்லைகளை மீறி,
நமது திறமையும் ஆற்றலும் என்னவென்பதை
உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.
வெற்றியை முழுமையாக நாமே கைப்பற்றுவோம்!


இந்த ஆண்டு அனைவருக்கும்
ஆசீர்வாதமும், வெற்றியும்,
வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக
அமையட்டும்.


மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்,
தேசிய மஇகா பிரிகேடு தலைவர்,
மஇகா – எம்ஐடி விளையாட்டு பிரிவு தலைவர்
ஆன்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர், டிச.31-
மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியல் களம் அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி பயணிக்கின்ற தற்போதைய சூழலில், மஇகா-வும் முக்கியமான அரசியல் நகர்வை நோக்கி பயணிக்கிறது என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்திய சமுதாயம் வளரும்  இப்புத்தாண்டில் வளமும் நலமும் பெற்று இந்த மலையக நாட்டில் தங்கள் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக 2026 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய இந்தியர்களின் அரசியல்-சமூகம்-பொருளாதாரம்- கல்வி-சமயம் சார்ந்து தொடர்ந்து ஆக்ககரமாக மஇகா தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வி மறுமலர்ச்சியில் இந்திய சமுதாயம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது மஇகா-வின் நிலைப்பாடாகும்.

அந்த வகையில் துன் சாமிவேலு அவர்களின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொரு பட்டதாரியை உருவாக்கும் கடப்பாட்டில், மஇகாவின் கல்வி கரமான எம்.ஐ.இ.டி. இன்கீழ் இயங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மூலம் கல்விச் சேவை வழங்கி வருகிறது மஇகா.

அந்த வகையில் இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதுடன் பொருளாதார மேம்பாடு, வளப்பம், சமுதாய ஒற்றுமை, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியவற்றை மலரும் இந்த 2026-ஆம் வருடத்தில் எட்டிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க்கையின் பயணத்தில் ஓர் ஆண்டின் முடிவும், மற்றொரு ஆண்டின் தொடக்கமும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்று தான். வாழ்க்கையின் தேக்கங்கள் யாவும் நீங்கி, மாற்றங்கள் அனைத்தும் ஏற்றங்களாக மாற, மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

எண்ணங்களில் தெளிவு பிறந்து, செயல்களில் துணிவு பெருகி, மனங்களில் நம்பிக்கை மலர வேண்டும் என்பதே இந்த புத்தாண்டின் பிரார்த்தனை. பழைய வலிகள் பாடமாகி, புதிய நம்பிக்கைகள் பாதையாகி, உழைப்புக்கு உரிய பலனும், அன்புக்கு அர்த்தமுள்ள உறவும் கிடைக்கட்டும். அமைதியும், ஆரோக்கியமும் வெற்றியும் புதிய ஒளியாய் அனைவர் வாழ்விலும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” நம்முடைய எண்ணங்களும், செயல்களுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எனவே,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

நாம் பார்ப்பது, கேட்பது, பழகுவது அனைத்தும் நல்ல விஷயங்களாக இருப்பதை உறுதி செய்வோம்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமைதி நிலைத்து, ஆரோக்கியம் பெருகட்டும். இந்த புத்தாண்டு வார்த்தைகளில், வாழ்க்கையில், செயல்களில், சாதனைகளில் ஒளிரும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு யாவருக்கும் இனிதாய் மலரட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 

கோலாலம்பூர், டிச.30-
பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவுடன் டெல்லியில் Constitution Club Of India ஏற்பாட்டில் நடைபெற்ற   நிகழ்வில்  World Educationl Achievement Award லில் மலேசிய நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர
சிவாச்சாரியார் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டில் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் ஆசிரியர் உயர்திரு திருஞானம் அவர்களிடம் முறையாக சிற்ப ஆகமங்களை பயின்று மலேசியாவில் சிற்ப கலாலயம் என்ற நிறுவனத்தை நிறுவி பல்வேறு சிற்ப வேலைகளையும் மற்றும் ஆலய வழிபாடுகளையும் இவர் செய்து வருவதோடு அண்மையில் Punca Alam சிவனாலயம் மற்றும்  Puchon-இல் அம்மன் ஆலயமும் முழுமையாக கருங்கல்லால்  இவரது நிறுவனமே ஏற்று நடத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில்  பூங்குன்றம் ,சித்தூர், ஆவடி போன்ற இடங்களில் கருங்கல் இவர் ஆலயங்கள் அமைத்து வருவதோடு நம் நாட்டினர் பெயர் விளங்க செய்திருக்கிறார். 

இவ்வேளையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தமைக்கு அவருக்கும் அவர்தான் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

கோலாலம்பூர், டிச.30
பெரிக்காத்தான் நேஷனல்  கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக டத்தோ ஸ்ரீ முகமாட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார்.

அந்த வகையில் ,  தனது ராஜினாமா ஜனவரி 1ஆம் திகதி  முதல் அமுலுக்கு வருவதாக டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி  குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் தொடர்பு குழு தலைவர்  பதவியும் தான் ராஜினாமா செய்வதாகவும் அஸ்மின் அலி தனது அதிகாரபூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

அதிகாரபூர்வ கடிதம் இதுவரை வெளியிடபடவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.30-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலகியுள்ளார்.

டான்ஸ்ரீ மொகிதீனின் விலகலை  பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி,   தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் உறுதி செய்தனர்.

முன்னாள் பிரதமரான அவர் நேற்று இரவு கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களின் வாட்சாப் குழுவில்  இந்த அறிவிப்பை பற்றித் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே கட்சியின் உள் வட்டாரத்தில் ஒருவர், டான்ஸ்ரீ மொகிதீன் தேசியக் கூட்டணி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை இறுதி செய்துவிட்டதாக அறிவித்ததாகத் துன் பைசால் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் டான்ஸ்ரீ மொகிதீனின் நோக்கத்தை சில உச்சமன்ற உறுப்பினர்கள் எதிர்த்ததாகவும், அவர்கள் மொகிதீனிடம் தனது முடிவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், டிச. 29-

கெடா மற்றும் பினாங்கில் திட்டமிடல் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ‘கேங் ராமெஸ்’ என அழைக்கப்படும் கும்பலை Ops Tiga சிறப்பு நடவடிக்கையின் மூலம் போலீசார் முறியடித்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை, கெடா மாநில போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் புக்கிட் அமான் சிறப்பு பிரிவு இணைந்து
நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை நடத்திய இந்த நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் இந்த குழு ஈடுபட்டதாக போலீசார் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

முன்னதாக ‘கேங் 35'  பின்னர் ‘கேங் ரூசா போய்’ என அழைக்கப்பட்ட இந்தக் குழு, தற்போது ‘கேங் ரமேஷ்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

சுங்கை பெட்டானி, குலிம் மற்றும் புலாவ் பினாங்கின் சில பகுதிகளில் கொள்ளை, கொடூர தாக்குதல், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற வன்முறை குற்றங்களில் இந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவின் தலைவர் ஜி.ஆர். ரமேஷ் உட்பட 15 பேர் தற்போது தலைமறைவாக உள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முன்பிருந்தே கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 17 பேரில், ஏழு பேர் 2020 ஆம் ஆண்டு குற்றச் சட்டத்தின் பிரிவு 130Vன் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்றும், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து 2024 ஜனவரியில் விடுதலையான பின்னர், மீண்டும் அதிக ஆக்கிரமிப்புடன் இந்தக் குற்றக்குழுவை அமைத்ததாகவும் டத்தோ குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் SOSMA சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வழக்கு ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு, சுங்கை பெட்டானி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், டிச.29-
தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில்
ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில்  “மாறுவோம் முன்னேறுவோம்” என்கிற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1,800 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்நிகழ்வில்,  மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற  உயரிய விருதை திரு ஆசான்ஜி அவர்கள் வழங்கினார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் மனித நேயச் சேவை ,  இலக்கியத்துக்கும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, மலேசிய நாட்டில் இரண்டு தவணை துணை அமைச்சராக, மனித வள அமைச்சராக ஆற்றிய சாதனைப் பணிகள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது மொழி ,மதம், இனம் கடந்த அவரது மக்கள் நலப் பணி மற்றும் கடல் கடந்த  அவரது  எண்ணற்ற சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு  இந்த விருதுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஆசான்ஜி அவர்கள் கூறினார்.

மொத்தம் 12 ஆளுமைகளை இறுதி செய்து அதில் எல்லா நிலைகளிலும் தகுதி மிகப்பெற்ற  மாபெரும் தலைவராக மாண்புமிகு டத்தோ சரவணன் தெரிவு செய்யப்பட்டார் என்று ஆசான்ஜி அவர்கள்  குறிப்பிட்டார்.

மேலும் தனது வாழ்த்துரையில், அதிகாரங்களைத் தன் தலைக்கு ஏற்றாமல் எளிய மக்களும் தன்னை அணுகக் கூடியவராக மலேசியாவில் இருக்கும் ஒரு மாபெரும் ஆளுமை மிக்க தலைவராகத் திகழ்கிறார் டத்தோ ஸ்ரீ சரவணன் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இவரது வாழ்வும் வார்த்தைகளும் இன்றைய இளைய தலைமுறையின் முனேற்றத்திற்கு வழிகாட்டியாக  இருப்பதினால் “வாழும் வழிகாட்டி” என்ற  இந்த உயரிய விருதுக்கு மிகத் தகுதியானவர் மாண்புமிகு டத்தோ  ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் என்று திரு ஆசான்ஜி அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

விழா அரங்கில்  கூடியிருந்த அனைவரின் ஏகோபித்த பலத்த கரவொலியோடு விருது வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

கோலாலம்பூர், டிச 29-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு கட்டுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

மின் படிக்கட்டு கட்டினால் முதியவர்கள் தாராளமாக மேலே சென்று முருகனை வழிபட்டு திரும்பலாம்.

நாங்களும் அனுமதி கொடுக்க கோரி பலமுறை கோரிக்கையை முன் வைத்து விட்டோம்.

ஆனால் இன்று வரையிலும் அனுமதி கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு அனுமதி கிடைத்தால் திட்டமிட்டபடி கட்டி முடிப்போம்.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து விட்டோம்.

வரும் தைப்பூசம் கொண்டாட்டத்தின் போது ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இருப்பினும் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்குறுதி என்னவானது என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

பக்தர்களின் நலன்களுக்கான பத்துமலையில் பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

3,000 பேர் அமரக் கூடிய பல்நோக்கு மண்டபம் கட்டும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இத் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

இந்நிலையில் தான் இவ்வாண்டு தொடக்கத்தில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தலைவர்கள் பத்துமலைக்கு வந்தனர்.

அப்போது இப் பிரச்சினைக்கு எல்லாம் விரைவில் தீர்வுக் காணப்படும். அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார் என்று
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், அஸ்ட்ரோ நிறுவனத்தை சேர்ந்த ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், டிச.26-
1எம்டிபி வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பாதுகாப்பு குழு சமர்பித்த அரபு நன்கொடை கடிதத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் அந்த ஆவணம் போலியானது என்று வலியுறுத்தியுள்ளது.

இன்று காலை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா, நஜிப் இந்த நிதியை அரபு நன்கொடைகள் என்று கூறியதே அதை நம்ப முடியாததாக மாற்றியதாகக் கூறினார்.

சவூதி அரேபியா நன்கொடை விவரிப்புக்கு எந்த தகுதியும் இல்லை. சவூதி நன்கொடை கடிதங்கள் போலியானவை.

மேலும் பணம் உண்மையில் 1 எம்டிபி நிதியிலிருந்து வந்தது என்பதை ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

சவூதி நன்கொடைக்கான வாதங்கள் நம்பகமானவை அல்ல என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

மேலும் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் லஞ்சம் என்ற அனுமானத்தை அழுத்தமாக மறுக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.

கோலாலம்பூர் டிசம்பர் -25

அன்பின் மகுதுவத்தை  உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தனது வாழ்த்து செய்தியில்  தெரிவித்தார்.

இயேசு நாதரின்  பிறந்தநாளை நினைவுகூரும் இந்த புனித கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் அனைவரின் வாழ்க்கையில் அன்பும், கருணையும், அமைதியும், ஒற்றுமையும் , நம்பிக்கையால் நிரம்பி விளங்க  வேண்டும்.

மனித நேயம், சகோதரத்துவம், தியாகம் போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துச் சொன்ன இயேசுவின் போதனைகள், இன்றைய காலகட்டத்தில் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் ஓர் ஆன்மீகப் பிணைப்பாகவும் திகழ்கிறது.

மதம், இனம், மொழி என்ற எல்லைகளை கடந்து, அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்மஸ் விளங்குகிறது.

அந்த வகையில், பல இன மக்கள் இணைந்து வாழும் நமது மலேசிய நாட்டில், ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் மேலும் வலுப்பெற இந்த நாள் ஓர் அழகிய நினைவூட்டலாக அமைகிறது.

வருட இறுதி மாதம் என்றாலே அது கொண்டாட்டங்கள், விடுமுறைகள், குடும்பச் சந்திப்புகள், உறவுகளோடு ஒன்றுகூடல் என மகிழ்ச்சியால் நிறைந்த மாதமாக இருக்கிறது.

பொது விடுமுறைகள், சொந்த விடுமுறைகள் என பலரும் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதும், நீண்ட நாட்களாகக் காணாத உறவுகளைச் சந்திப்பதும் இந்த மாதத்தின் தனிச்சிறப்பாகும்.

கிறிஸ்மஸ் தினத்தைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டை  உலக மக்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடும் ஒரு புதிய தொடக்கத்தின் சின்னமாகத் திகழ்கிறது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளோடு முன்னேறும் ஒரு வாய்ப்பாக இந்த புத்தாண்டு அமையட்டும் என டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்  தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

உலக மனிதர்கள் அனைவரிடத்திலும், அன்பையும், நல்லிணக்கத்தையும் போதிக்கப் பிறந்து வந்த இயேசுபிரானின் மகத்தான பிறப்பை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் மலேசியக் கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் குறிப்பாக, இந்திய கிறிஸ்துவ சமூகத்திற்கு எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மைக் கடந்து போகும் 2025-ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் இன, மத ரீதியான மோதல்களும், கொலைகளும் நடந்திருப்பதைக் காணும்போது இயேசுபிரானின் அன்பு சார்ந்த போதனைகள் இன்னும் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோம்.

மற்ற மதத்தினரின் போற்றுதலுக்கு உரிய அவரின் போதனைகளை நாமும் இயன்றவரை பின்பற்றி, பல இனம் கொண்ட நம் மலேசிய சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையும், அன்பும் செலுத்துவோம்.

மஇகாவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக நாம் அனைத்து இன, மத சகோதரர்களை காலம் காலமாக அரவணைத்து வந்திருக்கிறோம். பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது மஇகா கட்சியில் பல தருணங்களில் இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் வாய்ப்புகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறோம்.

கடந்த காலங்களில் பல கிறிஸ்துவ அன்பர்கள், மஇகாவின் சார்பில் அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கட்சியின் உயர் பதவிகளுக்குத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது மஇகாவின் தேசிய உதவித் தலைவராகத் தேர்தல் மூலம் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அவர்கள் செனட்டராகவும் மஇகாவைப் பிரதிநிதித்து நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தார்.

மஇகாவின் இத்தகைய, அனைத்து மத, இன சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாடு என்றென்றும் தொடரும் என உறுதி கூறுகிறேன்.

கிறிஸ்துவ அன்பர்கள் தேவாலயங்களுக்கு சென்றும், மற்ற இன சகோதரர்களைத் தங்களின் இல்லங்களுக்கு அழைத்து திறந்த இல்ல பொது உபசரிப்புகள் நடத்தியும் கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென மஇகாவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்

செமிஞ்யே, டிசம்பர் 24 –

செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் சிறப்பு பிரிவின் ஏற்பாட்டில், செமிஞ்யே சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாட் நுஷி மக்ஃபோஸ் அவர்களுடன் இணைந்து  2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, செமிஞ்யே சட்டமன்ற பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு உணவு கூடைகள் உள்ளிட்ட அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என நிகழ்வின் ஏற்பாட்டாளரும், செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியுமான பூபாலன் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்விற்கு டத்தோ டாக்டர் பன்னீர்செல்வம் அவர்கள் ஆதரவு வழங்கியதுடன், மக்களுக்கு உணவுக் கூடைகளை நேரடியாக வழங்கி தனது பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் 2025 கொண்டாட்டம், மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை  இந்த பண்டிகை காலம் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என நிகழ்ச்சி பூபாலன்  தெரிவித்தார்

இந்த நிகழ்வின் வாயிலாக, உதவி பொருட்கள் அனைத்தும் முறையாக  திட்டமிட்ட வகையில் தேவையான மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பூபாலன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மத நல்லிணக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இந்த நிகழ்வு அமைந்ததாக அவர் தெரிவித்ததுடன், நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதாகவும் பூபாலன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் டிச 24-
இராஜ ராஜ சோழன்
(முதலாம் இராஜராஜன்) சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக வலம் வந்தவர்.

இவரது இயற்பெயர் அருண்மொழி வர்மன்.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, சோழப் பேரரசை விரிவுபடுத்தி, கலை மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்.

தஞ்சைப் பெரிய கோவிலை
கட்டியவர் இவரே.

இவரது ஆட்சிக்காலம் "பொற்காலம்" எனப் போற்றப்படுகிறது.

இராஜ ராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆஃப் ஆர்ட்ஸ் பைனஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விழா நடைப்பெறுகிறது என்று விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ இராமன் தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கும் இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த  சுகி சிவம் அவர்கள் இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை பற்றி பேசுவார்.

அதேபோல் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை அவர்கள் கடாரம் கொண்டான் என்ற தலைப்பில் இராஜ ராஜேந்திரன் சோழனை பற்றி பேசுவார்.

ம இகா தேசிய துணைத் தலைவரரு. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார்.

சுமார் 600 பேர் அமரும் இந்த மண்டபத்தில் தற்போது 100 வெள்ளி மற்றும் 250 வெள்ளி என்று டிக்கெட் விற்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இராஜ ராஜ சோழன் ஒரு வரலாற்று நாயகன் மட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் மாபெரும் அரசனாக விளங்கியவர்.

இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னமும் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது.

இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை மலேசியத் தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ப்புக்கு : 016-2226001 சுமதி 012-3010716 சுவாமிநாதன்

கோலாலம்பூர், டிச.21-
அண்மையில் ஒரு மலாய் ஊடகத்தில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  மிகவும் தெளிவாக மற்ற இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் இணைப்பதில் ம.இ.காவுற்கு எந்த அச்சியேபமும் இல்லை என கூறியுள்ளார்.

அந்த தகவலுக்கு பிறகு, இன்று மக்கள் சக்தி மாநாட்டில்  மற்ற கட்சிகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால் ஒரு  புதிய குற்றச்சாட்டை ம.இ.கா மீது வைத்து  விட்டார் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி என ம.இ.காவின் தேசியத் துணைத்  தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல ஆண்டுகளாக அனைத்து இந்திய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அதை இந்திய கட்சிகளும் நன்கு அறிவார்கள்.

ஐ.பி.எப் மாநாட்டில் ஜாஹிட் பேசுகையில், சில இந்திய கட்சிகள் தேசிய முன்னணியில் இணைய  உறுப்பு கட்சிகள்  தடையாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

அதற்கு பிறகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா எந்த ஒரு இந்திய கட்சியும் உள்ளே வர  எப்போதும் தடுக்கவில்லை.  தாராளமாக அவர்களை இணையுங்கள் என ம.இ.காவின் நிலைப்பாட்டை  தெளிவாக தெரிவித்து விட்டார்.

இன்று மக்கள் சக்தி மாநாட்டில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  குற்றச்சாட்டை ம.இ.கா பக்கம் திருப்பி விட்டுவிட்டார் தேசிய முன்னணி தலைவர்.

எங்களை பொறுத்த வரை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெளிவாக சொல்லிவிட்டார், எந்த இந்திய கட்சிகளும்  உள்ளே வர ம.இ.கா தடையாக இருந்தது இல்லை என டத்தோ ஸ்ரீ சரவணன் பதில் அடி கொடுத்தார்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், டிச. 19-
சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சத்திற்கும் அதிகமான  மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று உறுதி அளித்தார்.

மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், இன்று சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவ தாக அவர் சொன்னார்.

புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன் என்றார்.

பெட்டாலிங் ஜெயா, டிச. 16-
தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்   பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி  திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக இன்று டிசம்பர் 16 ஆம் திகதி பள்ளியில்  நடைபெற்றது.

விழாவின் சிறப்பு வருகையாளராக பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் இடைநிலை & படிவம் 6 க்கான உதவி அதிகாரியுமான மதிப்புமிகு குஹானிஸ் பிந்தி முகமட் சைன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அனைத்து பள்ளிகளும் மூலிகைத் தாவரங்களின்  மகிமையைப் போற்றும்  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மாணவர்கள்  வகுப்பறைக் கற்றல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டால் போதாது ,மாறாக வாழ்வியல் தொடர்பான பயனுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆண்டு இறுதியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எப்பிங்காம்  ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குறியது. அந்த வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர்  வீ. சுகுணவதி அவர்கள் தமது சிறப்புரையில் ஆண்டு இறுதியில்  பள்ளி மாணவர்களின் வருகையை  அதிகரிக்கச் செய்ய இந்நடவடிக்கை எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது என்றார்.

எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. அதனை வெளிக்கொணரவே  மூலிகைத் தாவரங்களின் மகிமையை ஒட்டி மாணவர்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காய்கறிகள் சாப்பிடுவது என்றால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. அதனை எவ்வாறு சத்துள்ள உணவாக மாற்றி உண்ணலாம் என்பதை இந்நிகழ்வின் வழி மாணவர்கள் அறிந்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் மூலிகைத் தாவரங்கள் அதில் உருவாக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குமாரி கார்த்தினா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது. கற்பித்தல் மூலம் வடிவமைப்பு (KmR), திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL), TS25 திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சியும் மிகச் சிறப்பாக   நடந்தது.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது.

புதிய அமைச்சரவையின் மாற்றத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதில் சில அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.

அந்த வகையில் இந்திய அமைச்சர்கள் கைவசம் இருந்த மனிதள அமைச்சு இதற்கு முன்னர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அறிவிப்பில் அந்த பதவி மீண்டும் இந்தியரின் கைவசம் திரும்பியது.

இதற்கு முன்னர் தொழில்முனைவோர்  மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ரமணன் தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அமைச்சர் பதவியை ஜசெகவை சேர்ந்த ஸ்டீவன் சிம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.16-
இந்திய சமுதாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பதற்கு மஇகாதான் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டனர் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவிற்கு அரசாங்கத்தில் எந்த பதவியும் இல்லாதபோதும் கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது மஇகா வலுவான கட்சியாக செயல்படுகிறது.

ஆகையால் கட்சியின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் செயலவை உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக நாட்டம் செலுத்த வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தன்னுடன் இணைந்து தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அதிகம் பாடுபட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு நான் கடமை பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்கி தெரிவித்தார்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஏற்பாட்டில் இன்று நேதாஜி மண்டபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் 60ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

மற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இன்று டான்ஸ்ரீ-இன் பிறந்த நாள் விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக கூறிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், தெரிந்திருந்தால் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டை இந்த கூட்டத்திற்கு அழைத்து அரசியல் அறிவிப்பை செய்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த கூட்டம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.

டான்ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர்,டிச.12-
நாட்டின் இந்திய கட்சிகளின் ஒன்றான ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது பொது பேரவை எதிர்வரும் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரை  செமிஞ்சே ஏகோஹில் கிளாப் 360 எனும் இடத்தில் நடைப்பெறுகிறது.

இந்த பேரவையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி  சிறப்பு வருகை புரிய உள்ளதாக  கட்சியின் செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.
 
ஐ.பி.எஃப் கட்சி தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக  பல ஆண்டுகள் இருந்த வந்த நிலையில், உறுப்பு கட்சியாக உருமாற பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அந்த வகையில், தற்போது தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா - ம.சீ.ச விலகும் சூழல் உருவாகி தலைவர்களிடையே கருத்து மோதல் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ம.இ.கா மாநாட்டில் தேசிய முன்னனி தலைவர் உட்பட பலருக்கு அழைப்பு இல்லை. இந்த கால சூழலில், இப்போது ஐ.பி.எஃப் மாநாட்டை திறந்து வைக்க தேசிய முன்னனி தலைவர் வருகிறார்.

அங்கு அவரது உரை எப்படி இருக்க போகிறது என அரசியல் வட்டாரம் காத்து கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக உறுப்பு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற ஐ.பி.எஃப் கட்சியின் கனவுகளுக்கு இந்த பேரவை மேடை கதவை திறந்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியாகினும், ஐ.பி.எஃப் மாநாட்டிற்கு  துணை பிரதமரின் வருகை  பெரிய எதிர்பார்ப்பையும் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்தையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர், டிச.9-
தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்தையும், மாணவர்களின் நன்னெறி வளர்ச்சியையும் முன்னிருத்தி செயல்பட்டு வரும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா), தனது புதிய கல்விசார் முயற்சியாக ‘வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்’ எனும் கதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொகுப்பினை வாங்கி தாங்கள் படித்த முன்னாள் பள்ளிகளுக்கு வழங்கும்படி பேரவை மக்களை கேட்டுக் கொள்கிறது.

பேரவையின் து. தலைவர் குமரன் மாரிமுத்து மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ராமசங்கரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெர்த்தாமாவின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படச் செய்வதே என கூறப்பட்டது.

தற்போது 528 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இயங்கினாலும், வெறும் 120 பள்ளிகளுக்கு மட்டுமே முன்னாள் மாணவர் சங்கங்கள் உள்ளன என்பதைக் கவலையுடன் பேரவை தெரிவித்தது. சங்கங்கள் இயங்கும் பள்ளிகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல பள்ளிகளில் இத்தகைய அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

பெர்த்தாமா தற்போது வெளியிடும் 10 புத்தகங்கள் அடங்கிய ‘நித்திரைக் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் 61 சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு நன்னெறி, ஒழுக்கம், கருணை போன்ற உயர்ந்த பண்புகளை விதைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

புத்தக விற்பனையின் வருவாய் முழுவதும் பேரவையின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த புத்தகத் தொகுப்பை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் பேரவை நல்லுள்ளங்களை மீண்டும் கேட்டுக் கொண்டது.

கல்வி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க ஒருமுறை நிகழ்ச்சிகள் போதாது; தொடர்ந்து, திட்டமிட்டு செயல்படும் பணிகளே பள்ளிகளுக்கு உண்மையான பலன்களை வழங்கும் என பெர்த்தாமா வலியுறுத்தியது. அதனை முன்னெடுக்க போதுமான நிதி நமக்கு தேவை என்றும் அவர்கள் கூறினர்.

பெர்த்தாமா நடைமுறைப்படுத்திய தமிழ்மொழி விழா சிறப்பாக நடத்தப்பட்டதாகவும், ஆனால் மானியம் பற்றாக்குறையால் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் சிறப்பாக இருந்ததால் அதனை மற்ற தரப்புகள் தொடர்ந்து நடத்தி வருவதாக பார்த்திபன் கூறினார்.

அதே நேரத்தில், மாநில அளவிலும் செயல்பாடுகளை வலுப்படுத்த நான்கு மாநிலங்களில் மாநில பேரவைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்களிப்பு, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பெர்த்தாமா வலியுறுத்தி, மேலும் பலர் இதில் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

கோலாலம்பூர், டிச 9-
ஜோகூர், மூவார் பகுதியை பூர்வீகமாக கொண்ட பேராக் மாநில சொக்சோ துறை அதிகாரி உமாதாஸ் பிள்ளை மற்றும் சரஸ்வதி தேவி தம்பதியரின் புதல்வி லுசிந்தரா பிள்ளை அண்மையில் மலாயா பல்கலைகழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த தேர்ச்சியோடு சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

அவர் நேரத்தை சிறப்பாக நிர்வாகித்து படித்து முதுகலை கல்வியை அவர் நிறைவு செய்துள்ளார்.

அதே வேளை, லுசிந்திரா பிள்ளை வழக்கறிஞராகவும் பணிபுரித்து வருகிறார்.

அடுத்து, சட்டத்துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் தொடரவிருப்பதாக கூறினார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் தாம் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அவருடைய முதுகலை பட்டப் படிப்பு சுமூகமாக நிறைவுப் பெற விரிவுரையாளர்களும் நண்பர்களும் உறுத்துணையாக இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ, டிச 9-
சுற்று வட்டார மக்களுக்கு பல வகையான சேவைகளை செய்து வரும் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தீ சியாங் நேற்று 65 அங்குலம் கொண்ட நான்கு ஸ்மார்ட் ரக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் , பெற்றோர் சங்கத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் கல்விக்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.

இது மாணவர்களுக்கு மட்டும் நன்மையல்ல. மாறாக, ஆசிரியர்களின் போதனைக்கு துணையாக இருக்கும். பாடங்களை போதிக்க ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி அவசியமாகிறது என ஸ்டிவன் தீ சியாங் கூறினார்.

கோலாலம்பூர்,டிச.4-
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி  மலாக்கா டுரியான் துங்கால்  பகுதியில் 3 ஆடவர்கள் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.

இது தொடர்பாக  மலாக்கா மாநில போலீஸ் தலைமையகம் கொடுத்த செய்தி அறிக்கையில் போலீசார் நடத்திய சோதனையின் போது 3 நபர்கள் பாராங் கத்தியை கொண்டு போலீசாரை தாக்க முற்பட்டபோது, ஒரு  போலீஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்காப்பு காரணமாக  அந்த மூவரை அதிகாரிகள் சுட்டதாகவும் அதில் இருவருக்கு  ஏராளமான குற்றப் பதிவு உள்ளதாகவும் இன்னொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இப்போது பதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தார்கள்  தங்களது வழக்கறிஞருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஒரு முரண்பாடான தகவலையும் ஒரு  உரையாடல் பதிவையும் வெளியிட்டதுடன் இது தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு  துறை இந்த விசாரணை கையில் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், முதலில் புக்கிட்  அமான் போலீஸ் தலைமையகத்திற்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, முரண்பாடான சில விவரங்கள் இருப்பதால் முழு விசாரணை  செய்வதின் வாயிலாக அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். போலீஸ் படை மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழும்போது  அரச மலேசிய போலீஸ் படை நாட்டின் சட்டம் மீது களங்கம் வராமல் இருக்க புக்கிட் அமான் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குறியது என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஒரு குரல் பதிவின் வாயிலாக சந்தேகத்தை எழுப்பியுள்ள குடும்ப உறுப்பினர்களும் நியாயம் கேட்டு நிற்கின்றனர்.
அந்த வகையில் எந்த  ஒரு தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு சுதந்திரமான விசாரணை   ஆணையத்தை அமைக்க  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு விட வேண்டும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன்  அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை  ஆணையம் அமைக்க பட வேண்டும் என  தாம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு  அதிகாரபூர்வ கடித்தை அனுப்பியுள்ளதாகவும்  டத்தோஸ்ரீ எம் .சரவணன் தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைத்து மக்களுக்கு சமமாக கிடைக்க வேண்டுமெனவும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்
 

ஈப்போ, டிச 4-
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பேராக் மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான்‌ தெரிவித்துள்ளார்.

பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு  இரண்டு மாத போனஸ் வழங்க தீர்மானித்துள்ளனர்.

  வரலாற்றுலேயே இதுவே சிறப்பான பேராக் மாநில பட்ஜெட் என்று கூறலாம்.

மேலும் பேராக் மாநிலத்திற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி என்றார்.

2023 ஆம்‌ ஆண்டு தொடங்கி பேராக் மாநில பட்ஜெட் அதிகரித்துள்ளது. மடானி அரசாங்கம் கீழ் அனைத்துமே வெற்றி என்றார்.

கோலாலம்பூர், டிச 4-
பள்ளி விடுமுறை தொடங்கவிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அடுத்த வருடம் பள்ளி பொருட்கள் வாங்கும் செலவும் பெற்றோர்களுக்கு உண்டு.  அந்த வகையில் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தில் ஒரே நோக்கம் சங்கம் நேற்று 
கூட்டரசு‌ பிரதேச முதியவர், சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தை சேர்ந்த மாணவர்களுக்கு‌ பள்ளிக்கான பொருட்களை வழங்கினர்.

பள்ளிச் சீருடை தொடங்கி காலணி‌ வரை அனைத்துமே ஒரே நோக்கம் சங்கம் தங்கள் செலவில் வாங்கி கொடுத்தனர்.

இதனிடையே , இந்த சங்கத்தின் தலைவர் ஆனந் குணசேகரன், துணைத் தலைவர் ரேமன் பிரான்சிஸ் அப்பிள்ளைகளிடம் நேரடியாக பள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.

அதனுடன் , மாணவர்களுக்கு வாழையிலை உணவும் வழங்கப்பட்டது.

இது சங்கத்தின் 114 ஆவது சமூகப்‌பணி‌ என ரேமன்‌ கூறினார்.

எங்களால் இயன்றவரை ஆதரவற்ற பிள்ளைகள், முதியவர்கள், பேர் குறைந்தவர்களுக்கு உதவி‌ வருகிறோம் என ரேமன் கூறினார்.

இவ்வேளையில் எங்களுடன் இணைந்து இந்த நிகழ்வினை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.

கோலாலம்பூர், டிச.4-
ரோயல் சிலாங்கூர் கிளப் (RSC) ஏற்பாட்டில் Dato’ Chu Ah Nge அனைத்துலக ஜூனியர் கால்பந்து போட்டி இந்த வார இறுதியில் (டிசம்பர் 5-7) கோலாலம்பூரில் உள்ள RSC புக்கிட் கியாரா ஸ்போர்ட்ஸ் அனெக்ஸின் மைதானத்தில் நடைபெறுகிறது.

RSC கால்பந்து பிரிவின் ஜூனியர் கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தால் (JSDP) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, கிளப்பின் வருடாந்திர நிகழ்வுகள் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

வளர்ந்து வரும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க இந்த போட்டி போர்க்களமாக
விளங்குகிறது.

இந்தப் போட்டிக்கு கிளப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மறைந்த Dato’ Chu Ah Nge பெயரிடப்பட்டது.

இன்று நடைபெற்ற விழாவில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் Datuk Gerald Rakish Kumar தனது வரவேற்பு உரையில், RSC கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை வழங்குவதற்காக இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.

"RSC Dato’ Chu Ah Nge போட்டி படிப்படியாக பல அனைத்துலக கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தது. எனவே போட்டியின் சர்வதேச அடையாளத்தை நியாயப்படுத்த அவர்களை பங்கேற்க அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார்.

இந்த ஆண்டு ஐந்து பிரிவுகளில் 100 அணிகள் பங்கேற்கும். இந்த அணிகள் சிங்கப்பூர், மாலத்தீவு, இந்தோனேசியா, நேப்பாளம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவையாகும்.

8 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், 12 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டி இடம்பெறும் என அவர் மேலும் சொன்னார்.

மேலும் RSC கால்பந்து அக்காடமியில் தற்போது 270 இளம் விளையாட்டளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எஃப்ஏஎம் தகுதியுடைய பயிற்றுநர்கள் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். ஆகையால் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள இளம் வயதினர்கள் இந்த அக்காடமியில் இணைந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். பதிவுக்கு RSC புக்கிட கியாராவுக்கு நேரடியாக வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது

கோலாலம்பூர், டிச.3-
மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்துள்ளார். கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு அவர் இந்த செய்தியை வெளியிட்டார்.

டத்தோ டாக்டர் லோகா கூறுகையில், சைவ மரபில் முக்கியமான இடம் வகிக்கும் கார்த்திகை திருவிழா, முருகப் பெருமானின் உருவாக்கத்தையும், பரமசிவன் ஜோதி லிங்கமாகத் தோன்றியதையும் நினைவுகூரும் விழாவாகும். கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளிலும் தமிழ் மாதமான கார்த்திகையின் தொடக்கமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருநாளில் வீடுகள், கோவில்கள் மற்றும் வேலைத்தளங்களில் மண் விளக்குகள் ஏற்றி தீபம் ஏற்றுவது புதிய நம்பிக்கை, தொடக்கம் மற்றும் வளம் என்பதைக் குறிக்கும் என அவர் கூறினார்.

தன் திருநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியர்களின் ஒற்றுமை சமூக முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய பலம் என டத்தோ டாக்டர் லோகா வலியுறுத்தினார்.

"நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்ற வரையில், நமது குரல் அரசு மற்றும் சமூகத் தேவைகளில் தெளிவாகக் கேட்கப்படும். பிரிந்துவிட்டால், நம் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உள்ளது," என அவர் தெரிவித்தார்.

அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் முன்னேற்றத்திற்கும் நிலைத்தன்மைக்குமான ஒன்றுபாட்டைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கார்த்திகை திருநாளின் ஒளி அனைவரையும் இணைக்கும் சக்தியாக அமைய வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கார்த்திகையின் ஒளி நமது எண்ணங்களை ஒளிரச் செய்து, வேறுபாடுகளைப் புறம் தள்ளி, அனைவரையும் ஒன்றுபடுத்தட்டும்,” என்று அவர் கூறினார்.

டத்தோ டாக்டர் லோகா, கார்த்திகை தீபம் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, டிச.2-
ஹைனிகன் மலேசியா பெர்ஹாட் (HEINEKEN Malaysia) நடத்திய 2025 ஸ்டார் அகாடமி தேசிய இறுதிப்போட்டியில், சபாவில் உள்ள லங்காஹ் சியாபாஸ் பீச் ரிசார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கோரா ஜீன் கான்ட்வெல் ஸ்டார் அகாடமி வரலாற்றில் முதல் பெண் தேசிய சாம்பியனாக வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்த சாதனைமிக்க வெற்றி அவருக்கு ஆம்ஸ்டர்டம்  செல்லும் பிரத்யேக வாய்ப்பை வழங்கியுள்ளது. அங்கு அவர் ஹைனிகனின் வரலாறு, புதுமை மற்றும் Joy of True Togetherness என்ற மதிப்பினை நேரடியாக அனுபவிக்க உள்ளார்.

ஏழாவது ஆண்டை எட்டியுள்ள ஸ்டார் அகாடமி திட்டம், மலேசியாவின் சேவைத் துறையை உயர்த்தும் அதன் முக்கிய நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள திறமையான பார் டெண்டர்களை பயிற்றுவித்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் விருந்தோம்பல் துறைகளில் புதிய பரிணாமத்தை அமைத்து வருகிறது.

Star Academy 2025- இல் மேலும் ஒரு முக்கிய அறிமுகம் செய்யப்பட்டது – “Tap Into The Future” எனப்படும் புரட்சிகரமான மெய்நிகர் யதார்த்தம் (VR) அனுபவம். இந்த புதுமையான பயிற்சி முறை பல உணர்வுகளைக் கொண்ட (காட்சி, தொடுதல், ஒலி) முழுமையான கற்றல் சூழல் வழங்குகிறது. விளையாட்டுவழி நிலைச்சித்திரம்யான அணுகுமுறை நினைவுத்திறனை அதிகரித்து, தயாரிப்பு அறிவை ஆழப்படுத்தி, சரியான pouring தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. இது ஹைனிகன் மலேசியா வழங்கும் தனிச்சிறப்பான அனுபவமாகும்.

ஹைனிகன் மலேசியாவின் மேலாண்மை இயக்குநர் மார்டெய்ன் வான் கீலன் கூறுகையில், இன்றுவரை 11,000-க்கும் மேற்பட்ட பார் டெண்டர்களை பயிற்றுவித்துள்ள ஸ்டார் அகாடமி, சேவைத் துறையை உயர்த்துவதில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இது உள்ளூர் F&B துறையின் திறனை வலுப்படுத்தி, நாட்டின் விருந்தோம்பல் சூழலுக்கு ஆதரவளிக்கிறது. ஸ்டார் அகாடமி மலேசிய அளவில் சேவைத் திறமையின் தரத்தை உயர்த்துவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் கோலாலம்பூர்/டிலாங்கூர், சரவாக், சபா, பினாங்கு, பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.

ஹைனிகன் மலேசியாவின் விற்பனை இயக்குநர் ஜிம்மி டிங் கூறுகையில், எங்களின் வர்த்தக கூட்டாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த பல சவால்களை எதிர்கொண்டு உழைக்கும் பார் டெண்டர்களுக்கும் நன்றி. அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இந்த துறையை முன்னேற்றுகிறது. இந்த ஆண்டில் நாங்கள் அறிமுகப்படுத்தும் VR பயிற்சி, நேரடி அனுபவத்துடன் கூடிய ஆழமான கற்றலை வழங்குவதால் மேலும் பெருமை அடைகிறோம் என்றார்.

போட்டியில் நீதிபதிகளாக ஹைனிகன் மலேசியாவின் காமெர்ஷியல் குவாலிட்டி மேலாளர் சியான் ஹுல்ம், காமெர்ஷியல் குவாலிட்டி லீட் வேன் வோங் மற்றும் சிறப்பு விருந்தினராக 2024 ஹைனிகன் குளோபல் டிராஃப்ட் சாம்பியன் ஜேசன் டெனிஸ் டி'குரூஸ் ஆகியோர் இணைந்தனர்.

தேசிய சாம்பியனான கோரா ஜீன் கான்ட்வெல் கூறுகையில், இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு நம்பமுடியாத அனுபவம். இந்த ஆண்டின் ஸ்டார் அகாடமி தேசிய இறுதியில் சபாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த அற்புத வாய்ப்புக்கு ஹைனிகன் மலேசியாவுக்கு நன்றி. ஆம்ஸ்டர்டம் செல்ல நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன் என்றார்.

ஜெராண்டூட், டிச.1- ஜெராண்டூட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 பேர், நவம்பர் 28 அன்று இங்கு நடைபெற்ற கேஜே உடற்கட்டுப் பயிற்சி கிளப் (KJEY) அமைப்பு நடத்திய “அடிப்படை உடற்கட்டுப் பயிற்சி பயிற்சி முகாம்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ElangKathir Enterprises வழங்கிய அனுசரணையுடன் நடைபெற்ற இம்முகாம், 12 வயதுக்குக் குறைவான மாணவர்களுக்கு உடல் உறுதிப்படுத்தல் அடிப்படை புரிதல், உடற்கட்டுப் பயிற்சி நுட்பங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தியது.

நிகழ்ச்சி தலைவர் மற்றும் KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப் தலைவர் டாக்டர் கே. ஜெய் பிரபாகரன் தேவர் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பயிற்சி திட்டங்கள் மூலம் உடற்தகுதி கல்வியை மேம்படுத்துவதில் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

அவரது கருத்தில், ஆரம்ப வயதிலேயே உடற்கட்டுப் பயிற்சி விளையாட்டை அறிமுகப்படுத்துவது மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல் பராமரிப்பு மேலான விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது என கூறினார்.

“இத்தகைய தொடக்கப் பயிற்சி, மாணவர்கள் சரியான இயக்க நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், உடற்தகுதியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும், வயதிற்கு ஏற்ப பொருத்தமான பயிற்சி முறைகளை அறிந்துகொள்ளவும் உதவுகிறது,” என்றார் அவர்.

அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்தை மாவட்டத்திலுள்ள பிற பள்ளிகளுக்கும், பகாங் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் கிளப்பிடம் உள்ளது, இதன் மூலம் இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்க முடியும்.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இம்முகாம், கோட்பாட்டு மற்றும் செயல்முறை அம்சங்களை உள்ளடக்கி, நீட்டிப்பு பயிற்சிகள், அடிப்படை தசை அமைப்பு அறிமுகம், வயதுக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகள் ஆகியவை சொல்லித் தரப்பட்டது.

KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப், குழந்தைகளுக்கான உடற்தகுதி மேம்பாட்டு திட்டங்களை எதிர்காலத்தில் மேலும் பல முகவாடிகள் மற்றும் ஆதாரதாரர்கள் இணைந்து ஆதரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளது.

கோலாலம்பூர் டிசம்பர் - 1
ம.இ.கா எல்லா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி  வருகிறது. எந்த கூட்டணியில் அந்த கட்சி இணையும் என்பது அடுத்த மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் எந்த கூட்டணியில் இந்திய கட்சியின் குரலாக  ம.இ.கா இருக்க முடியும் என பேச்சு வார்த்தையை ம.இ.கா தொடங்கி விட்டது.

இதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு ம.இ.கா தனது நிலைபாட்டை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னனி , பாஸ், பெரிக்காத்தான் நேசனல், பி.கே.ஆர் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதனிடையே,  பெரிக்காத்தன் நேசனல் கட்சி தலைவர்  ,டான் ஸ்ரீ முகிடீன் யாசின் வெளியிட்ட தகவலுக்கு பிறகு ம.இ.கா செயலாளர்.. அது விண்ணப்பம் இல்லை விளக்கம் கோரிய கடிதம் என தெரிவித்துள்ளார்.

ம.இ.கா இப்போது பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில்  தேசிய முன்னனியையும் சந்திக்க உள்ளது.தங்களது முடிவை அதிகாரபூர்வமாக ம.இ.கா தெரிவிக்கும் வகையில், அனைத்தும் ஆரூடம் என பேசப்படுகிறது.

கோலாலம்பூர் நவ- 30
ம.இ.கா , பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல்  தலைவர் டான் ஸ்ரீ முகிடீன் யாசின்  உறுதி செய்துள்ளார்.

ம.இ.கா பெரிக்காத்தான் நேசனல் கட்சியில்  இணைவது தொடர்பாக உறுப்பு கட்சிகளுக்கு எந்த ஒரு ஆட்சியேபமும் இல்லை.

இருந்தபோதிலும் அடுத்த பெரிக்காத்தான்  நேஷனல் உச்ச மன்ற
கூட்டத்தில்  ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என டான் ஸ்ரீ முகிடீன் யாசின் தெரிவித்தார்.

இதனிடையே  ம.இ.கா தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் அறிவிக்கும்  எனவும் கூறப்படுகிறது.

சிரம்பான், நவ 29-
ஆயிரம் குறை சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்கு போராடும்
ஒரே கட்சி மஇகா தான்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் கூறினார்.

மஇகா மகளிர் முன்னால் சேவையாளர் செயற்குழு மற்றும்  மஇகா நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில மகளிர்களுடன் ஒன்றுக்கூடும் நிகழ்வில் சிரம்பானில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
மஇகா கட்சி இந்திய சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சியாக திகழ்ந்து வருகிறது.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மஇகா கட்சியும் அதன் தலைவர்கள்தான் முன் வருவார்கள்.

இந்திய சமுதாயத்திற்காக பாடுப்படுகின்ற கட்சி இந்திய சமுதாயத்திற்கு பிரச்சனை என்றால் நாம் முன் நிற்க்கிறோம் மற்ற கட்சியில் உள்ளவர்கள் அப்படி செய்ய முடியாது காரணம் மற்ற கட்சிகளில் பல இன மக்கள் உள்ளனர.

அப்படி அவர்கள் இந்திய சமுதாயத்திற்காக வாய் திறந்தால் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.

நமது கட்சி பல இந்திய பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அதே சமயத்தில் உருவாக்கியும் வருகிறது.

கடந்த காலங்களில் நமக்கு என்று எந்த கல்லூரியும் கிடையாது. நமது பிள்ளைகள் வெளிநாடு சென்று கல்வி கற்க்க வேண்டும் என்றால் பலரிடம் உதவி கேட்டு கல்வி கற்று வந்தனர்.

ஆனால் இப்பொழுது நமக்கு என்று எய்ம்ஸ் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி மூலம் பல பட்டதாரிகளை உருவாக்கி வருகிறோம்.

அதே போல் டேஃப் கல்லூரியும் அமைந்துள்ளது. அந்த கல்லூரி மூலமும் பல பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கி வருகிறது.

மஇகா கட்சி சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட்டை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தில் பல மாணவர்களுக்கு கல்விக்கு வழங்கி வருகிறோம்.

மஇகா கட்டிடத்தில் 1/2 ஏக்கர் நிலமாக இருந்தது. ஆனால் இன்று 4 ஏக்கர் நிலத்தை மஇகா கட்டிடத்தின் அருகில் வாங்கியுள்ளது.

அந்த இடத்தில் பல மாடிக்கொண்ட கட்டிடத்தை கட்டவுள்ளது.

மஇகா கட்சி ஒரு மானமுள்ள கட்சி பட்டம் பதவிக்காக யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.

நாம் சுயநல அரசியல் நடத்தவில்லை பொதுநல கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

செலாயாங் ஜெயா,நவ.28-
காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர், புத்தமதம் மற்றும் சீனர் கோயில்களை ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிரம்பான் காவல்துறையில் முதல் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட போலீஸ்புகார்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாக் மண்டின் குமார், தேசம் குணாளன் மணியம் மற்றும் சிலர் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கோம்பாக் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் தற்போது சிரம்பான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும்  சம்பவங்கள் தற்போது கண்மூடித்தனமாக அதிகரித்து வரும் நிலையில்  ,  இப்போது இந்த நபர் கடவுளை குறித்து ஆபாசமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் செலாயாங் ஜெயாவை சேர்ந்த அந்நபர் காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் மற்றும் புத்த மதங்களை ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சில இளைஞர்கள் அந்நபரை தேடினர். அந்நபர் செலாயாங் ஜெயாவில் உள்ள ஒரு அங்காடியில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அந்நபரை கையும் களவுமாக பிடித்தனர். அந்நபரை மன்னிப்பு காணொளி செய்யச் சொன்னதோடு போலீஸ்சுக்கு தகவல் கொடுத்து அந்நபரை கோம்பாக்காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அந்நபரை மாக் மண்டின் குமார் நேரில் பார்த்து எச்சரித்தோடு கோம்பாக் போலீஸ் தலைமையக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நபருக்கு எதிராக இதுவரை 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் முதல் போலீஸ் புகார் சிரம்பானில் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர் சிரம்பான் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்து மதம் குறித்து ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசிய நபருக்கு எதிராக மாக் மண்டின் குமார் கோம்பாக் காவல்துறையில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் அவர்களும் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், நவ. 27-
சமீபகாலமாக மாற்ற இனத்தை சாடி இழிவாக பேசுவது  இந்த நாட்டில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தகுந்த  நேரத்தில் அரசும் அதிகாரமும் இவர்கள் மீது  தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்காததே காரணம் என    டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இதற்கு முன் ஒருவர் இதே போல் மற்ற மதத்தை இழிவு படுத்தும்போது சுமார் 1,000 புகார்களுக்கு மேல்  கொடுக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக இப்போது ஒருவர்  இந்து கடவுள் மற்றும் கிருஷ்த்துவ கடவுளை வக்கிரமாக வர்ணித்து பேசியதோடு இழிவாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த சில இந்தியர்கள் அவரை தேடிச் சென்று அவரை மன்னிப்பு கேட்க வைக்கும் நேரத்தில் அங்கு போலீஸ் வாகனம் வந்து அந்த நபரை விசாரனைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் போலீஸ் மட்டும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் வழக்கம் போல் அவர் ஒரு மன நோயாளி என்ற காரணத்தை மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை இனியும் மக்கள் ஏற்க போவது இல்லை என டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.

அவர் பேசிய பதிவு உண்டு, அவரை பொதுமக்களே கண்டு பிடித்து போலீஸ்சிடம் ஒப்படைத்து விட்டனர்.

ஆகையால் 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் என டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இப்படிப்ட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இப்படி பொதுவில் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்ற பயம் சிலருக்கு வரும்.

ஆகையால் உங்கள் வழக்கமான காரணம் வேண்டாம். நடவடிக்கை தேவை என டத்தோ  டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், நவ.19-
MIFA எனப்படும்
மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின்  ஏற்பாட்டில்  MIFA Beyond   தேசிய கால்பந்து போட்டி  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள செண்டாயன், அரினா ஐஆர்சி அரங்கில் நவம்பர் 22 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

12 மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் இடையிலான இந்த போட்டியை  அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு இந்த போட்டி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் சொன்னார்.

ஆண்டுதோறும் மீபா ஏற்பாட்டில் நடக்கும் இந்த போட்டி இந்திய இளைஞர்களிடையே கால்பந்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான இந்த போட்டியில் 10 பெண்கள் அணிகளும் 20 ஆண்கள் அணிகளும் பங்குக்கொள்ளவுள்ளன.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின்   திறமைகள், ஆர்வம் மற்றும் உறுதியை ஒரு தேசிய அரங்கில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது.

போட்டிக்கு அப்பால், இந்த போட்டி ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக வளர்ச்சியின் கூட்டு உணர்வின் கொண்டாட்டமாக செயல்படுகிறது.

கால்பந்து துறையில் ஈடுபடும் இளம் மாணவர்கள் அவர்களின் திறமையை விளையாட்டில் மட்டும் காட்டாமல் கால்பந்து சம்பந்தப்பட்ட பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளரகள் உட்பட இதர பதவிகளிலும் ஆர்வத்தை காட்ட வேண்டும் என்பது மிபா Beyond-இன் நோல்கமாகும்.

12 வயதுக்குட்பட்ட பிரிவில் 450க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

மேலும் 6 வயதுக்குட்பட்ட (U6) பிரிவில் போட்டியிடும் 70 இளம் விளையாட்டாளர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார் அவர்.

எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்கான MIFAவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும்  ஒன்று.

தமிழ்ப்பள்ளிகள், மாநில கால்பந்து சங்கங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தும வகையில் மீபா
துணைத் தலைவர் துவான் ராஜேந்திரன் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் தலைவர்  ஸ்ரீ சங்கர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன் என அவர் சொன்னார்.

அவர்களின் அர்ப்பணிப்பு இந்தப் போட்டியைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார்.

விளையாட்டு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்தில் MIED இரண்டாவது ஆண்டாக மீண்டும் ஒரு ஸ்பான்சராக வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்த தருணத்தில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வனன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் தொடர்ச்சியான ஊக்கம் மற்றும் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், நவ.19-
தமிழ் லென்ஸ் ஆசிரியரும், அரசியல் செய்தியாளருமான வெற்றி விக்டர்  இன்று ம.இ கா இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை செய்தார்.

ம.இ.கா உருவாக்கி உள்ள செயலி மூலம் நேரடி உறுப்பியம் அதன் வாயிலாக  இணைந்துள்ளார்.

இப்போது உள்ள ம.இ.கா எல்லா வகையிலும் உயிர் பெற்று
தைரியமாக குரல் எழுப்பி, எந்த கட்சிக்கும் அடிபணியாமல் இந்திய சமுதாயம் பக்கம் நிற்கிறது.  வரலாற்று மிக்க இந்த கட்சியை  அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைக்கும் போது ஒரு மரியாதைகுரிய கட்சியாக ஒப்படைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த தருணத்தில் சில அம்னோ தலைவர்கள் ம.இ.கா இந்தியர்களின் ஆதரவை இழந்து அம்னோவை நம்பி பிழைக்கும் ஒரு கட்சி என சொல்லி வருகிறார்கள். இந்திய சமுதாயம் ம.இ.கா வை ஆதரிக்க வில்லை என சொல்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க ம.இ.கா ஆட்சியில் இருக்கும்போது பல முறை சீண்டி எழுதிய வெற்றி விக்டர்.
இன்று  ம.இ.காவில் இணைந்தார்.

தான் இந்த கட்சியில்  இந்த காலகட்டத்தில் இணைந்தது  இளைஞர்கள் மத்தியில் ம.இ.கா  மீண்டும் ஒரு புரட்சியை எழுப்பு உள்ளது, புதிய தலைமுறைக்கு  ம.இ.காவின் வரலாறு தெரிய வேண்டும். அதே நேரத்தில் ம.இ.காவின் வழி இந்திய சமுதாயத்தின் தேவை  எதிர்ப்பார்ப்பை  நாமே  வகுப்போம், உருவாக்குவோம்.

இந்த தாய் கட்சியை மற்றவர் இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்த ஒரு கட்சி என சாடுவதை பொறுத்து கொள்ள முடியாது... ஒரு இந்தியனாக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு செய்தியாளராக   ம.இ.கா இந்திய சமுதாயத்தின் குரல் என்பதை உணர்த்த  இளைஞர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக்க இந்திய சமுதாயத்தின் சக்தி மற்றவர்களுக்கு உணர்த்த நான் ம.இ.காவில் இப்போது இணைந்து சேவை செய்ய வருவதாக வெற்றி விக்டர் தெரிவித்தார்.

ம.இ.காவின் இணைவது தொடர்பான தனது என்னத்தை தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்து விட்டதாக வெற்றி விக்டர் கூறினார்.

ஒரு குடையின் கீழ் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு  கைகோர்த்து துணை நிற்போம் என்றார் வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், நவ.17-
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக பந்திங் தொலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்று வட்டார பிரமுகர்கள் கோலா லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் , நட்புக்காக சங்கத் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் சமூகச் சேவையாளர் டத்தோ வெள்ளையப்பன் , டாக்டர் செல்வேந்திரன் , திரு.ரவீந்திரன் போன்றோர் வருகை தந்து கலந்து அவர்களுக்கு இயக்க பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து சிறப்பும் செய்யப் பட்டது நிகழ்சியை மலேசிய பிரபல கலைஞர் எம்ஜிஆர் சேகர் பாடகர் டிஎம்எஸ் புகழ் அக்னி கனகா அருமையான பாடல்களை வழங்கி சிறப்பாக நடத்தி தந்தார்.

நட்புக்காக சங்கமம் அமைப்பின் உதவியுடன் தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்களுடன் ஒன்று கூடல் வழி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் போன்று செய்து வருகிறது என்று ஏற்பாட்டார்ளிகல் ஒருவரான பொன்.பெருமாள் கூறினார்..

பெட்டாலிங் ஜெயா,நவ.17–
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் முன்னணி மதிப்புமிக்க தங்க-வெள்ளி முதலீட்டு நிறுவனமான பப்ளிக் கோல்ட் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த Public Gold Business Owners (PGBOs) உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, 2024/25ஆம் ஆண்டுக்கான சிறப்புப் பாராட்டு விழாவை மிகுந்த சிறப்பாக நடத்தியது.

இரட்டை மற்றும் மேகா டய்மண்ட் சாதனையாளர்களை கௌரவிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு பண்டார் உத்தாமாவில் உள்ள ஒன் வேர்ல்ட் தங்கு விடுதியில் நடைபெற்று, விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த சிறப்பு விழாவை பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ லுவிஸ் எங் அவர்கள் திறந்து வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தின்ஸ்ரீ யுவான் லிம், மற்றும் இந்நிகழ்ச்சியின் அமைப்புக் குழு தலைவரும் PGMall நிறுவனத்தின் COO-வுமான ஜெர்ரி எங் ஆகியோரும் இணைந்தனர்.

2008இல் பினாங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய பப்ளிக் கோல்ட், இன்று TRX நிதி மையத்தின் மையப் பகுதியாக திகழும் Menara Public Gold கட்டடத்திற்கு நகர்ந்து, உலகளாவிய நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது மலேசியாவில் 20 கிளைகள், இந்தோனேஷியாவில் 7 கிளைகள், மேலும் துபாய் (UAE) மற்றும் லண்டன் (UK) ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களையும் நிறுவியுள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டிலிருந்து மலேசியா முழுவதும் உலகின் முதல் பின்டெக் தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க ATM இயந்திரங்கள் 110 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பப்ளிக் கோல்டின் வேகமான வளர்ச்சிக்கான சான்றாகும்.

2008 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருவாய் RM23 பில்லியனை கடந்துள்ளது. மொத்தம் 87 டன் தங்கம் விற்பனையாக, 51 டன் தங்கம் மீள்கொள்வுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ப்ரூனே மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மட்டும் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பப்ளிக் கோல்ட், இன்று ஆசியாவைத் தாண்டி UAE மற்றும் UK-களிலும் தன்னுடைய தடம்பதிப்பை விரிவாக்கியுள்ளது.

இந்த விருது நிகழ்ச்சியில் மொத்தம் 7 பிரிவுகளைக் கொண்ட இவ்விருதுகள் — மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட், 5-ஸ்டார் டையமண்ட், 4-ஸ்டார் ரூபி, 3-ஸ்டார் ஜேட், 2-ஸ்டார் ஜேட், 3-ஸ்டார் பேர்ல், மற்றும் 2-ஸ்டார் பேர்ல் — தகுதியான PGBO-க்களுக்கு RM3.5 மில்லியன் மதிப்பிலான பரிசுகளாக வழங்கப்பட்டன. கடந்த 18 ஆண்டுகளில் PGBO-க்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊக்கத்தொகை RM420 மில்லியனை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முக்கிய சிறப்பாக, புகழ்பெற்ற மலேசிய தங்க மஹாகுரு  சுகோர் பின் ஹஷிம் மற்றும் அவரது துணைவியார் ஜோனய்னா பிந்தி நோர்டின் ஆகியோர் உயரிய மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட் பட்டத்தைப் பெற்றனர்.

அவர்களுக்கு RM962,623 மதிப்புள்ள பரிசுகளான போனஸ் டையமண்ட், பங்களா நிதி, சொகுசு கார் நிதி, மற்றும் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை ஆகியவை வழங்கப்பட்டன. உலகம் முழுவதும் 20 இலட்சம் தங்க சேகரிப்பவர்களை முன்னெடுத்து வந்த இவர்களின் தலைமையாற்றல், தொடர்ச்சியான முயற்சி பப்ளிக் கோல்டின் வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது.

பப்ளிக் கோல்ட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இவ்வாண்டு ஒரே நேரத்தில் மூன்று 5-ஸ்டார் டையமண்ட் விருதுகள் வழங்கப்பட்டன.

அஜீஸா பிந்தி ஹசன் (Public Gold Iron Lady), ஹாஜி ஹபிசுல் ஹகிம் பின் முகமது கெர்டா & ஹாஜ்ஜா அலிஃபா ரபினி பிந்தி அப்துல்லா (Raja Borneo), மார்லியா பிந்தி ரம்லி &  அகமது ஃபுவாட் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வெற்றியாளரும் RM604,000 மதிப்பில் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை, பங்களா நிதி, மற்றும் சொகுசு கார் நிதி ஆகியவை பெற்றனர்.

இதனை தொடர்ந்து அடுத்த விருதுகளான 4-ஸ்டார் ரூபி விருதை மஸ்லிஃபா பிந்தி ஓமர் பெற்றார். அவருக்கு RM9,000 தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.

3-ஸ்டார் ஜேட் விருதை  நூர்மரியா சாபிகா & பெங்கிரான் அப்துல் அசிஸ் ஆகியோர் பெற்றனர்.

2-ஸ்டார் ஜேட் விருதை அமீர் பைரூஸ் பின் அப்துல் அசிஸ் பெற்றார். அதனை தொடர்ந்து 3-ஸ்டார் பேர்ல் விருதை  நொர்சுஸிலாவதி & முகமது சுகூர் பெற்றனர்.

ஸ்டார் பேர்ல் விருதை அமிருல் பார்ஹான் &  அஸ்ஸுரா அஸ்லியனா,  ஷம்சுல் & நோரா, கஷிகா நாகராஜன் ஆகியோர் பெற்றனர்.

எங்கள் PGBO-க்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி பப்ளிக் கோல்டின் மேன்மையை பிரதிபலிக்கிறது. உண்மையான செல்வம் என்பது நாம் வைத்திருப்பதில் அல்ல, நாம் பகிரும் அறிவிலும், நாம் ஊக்குவிக்கும் வாழ்க்கைகளிலும் உள்ளது.

பப்ளிக் கோல்ட் வழங்கும் இவ்விருதுகள் தங்கச் சேமிப்பை பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து முன்னேறிய ஆயிரக்கணக்கான PGBO-க்களின் சாதனைகளுக்கு ஒரு வண்ணமிகு சின்னமாக திகழ்கின்றது என டத்தோஸ்ரீ லுவிஸ் எங் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,நவ.16-
நாட்டின் இன்றை அரசியல் சூழ்நிலையில் மஇகா யாருக்கும் பயப்படாது. அதேவேளையில் கையேந்தி வாழ வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

எங்களுக்கு மானம்தான் வேட்டிச் சட்டை மற்றதெல்லாம் வாழைமட்டை என்ற பாடல் வரியை அவர் மேடையில் கூறினார்.

அரசாங்கத்தில் எந்த பதவி இல்லை என்றாலும் எங்களால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும். ஆகையால் யாரையும் நம்பி வாழும் நிலை எங்களுக்கு இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதும் அனைவரும் அம்னோவை குஷ்ட நோயாளியை போல பார்த்தார்கள். தேசிய முன்னணியில் மசீசவை தொடர்ந்து இருக்க வேண்டும் என இழுத்து பிடித்ததும் மஇகாதான். இதனை மறந்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

மஇகாவிடம் உள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி, சட்டமன்றம், கவுன்சலர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு மானமும் மரியாதையையும்தான் முக்கியம். ஆகையால் எங்களின் முடிவு அதன் அடிப்படையில்தான் இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
நாட்டு அரசியலில் அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியில் இருந்த மஇகாவை காலம் காலமாக குறைக்கூறி வந்த அன்றைய எதிர்க்கட்சி இந்திய தலைவர்கள் இன்று குரல் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

அரசியலில் கேள்வி கேட்பது சுலபம். ஆனால் பதில் சொல்லும் இடத்தில் இருக்கும்போதுதான் அதன் கஷ்டம் புரியும் என்பதை அவர்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.

நாட்டின் சுதந்திரம் முதல் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள், நமது உரிமை அனைத்தையும் கேட்டு பெற்றுத் தந்தது மஇகாதான். தமிழ்ப்பள்ளி விவகாரம், ஆலயம் விவகாரம், கல்வி மேம்பாடு, தோட்ட மேம்பாடு என பலவற்றை இந்திய சமுயாத்திற்கு பெற்று தர போராடி கட்சி மஇகாதான். ஆனால் மன்சாட்சி இல்லாதவர்கள் இன்று மஇகா என்ன செய்தது என்று கேட்கிறார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அதேவேளையில் மஇகாவை வீழ்த்தினால்தான் இந்தியர்களின் வாக்கை பெற முடியும் என்று முடிவெடுத்து வேலை செய்தவர்கள், மஇகா இல்லை என்றால் இந்திய சமுதாயம் தத்தளிக்கும் என்பதை மறந்துவிட்டார். அதனை செய்து விட்டு அவர்களும் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் என அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொது பேரவையில் கூறினார்.

செய்தி: காளிதாசன் காளிதாசன்

கோலாலம்பூர்,நவ.16-
தற்போது அரசாங்கத்திற்கு வேலை செய்வதற்கு சரியான இந்திய கட்சி இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னிடமும் டத்தோஸ்ரீ சரவணனிடம் கூறியதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியர்களுக்காக செயல்பட இன்றை ஆட்சியில் முறையான இந்திய கட்சி இல்லை என பிரதமர் எங்களிடம் கூறினார். பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு உதவ தயாராக இருக்கிறார்.

ஆலயங்களுக்கு மானியம் தேவை என்ற கோரிக்கையை நான் இதற்கு முன்னவர் அவரிடம் முன்வைத்தேன். தற்போது ஆலயங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடனான சந்திப்பின்போது இதற்கு முன்னர் எம்ஐஇடி கீழ் 25 மில்லியன் வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தீர்கள். அது இன்னும் கிடைக்கவில்லை என்றேன். உடனடியாக அதன் தொடர்பில் பேசி அந்த மானியத்தை எம்ஐஇடி-க்கு வழங்கினார்.

தற்போது அவர் இந்திய சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதவிகளை முறையாக செய்யவும் அந்த திட்டங்களையும் வழிநடத்தவும் முறையான தளம் இல்லை என்பதை அவர் எங்களிடம் கூறினார்.

இந்த தகவலி டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் மேடையில் பேசியபோது கூறினார்.


செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
அன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசியலில் நிலைத்திருக்க அம்னோ பாஸுடனும் பக்காத்தானுடனும் கூட்டணி அமைத்தது. அன்று அம்னோ செய்தது சரி என்றால் இன்று அதனை நாங்கள் செய்வதால் என்ன தவறு என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

தே.மு. கூட்டணியில் எந்த கட்சியும் எந்த கட்சியையும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு மஇகாவும் இடம் கொடுக்காது என அவர் சொன்னார்.

மஇகாவின் எதிர்கால நலனுக்காக எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனை யாரும் எங்களுக்கு சொல்லி தர தேவையில்லை என அவர் சொன்னார்.

அன்றைய அரசியல் சூழ்நிலையில் நிலைத்திருக்க அம்னோ பாஸுடன் இணைந்து. பாஸ் மீதான நம்பிக்கையை நாங்கள் எங்கள் கட்சிக்காரர்களிடம் விதைத்து அன்றைய புதிய கூட்டணி ஆட்சியை நடத்துவதற்கு துணையாக இருந்தோம். அம்னோ எடுத்த முடிவை நாங்கள் மதித்து அவர்களுடன் செயல்பட்டோம் என்பதை அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் நினைவூட்டி கூறினார்.

இந்த பேரவையில் நேரடி உறுப்பியம் ஏற்றல் முறையை டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அறிமுகம் செய்து வைத்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
ஒரு அரசியல் கூட்டணிக்குள் மரியாதை இல்லாத நடத்தை, மிரட்டல் போன்ற செயல்கள் நிலவும் நிலையில், இப்படியான கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி கூட்டணி என்பது அம்னோ, மஇகா, மசீச ஆகிய கட்சிகளை கொண்டதாகும். இந்த கூட்டணி நாட்டின் சுதந்திர காலத்தில் தொடங்கப்பட்டும் கூட்டணியில் வரம்புகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு தரப்பின் ஆதிக்கம் இந்த கூட்டணியில் இருக்கக்கூடாது என மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி ஆட்சியை இழந்த பின்னர், பக்காத்தான் ஹராப்பானுடன் இணையம் முடிவை தேசிய முன்னணி எடுக்கவில்லை. அது அம்னோவின் சொந்த முடிவு என அவர் சொன்னார்.

அம்னோவின் இந்த முடிவினால் அது தற்போது 70% மலாய்காரர்களின் ஆதரவை இழந்துள்ளது. இது அவர்களின் சொந்த முடிவினால் ஏற்பட்ட விளைவாகும்.

கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்ய கூட அம்னோ வாய்ப்பு அளிக்கவில்லை என்பது கூட்டணிக்குள் விரக்தியை அதிகரிக்கும் அம்சமாக உள்ளது.

அதேவேளை, ஆட்சியை இழந்த பின்பு பல அம்னோ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட காலகட்டத்திலும், மஇகா தொடர்ந்து அம்னோவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது. இந்நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய அரசியல் முடிவு, கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

மஇகாவிடம் எந்த அரசாங்க பதவியும் இல்லை. இருந்தபோதும் தனித்து செயல்பட எங்களால் முடியும். ஒருபோதும் எங்களின் தன்மானத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர்,நவ.15-
நாளை நடக்கவிருக்கும்  ம.இ.கா ஆண்டு கூட்டத்தில் தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா  வெளியேறுமா இல்லையா என்பது இன்னும் கேள்விகுறியே?

அரசியலுக்கு அப்பாற்பட்டு பல விதமான ரகசிய கூட்டங்கள் தேசிய முன்னணி ,  பெரிக்காத்தான் நேஷனல்  மத்தியில் நிலவுவதாக தெரிகிறது.

அதோடு பிரதமரும் ம.இ.கா இப்போது  வெளியேறுவது   அவர்களின் சபா தேர்தலை பாதிக்கும் என நம்புவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் சில தினங்களாக பல தரப்பட்ட  நிலையில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அதோடு ம.இ.காவுக்கு அடுத்த  அமைச்சரவை மாற்றத்தில் ஒரு முழு அமைச்சர் அல்லது 2 துணை அமைச்சர்  என்பதுபோல் பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக தகவல் கசிந்து உள்ளது.

அம்னோ ம.இ.காவையும்  அதே நேரத்தில் டத்தோஸ்ரீ அன்வாரையும் இழக்க முடியாத ஒரு தர்ம சங்கட இடத்தில் இருப்பதால், இந்த பேச்சு வார்த்தையை சுமூகமாக முடிக்க  டத்தோஸ்ரீ  அன்வார் நேரடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என  வலியுறுத்தி உள்ளதாக தகவல்  கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சில தினங்களாக  ரகசிய கூட்டங்கள் நடந்து வருகிறது.

நாளை ம.இ.கா, தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தால் அது சபா தேர்தலை பாதிக்கும்.

அந்த வகையில் ம.இ.காவின் முடிவில் மாற்றம் அல்லது ஒத்திவைப்பு செய்ய சில நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ள பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எது எப்படியோ நாளை ம.இ.காவின்  ஆண்டு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை  அரசியல் வட்டாரம் கூர்ந்து கவனிக்கிறது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், நவ. 15-
நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகத்தின் அரங்கேற்றம் 1-3-2026 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் அரங்கேற்றம் காண்கிறது என்று இயக்குநர் பூச்சி ரவி தெரிவித்தார்.

இந்த நாடகத்தின் அறிமுக விழா மற்றும் வசன புத்தகம் வழங்கும் விழா அண்மையில் டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய கலை கலாச்சார இயக்கம் ஏற்பாட்டில்
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கலை கலாச்சார அறவாரிய ஆதரவில் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில்  பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகம் அரங்கேற்றம் காண்கிறது.

உறவுகள் மேடை நாடகத்தின் கதை, திரைக்கதை, இயக்குநர் ஆகிய பொறுப்புக்களை பூச்சி ரவி ஏற்றுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.பி. மணிவாசகம், நிர்வாக தயாரிப்பாளர் கரு.பன்னீர்செல்வம் மற்றும் ஆலோசகர் பாஸ்கரன் (பாஸ்கி) ஆகியோர் உறவுகள் மேடை நாடகம் வெற்றி பெற முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த உறவுகள் மேடை நாடகம் உயிரோட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன் முழு ஆதரவு வழங்கி உள்ளார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 5,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உதவி வழங்க டத்தோ சகாதேவன் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பூச்சி ரவி தெரிவித்தார்.

கோலாலம்பூர்,நவ.15-
பிரியாணி விற்பனையில் புகழ்பெற்ற உணவகமான ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் புதிய கிளை பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த உணவகத்தை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தற்போது அதிகமான இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதியதாக பல வியாபாரங்களை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

ஆகையால் வியாபாரத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வியாபாரத்தை தொடரலாம் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மேலும் கட்டங்களை வாங்க நினைப்பவர்கள் இந்த பகுதியில் விலை அதிகமாக இருந்தாலும் கூட இங்கு கட்டங்களை வாங்கி வாடகைக்கு விட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், நவ. 14-
மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நிருபர் முருகன் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதிக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்  சார்பில் 5,250 வெள்ளியை நிதி திரட்டி தரப்பட்டது.

அவருக்கு இன்னும் நிதி  பற்றாகுறை ஏற்பட்ட நிலையில்
மஇகா தேசியத் துணைத் தலைவரும்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் .சரவணன் நிருபர்  முருகனின் சிகிச்சைக்காக  3,000 வெள்ளி  நிதியை இன்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தமிழ் ஊடகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முருகன் அவர்கள் கடந்த  நவம்பர் 7ஆம் தேதி நடந்த விபத்தில் வலது கையில் இரண்டு எலும்புகள் முறிவு ஏற்பட்டது.

ஒரு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள வேளையில் மற்றொரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

அதே நேரத்தில் தேசம் ஊடகத்தின் இயக்குந்ர் தேசம் குணாளன் மணியம் 1,000 வெள்ளி நிதியை  முருகனின் சிகிச்சைகாக வழங்கினார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நிதி திரட்டப்பட்டது .

நல்லுள்ளம் படைத்தவர்கள்  பலர் நிதி வழங்கிய நிலையில்
ஆக மொத்தம் சங்கத்தின் சார்பில் 5,250 வெள்ளி திரட்டப்பட்டது.
அந்த நிதி இன்று நேரடியாக முருகனிடம் வழங்கப்பட்டது.

அதோடு டத்தோஸ்ரீ எம்.சரவணன் முருகனின் சிகிச்சை நிதிக்கு 3,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

ஆக மொத்தம் இன்று  மொத்தம் 8,500 வெள்ளி முருகனிடம் நேரடியாக  ஒப்படைக்கப்பட்டது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் நலனில்  தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்ற டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலேயே  அந்த நிதி முருகனிடம்  வழங்கப்பட்டது.

நிதியைப் பெற்றுக் கொண்ட முருகன் தனக்கு உற்ற நேரத்தில் ஆதரவளித்து உதவுகின்ற பத்திரிகையாளர் சங்கத்திற்கும் நேரில் வந்து நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ  எம்.சரவணன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

முருகனின் சிகிச்சைக்கு நிதி திரட்டிய மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பணியை பெரிதும் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார். இது போல் ஒற்றுமையாக இருங்கள் என அவர்  வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில்  மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணை தலைவர் காளிதாசன் தியாகராஜன், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோவன், எஸ். ஜீவாராஜா, ரவி  முனியாண்டி, செயலாளர் வெற்றி விக்டர், ஆட்சிக் குழு உறுப்பினர்களான  மூர்த்தி, காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், நவ 13-
மலேசிய மாஹிர் அறக்கட்டளையின்  தலைவர் டத்தோ பி. ஸ்ரீ கணேசுக்கு, மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையினால் (APM) பட்டமளிக்கப்பட்ட கௌரவ லெப்டினன்ட் கர்னல் (PA) என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் பாதுகாப்பு படையின் திறனை மேம்படுத்திய அவரது பங்களிப்புக்கு  அங்கீகார வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரின் தலைமையில் பாங்கி ALPHA பயிற்சி மையத்தில் நடைபெற்ற தீவிர ட்ரோன் பயிற்சியின் மூலம் மலேசிய பாதுகாப்பு படையில் முதல் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டனர்.

இரவு மீட்புப் பணிகளிலும், வெள்ளப்பாதிப்பு போன்ற அவசரநிலைகளிலும் வேகமான தகவல் பரிமாற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மலேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த ட்ரோன் பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கும் என ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

மேலும், வாயு கசிவு போன்ற ஆபத்தான சூழலில் ட்ரோன் மூலம் நிலை மதிப்பீடு செய்து, மீட்புக்குழுவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றார்.

இதனிடையே தனது தலைமையில் செயல்படும் மாஹிர்  அறக்கட்டளையும், மலேசிய பாதுகாப்பு படையையும்  இணைந்து நடத்திய பொதுத்–தனியார் கூட்டாண்மையினால் (PPP), மலேசிய குடிமைப் பாதுகாப்பு படையில் முதல் அங்கீகரிக்கப்பட்ட ட்ரோன் பயிற்சி மையம் (RPTO) தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதன் வழி தான் பெற்ற இந்த சாதனை, மலேசிய பாதுகாப்பு அமைப்பை நவீன தொழில்நுட்ப திசையில் முன்னேற்றும் வரலாற்றுச் செயல் எனப் பாராட்டப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

கோலாலம்பூர், நவ. 12-
நாடறிந்த கவிஞர் தி.ப. செழியனின் புதல்வி மலர்விழி தி.ப. செழியன் எழுதிய “நிலவாற்றுப்படை” கவிதைத் தொகுப்பு வரும் நவம்பர் 22 ஆம் திகதி சனிக்கிழமை, மாலை 3.30 மணிக்கு மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் வெளியிடப்படுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு  010-2601324 என்ற தொலைபேசி எண்ணில் கா. தமிழ்செல்வம் அவர்களை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.

கோலாலம்பூர், நவ.12-
நாட்டிலுள்ள தொழித் துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரம் குறைந்த பாடில்லை. அதிலும் உணவு விற்பனை துறையில் உணவக உரிமையாளர் பெறும் பாடுபட்டு வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் மாற்றுத் தொழிலாளர் எனும் gantian முறையை அமல்படுத்தியுள்ளனர். ஆனால் இந்த முறைகான நடைமுறைகள் எளிதாக இருக்க வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த விதிமுறைகள் ஒவ்வொரு அரசு துறைகளுக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது. இவை அனைத்தையும் செய்து முடித்து மாற்றுத் தொழிலாளர்களை பெறச் சென்றால் 10 பேருக்கு மூன்று அல்லது இரு பேர் மட்டும்தான் கிடைக்கிறது.

இந்த விவகாரத்தில் நம் உணவகத்தை விட்டு check out செய்யும் அந்நிய தொழிலாளர்களுக்கு மட்டுமே மாற்றுத் தொழிலாளர் வழங்கப்படுகின்றனர். சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் இந்நிலை எங்களுக்கு இல்லை. 10 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றால் 10 மாற்றுத் தொழிலாளர்கள் எங்களுக்கு கிடைத்து விடும். ஆகையால் இதை அரசாங்கம் கவனிக்க வேண்டுமென பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷும் கூறினார்.

நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் தேவைகள் குறித்து அனைத்து தொழிலித்துறைகளில் எத்தனை பேர் தேவை என்பதை மொத்தமாக கணக்கு எடுப்பது அவசியமற்றதாகும். தனிப்பட்ட முறையில் உணவக துறைகளில் எத்தனை அந்நிய தொழிலாளர் இருக்கிறார்கள், மேலும் எவ்வளவு பேர் தேவை என்ற துள்ளிய விவரத்தை அரசு கொண்டிருக்க வேண்டும்.

ஆகையால் gantian முறையில் அரசின் அறிவிப்பு எங்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு என்பது வரும்...ஆனா வராது என்பது போலதான் உள்ளது என பிரேஸ்மா அமைப்பின் தலைவர் டத்தோ மோசின் தெரிவித்தார்.

மேலும் அந்நிய தொழிலாளர்கள் குறித்த தகவல் தணிக்கைகள் முறையாக கண்காணிக்க பட வேண்டும். அவ்வபோது அந்த விவகரங்கள் புதுபிக்கப்படுவது அவசியம் என அவர் கூறியதுடன், அந்நிய தொழிலாளர்கள் தங்கும் இடம் விவகாரத்திலும் சில தளர்வுகள் அவசியம் என்றார் அவர்.

இதற்கிடையில், இந்திய தொழில்துறைகளுக்கான அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டு எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மேலும் 15ஆவது மலேசிய திட்டத்தில் அந்நிய தொழிலாளர்களை 10% குறைப்பதை நாங்கள் ஏற்கிறோம். ரோப்போடிக், ஏஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை எங்கள் தொழில் துறைகளில் அமல்படுத்த அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், நவ.11-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்திய உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் காரா சாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன் தலைமையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இந்த பகுதி இப்படி உருமாற்றம் பெற மிக பெரிய அளவில் காரணமாக இருந்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை இந்த நிகழ்ச்சி தலைமை தாங்க அழைத்ததோடு அவருக்கும் மிக பெரிய வரவேற்புடன் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும், ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் என்ற பாடலுக்கு ஏற்ப இந்த பகுதி மக்களால் மரியாதை செய்யப்பட்டார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

அதன் பின் சிறப்பு உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.
சரவணன் இந்த லிட்டில் இந்திய உருவாக நான் மட்டும் காரணம் அல்ல முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் இங்கு உள்ள வர்தகர்களும் என்றார்.

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இங்கு வருகை புரியும் போது இங்குள்ள இந்த வர்த்தகர்களுக்கு என்ன தேவை என என்னிடம் கேட்டார். இந்த பகுதியில் அதிகமாக இந்தியர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். அதிகமான இந்தியர்களின் வருகையும் இங்கு அன்றாடம் உண்டும். ஆகவே சீனர்கள், மலாய்காரர்கள் அடையாளமாக பல பகுதி இருக்கிறது.

இந்த பகுதி லிட்டில் இந்தியவாக அழைக்கப் படவேண்டும் என தெரிவித்தேன்.

உடனே அன்றே செய்தியாளர்களிடம் இவ்விடம் லிட்டில் இந்தியாவாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் அன்றைய ஆண்டு 7ஆம் மாதம் வாக்கில் என்னை அழைத்து இந்திய பிரதமர் மலேசிய வருகிறார்.

பிரிக்பீல்ட்ஸ் பகுதியை 3 மாதத்தில் உருமாற்ற வேண்டும். நானும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் இதனை ஒரு சேர திறந்து வைக்க போகிறோம் என டத்தோஸ்ரீ நஜீப் தன்னிடம் கூறினார் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் 3 மாதத்தில் இரவு பகல் பாராமல் இந்த இடம் கலாச்சார வடிவத்தோடு புதுபிக்கப்பட்டது. இதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இங்கு உள்ள வர்த்தகர்கள் என்றார் சரவணன்.

நான் பதவியில் இருந்தபோது எனக்கு எப்படி மரியாதை கொடுத்தார்களோ அதே மரியாதையை இங்கு உள்ள மக்கள் எனக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

பதவியில் இல்லாத சரவணனின் படம் வருட வருடம் லிட்டில் இந்தியாவை அலங்கரித்து வருகிறது. நாங்கள் பதவியில் உள்ளோம் எங்களுக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை என சிலர் புலம்பி வருகிறார்கள்.

பதவியில் இருக்கும் போது சமுதாயத்திற்கு ஏதாவது பயனுள்ளதை செய்துவிட்டு போங்கையா?
எதையும் செய்யாமல் மரியாதை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும் .

முதலில் மக்களுடன் மக்களாக வாழுங்கள். அவர்கள் சேவை செய்யுங்கள்.

பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மரியாதை தானாக கிடைக்கும். மக்கள் மனதார மதிப்பார்கள் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், நவ.11-
மலேசிய அஜித் ரசிகர் மன்றம் (Malaysia Ajith Fan Club) நடத்திய “Ajith Kumar Bikers Gathering” நிகழ்ச்சி 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 500-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, தல அஜித்தின் மோட்டார் சைக்கிள் பந்தய ஆர்வத்தையும், மனிதாபிமான மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியின் போது, சமூகப்பணியின் அடையாளமாக அமைப்பினர், மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு தலா வெ.500ஐ வழங்கினர்.

மேலும் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு வெ.500, அதோடு ஒரு மாத உணவுப் பொருட்கள் (வெ.1000 மதிப்பில்) வழங்கினர்.

அஜித் குமார் எடுத்துச் சொல்வது போல, “தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்பண்பு” ஆகிய மூன்றையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

மலேசிய அஜித் ரசிகர்கள் கழகத்தின் ஏற்பாட்டில், ரசிகர்கள், மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு அர்த்தமுள்ள நாளை உருவாக்கினர்.

இது வெறும் ரசிகர் இயக்கம் அல்ல, நெஞ்சை தொடும் மனிதாபிமான குடும்பம் என ரசிகர் மன்றத்தின் தலைவர் டேவ் எனும் தேவேந்திரன் தெரிவித்தார்.

ஈப்போ, நவ.6-
தடி எடுத்தவரெல்லாம் தண்டல். பதவி இருக்கும் பொழுது எது வேண்டுமானாலும் பேசலாம் என பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்று அம்னோவை குறை கூறுவதை வேலையாக கொண்டிருந்த ஐயா சிவநேசன் இன்று காலத்திற்கும் வாய்ப்புக்கும் ஏற்ப அம்னோவின் நண்பனாகிவுள்ளார் என கோப்பிங் ம.இ.கா தொகுதி தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்தார்.

ம.இ.கா எந்த கூட்டணியோடு சேருவதை பற்றி சிவநேசன் பேச வேண்டும். எங்களுக்கும் பேராக் மந்திரி புசாருக்கும் இருக்கும் பேச்சு வார்த்தையில் நீங்கள் பேச தேவையில்லை. இது கட்சியின் தனிப்பட்ட விவகாரம்.

இந்த விஷயத்தில் சிவநேசன் அரசியல் செய்ய வேண்டாம்.  நீங்கள் முதலில் மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்யுங்கள். பேராக் மக்கள் உங்களை புறக்கணிக்க தொடங்கி விட்டீர்கள்.

கடந்த தேர்தலில் சுங்காயில்  தட்டு தடுமாறி போட்டியிட்டது நினைவில்லையா?

இந்தியர்கள் அதிகமாக இருக்கும் தொகுதியில் வரும் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு தைரியம் உண்டா?

ம.இ.கா கட்சியின் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகிறதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என‌ நன்றாக தெரிகிறது.

போதும் உங்கள் அரசியல் நாடகம். ம.இ.கா வை சீண்டி இலாபம் தேட வேண்டாம் என அவர்  வலிறுத்தினார்.

கோலாலம்பூர், நவ.6-
மலேசியாவின் அதிகாரப்பூர்வ தளபதி விஜய் ரசிகர்கள் அமைப்பான Vijay Fans Official Squad சார்பில், மலேசியத் திரைப்படமான இறுதி ஸ்ட்ரைக் க்கு சிறப்பு திரையரங்க நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.

மலேசியத் திரைப்படங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை நடைப்பெற்றது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு திரையரங்கை முழுமையாக நிரப்பினர்.

திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டு மக்கள் உடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கு இனிய அனுபவம் வழங்கினர்.

இந்த முயற்சிக்கு Pekrawi எனும் சமூக சேவை அமைப்பு ஆதரவு வழங்கியது. சினிமா நட்பு மற்றும் ஒன்றுபட்ட உணர்வின் அடையாளமாக, இந்த நிகழ்வுக்கு மலேசிய அஜித் ரசிகர் மன்றம், மலேசிய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம், மலேசிய சூர்யா ரசிகர் மன்றம், Rahamaniac Malaysia மற்றும் Yuvanisms Malaysia ஆகிய ரசிகர்கள் மன்றங்களும் இணைந்து ஆதரவு வழங்கினர்.

“உள்ளூர் சினிமாவையும் நல்ல உள்ளடக்க படைப்புகளையும் தொடர்ந்து ஆதரிப்பதே எங்கள் நோக்கம். திரை உலக நாயகர்களை தாண்டி, நல்ல சினிமாவிற்காக ரசிகர்கள் ஒன்றுபடும் அழகான தருணம் இது,” என்று அமைப்பினர் தெரிவித்தனர்.

உள்ளூர் கலைஞர்களையும், தரமான படைப்புகளையும் உறுதியாக ஆதரிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக Vijay Fans Official Squad அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், நவ.6-
பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ. சிவநேசன் அவர்கள் தமிழ் பத்திரிகை ஒன்றில், நவம்பர் 16, 2025 அன்று நடைபெறவுள்ள ம.இ.கா பொதுப் பேரவையில், தேசிய முன்னணி கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற தமது அரசியல் திசையை ம.இ.கா தீர்மானிக்கும் வரை, பேராக் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ சாராணி மொஹமட் எந்தவொரு புதிய அரசியல் நியமனங்களையும் நிறுத்தி வைத்துள்ளார் என அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த அறிக்கையானது சிவநேசன் இப்போது தேசிய முன்னணியின் செய்தித் தொடர்பாளராக மாறிவிட்டாரா எனும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஏதேனும் அரசியல் நியமனங்கள் இருந்தால், அவை மாநில அரசாங்கத்தின் ஒரு அங்கமான தேசிய முன்னணியின் நிலைப்பாட்டின் மூலமே அமையும். அதை விடுத்து, தேசிய முன்னணி அல்லது ம.இ.கா-வின் உள்விவகாரங்களில் சிவநேசன் தலையிடத் தேவையில்லை. பதவிகள் அல்லது அங்கீகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ம.இ.கா தொடர்ந்து சமூகத்திற்காக சேவையாற்றும் என பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகேஷ் கணேசன் தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.கா-தேசிய முன்னணி வேட்பாளர்களின் தோல்வி குறித்தும், வாக்காளர்களின் ஆதரவை இழந்ததாகக் குறித்தும் சிவநேசன் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்புதான். வாக்காளர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாக்காளர்கள் எவ்வாறு பலவிதமான குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பொய் வாக்குறுதிகள் போன்றவற்றால் குழப்பப்பட்டு, மக்களின் ஆதரவில் மாற்றம் ஏற்பட்டது என்பதை நாங்கள் மறக்கவில்லை.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது பொதுத் தேர்தலின் போது, டத்தோஸ்ரீ நஜிப் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக, தங்களின் பலகால அரசியல் எதிரியான துன் டாக்டர் மகாதீரை ஜசெக ஆதரித்தது. 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் அம்னோ கட்சியைக் கட்டித் தழுவி அரசாங்கத்தை அமைக்கத் துணிந்தனர்.

முன்னர் திருடன், நாட்டின் கொள்ளையர் என்று அழைக்கப்பட்ட அம்னோ, திடீரென தூய்மையாகி விட்டது. ஜசெகவின் தேர்தல் பாடலான ‘ஹோய் யா ஹோய்’-ஐ மக்கள் எப்படி மறக்க முடியும்?

ஆகவே, கொள்கை மற்றும் போராட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ம.இ.கா போன்ற பிற கட்சிகளை விமர்சிக்க சிவநேசன் போன்ற ஜசெக தலைவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

சிவநேசன் தன்னையும் தனது கட்சித் தலைவர்களையும் சுய மதிப்பீடு செய்ய வேண்டும். 300,000 இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த வாக்குறுதி எங்கே போனது? இந்திய மாணவர்களுக்கான 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களின் ஒதுக்கீட்டை ஜசெக மீட்டெடுத்ததா? டோல் கட்டண ஒழிப்பு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை RM 1.50 போன்ற ஜசெக அரசியல் கூட்டணி அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது?

சிவநேசன் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்தாலே போதுமானது. ம.இ.கா கட்சியை அடிப்படையாகக் கொண்டு மலிவான விளம்பரங்களைத் தேடக்கூடாது என தியாகேஷ் கூறினார்.

கிள்ளான், நவ 1-
நாடு முழுவதும் உள்ள வீடுகளை ஒளியின் திருநாள் ஒளிரச் செய்யும் வேளையில், மெக்டொனால்ட்ஸ் மலேசியா (McDonald’s Malaysia) தனது மெக்டி தீபாவளி திறந்த இல்லத்தை 14 இடங்களில் ஒற்றுமையுடன் மகிழ்ச்சி உணர்வில் ஒன்றிணைத்தது. சீனப் புத்தாண்டு, ஹரி ராயா, கவாய் மற்றும் காமாடன் ஆகியவற்றிற்கான அதன் முந்தைய பண்டிகை திறந்த இல்லங்களின் வெற்றியைக் கட்டியெழுப்ப, இந்த நாடு தழுவிய முயற்சி, அனைத்து தரப்பு மலேசியர்களையும் கொண்டாட்டம் மற்றும் சமூக உணர்வில் ஒன்றிணைக்கும் பிராண்டின் (McDonald’s) பாரம்பரியத்தைத் தொடர்கிறது.

அக்டோபர் 24 அன்று கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ்லில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) தொடங்கி, மெக்டொனால்ட்ஸ் பத்து கேவ்ஸ் (McDonald’s Batu Caves Drive Thru),  மெக்டொனால்ட்ஸ் கிரீன்லேன் (McDonald’s Greenlane Drive Thru), மற்றும் மெக்டொனால்ட்ஸ் ஜாலான் ரெக்கோ (McDonald’s Jalan Reko) ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திறந்த இல்லங்களுடன், பின்னர் நாடு முழுவதும் உள்ள மற்ற இடங்களிலும் நடைபெற்றது.

ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் பண்டிகை நடவடிக்கைகள், வேடிக்கை நிறைந்த விளையாட்டுகள் மற்றும் ஆப்பிள் பைஸ் (Apple Pies) மற்றும் ஒரு கோகோ கோலா கேனுடன் முழுமையான 1,500 ஸ்பைசி சிக்கன் (கார கோழி / Spicy Chicken) மெக்டீலக்ஸ் உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 21,000 க்கும் மேற்பட்ட உணவுகள் பகிரப்பட்டன.

கிள்ளான் பண்டார் புத்திரி கால்டெக்ஸ் மெக்டொனால்ட்ஸ்  (McDonald’s Caltex Bandar Puteri Klang Drive Thru) நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டம் முக்கிய நிகழ்வாக விளங்கியது. பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சார நிகழ்ச்சிகளின் அற்புதமான வரிசை மூலம் மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

மேலும் சாந்தேஷ், யோகி பி, பாலன் காஷ் மற்றும் அமோஸ் பால் போன்ற பிரபலமான உள்ளூர் கலைஞர்களின் கூட்டத்தை மகிழ்விக்கும் தோற்றங்களும் இதில் அடங்கும்.

"இந்த ஆண்டு எங்கள் திறந்த தீபாவளி கொண்டாட்டம் வெறும் ஒரு பண்டிகை மட்டுமல்ல – இது மலேசியாவை உண்மையிலேயே சிறப்பானதாக்குவதைக் கொண்டாடும் தருணத்தைப் பற்றியது: நமது பன்முகத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைந்த ஆனந்தம்," என்று மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் நிர்வாக இயக்குநரும் உள்ளூர் செயல்பாட்டு கூட்டாளருமான டத்தோ ஹாஜி அஸ்மிர் ஜாஃபர் கூறினார்.

"மலேசியர்களுடன் இணைந்து வளர்ந்த ஒரு பிராண்டாக, நம் தேசத்தை உருவாக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் சமூகத்தையும் கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

தீபாவளி என்பது ஒளி, கருணை மற்றும் ஒற்றுமை எவ்வாறு நம் அனைவரையும் ஒரே குடும்பமாக நெருக்கமாகக் கொண்டுவரும் என்பதற்கான ஒரு அற்புதமான நினைவூட்டலாகும்."

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மெக்டொனால்ட்ஸ் மலேசியா மற்றும் ரொனால்ட் மெக்டொனால்ட்ஸ் ஹவுஸ் அறக்கட்டளைகள் (RMHC Malaysia) ஆகியவை நாடு முழுவதும் உள்ள 120 அனாதை இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழாக்களை நடத்துகின்றன, இது ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியும் சேர்ந்துணர்வும் கொண்ட ஒரு தருணத்திற்கு உரியவனென்பதற்கான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

“மெக்டொனால்ட்ஸ் மலேசியாவில், நாங்கள் வெறும் உணவகம் மட்டுமல்ல - மக்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இணைக்கும் இடமாக இருக்கிறோம்," என்று டத்தோ ஹாஜி அஸ்மிர் மேலும் கூறினார்.

"இந்த நாடு தழுவிய கொண்டாட்டத்தை பல குடும்பங்களுக்கு அர்த்தமுள்ளதாக மாற்றிய எங்கள் குழு உறுப்பினர்கள், கூட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்."

அதன் தீபாவளி திறந்த இல்லத்தின் மூலம், மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பங்காற்றும் கூட்டாளராக அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மலேசியாவின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் அனைவருக்கும் அக்கறை மற்றும் இரக்கத்தை ஆதரிக்கிறது.

தீபாவளி பண்டிகையைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள 370 க்கும் மேற்பட்ட உணவகங்களின் வலையமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 10,000 க்கும் மேற்பட்ட சமூக நடவடிக்கைகள் மூலம் மெக்டொனால்ட்ஸ் மலேசியா ஒரு சமூக  பங்காளியாக தனது பங்கைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது. உள்ளூர் ஈடுபாடுகள் முதல் நலன்புரி இல்லங்கள், பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகள் வரை, இந்த முயற்சிகள் மெக்டொனால்ட்ஸ் மலேசியாவின் அக்கறை, உள்ளடக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் தொடர்ந்து கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

சிகாமாட், அக்.30-
பத்து அன்னாம் பகுதியில் நடைபெற்ற சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் மடானி தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் உயர்க்கல்வியைத் தொடரவிற்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

உள்ளூர் மக்களுடன் தீபாவளி பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடியது மட்டுமல்லாமல் உயர்க்கல்வி பயில நிதி உதவி தேவைப்படும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற சுமார் 12 மாணவர்களுக்கு யுனேஸ்வரன் நிதியுதவி வழங்கினார்.

கல்விக்குத் தான் எப்பொழுதும் முன்னுரிமை வழங்குவதாகவும் சமூக, இன வேறுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இம்மாணவர்கள் தங்களது கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த வெற்றிகளை அடைய வேண்டும் என்று தாம் மனமார வாழ்த்துவதாகவும்  அவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக ஊடகப்பதிவில் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக். 29-
47 ஆவது ஆசியான் உச்சிமாநாடு குறித்து பெரிகாத்தான் நேஷனல்  தலைவர்கள் விமர்சனங்கள் செய்து வெளியிட்டுள்ள பொறுப்பற்ற குற்றச்சாட்டு அறிக்கைகளை தாம் கண்டிப்பதாக பிரதமர் துறை அமைச்சரின் அரசியல் செயலாளரும், கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கனபதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நமது நாட்டின் மரியாதையையும் மதிப்பையும் பாதிக்கும் வகையில் கூறப்பட்டவையாகும் என்றும், நாட்டின் நற்பெயரை களங்கம் செய்யும் அளவிற்கு குறுகிய அரசியல் நலனுக்காக விளையாடும் செயல் இதுவாகும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்த மாநாடிற்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட அனைத்து நாடுகளின்  தலைவர்களும் மலேசியாவிற்கு வருகை தந்தனர். அதனால்  நம் நாடு மற்ற தலைவர்களின் சிந்தனையை ஆதரித்து அடிபணிகிறது என்பதற்கு பொருளல்ல.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கீழ் செயல்படும் தலைமைத்துவம் திறமையான மற்றும் முதிர்ந்த அரசியல்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது என அவர் கூறினார்.

அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் நம் பிரதமர் அமெரிக்க அதிபருடன் நடனம் ஆடும் காணொளி  குறித்தும் சிவமலர்  விளக்கமளித்துள்ளார்.

அது வெறும் மலேசிய கலாச்சார விருந்தோம்பல் நிகழ்வின் ஒரு பகுதி எனவும், பிரதமர் நாட்டின் கலாச்சாரத்தையும் விருந்தோம்பலையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வில் குறுகிய நேரம் பங்கேற்கும் வகையில் அந்நிகழ்வு ஏற்ப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்வு அவமானமானது என சித்தரிப்பது, மலேசிய மக்களுக்கே அவமரியாதை செய்வதற்கு சமம் எனவும், அந்த வகையில் நம்  நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய கலைஞர்கள் மற்றும் கலாச்சார குழுவினரின் அர்ப்பணிப்பை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முறை நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் பொருளாதார போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தியது, மற்றும் சமநிலை பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என்றார் அவர்.

இந்த மாநாட்டின் வழி மலேசியா தனது பொருளாதார இறையாண்மையை தியாகம் செய்தது என்ற பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் பிரயோஜனத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும், அது மக்களிடையே பயத்தை உருவாக்கி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி ஆசியான் உச்சிமாநாடு மலேசியாவின் திறமை, பாதுகாப்பு, பங்கேற்பு மற்றும் சரியான ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திய சிறந்த சான்றாகும். இதுபோன்ற நிகழ்வுகளில் சிறிய தொழில்நுட்ப தவறுகளை அரசியல் ஆயுதமாக்கும் செயல்கள் அறிவில்லாத குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என்றார்.

இன்றைய அரசு மலேசியாவின் மரியாதைக்குரிய மற்றும் தார்மீகமான வெளிநாட்டு கொள்கை மரபை தொடர்ந்து பேணிக்காக்கும் அரசாகும். ஆனால் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் இறையாண்மையை அவமதிக்கிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-காளிதாசன் இளங்கோவன்

கொல்லைக்குப் போனாலும் கூட்டு ஆகாதென்பார்கள்; இத்தகைய மூத்த மொழி, நம்பிக்கை-நாணயம்-உண்மை-ஓர்மை-நேர்மை உள்ளிட்ட பண்பு நலனைத் தொலைத்தவர்களை மையமாகக் கொண்டு உருவான அனுபவ மொழியாக இருக்கலாம்.

அதேவேளை, உயிர் கொடுப்பான் தோழன் என்னும் நட்புமொழிக்கு இலக்கணமாக இரு நண்பர்கள் விளங்குவதைப் பார்த்து, வியப்பாகத்தான் இருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில், பத்துமலை-செலாயாங் வட்டாரத்தில் டத்தோஸ்ரீ அரி,  பாபு என்னும் இளைஞர்கள் இருவரும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக அறிமுகமாகி, உறவுக்கும் மேலான அத்தகைய நட்பை தொடர்ந்து பேணிக் காத்து வந்துள்ளனர்.

காலவோட்டத்தில், இவ்விருவரும் வர்த்தகத்திலும் தங்களின் கலங்கமில்லா நட்பை நிலைநாட்டி உள்ளனர்.

செலாயாங் மருத்துவ மனைக்கு எதிரேவுள்ள ‘கெப்பிட்டல் செலாயாங் ஹால்’ என்னும்  வர்த்தக அரங்கத்தைப் பராமரிக்கும் ஹரி, Oh Yeah Banana Leaf’  என்னும் வாழை இலை உணவகத்தை நடத்திவரும் பாபு இருவரும் இணைந்து ‘Oh Yeah  Fressh Mart’  என்னும் பந்நோக்கு வர்த்தக மையத்தை கூட்டாக உருவாக்கி அதை வெற்றிகரமாகவும் நடத்தியும் வருகின்றனர்.

இந்தச் சுழலில், பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு,  அவருக்குத் தெரியாமல் அவரின் அன்புத் தோழர் டத்தோஸ்ரீ அரி கமுக்கமாக பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து, பெரிய கணையாழியையும் அணிவித்து, உற்ற தோழரை நட்பு வட்டத்தில் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்திருக்கிறார்.

இந்திய இளைய சமுதாயத்தில் நல்ல வண்ணம் வாழ்வதுடன் எத்தனையோ பேருக்கு வேலைவாய்ப்பும் அளித்து நட்பையும் சுற்றத்தையும் பேணிவரும் டத்தோஸ்ரீ அரியும் பாபுவும் கடின உழைப்புக்கும் தாழாத முனைப்புக்கும் அயராத உழைப்புக்கு சொந்தக்காரர்கள்;

இவற்றினும் மேலாக, கலங்கமில்லா நட்புக்கு இலக்கணமானவர்கள்!

கோலாலம்பூர்,அக்.27-
சினிமாவில் மட்டும் இன்றி கார் பந்தயத்திலும் அதே போல மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் மிகவும் பேர் போனவர் நடிகர் அஜித் குமார். இவரின் பெயரால் குறிப்பாக இளைஞர்களுக்கு நற்செய்திகளை ஆற்றி வருகின்றது மலேசியாவின் முன்னணி அஜித் குமார் ரசிகர் மன்றம்.

அச்சேவையில் ஒன்றாக தான் வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அஜித் குமார் ரசிகர்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகிறார் மலேசியா அஜித்குமார் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் பன்னீர்செல்வம்.

இந்த நிகழ்ச்சிக்கு அஜித்குமார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விழா என பெயரிடப்பட்டுள்ளது. 100 சிசி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்று கூடுவர் என அவர் தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமார் போலவே மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் நாட்டம் உள்ள பல இளைஞர்கள் இதில் பங்கேற்பார்கள் எனறார் அவர்.

இதன் முக்கிய நோக்கமே இம்மாதிரியான நிகழ்ச்சியின் வாயிலாக இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்வதுதான். இது ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் உணவு விநியோகம் செயவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நினைக்கின்றோம். அதே சமயம் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் உயிரிழந்த சில இளைஞர்களின் குடும்பத்தினருக்கு சிறிய உதவிகளை வழங்கவும் எண்ணம் கொண்டுள்ளோம் என டேவ் என்ற தேவேந்திரன் விளக்கம் அளித்தார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் Gelanggang Petanque batu 1, Taman Mewah, Port Dickson, Negeri Sembilan இந்நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் பங்கேற்பதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் முன்பதிவு பதிவு செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இலவசமாக நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு 012-3607648 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.

சிலாங்கூர், குவாங் பட்டணத்தில் உள்ள கம்போங்  பூங்கா ராயா குடியிருப்பில் வசிக்கும் மூதாட்டி திருமதி தங்கம்மாள், தன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை தன் குடும்பத்தினர் புடைசூழ கோலாகலமாகக் கொண்டாடினார்.

மூன்று மகன்கள், 6 மகள்கள் என ஒன்பது மக்களைப் பெற்ற இந்த மகராசி, 35 பெயரப் பிள்ளைகள், 34 கொள்ளுப் பெயரப் பிள்ளைகள், உறவினர், நட்பினர் என பல நூற்றுக் கணக்கானோர் அணி திரள, தங்கம்மாள்  கொண்டாடிய விழா நேற்று செலாயாங் கெப்பிட்டல் வர்த்தக வளகத்தில் நடைப்பெற்றது.

தமிழ் நாடு, நாகப்பட்டிணத்தில் 1925, அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்த இவர், சிறுமியாக இருந்தபொழுது தன் தந்தை பெரியான் மற்றும் தாயாருடன் கப்பல் மூலம் அன்றைய மலாயாவிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது, சிங்கப்பூர் தனி நாடாக இல்லாத நிலையில், நேரடியாக சிங்கப்பூரில் கொஞ்ச காலம் வாழ்ந்த நிலையில், சின்னையா என்பவரை மணம் முடித்தபின், பத்தாங் பெர்சுந்தை சுங்கை ரம்பைத் தோட்டத்திற்கு வந்து இரப்பர்த் தோட்டத்தில் பணி புரிந்திருக்கிறார்.

இந்தக் காலக்கட்டத்தில் தன் பிள்ளைகள் ஒவ்வொருவராக திருமணம் செய்துவைத்து, அதன் அடிப்படையில் அதிகமான மறுமக்கள் ஏராளமான பேர-கொள்ளுப்பேரப் பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் தங்கம்மா.

இவரின் கணவர் சின்னையா, 34 ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகி விட்டார்.

தற்பொழுது, இரண்டாவது மகன் இராமன்-சாவித்திரி இணையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் தங்கம்மா, தனியாகக் குளித்து, தனியாக உடுத்தி, தானாக உண்ணும் ஆரோக்கிய நிலையுடன் உள்ளார்.

எந்த மருந்தும் சாப்பிடாத தங்கம்மாளுக்கு எப்போதும்  பிடித்த சுவை பானங்கள் நெஸ்கஃபே, மைலோ, தேநீர் போன்றவை ஆகும் என்று தங்கம்மாவின் ஐந்தாவது பிள்ளையும் இரண்டாவது மகளுமான சகுந்தலா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

இடையில் 95-ஆவது வயதில் தங்கம்மாவிற்கு குடல் அறுவைச் சிகிச்சை சுங்க பூலோ மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்டபோது, தங்களை கொஞ்சம் பயமுறுத்தி விட்டதாக, இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த முகமது தேவா கூறினார்.

செர்டாங்கில் வசிக்கும் மூன்றாவது பிள்ளையும் முதல் மகளுமான சகுந்தராணியின் மகன்தான் இந்த தேவா.

உறுதியான பற்களைக் கொண்டிருக்கு நூற்றாண்டு மூதாட்டியான தங்கம்மாவிற்கு பிடித்த நிறம் நீல் வண்ணம் என்று சகுத்தலா தெரிவித்தார்.

பிரிக்பீல்ட்ஸ், அக் 27-
லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின்றன. மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்கள் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த பொழுது, 2010 அக்டோபர் 27ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டது. நமது பாரம்பரியத்தின் அடையாளமாக
இந்த லிட்டில் இந்தியா  உருவாக்கப்பட்டது.

முன்னாள்  பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக், அப்போதைய இந்தியப் பிரதமரும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் ஆகியோரின் முன்னிலையில் லிட்டல் இந்தியா கோலாகலமாகத் திறக்கப்பட்டதை நாம் அறிவோம்.
இது மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாகவும் அமைந்தது.

இந்தியர்களுக்கென ஒரு தளம். சாலையின் இரு மருங்கிலும் நமது வணிக மையங்கள். இந்தியர்களின் கலையம்சங்களுடன், பிரதான நுழைவாயில், ஒவ்வொரு பக்கமும் நமது கலைகள் நிறைந்திருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள். இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்பார்த்ததைவிட மிக அற்புதமாக வளர்ந்து இந்தியர்களின் பிரதான வணிக மையமாக உருவாகியுள்ளது.

ஒரு மாமாங்கம் கடந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா இந்தியர்களின் வணிக மையமாக உருவெடுத்திருப்பதில் நமக்கெல்லாம் பெருமையே. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் உருவெடுத்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  வரலாற்று ரீதியாக, பிரிக்பீல்ட்ஸ் என்பது உழைப்பு, தைரியத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு வர்த்தக நகரமாகும். எண்ணிலடங்கா உணவகங்கள், ஆடை, ஆபரணக் கடைகள், தங்கம் ஜொலிக்கும் நகைக்கடைகள், ஆலயங்களின் தரிசனம், கலாச்சார மையங்கள் என இந்தியர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் மையமாக பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா நமக்கான தளமாக அமைந்துள்ளது.

டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் முயற்சியில், திட்டத்தில் உருவான 'லிட்டில் இந்தியா பிரிக்பீல்ட்ஸ்' இன்று 15 வருடங்களைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிப்பது நமக்கெல்லாம் பெருமையே.

கோலாலம்பூர்,அக். 26-
பள்ளி என்பது கல்வி மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் இடமாக இருக்க வேண்டும், மது, புகையிலை அல்லது வேப் போன்ற தீய பழக்கங்களின் விளம்பர மேடையாக இருக்கக்கூடாது என்று மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை சீனப் பள்ளி மண்டபங்களில் மது பரிமாற அனுமதிக்கும் தற்போதைய வழிகாட்டுதலைத் தொடர தீர்மானித்ததை  மஇகா பிரிகேட் கடுமையாக எதிர்த்து, அந்த முடிவு நாட்டின் சமூக மற்றும் ஒழுக்க மதிப்புகளுடன் பொருத்தமற்றது என தெரிவித்தது.

இளம் தலைமுறையை சிறு வயதிலிருந்தே நன்னெறி, ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் வளர்க்க வேண்டியது மிக முக்கியம் என அது வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகள் என்பது குணநல வளர்ச்சியின் தூணாகும். அங்கு மது, புகையிலை, வேப் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த நிகழ்வுகளும் அல்லது பிராண்டுகளும் இடம்பெறுவது கல்வி நிலையத்தின் மதிப்பை களங்கப்படுத்தும். நிகழ்வு பள்ளி நேரத்திற்கு வெளியே நடந்தாலும், அதன் தாக்கம் மாணவர்களின் மனநிலைக்கும், பள்ளியின் மரியாதைக்கும் கேடு விளைவிக்கும்.

“Corporate Social Responsibility (CSR)” என்ற பெயரில் மது நிறுவனங்களின் பங்களிப்புகளை ஏற்குவது ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தகைய CSR உதவிகள், சமூக நலனுக்கே திசைதிருப்பப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.

கல்வி நிறுவனங்கள் முழுமையாக “மது, புகை, வேப் ஆகியசை தடை செய்யப்பட்ட பகுதிகளாக தொடர வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கல்வி அமைச்சு தற்போதைய வழிகாட்டுதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அது வழியுறுத்தியது.

அமைப்பு மேலும் குற்றமற்ற தலைமுறை (Generasi Anti Jenayah) இயக்கத்தின் கீழ், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG), அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இளைஞர்களை தீய வழக்கங்களிலிருந்து பாதுகாக்கச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

ஒழுக்கமிக்க, சுத்தமான, உயர்ந்த மதிப்புகளைக் கொண்ட இளைஞர்களே நம் நாட்டின் எதிர்காலம்,” என்று மஇகா பிரிகேட்டின் தலைவர் எண்ட்ரு டேவிட் தனது அறிக்கையில் தெரிவித்து கொண்டார்.

கோலாலம்பூர்,அக்.24-
கெடாவில் சூராவ், பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி சத்தத்திற்கான புதிய விதிமுறைகளை மஇகா வரவேற்கிறது என்று மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஏ.கே. ராமலிங்கம் கூறினார்.

கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவு புதிய வழிக்காட்டலை வெளியிட்டுள்ளது.

அதாவது மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதலை அப்பிரிவு வெளியிட்டுள்ளது.

சட்ட விதிமுறைகள், சமூகத் தேவைகளுக்கு இணங்க பள்ளிவாசல்கள், சூராவ் ஒலிபெருக்கிகளின் சத்தத்ததை, அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது சுற்றியுள்ள
குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது.

மேலும் இஸ்லாமிய போதனைகள் ஞானத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும் சுற்றியுள்ள சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. ஒலியின் அளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  

வெளிப்புற ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொழுகைக்கான அழைப்பு போன்ற முதன்மை மத நோக்கங்களுக்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. பொது சொற்பொழிவுகளுக்கு அல்ல என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வரவுள்ளது.

கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவின் இந்த வழிகாட்டுதல்களை மஇகா முழுமையாக மதிக்கிறது.

அதே வேளையில் மாநிலத்தில் வாழும் மற்ற இன மக்களையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற இன மக்களின் உரிமையையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஇகா கருதுகிறது.

ஆக பல்லின மக்களை கொண்டுள்ள மலேசியாவின் அனைவரும் அடுத்தவரின் இனம், மதம், கலை, கலாச்சாரத்திற்கு உரிய மதிப்புகளை வழங்க வேண்டும்.

இவ்வேளையில் கெடா மாநில அரசுக்கும் கெடா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறையின் பள்ளிவாசல், சூராவ் மேலாண்மை பிரிவுக்கும் மஇகா நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று டத்தோ ராமலிங்கம் கூறினார்.

கோலாலம்பூர், அக்.24-
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீன பள்ளி மண்டபத்தில் மது விருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை செய்தார்.

உடனே அந்த சமூகம் பொங்கி எழுந்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்
டி.ஏ.பி - எம்.சி.ஏ  தங்களது எதிர்ப்பை கூறுயுள்ளனர்.

கல்வியை முன்னிறுத்தி  அந்த வடிவத்தில் டத்தோஸ்ரீ அன்வார் எங்கள் முறைகளில் அடக்குமுறை காட்ட நினைக்கிறார். பாஸ் கட்சியின் ஆட்சியின் போது கூட பாஸ் இப்படிப்பட்ட விதிகளை சீன பள்ளிகள் மீது கொண்டு வரவில்லை.

ஆனால் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த  செயல் எப்படிப்பட்ட  பின் விளைவை கொடுக்கும்  என்பதை அன்வாரின் ஆட்சியை மிரட்டி பார்க்கும் விதமாக லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

அன்வாரின் இந்த முடிவு தேன் கூட்டில் கையை விடுவதற்கு சமம். செய்தால் விளைவு எப்படி இருக்கும் என அரசியல் ரீதியில் லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

டத்தோஸ்ரீ  அன்வாரின் இந்த ஆட்சிக்கு சீன சமுதாயம் பெரிய அளவில் பங்கு வகித்துள்ளது. இந்த பிரச்சினையில் அன்வார் அடம்பிடித்தால் சீன சமுதாயம் அவருக்கு எதிர்ப்பாக திரும்பும் காரணம் சீன மண்டபங்களின் வருமானம் பெரிய அளவில் அந்த சமுதாயத்தின் சமூக பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.

அடிமடியில் கையை வைத்தால் அது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். அதனால் சீன சமூகமும் அரசியல் தலைவர்களும் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தில் மிக பெரிய அளவில் எம்.பிகளை வைத்துள்ள டி.ஏ.பி கட்சி,  தேன் கூட்டில் கையை விடாதே என லிம் குவான் எங்  மூலம் ஒரு ஓலையை அனுப்ப ஆடி போனது அன்வாரின் அமைச்சரவை.

இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கொடுத்த அறிக்கையில் ,இன்று நடத்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய நடைமுறையை பயன்படுத்த அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாகவும்  அதன் அடிப்படையில் சீன பள்ளி மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது விநியோகத்திற்கு தடை இல்லை எனவும்  கூறியுள்ளார்.

நேற்று பிரதமர் அறிவித்து இன்று அந்த பதில் U-TURN செய்யப்பட்டதற்கு காரணம் லிம் கொடுத்த எச்சரிக்கையா? அல்லது சீன சமுதாயம் கொடுத்த அழுத்தமா?

எது எப்படியோ இன்றைய அமைச்சரவையில்  சீன சமுதாயம் தங்கள் மண்டபத்தில் விதிமுறை என்ற பெயரில் நடக்கவிருந்த திணிப்பை நிறுத்தியுள்ளனர் என சமுகவலைதள வாசிகள் வட்டாரத்தில் பேசிக் கொண்டு வருகின்றனர்.

அரசியலில் யார் குடிமி யார் கையில் என்பது சில பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் தெரிகிறது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், அக். 24:
வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் சார்பில் டானாவ் கோத்தா பகுதியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பிலோக் E அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்புகளுடன் கூடிய சுவையான உணவு விருந்தும் வழங்கப்பட்டதோடு, மகிழ்ச்சியூட்டும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன என பொதுபணி நலச்சங்கத் தலைவர் வின்சன்ட் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே. ஆதரவற்றோரும், மாற்றுத் திறனாளிகளும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்வதில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் அவர்.

மேலும், இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் மக்களின் நலனுக்காக எப்போதும் செயலில் இருக்கும் என்றும் தலைவர் வின்சன்ட் கூறினார்.

இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து தீபத் திருநாளை கொண்டாடுவோம்!!
-டத்தோ டி.மோகன்

கோலாலம்பூர், அக்.19-
இந்த தீபாவளியை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று குடும்பத்தாருடனும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாதுகாப்பான முறையிலும் சிக்கனமான முறையிலும் இந்த தீபாவளியை நாம் கொண்டாட வேண்டும்.

நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் கைகோர்த்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம் என டத்தோ டி.மோகன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்துடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!

கோலாலம்பூர்,அக்.19-
தீபத் திருநாளை வரவேற்கும் வகையில் நாம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக தீபத் திருநாளை கொண்டாட வேண்டும் என மிம்தா எனப்படும் உலோக மறுசுழற்சி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் முத்தப்பன் தெரிவித்தார்.

நம் வாழ்வில் கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி பொங்க இந்த தீபத் திருநாள் வழிவகுக்கும். ஆகையால் நாம் அனைவரும் இந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

மேலும் தீபத்திருநாளை நம் வசதிக்கேற்ப கொண்டாட வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்கள் உதவி புரிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் சொந்த ஊருக்கு திரும்புவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் இந்த தீபத் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் அவர் தமது வாழ்த்து அறிக்கையில் கூறிக் கொண்டார்.

கோலாலம்பூர்,அக்.16-
சமீபத்தில் மாணவர்களைச் சார்ந்த பல வன்முறைச் சம்பவங்கள், அதில் கொலை, பாலியல் வன்முறை மற்றும் குற்றவியல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவது ஆகியவை பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் கூறினார்.

இத்தகைய வீடியோக்களைப் பதிவு செய்வது அல்லது பரப்புவது சட்ட விரோதமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். இச்செயல் இளைஞர்கள் மத்தியில் குற்ற உணர்வை சாதாரணமாக்கும் அபாயம் உண்டு எனவும் அவர் சொன்னார்.

குற்றச் செயல் விடியோக்களை பதிவு செய்வது செக்‌ஷன் 233 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீகழ் குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் அதிகபட்சம் வெ.50 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக இரண்டுமே விதிக்கப்படலாம்.

இதுபோன்ற காணொளிகளை பகிர்வதை அனைத்து வயதினரும் செய்கின்றனர். இது சமூக வளைத்தள் வாசிகள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

சமூகத்தின் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து, குற்றமற்ற தலைமுறையை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என்று மஇகா பிரிகேட் சார்பில் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர்,அக்.15-
நாளுக்கு நாள் பள்ளிகளில் வன்முறை பரவத் தொடங்கி வருவதுடன், பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் நடந்த மாணவி கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் நாளுக்கு நாள் அதிகமான அச்சத்திலும் கவலையிலும் உள்ளனர் என
டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு என்ன நடந்தது? சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் பரவுகின்ற எதிர்மறை உள்ளடக்கங்களின் தாக்கமா இது? அல்லது வீடு மற்றும் பள்ளியில் ஒழுக்கக் கல்வி தளர்வதால் இந்த நிலை உருவாகியுள்ளது?

பிள்ளைகளை அன்போடு வளர்ப்பதோடு, பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்துடனும் வளர்த்திட வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தல் என அவர் தெரிவித்தார்.

முன்பு மாணவர்களிடையே நடந்த பகிடிவதை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக இருந்த நிலையில், இப்போது அதைவிட ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. சமீபத்தில் பெட்டாலிங் ஜெயாவில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவனின் எதிர்காலமும் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த மலேசிய கல்வி அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டாலும், அவற்றின் விளைவு மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய சிலர் பிரம்படி  முறையை மீண்டும் கொண்டு வர பரிந்துரைக்கின்றனர்.

அதேபோல் பள்ளிகளில் சோதனை நடவடிக்கைகள் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இது மாணவர்கள் ஆயுதம், போதைப்பொருள், வேப் போன்றவற்றை பள்ளிக்குள் கொண்டு வருவதைத் தடுக்க உதவும் என சிவக்குமார் கூறினார்.

கோலாலம்பூர், அக்.14-
மஇகா இளைஞர் பிரிவு, பள்ளி மாணவர்களை உட்படுத்திய சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களால், குறிப்பாக பள்ளியில் பாலியல் வன்கொடுமை, எஸ்பிஎம் மாணவரின் தற்கொலை மற்றும் இன்று நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றால் பெருத்த கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பள்ளி வளாகத்திலும், பள்ளி நேரத்திலும் நடந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கின்றது. தீவிரமான சமூக மற்றும் நன்னெறி நெருக்கடியைப் பிரதிபலிக்கும் இந்த சூழ்நிலையினை உடனடியாகவும் முழுமையாகவும் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

பள்ளிகள் மாணவர்கள் கல்வி கற்கவும், எதிர்காலத்தை உருவாக்கவும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும், மன உளைச்சலையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது என அவர் சொன்னார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மனநலத்தினை முன்னுரிமையாக கருத வேண்டுமே தவிர, ஒரு சிறு பிரச்சினையாக அலட்சியப் படுத்தக் கூடாது.

ஆதலால், மஇகா இளைஞர் பிரிவு, மலேசிய கல்வி அமைச்சு மற்றும் அதன் தொடர்புடைய இலாகாக்கள் பின்வரும் உறுதியான நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்துகிறது:
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை வலுப்படுத்துதல், முக்கியமாக பகடிவதை, தொந்தரவு மற்றும் அத்துமீறல் தொடர்பாக ரகசிய புகார் அளிக்கும் வழிகளை உருவாக்குதல்,
மாணவர்களுக்கு குறிப்பாக முக்கிய தேர்வுகளுக்கு முன்பு, மனநல பரிசோதனை மற்றும் கட்டாய வழிகாட்டி ஆலோசனைகளை செயல்படுத்துதல்,
மாணவர்களிடையே மன அழுத்தம் அல்லது தீய நடத்தைகளை ஆரம்பத்திலேயே  கண்டறிந்து களைய பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்,
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல் துறையுடன் இணைந்து பள்ளி வளாகங்களில் திடீர் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவரின் உயிரிழப்பும் வெறும் புள்ளிவிவரமல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலமாக அமைய வேண்டியவர்கள், அவர்களின் இழப்பு குடும்பங்களையும் சமுதாயத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இனிமேலும் வெறும் அறிக்கைகளோ உறுதிமொழிகளோ இல்லாமல், தீவிரமான மற்றும் உறுதியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நேரம் இது.

மஇகா இளைஞர் பிரிவு, இந்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும் உணர வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் கல்வி அமைப்புகளுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாகவும் அர்விந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,அக்.14-
பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சரின் அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலெவாவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கில், அக். 11 —
மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுடன் இணைந்து, ரக்கான் மூடா ரக்கான் லித்தார் முயற்சியின் கீழ், முதல் முறையாக இந்திய பெண்களுக்கான கார் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் அக்டோபர் 11ஆம் திகதி 2025 (சனிக்கிழமை) அன்று டெங்கிலிலுள்ள Tapak Lepark வளாகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

இந்நிகழ்வில் பல இந்திய பெண்கள் தங்களது தனிப்பட்ட கார்களுடன் கலந்து கொண்டு தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அவர்கள் நவீன முறையில் அலங்கரித்த கார்களின் மூலமாக வெளிப்படுத்த உள்ளனர்.

அத்துடன், இந்த கார் கண்காட்சியில் அழகு படுத்தப்பட்ட பெண்களின்  கார்கள் மற்றும் அதி நவீன சூப்பர் பைக்குகள் போன்ற வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என இந்நிகழ்ச்சியின் திட்ட இயக்குநர் பவீத்தரன் இளங்கோவன் தெரிவித்தார்.

இது ஒரு சாதாரண கார் கண்காட்சி அல்ல; இளைஞர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் விழா என அவர் கூறினார்.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுமக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களிக்க அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பவீத்தரன் இளங்கோவன் (தொலைபேசி: 010-396 1002 என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக்.8-
சிலாங்கூர் மாநில ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் இயக்கம் தீபாவளியை முன்னிட்டு செலாயாங் - பத்துமலை பகுதியை சேர்ந்த பி40 பிரிவை சேர்ந்த சுமார் 280 இந்திய குடும்பங்களுக்கு  தீபாவளி உதவி பொருட்களை வழங்கியது.

இந்த இயக்கத்தின் தலைவர் மருதைய்யா சுப்ரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு சுமார் 180 மக்களுக்கு  இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அது 280ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

எங்களின் இயக்க உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் இந்த வட்டாரத்தில் உள்ள  பி 40 மக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதோடு எங்கள் முயற்சிக்கு சில நல்லுள்ளங்கள் உதவி கரம் நீட்டி உள்ளனர். அவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

கலை நிகழ்ச்சி ,கோலம் போட்டி  சுவையான விருந்துடன் மக்களுக்கு இந்த உதவி நிதி கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அங்கு வருகை தந்த சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் டத்தோ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பாலமுருகன், டத்தோ பிரகாஷ், நகராண்மைக் கழக உறுப்பினர் தேவேந்திரன், சரவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

அவர்கள் இந்த இயக்கத்திற்கு கொடுத்த வற்றாத ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்க உறுப்பினர்கள் அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.

கோலாலம்பூர், அக.8-
தொழில்நுட்ப மேம்பாட்டை கையாழ உணவக முதலாளிகளுக்கும் நிர்வாக பணியாளர்களுக்கும் சிறப்பு பயிற்சியை வழங்க இம்முறை அறிவிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என பிரிமாஸ் எனப்படும் இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ் கூறினார்.

இன்றைய சூழலில் உணவக உரிமையாளர்கள் பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அதில் முதன்மையாக அந்நிய தொழிலாளர்கள் தேவை இருந்தாலும் அதை சரிகட்ட தொழில்நுட்ப பயன்பாடு பற்றிய புரிதல் அவர்களுக்கு தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு AI தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு மிகவும் அவசியம் என அவர் சொன்னார்.

இதன் மூலம் தொழிலாளர் பிரட்சினையை அவர்கள் களையலாம். ஆகையால் அரசாங்க சிறப்பு நிதியை ஒதுக்கி அவர்களுக்கு பயிற்சியை வழங்க முன்வரவேண்டும் என சுரேஸ் கூறினார்.

இன்றைய நிலையில் இந்திய உணவக உரிமையாளர்களுக்கென சுமார் 8,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் தொடர்பில் பல பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பின்னர் gantian முறையை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இருந்தாலும் தொழிலாளர் பிரச்சினை தீர்ந்தப்பாடில்லை என அவர் சொன்னார்.

இதற்கு மத்தியில் நாட்டில் விலைவாசி ஏற்றம் எங்களுக்கு மற்றொரு பெரும் பாரமாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் காண்பது எங்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. அடிப்படை பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது அவசியம். விலைவாசி ஏற்றம் தொடர்ந்தால் அதனை சரிகட்ட உணவு விலையை நாங்கள் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அவர் சொன்னார்.

பிரிமாஸிசின் 25ஆவது வெள்ளி விழா நேற்று தலைநகரிலுள்ள பிரசித்திப் பெற்ற தங்குவிடுதியில் நடைப்பெற்றது. 25 ஆண்டுகள் என்பது சாதரண விடையம் அல்ல என சங்கத்தின் காப்பாளர் டத்தோ ரேனா ராமலிங்கம் தெரிவித்தார்.

உணவக துறையில் இந்திய இளைஞர்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அங்காடி கடை வழி அவர்கள் இத்துறையில் கால் பதித்து குளிர்சாதண வசதி கொண்ட உணவகம் வரை உருவாக்கி அவர்கள் இத்துறையில் சாதனை படைக்க வேண்டும்.

இத்துறையில் தான் 40 ஆண்டுகள் உள்ளதாகவும் தொடக்க காலத்தில் பல இன்னல்கள் மத்தியில் இந்த தொழிலை ஆரம்பித்து விடமுயற்சியுடன் அயராத உழைப்பால் இன்று இந்நிலையை அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆகையால் முறையான பயிற்சியை பெற்று இளைஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கிள்ளான், அக்.8-
காபி, டீ பிரியர்களின் தேர்வாக அமைந்துள்ள மெட்ராஸ் பேக்கரி கடையின் புதிய கிளை தற்போது கிள்ளான், தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ், மஸ்ஜிட் இந்தியா ஆகிய பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் உள்ளன. எப்போது சென்றாலும் வாடிக்கையாளர் அக்கடைகளில் நிரம்பி இருப்பது வழக்கம்.

வாடிக்கையாளர்களின் ருசிக்கு ஏற்ப காபி, டீ உடன் பலகாரங்களும் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடை தெங்கு கிளானாலும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டதாக அதன் இயக்குநர்களான புர்ஹான் மற்றும் டெனேஸ் ஆகியோர்கள் கூறினர்.

அண்மையில் தெங்கு கிளானா லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கரி கடை திறக்கப்பட்டது. இந்த கடையின் திறப்பு விழாவிற்கு டத்தோ டி.மோகன், கொடை வள்ளர் ஓம்ஸ் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்து கடையை திறந்து வைத்தனர்.

அதன் பின்னர் நடிகர் பிரேம்ஜி கடைக்கு சிறப்பு வருகை புரிந்ததுடன் டீ குடுத்து விட்டு தமிழகத்தில் குடிப்பதுபோல் ருசியாக இருப்பதாக கூறினார்.

டீ, காபி மட்டுமின்றி, பலகாரங்கள், முறுக்கு வகைகள், கேக் வகைகள் என பலவகை இந்த கடையில் உள்ளது. இந்த கடையின் மற்றொரு சிறப்பாக பழசாரும் விற்கப்படுகிறது. பழங்களை கொண்டு இங்கு அலங்காரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவகாடோ பழச்சாறு இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேர்வாக இந்த பழச்சாறு உள்ளதாக புர்ஹான் மற்றும் டெனிஸ் கூறினர்.

தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டல் இந்தியாவில் மெட்ராஸ் பேக்கிரியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு உடைகள் மற்றும் தேவைப்படும் பொருட்களை வாங்க இங்கு வரும் மக்கள் தங்களின் தாகத்தை தீர்க்கவும் பசியை ஆற்றவும் தாரளமாக மெட்ராஸ் பேக்கரிக்கு வரலாம் என அவர்கள் கூறினர்.

கோலாலம்பூர் அக் 7-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகள் இப்போது தத்தளிக்கிறார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்ய ஏன் முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேள்வியை எழுப்பினார்.

இம்முறை பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா முக்கிய சாலைகளில் கடைகளை அமைத்தது ஏன்?

போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கும் வேளையில் இந்த கடைகளால் மேலும் மிக மோசமான  நெரிசல் ஏற்படும்.

அதிலும் இம்முறை ஏன் மாற்று திறனாலிகளுக்கு கடைகள் கொடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளுக்கும் கடைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.

உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்து மற்றவர்களுக்கு கடைகள் கொடுத்தது ஏன் என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

விலாயா மாநில முன்னாள் துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் என்னையும் அழைத்து  இது குறித்து ஆலோசனை கேட்டு இருக்கலாம்.
அதையும் செய்யவில்லை. ஒரு பகுதி ரோட்டை அடைத்து கடைகளை அமைத்தது முறையல்ல என்று அவர் சொன்னார்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. அனைத்தையும் முறை படுத்துங்கள்.

முறையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் சொன்னார்.

விடுபட்டு போனவர்களுக்கு கடைகளை ஏற்படுத்தி கொடுங்குகள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கடை விவகாரம் தொடர்பாக பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா இன்று களம் இறங்கினார்.

விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், பிபிபி கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், சிகாம்பூட் தொகுதி தலைவர் டத்தோ டாக்டர் வினோத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர்,அக்.5-
நடிகரும் இயக்குநருமான தனுஷ், அருண்விஜய், சத்யராஜ் மற்றும் பல முன்னணி கலைஞர்களின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம், மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வெற்றிநடை போட்டு வருகிறது.

இத்திரைப்படம் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய அளவிற்கு அற்புதமாக இயக்கப்பட்டுள்ளதாக பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

அனைவரும் திரையரங்குகளில் நேரடியாக வந்து இப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் தநுஷும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் கூறுகையில்,
மலேசியாவில் தரமான தமிழக திரைப்படங்களை கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சி. தனுஷ் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டும்.

குடும்ப கதையான இத்திரைப்படம் தனி ஒரு பாணியில் இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை குடும்பத்தினருடம் தாரளமாக கண்டுக் கழிக்கலாம் என அவர் சொன்னார்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் செராஸ், வேலோசிட்டி மாலின் திரையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகமான ரசிகர்கள் திரண்டதால் நிகழ்ச்சி விழாவைப் போல இருந்தது.

கோலாலம்பூர் அக் - 2
இஸ்ரேலியப் படைகளால் குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு  ம.இ.கா  கவலையை வெளிப்படுத்தியது மற்றும் கப்பலில் உள்ள அனைத்து மனிதாபிமான ஆர்வலர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் சர்வதேசத் தலைமையை பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவாகவும் நிபந்தனையின்றி விடுவிப்பதற்கு வாதிடுமாறு நாங்கள்  கேட்டுக்கொள்கிறோம்.

சர்வதேச கடல் பகுதியில் அமைதியான மனிதாபிமானப் பணியை இடைமறிப்பது சர்வதேச சட்டத்தின் மதிப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.

அதோடு காசா மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

அமைதி மற்றும் மனிதாபிமான நிவாரணத்திற்கான காரணத்தை மலேசியா நீண்ட காலமாகப் பாதுகாத்து வருகிறது. இது சம்பந்தமாக, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காசாவிற்கு மனிதாபிமான உதவி தடையின்றி வழங்குவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உள்ளிட்ட சர்வதேச அமைப்பின் தலையீட்டை தீவிரப்படுத்துமாறு  அரசாங்கத்தை  கேட்டுக்  கொள்வதாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், அக்.2-
கூடாரத்தை மாற்றுங்கள், விளக்குகளை பொருத்துங்கள், இங்கு அமைக்கப்பட்ட கூடாரம், நுழை வாசல் பதாகை பாதுகாப்பாக இல்லை என்ற பிரிக்பீல்ட்ஸ் வியாபாரிகளின் குமுறல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாத பட்சத்தில் இயற்கையின் காதிற்கு எட்டியவாறு ஒவ்வொன்று நடந்து வருகிறது.

இரு நாட்களுக்கு முன்பு பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் அமைக்கப்பட்டிருந்த நான்கு கூடாரங்கள் காற்றில் பறந்தன.

இன்று அங்கு நுழைவாசலில் அமைக்கப்பட்டிருந்த பதாகை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. நல்ல வேளை மக்கள் யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.

பார்க்கும் இடமெல்லாம் மடானி சின்னம். இது தீபாவளி சந்தையா அல்லது மடானி அரசாங்கத்தின் எக்ஸ்போ வா என்று தெரியவில்லை என பலர் பேசிவருகின்றனர்.

தீபாவளி வாழ்த்து என்ற சொல்லும் இல்லை தீபாவளி கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்கு எந்த அழகாரங்களும் இல்லை. அதற்கும் மேல் விளக்குகள் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த நிலையில் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொருத்தப்பட்டுள்ள கூடாரங்கள் தீபாவளி வியாபாரத்திற்கு பொருத்தமாக இருக்காது, கூடாரங்களும் பாதுகாப்பாக இல்லை என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியிருந்தார். அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் பொருட்படுத்தவில்லை.

நேற்று அங்குள்ள வியாபாரிகளும் இதையைதான் சொன்னார்கள். இரவுக்குள்ள பெரிய கூடாரங்கள் மாற்றப்படும் என ஒரு தரப்பு கூறியது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பாதுகாப்பற்ற நிலை கூடாரங்களும் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சிய போக்கு ஏன்?

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை அமைக்கும் விவகாரத்தில் அனுபவம் நிறைந்தவர்கள் பல கருத்துகளை கூறியும் சம்பந்தப்பட்ட அரசு தரப்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வளவு நடந்த பின்னர் இன்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிவமலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். 8x8 உள்ள கூடாரங்களை 10x10 என்ற அளவில் மாற்றி தருவதாக கூறியுள்ளார். கூடாரங்கள் கொஞ்சம் பெரிதாக மாற்றப்பட்டாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி அவர் விவரிக்கவில்லை. தீபாவளி அலங்காரம் இதன் பின் நடக்கும் என சிவமலர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் கூடாரம் அமைப்பதிலும் பாதுகாப்பிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இம்முறை யார் எடுத்த முடிவு என்று தெரியவில்லை கூடாரங்கள் பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி காலத்தில் பிரிக்பீல்ட்ஸில் சாலை நெரிசல் கடுமையாக இருக்கும். ஆனால் இம்முறை இருந்த சாலையும் பாதி மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறி வசனம்தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. எதை செய்தாலும் பிலான் பன்னிதான் செய்யனும் என்ற வசனத்திற்கு ஏற்ப பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை ஏற்பாடுகள் அமைந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

சாதரண மழை, காற்றிற்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கிறது. கனத்த காற்று வீசினால் என்னதான் நடக்குமோ தெரியவில்லை.

முறையான பாதுகாப்பு இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பயத்தை ஏற்படுத்தலாம். இதனால் அந்த பகுதியில் வியாபாரம் குறையவும் வாய்ப்பு உள்ளன. அதனால் சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தீபாவளி என்றாலே அது ஒளியை பிரதிபலிக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி கொண்டாட்டத்தை போல பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை பகுதியில் அலங்காரங்களும் விளக்குகளும் பொருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதே நேரத்தில் இந்த முறை கலை நிகழ்ச்சி நடத்தபடாது எனவும்.. அதற்கு யாரும்  இது வரை விண்ணப்பம் செய்ய வில்லை என சிவமலர் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், செப்.28-
சிறந்த கவிதைகளை படைப்பதற்கு நம் குரலிலுள்ள சக்தி விரலிலும் இருப்பது அவசியம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கவிதைகளை படைப்பதில் நாம் மொழியை கையாழும் விதம்தான் அதனை காலம் கடந்து வாழ வைக்கும் என இன்று மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்ற மனிதம் தேடும் மனிதன் நூல் வெளியீட்டு விழாவில் அவர் சொன்னார்.

தமிழகத்திலிருந்து பிழைப்பை தேடி இங்கு வந்து நாளிதழில் பல கவிதை படைப்புகளை எழுதி புகழ்பெற்ற கவிஞர் பெர்னாட்ஷாவின் கவிதை நூழை இன்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெளியிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இந்த நூலிலுள்ளா கவிதைகளை அவர் எழுதியுள்ளார். இந்த நூழை அன்றே வெளியிட எண்ணம் கொண்டபோது உடல் நல குறையால் கவிஞர் மீண்டும் தமிழகத்திற்கு சென்ற பின்னர் தற்போதுதான் அவரின் நூல் படைப்புகள் தற்போது நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

இந்த நூலில் படைக்கப்பட்டுள்ள மரபுக் கவிதைகள் பொருள் சொல்லும் விதத்தில் மாறுப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் வெளியீடு கண்ட கவிதை நூல்களில் இந்த நூல் சிறந்த கவிதை நூலாக உள்ளாதாக அவர் சொன்னார்.

மேலும் அவர் கடந்து வந்த பாதையில் அவருக்கு உதவியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் அந்த உதவிகளை பற்றி அவர் கவிதை வரியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என டத்தோஸ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.

இன்று நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு பிரமுகர்களாக நிலநிதி கூட்டுறவுக் கழகத்தின் இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசிய  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆலோசகர் ராஜேந்திரன், வணக்கம் மலேசியா செய்தி இணைய தளத்தின் உரிமையாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், செப்.28-
பல ஆண்டு காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு தற்போது என் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்ற அரசியலுக்கு வருவதாக சமூக சேவகரும் புரட்சி அமைப்பின் தோற்றுநருமான உமாகாந்தன் தெரிவித்தார்.

இந்நாட்டில் அன்று தொட்டு இன்று வரை இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.

சமுதாயத்தின் குரலாக இருப்பேன் என கூறி இன்று ஆட்சியில் அமர்ந்துள்ள பல இந்திய தலைவர்கள் இன்று மௌனம் சாதிக்கின்றனர். நம் சமுதாயத்தின் தேவைகளை பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. வாய் பேச்சில் வீரனாக இருந்தவர்கள் இன்று எதையும் சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதனால் சமுதாயத்திற்காக எதையும் செய்யாத தலைவர்களை பற்றி பேசுவதை விடுத்து நாங்களே சமுதாயத்திற்கு சேவையாற்றவும் நம் சமுதாயத்தின் தேவைகளை கேட்டு பெறுவதற்கு முன் வந்துவிட்டதாக உமாகாந்தன் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அவரை அதற்கு தீர்வு கிடைத்ததில்லை. ஒரு பிரச்சினைக்கு மக்கள் கூடி குரல் கொடுத்தால் மட்டுமே தற்காலிக தீர்வு கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தலைவர்கள் களத்தில் இறங்கி தீர்வு கிடைக்க போராடியதும் இல்லை. அதை பற்றி கவலையும் அவர்களுக்கு இல்லை. அதனால் இளைஞர்கள் நாங்கள் தற்போது மலேசிய இந்திய மக்கள் கட்சியில் (எம்ஐபிபி) இணைந்து அரசியல் களத்தில் கால் பதித்து எங்களின் பிரச்சினைகளை நாங்களே சரி செய்ய தயாராகிவிட்டோம் என அவர் சொன்னார்.

இதற்கிடையில் இன்று எம்ஐபிபி கட்சியின் கோத்தா ராஜா தொகுதியின் தொடக்க விழா நடந்தது. இந்த தொகுதியின் கீழ் 3 சட்டமன்றங்கள் அதாவது கோத்தா கெமுனிங், செந்தோசா, சுங்கை கண்டீஸ் ஆகியவை உருவாக்கப்பட்டன.

எம்ஐபிபி கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் தலைமையில் இந்த தொடக்க விழா நடைப்பெற்றதுடன் கோத்தா ராஜா தலைவராக உமாகாந்தன் அறிவிக்கப்பட்டார்.

தொடக்க விழாவில் இந்த தொகுதியிலுள்ள வெள்ளப் பிரச்சினை, வெளிநாட்டவர்களின் ஆதிக்கம், அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் என 7 கோரிக்கைகளை உமாகாந்தன் முன்வைத்ததுடன் இத்தொகுதியின் கிழ் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், செப்.25-
செந்தூல், ஜாலான் ஈப்போ அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தற்போதைய சூழ்நிலை இந்திய இளைஞர் அதிகமாக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகம், முக ஒப்பனை நிலையங்கள், ஜவுலிக் கடைகள் என பல துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில் மகாராஜா ஜவுலிக்கடைக்கு அருகில் தற்போது செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல ஜவுலிக்கடைகள் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த வகையில்தான் பல காலமாக சீனர்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நம் இனத்தவர்களும் இதேபோன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் பல வியாபாரங்களை மேற்கொள்வதை வரவேற்பதாக ஜவுலிக்கடை திறப்பு விழாவின் போது அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று செந்தூல் ஸ்ரீ குமரன் திறக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகள், பஞ்சாபி சூட், சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் என புதிய டிசைன்களில் பல வகை உடைகள் செந்தூல் ஸ்ரீ குமரன் ஜவுலிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து இந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

Recent News