loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சைபர்ஜெயா, ஏப்.27-

நம் வாழ்க்கை பாடமாக நமது தமிழிசைப் பாடல்கள் பல வாழ்க்கை தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது என வழக்கறிஞர் சி.பாண்டித்துரை கருத்துரைத்தார்.

'இளைஞர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் தமிழிசைப் பாடல்கள்' என்ற தலைப்பையொட்டி தமிழ் அமுது 1 இலக்கியம் மற்றும் விருது விழாவில் பேசிய அவர் இக்கருத்தை தமதுரையில் முன்வைத்தார்.

தமிழ் பாடல்களை எழுதிய கவிஞர்கள் தங்களின் பாடல் வரிகளின் வழி நமக்கு பல அறிவுரைகளையும் கருத்துக்களையும் வழங்கியுள்ளனர். அதனை நாம் நமது வாழ்க்கையில் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் திரைப்பட பாடல்களின் மூலம் நாம் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வ பண்புகளை கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதாரணமாக பல பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் திரைப்படங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அவற்றில் குறிப்பாக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களும் அதற்கு ஓர் உதாரணம். தமிழை பாடல் வரிகளில் நம்மை ரசிக்க வைத்த கவிஞர்களில் கண்ணதாசனும் ஒருவர் என்ற பெறுமையை நாம் மறுக்க முடியாது.

நம் தமிழ் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் பலரின் வாழ்க்கை முறையை மாற்றியிள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருக்கும் பல தலைவர்களும் தமிழ் ஆர்வாளர்களும் தமிழ் பாடல் வரிகளில் கூறப்படும் கருத்துக்களை புரிந்து தன் வாழ்க்கையில் மாபெறும் சாதனைகளை செய்துள்ளனர்.

ஆகவே பாடல்கள் வாயிலாகவும் தமிழ் நம்முல் வாழ்கிறது என்பதை புரிந்து, நல்ல கருத்துக்கள் உள்ள தமிழ் பாடல்களை நாம் கேட்ட வேண்டும். பாடல்களின் வழி நாம் பல ஆக்கப்பூர்வ அறிவுகளை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

கோலாலம்பூர், ஏப்.27-

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் எதிர்பார்க்காத அளவிற்கு பல தொகுதிகளில் வெற்றிப் பெற்று அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 நான்கு முறை தேசிய முன்னணி வெற்றிப் பெற்று பக்காத்தான் கையில் இருந்த உலு சிலாங்கூர் தொகுதியை கடந்த தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வென்றதுடன் அதன் அங்குள்ள உலு பெர்னாம் மற்றும் பத்தாங் காலி சட்டமன்ற தொகுதிகளையும் அது வென்றது. கோல குபு பாரு தொகுதியை மட்டும் பக்காத்தான் ஹராப்பான் வென்றது. தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் இன்று வேட்புமனு தாக்கல் நடக்கிறது.

வேட்புமனு தாக்கலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரும் பதிவு செய்ய வந்துள்ள வேளையில் இரு கூட்டணிகளை ஆதரித்து தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். அண்மையில் பக்காத்தான் ஹராப்பான் எம்பி நாடாளுமன்றத்தில் மக்களை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட சொல்லியது பெரும் சர்ச்சையானது. அதனை குறி வைத்து பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் நடக்கும் இடத்தில் மரவள்ளிக்கிழங்குகளை வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.

பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரை அந்த கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் முழுமையாக ஆதரிக்கின்றன. பாஸ் கட்சியும் முழு ஆதரவை தெரிவிக்கிறது. ஆகையால் இம்முறை கோல குபு பாரு தொகுதியை வென்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் தன் வசப்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் முழு மூச்சாக போராடி வருகிறது.

அந்த வகையில் 4-0 என்ற கணக்கில் பெரிக்காத்தான் நேஷனல் உலு சிலாங்கூரை முழுமையாக வெல்ல சபதத்துடன் போராடி வருகிறது. அடுத்த மாதம் 11ஆம் தேதி கோல குபு பாருக்கான இடைத்தேர்தல். தேர்தல் முடிவில் பெரிக்காத்தான் நேஷனலின் சபதம் வெல்லுமா என்பதை பார்ப்போம்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

சைபர்ஜெயா, ஏப்.27-

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழ் மொழி கல்வி ஆற்றலையும் புகுத்த வேண்டும் என கோ.சா. கல்வி அறவாரியத்தின் தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன் தெரிவித்தார்.

தமிழ் மொழி வளர்சிக்கும், தமிழர்களின் எழுச்சிக்கும் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிவரும் பலன் அறக்கட்டளை மற்றும் கோ.சா. கல்வி அறவாரியத்தின்  ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் அமுது 1 இலக்கிய விழா மற்றும் விருது விழா 2024 நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் இக்கருத்தை முன்வைத்தார்.

நம் முன்னோர்கள் நமக்கு பல வழிகளில் தமிழின் சிறப்புகளையும் அதன் விளக்கங்களையும் முறையாக 

பதிவு செய்து சென்றுள்ளனர். தமிழ் என்பது மொழி மட்டும் இல்லை. அதில் நம் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்ற பல தத்துவங்களும் அமைந்துள்ளது. 

ஆகவே இத்தகைய சிறப்பு அம்சங்கம் கொண்ட தமிழ் மொழியை இன்றைய கால இளைஞர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். நமது காலத்தோடு தமிழ் மொழி மறைந்துவிடாமல் இருக்க வரும் புதிய தலைமுறைக்கு அதனை முறையாக எடுத்து செல்ல வேண்டும் என இன்றைய நிகழ்ச்சியில் தலை நிமிர் தமிழா என்ற தலைப்பில் பேசிய டத்தோ தெய்வீகன் தெரிவித்தார்.

அவ்வகையில் இது போன்ற தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அது சாத்தியப்படும் எனவும் இன்று சைபர்ஜெயா பல்கழைக்கழகத்தில்  இந்த இலக்கிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு இதுவே ஒரு முக்கிய காரணம் என அவர் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

 

கோலாலம்பூர், ஏப்.27-
கோல குபு பாரு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி எழுந்துள்ளது.

பாக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக பாங் சோக் தாவ், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக கைருல் ஹசாரி சௌட், பிஆர்எம் கட்சியின் ஹாபிஸா ஜைனுடின் மற்றும் சுயேட்சை வேட்பாளராக ஞாவ் கி ஷின் ஆகியோர் அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் களம் காணவுள்ளனர்.

கோல குபு பாருவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜசெகவைச் சேர்ந்த லீ கி யோங்  புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதை தொடந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர், ஏப்.26-

இந்தியச் சமுதாயம் கல்வியில் முன்னேற  வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் எம்.ஐ.இ.டி கல்வி கடன் திட்டம், ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகம், டேஃவ்  கல்லூரி  என பல ஆக்க்கபூர்வமான நடவடிக்கைகளை இந்தியச் சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற துன் சாமிவேலு நன்றி, அவரின் இந்த சாதனையை நாம் நினைவு கூற வேண்டும் என  இன்று எம்.ஐ.இ.டி  கல்விக் காசோலை வழங்கும் விழாவை தலைமையேற்ற  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்  இப்ராஹிம் தெரிவித்தார்.

ம.இ.கா,  கல்விக்கு முக்கியதுவம் கொடுத்து செய்து வரும் இந்த நடவடிக்கைக்கு  அரசாங்கம் நல்ல ஒத்துழைப்பை கொடுக்கும்.  அதே நேரத்தில் சமுதாய தலைவர்கள் ம.இ.கா தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பாணியில் சமுதாய பிரச்சினைகளை கையாள வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.

வெளியில் குறையை மட்டும் பேசுவதை நிறுத்தி விட்டு, சமுதாயத்தில் இருக்கும் பிரச்சினைகளை களைய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போல், என் நேரடி பார்வைக்கு கொண்டு வந்து கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒத்துழைத்து பேசுவதுதான் நல்ல அணுகுமுறை என அன்வார் தெரிவித்தார்.

இவ்வேளையில் டேஃப் கல்லூரியில் டிவேட் கல்வி திட்டம் மேம்பாட்டிக்கு அரசாங்கம் 2 மில்லியன் நிதி வழங்கும் என தெரிவித்த டத்தோஸ்ரீ அன்வார், இதன் வாயிலாக பல இந்திய மாணவர்கள் தொழில் திறன் பயிற்சி பெற அது உதவியாக இருக்கும் என்றார்.

செய்தி : வெற்றி விக்டர்