கோலாலம்பூர், டிச.30
பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக டத்தோ ஸ்ரீ முகமாட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார்.
அந்த வகையில் , தனது ராஜினாமா ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
அதோடு சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் தொடர்பு குழு தலைவர் பதவியும் தான் ராஜினாமா செய்வதாகவும் அஸ்மின் அலி தனது அதிகாரபூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்து உள்ளார்.
அதிகாரபூர்வ கடிதம் இதுவரை வெளியிடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments