loader

All News

கோலாலம்பூர், ஜூலை 26-

புக்கிட் பிந்தாங் பகுதியில் 16 வியாபாரிகளின் சாலையோர  கடைகளின் பொருட்களை கோலாலம்பூர் மாநகர மன்றம் நேற்று முந்தினம் பறிமுதல் செய்தது.

கோலாலம்பூர் மாநகர மன்றத்திம் (DBKL)புக்கிட் பிந்தாங் அலுவலகம், உரிமம் மற்றும் வணிக மேம்பாட்டுத் துறை மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாபாரம் செய்வதற்கான முறையான வணிக உரிமம் இல்லாத 15 வெளிநாட்டவர்கள் உட்பட  உள்ளூர் வியாபாரி ஒருவருக்கும் நோட்டிஸ் வழங்கப்பட்டு அவர்களின் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அறிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் பதிவு மற்றும் ஆவணச் செயலுக்காக தலைநகர் மிஹார்ஜா ஜாலான் லொம்போங்கில் உள்ள கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

-காளிதாசன் இளங்கோவன்

சுங்கைப்பூலோ, ஜூலை 26-

துணையமைச்சருக்கான சம்பளத்தையும் சேர்ந்து 425,000 ரிங்கிட்டை வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டதாக தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சரும் சுங்கைப்பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது சம்பளத்தை வழிபாட்டுத் தலங்களுக்கு தருவேன் என வாக்குறுதி வழங்கினேன்.

இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் அலவன்சை வழிபாட்டுத் தளங்களுக்கு வழங்கினேன்.

இதுவரை 452,000 ரிங்கிட் வழிபாட்டுத் தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு 72 வழிபாட்டுத் தளங்களுக்கு 332,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு துணையமைச்சராக பொறுப்பேற்றுள்ளேன். இந்த சம்பளத்தையும் கடந்த ஜனவரி மாதம் முதல் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கி விட்டேன்.

கடந்த 7 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 வழிபாட்டுத் தலங்களுக்கு 153,000 ரிங்கிட் நிதியாக வழங்கப்பட்டது.

இன்று மட்டும் வழிபாட்டுத் தலங்களுக்கு 104,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.

ஆலயம், பள்ளிவாசல், சூராவ், சீன கோயில், தேவாலயம் ஆகிவற்றுக்கு இந்நிதி வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

இந்நிதி வழிபாட்டுத் தளங்களின் பராமரிப்பு பணிகளுக்கு, சமூக கடப்பாடு நடவடிக்கைகள் உட்பட இதர தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்நிதி வழங்கப்படுகிறது.இத்திட்டம் தொடரும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 25-

இபிஎப் உள்ள 13.1 மில்லியன் சந்தாதாரர்களில் 3.4 மில்லியன் சந்தாதாரர்கள் இம்மாதம் 19ஆம் தேதி வரை அவர்களின் மூன்றாவது கணக்கிலிருந்து வெ.8.9 பில்லியன் பணத்தை வெளியாக்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட 3.8 மில்லியன் சந்தாதாரகளின் மூன்றாவது கணக்கில் வெ.12.6 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த தொகையில் தேவையான பணத்தை மட்டும் அவர்கள் வெளியாக்கியுள்ளனர்.

அவர்களின் வேலை ஓய்வு கணக்கில் 5.6 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களின் சேமிப்பு கணக்கில் பணம் அதிகரித்துள்ளதாக இராண்டாவது நிதியமைச்சர் அமிர் அம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.

இபிஎப் மூன்றாவது கணக்கிலிருந்து சந்தாதாரர்கள் பணத்தை வெளியாக்கியது இபிஎப்-பிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

புத்ராஜெயா, ஜூலை 25- 

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட அதிரடி முயற்சியில், தெக்குன் நேஷனல் வாரியக் குழு உறுப்பினராக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். 

நேற்று மதியம் புத்ராஜெயாவிலுள்ள தமது அமைச்சில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், டாக்டர் குணராஜ் ஜார்ஜிடம் நியமனக் கடிதத்தை டத்தோ ரமணன் எடுத்து வழங்கினார். அவரின் நியமனம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது.   

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சின் துணைத் தலைமை செயலாளர் டத்தோ ஹாஜி ஸம்ரி பின் சாலே, துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், தெக்குன் நேஷனல் இயக்குநரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ அடாம் பின் அப்துல் கனி, தெக்குன் நேஷனல் வாரியக் குழு தலைவர் டத்தோ அப்துல்லா சானி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டு டாக்டர் குணராஜ் ஜார்ஜுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிறு, குறு, நடுத்தர இந்திய தொழில்முனைவோரின் முதன்மை தேர்வாக ‘தெக்குன் ஸ்புமி’ விளங்கி வருகிறது. அவர்களுக்கு உதவிட 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இருந்தது. அதனை அதிகரிக்கும் வகையில் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்திய  டத்தோ ரமணன், மேலும் 30 மில்லியன் ரிங்கிட் நிதியை அறிவித்தார். 

இதன் வழி, இன்னும் அதிகமான இந்திய தொழிமுனைவோர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இம்முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் டாக்டர் குணராஜ் ஜார்ஜின் நியமனம் அமைந்திருப்பதாகவும் டத்தோ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார். 

இதற்கிடையில், தம்மீது முழு நம்பிக்கை வைத்து, தெக்குன் நேஷனல் வாரியக் குழு உறுப்பினர் பதவிக்கு சிபாரிசு செய்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும், நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சர் இவோன் பெனடிக்கிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் குணராஜ் ஜார்ஜ் குறிப்பிட்டார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 24-

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ்மொழி தேர்வை வைக்க வேண்டும் என வங்கிகளின் சங்கத்திடம் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 21 ஆம் திகதி ஈப்போவில் நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று PERSATUAN MUHIBBAH PRIHATIN TAIPING ஆலோசகர், மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.முருகையாவின் வழிகாட்டலுடன் மலேசிய வங்களின் சங்கத்துடன் இரண்டாவது சந்திப்பு கூட்டம் நிகழ்ந்தது.

பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ் மொழி தேர்வு இருக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் MEPS  நிருவனம் தனது பண பட்டுவாட இயந்திரத்தில் தமிழ் மொழி தேர்வை வைத்துள்ளது.

இருப்பினும் நாட்டில் உள்ள மற்ற வங்கிகளில் இன்னும் தமிழ் மொழி இடம்பெறாமல் உள்ளது வருத்தமாக உள்ளது என டத்தோ முருகையா தெரிவித்தார்.

இந்த நாடு சுகந்திரம் பெறுவதற்கு மூவினத்தின் போராட்டம்தான் காரணம். அவ்வகையில் மலாய் மற்றும் சீன மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது நியாயம் இல்லை. தமிழ் மொழிக்கும் உறிய அங்கிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

அதுமட்டுமின்றி உலகளவில் உள்ள தமிழர்கள் மலேசியாவிற்கு சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்கு புரியும் வகையில் எழிய தமிழில் வங்கிகள் செயல்பட்டால் அது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன்வழி நமது நாட்டின் பொருளாதாரத்தையும் தமிழ் உறவுகாளுடனான நட்பையும் வலுப்பெற செய்யலாம் என்றார்.

இதனிடையே ஆகஸ்ட் மாதம் இறுதிக்குல் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் உரிமையாளர்களையும் வங்கிகளின் சங்கம்

சந்தித்து இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 23-

மாரான் ஸ்ரீ மார்த்தாண்டவர் ஆலயத்தின் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பின்னர், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ராமன் தலைமையில் அவசரக் கூட்டத்தை நடத்த தெமர்லோ நீதிமன்றம் உத்தரவை பிரபித்துள்ளது.

அதேசமயம் முன்னாள் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

டத்தோ தமிழ்ச் செல்வத்தின் தரப்பினர் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் தலையிட்டு எந்தவொரு பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என்று தெமர்லோ உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் பின் மாட் நோர்  தனது இடைக்கால தடையுத்தரவை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் என்று இராமனின் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

மாரான் மரத்தாண்டவர் ஆலய தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் டத்தோ தேவேந்திரன், சுப்ரமணியம், தர்ம கவுண்டர், ஹரிக்கிருஷ்ணன், புஷ்பா நாதன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மொத்தம் 24 பதவிகளுக்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் கேட்டுக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரான் மரத்தாண்டவர் ஆலய தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைப்பெற்றது . தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இராமனுக்கு 250 வாக்குகள் கிடைத்தன.

டத்தோ தமிழ்ச் செல்வத்திற்கு 206 வாக்குகள் கிடைத்தன. ஐந்து செல்லாத வாக்குகள்.

ஆனால் கள்ள வாக்குகள் போட்டு விட்டார்கள் என கூறி தேர்தல் முடிவை அறிவிக்க மறுத்து விட்டார்கள்.

மறுநாள் ஜூன் 24 ஆம் தேதி குவாந்தான் ஆர்ஓஎஸ் அலுவலகம் வரை இந்த விவகாரம் சென்ற பின்னர் ராமன் இதன் தொடர்பில் வழக்கு தொடுத்தார்.

இராமன் தொடுத்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தெமர்லோ உயர்நிதிமன்றத்தில் நடைபெறும் என்று வழக்கறிஞர் செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

-காளிதாசன் தியாகராஜன் / காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 23-

இஸ்கண்டார் புத்ரி எக்கோன் கெலரியா பேரங்காடியில் காணமல் போன குழந்தை இன்று அதிகாலை 4 மணிக்கு பத்தாங் காலியிலுள்ள மலிவு விலை தங்கு விடுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

அல்பெர்தின் லியோ ஜியா (வயது 6) என்ற அந்த குழந்தையுடன் இருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக ஜொகூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அக்குழந்தையை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்ததாக ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் எம்.குமார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் கடத்தல் சட்டம் செக்‌ஷன் 365, செக்‌ஷன் 14(ஏ) சிறார் பாலியல் சட்டம் 2017 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அக்குழந்தையின் பெற்றோருக்கு எந்த மிரட்டல் அழைப்பும் வரவில்லை. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட குழந்தைக்கும் எந்தவித உறவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜொகூர் பாரு, ஜூலை 23-
இங்குள்ள எக்கோன் கெலரியா பேரங்காடியில் குழந்தை ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மூன்று உள்நாட்டவர்களும் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கெலாங் பாத்தாவில் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவர் எம்.குமார் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக 28 முதல் 55 வயதுடைய அம்மூவரும் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட குழந்தை காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கடத்தல் குற்றமாக செக்‌ஷன் 365 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

காணாமல் போன பெண் குழந்தை இன்னும் மீட்கப்படாத படசத்தில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 22-

தேசிய முன்னணி என்ற கோட்டை சுவரில்  ஓட்டையிட சிலர்  தேசிய முன்னணியில் இருந்து ம.சீ.ச வெளியேறுமா? ம.இ.கா வெளியேறுமா? என வதந்திகளை பரப்பி வருகின்றனர் என ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்   தெரிவித்தார்.

ம.இ.கா - ம.சீ.ச  தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக வந்த தகவலை தொடர்ந்து  செய்தியாளர்கள்  டத்தோஸ்ரீ சரவணனிடம் விளக்கம் கேட்டபோது அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

முதலில் நாங்கள் எதற்கு தேசிய முன்னணியை விட்டு விலக வேண்டும். அது நாங்கள் உருவாக்கியது கூட்டணி. தேசிய முன்னணியை பொறுத்தவரை  ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும்  தேசிய முன்னணி மீது உரிமை உண்டு. அதே போல்  ஒரு முடிவை ஒருமித்த குரலாகதான் எடுப்போம். கூட்டணி ஒன்றை ஏற்றுகொள்ள வில்லை என்றால் அது அடுத்த கட்டத்திற்கு நகராது.

இப்போது இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பது  என்பது அரசர் கொடுத்த ஆலோசனைக்கு ஏற்ப தேசிய முன்னணி கூட்டணியின் ஒருமித்த முடிவாகும்.

ஆனால் ஒரு சிலர்  இது ஒரு கட்சியின் முடிவு போல் சித்தரித்து, ம.இ.கா - ம.சீ.ச இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வில்லை, அதனால் தேசிய முன்னணியை விட்டு வெளியேற போவதாக  கதைகளை ஜோடித்து  கோட்டை சுவரில் ஓட்டை போட பார்க்கிறார்கள்.

தேசிய முன்னணியை   யாராலும் உடைக்க முடியாது .அதேபோல்   பிரித்து எடுத்து செல்லவும் முடியாது  என டத்தோ ஸ்ரீ எம். சரவணன் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

செய்தி: வெற்றி விக்டர்

சைபர்ஜெயா, ஜூலை 22-

ஒரு சில சமூக ஊடக தளங்களுக்கு எதிராக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

மோசடி, போலிச் செய்திகளைப் பரப்புதல் மற்றும் இணைய பகடிவதை போன்ற சமூக ஊடகப் பிரச்சனைகளால் மலேசியர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சூழல் நிகழ்துள்ளது என அவர் கூறினார்.

ஆகவே இதற்குப் பிறகு அனைத்து சமூக ஊடக தளங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும், இன்னும் சில நாட்களுக்குள் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று ஜிவா மெர்டேகா நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகவியலாளர்களை சந்தித்த  அவர் கூறினார்.

நாங்கள் இந்த நடவடிக்கை எடுப்பதன் வழி குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

மலேசியர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் சமூக ஊடகப் பிரச்சனைகளைப் களைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகம் எஸ்.கே.எம்.எம்-க்கு வலியுறுத்தியுள்ளதாக ஃபாமி தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

சுங்கை பூலோ, ஜூலை 22-

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற மொத்தம் 224 சிறந்த மாணவர்கள் ஒரு லட்சத்து 250 ரிங்கிட் ஊக்கத்தொகையைப் பெற்றனர்.

இந்த ஊக்கத்தொகையை பேங்க் ரக்யாட் அறவாறியத்துடன் இணைந்து  சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம் செயல்படுத்தியதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணை அமைச்சராகவும் இருக்கும் அவர், மாணவர்களை எதிர்காலத்தில் மேலும் வெற்றிபெற ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார்.

"குறிப்பாக சுங்கை பூலோ  நாடாளுமன்றத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பேங்க் ரக்யாட் அறவாரியம் வழங்கிய உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

"இந்த உன்னதமான முயற்சி நாடு முழுவதும் தொடர முடியும் என்றும், இதன் மூலம் நாட்டின் கல்வி தரத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த முடியும் என்றும் நான் நம்புகிறேன்.”

மேலும், இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வேன் என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பண்டார் சுங்கை பூலோ இடைநிலைப்பள்ளி,  புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளி, புக்கிட் ரஹ்மான் புத்ரா இடைநிலைப்பள்ளி, சவுஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, சுபாங் இடைநிலைப்பள்ளி, சுபாங் பிஸ்தாரி இடைநிலைப்பள்ளி, கோத்தா டாமன்சாரா செக்ஷன் 10 இடைநிலைப்பள்ளி  ஆகிய இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் இன்று காலை இங்கு டேவான் மெராந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேங்க் ரக்யாட் தலைவர் டத்தோ பிலிப் பெனடிக்ட் லாசிம்பாங்கும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் வெற்றிபெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லசிம்பாங் கூறினார்.

அதே சமயம், சிறந்த தேர்ச்சி அடைவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், நாட்டின் மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஊக்குவிப்பு நிதி அவர்களின் உணர்வை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"பேங்க் ரக்யாட் அறவாரியம் வெறும் உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் பெற்ற வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதற்கு இந்த முயற்சி சான்றாகும்," என்று அவர் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

கிள்ளான், ஜூலை-20

எஸ்பிஎம் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்ற  மாணவர்களுக்கும் 

அரசாங்கப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் கல்வி வாய்ப்புகள் உள்ளன என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்ற  மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும் நோக்கத்தில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அவ்வகையில் அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கி அவர்களை கூக்குவித்து வருகிறது.

இருப்பினும் இன்னும் மாணவர்களின் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் சிறப்பு கல்வி கண்காட்சிகளை நடத்த முன்வந்துள்ளது.

அவ்வகையில் இன்று கிள்ளான் செந்தோசாவில் சிறப்பு கல்விக் கண்காட்சி நடைபெற்றதாக குணராஜ் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 11 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் இங்கு வந்து பயனடைந்துள்ளனர்.

எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளுக்கு ஈடாக 

குறைந்த மதிப்பெண்களை பெற்ற  மாணவர்களுக்கும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். 

எந்த வகையிலும் அவர்கள் கைவிடப்படக்கூடாது. தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்ற அந்த மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்து நிற்பார்கள்.

குறிப்பாக அவர்கள் வேலை வாய்ப்புகளை தேடி சென்று விடுவார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் நோக்கிலே இந்த கல்வி கண்காட்சி நடத்தப்பட்டது.

தேர்வில் பின்தங்கிய மாணவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் கவலைப்பட வேண்டாம்.

அவர்களும் தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ள பல கல்வி வாய்ப்புகள் உள்ளன.இந்த வாய்ப்புகள் இந்திய மாணவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர வேண்டும்.

அதே வேளையில் இந்த வாய்ப்புகளை அவர்கள் தேடிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

- காளிதாசன் இளங்கோவன்

ரவூப், ஜூலை 21-

உயர்நெறி மிகுந்த திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் ஜீவகாருண்ய ஒழுக்கக் கோட்பாடுகளை தாங்கிப் பிடித்து வருகின்ற ரவூப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, தனது முன்னாள் மாணவர்களுடனான நட்புறவை பேணி காப்பதிலும் சிறந்த உதாரணப் பள்ளியாகப் பார்க்கப்படுகின்றது.

1970ஆம் ஆண்டு மாணவர்களின் தொடர்பையும் வலுப்படுத்தி, அதற்கடுத்து 80, 90, 2000ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்களின் உறவையும் புதுப்பித்து, எல்லா நிலைகளிலும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கும் மிகப் பெரிய முன்னாள் மாணவர் சக்தியை சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது.

பள்ளியின் பெருமை காத்து, பள்ளி வளர்ச்சிக்கு எல்லா நிலைகளிலும் துணை நிற்கும் முன்னாள் மாணவர்களின் கரிசனத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஞாயிறன்று “அர்ப்பணிப்புக்கு ஓர் ஆராதனையும் முன்னாள் மாணவர்களின் சங்கமமும்” என்கிற நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது; வருகையாளரின் மனதையும் வருடிச் சென்றது.

ஆசிரியர் சரவணன் இராமச்சந்திரன் வரிகளில் உருவான “பிறந்த மண்ணின் பெருமை காத்து” எனும் பள்ளிப் பாடலும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் கண்டது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான அரச மலேசிய போலீஸ் படையின் ஜொகூர் மாநில குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி. வே.இராஜகோபால் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, பள்ளிப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

தொடர்ந்து சிறப்புரையாற்றிய அவர், பள்ளியின் அபார வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைவதாகவும், மிகச் சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருகின்ற தலைமையாசிரியர் இல.கருணாநிதி, அவர்தம் ஆசிரியர் பெருமக்களையும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.

“1330 திருக்குறளை தமிழ்ப்பள்ளிகளில் மட்டும்தான் பயில முடியும். தவிர, வேறு எந்த மொழிப் பள்ளியிலும் கேட்கக்கூட முடியாது. நம் மொழி, கலை, கலாச்சாரம் பேணிவருகின்ற தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கும் கடப்பாடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியால்தான் நான் இன்று உயர்ந்துள்ளேன். ஆதலால், நான் எந்த மேடையிலும் சொல்வேன், தமிழ்ப்பள்ளிதான் நமது தேர்வு!” என்று டி.எஸ்.பி. வே.இராஜகோபால் உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

இதற்கிடையில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பள்ளி வாரியம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர்கள், சமுதாயத் தலைவர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் என பல நல்லுள்ளங்கள் இணைந்து தமிழ்த்தொண்டு ஆற்றிவருவதால்  தற்போதைய சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக தலைமையாசிரியர் இல.கருணாநிதி நன்றி பகன்றார்.

முன்னாள் மாணவர்களின் சக்தியானது இப்பள்ளிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகவும், அவர்களை இன்று மேடையேற்றி சிறப்பித்தது"அவர்களின் அற்பணிக்கு ஓர் ஆராதனை" செய்ததில் தாமும்  பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெருமிதம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி, அதிகமான முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். முன்னாள் மாணவி க.அமுதவள்ளி குடும்பத்தினர், சு.சக்ரவர்த்தி, 1983 - 1988ஆம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் அனைவரும் இணைந்து மூன்று வகுப்பறைகளுக்கும் ஆறாயிரம் ரிங்கிட் மதிப்பிலான மூன்று விவேக தொலைகாட்சிகளை வாங்கித் தருவதற்கு முன்வந்துள்ளதும் போற்றத்தக்கது என்று அவர் மனம் நெகிழ்ந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சார்பில், குறிப்பிட்ட சிலர் தங்களின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொழில் காரணமாக வெவ்வேறு ஊர்களில் வசித்தாலும், சீரோ தோட்டத்து மண் வாசனையை மறக்க முடியாது என்று, எல்லா நிலைகளிலும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் சந்திரன், விஜியன், மஇகா ரவுப் தொகுதித் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன், பிகேஆர் கவுன்சிலர் டி.மகேந்திரன் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் சுற்றுவட்டாரத் தலைவர்களும் பள்ளிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாய் இருப்போம் என அறுதியிட்டுக் கூறியதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சண்முகநாதன் தெரிவித்தார்.

- காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை.20-

மாட்சிமை தங்கிய மாமன்னரின் பதவியேற்பு விழா இன்று இஸ்தானா நெகாராவில் மலாய் மன்னர்களின் பாரம்பரிய மரபுகள் அடிப்படையில்  நடைபெறவுள்ளது.

மலேசியர்களுக்கு இந்த விழா மற்றொரு வரலாற்று நிகழ்வாக நாட்டின் 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் இன்று அரியணையில் அமரவுள்ளார்.

அடுத்த ஐந்து வருட காலத்திற்கு மலேசிய மக்களின் மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் அரியணையில் அமர்ந்திருப்பதை உலகம் முழுவதும் அறிவிக்கும் நிகழ்வாகவும் இது அமையவுள்ளது.

மாமன்னரின் இந்த முடிசூட்டு விழா மலேசியா மக்களை தவிர்த்து உலகளாவிய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்க பன்னாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

சிப்பாங், ஜூலை.19-

தகவல் தொழில்நுட்ப அமைப்பு கோளாறு காரணமாக கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மைக்ரோசாப்ட் சேவைதான் காரணம் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மலேசியா மட்டுமல்லாமல்  சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது

உலகெங்கும் பெரிய அளவில் மைக்ரோசாப்ட் சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளது.இதனால் விமான நிலையம் உட்பட பெரிய வங்கிகள், ஊடகங்கள், விமான நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மைக்ரோசாப் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

திடீரென மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதிலும் உள்ள IT ஊழியர்கள் தங்களின் பணியை செய்ய சிறமத்தை எதிர்நோக்கி வருகின்றன.

மலேசியாவை பொறுத்தவரையில் கேஎல்ஐஏ 2-வின் சோதனை முகப்பிடத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர் ஜூலை -19

நாட்டில் இணைய பகடிவதையை கட்டுப்படுத்த சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க இன்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

அமைக்கப்படவிருக்கும் இந்த குழுவில் தகவல் தொடர்பு துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, டிஜிட்டல் அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரங்கள் பிரிவு ஆகியவை அடங்கும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளருமான  ஃபாமி கூறினார்.

மேலும் இந்த குழுவானது தகவல் தொடர்பு பல்லூடகம் (MCMC) அரச மலேசிய போலீஸ் படை மற்றும் தேசிய சட்டத்துறையின் ஆதறவுடன் செயல்படும். 

சமூக ஊடகங்களில் ஏற்படும் இணைய பகடிவதை பிரச்சினைகளை ஒழிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இணைய பகடிவதை பிரச்சினையை அப்படியே

விட்டுவிட முடியாது, அதனை சமாளிப்பதற்கு நாமும் சமமாக பொறுப்பேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

எனவே சிறப்புக்குழு என்ற முறையில் நாங்கள்  சட்டத்தின் விவரங்களை ஆராய்வோம், சட்ட அம்சங்களை விரிவாகப் பார்ப்போம் மற்றும் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதுடன், இந்த இணைய பகடிவதை சிக்கலைச் சமாளிப்பதற்கு  அவசியமானதாக நாங்கள் கருதும் பிற செயல்களையும் மேற்கொள்வோம் என அவர் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்,ஜூலை.19-

அமானா இக்தியாரின் வழி (PENN)  பெண் திட்டத்தின் வழி  இந்த ஆண்டு  இதுவரை 1229 மகளிர்களுக்கு 8.8 மில்லியன் கடன் நிதி வழங்கப்பட்டதாக  தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

பெண் திட்டத்தில் அதிகமான கடன் நிதி பெற்ற மாநிலமாக இந்தியர்கள் அதிக அளவில் வாழும் பேராக் மாநிலம் திகழ்கிறது.

பேராக் மாநிலத்தில் மட்டும் 3.3 மில்லியன் கடன் நிதி வழங்கப்பட்டதாக டத்தோ ரமணன் தெரிவித்தார். அதனை தொடர்ந்து  கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தில் 1.8 மில்லியனும் அதனை தொடர்ந்து  நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலத்தில் 1.3 மில்லியன் கடன் நிதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த கடன் உதவிகளின் வழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய பெண்கள் தங்களது வியாபாரத்தை மேம்படுத்த இது உதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

- காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 18-

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் புக்கிட் அமான் போலீசின் போதைப் பொருள் குற்றவியல் விசாரணை பிரிவு  மேற்கொண்ட இரண்டு அதிரடி சோதனையில் வெ.9 மில்லியன் மதிப்பிலான கொக்கேன் ரக போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் ஜூலை 16ஆம் திகதி இரவு 10.00 மணி அளவில் செராஸ், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் புக்கிட் அமான் அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன் முதல் கட்ட சோதனை செராஸில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையாளர் என நம்பப்படும் 41 வயது சீன அடவர் உட்பட அந்த போதைப்பொருள் தயாரிக்கும் கிடங்கில்  வேதியியலாளராக பணிபுரிந்து வந்ததாக நம்பப்படும் மற்றொரு 41 வயது சீன பெண்ணும் கைது செய்யப்பட்டனர் என 

புக்கிட் அமான்  போதைப் பொருள் குற்றவியல் விசாரணை பிரிவின் இயக்குநர் டத்தோ கஹாவ் கோக் சின் தெரிவித்தார்.

தலைநகர் செராஸில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் வெ.2,350 ரிங்கிட்டிற்கு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை போதைப்பொருள் தயார் செய்யும் கிடமாக இவர்கள் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.

போலீசார் சோதனை மேற்கொண்ட அந்த வீட்டிலிருந்து சுமார் 44.931 கிலோ கொக்கேன் ரக போதைப்பொருள் மற்றும் 52.5 லிட்டர் போதை பொருள் தயார் செய்யும் இரசாயன திரவத்தையும் அந்த வீட்டில் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் போலீசார் மேற்கொண்ட இரண்டாவது சோதனையில் செராஸில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் 38 வயது சீன ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து மேலும் 1 கிலோ கொக்கேன் ரக போதைப்பொருளை போலீசார்  கைப்பற்றியுள்ளனர்.

இந்த இரு அதிரடி சோதனையின் வழி கிட்டத்தட்ட 44.93 கிலோ எடையிலான் சுமார் வெ.9 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருளை போலீசார் வெற்றிகரமாக கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 18-

பூமிபுத்ரா நிறுவனங்களை காட்டிலும் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் அதிகமான ஹலால் சான்றிதழை கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

3,619 பூமிபுத்ரா நிறுவனங்கள் அதாவது 39.6 விழுக்காட்டினர் ஹலால் சான்றிதழை கொண்டுள்ள வேளையில், அவர்களுக்கும் கூடுதலாக அதாவது 5,720 பூமிபுத்ரா அல்லாத வர்களின் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழை கொண்டுள்ளதாக இன்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

ஆகையால் அதிகமான பூமிபுத்ரா நிறுவனங்கள் ஹலால் சான்றிதழை கொண்டிருக்க ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கென ஹலால் தொழித்துறை வழி சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஹலால் டெவலப்மென்ட் கார்ப் (எச்டிசி) உள்ளூர் நிறுவனங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்த தளத்தின் வழி பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதற்கும், புதுமையான தயாரிப்புகளை வணிகமயமாக்குவதற்கும், அதிக திறன் கொண்ட ஹலால் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று ஹலால் தொழில் வளர்ச்சி மன்றத்தின் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-
டேசா மெந்தாரி, சுங்கை வேவிலுள்ள அடுக்குமாடி வீட்டில் சக நண்பரை 11 முறை கத்தியால் குத்திவிட்டு மாடியிலிருந்து குதித்த நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக நண்பரை கத்தியால் குத்திய பின் அங்கிருந்து தப்பிச் செல்ல சம்பந்தப்பட்ட நபர் வீட்டின் பின் ஜன்னல் வழி கீழே குதித்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து வரவழைக்கப்பட்ட இரு ஆம்புலன்ஸ்கள் வழி அவ்விருவரும் அங்கிருந்து ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பிலிருந்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட குடியிருப்பிற்கு சென்று பார்த்தபோது ஆடவர் ஒருவர் உடலில் 11 கத்திக் குத்து காயங்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மற்றொரு நபர் அந்த குடியிருப்பின் கீழ் மாடியில் இடுப்பு எலும்பு முறிந்து கிடந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஷாம் ஜபார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விசாரணைக்கு உதவும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், ஜூலை 18-
ரோன்95 மானிய இலக்கு செயல்பாடு முதன்மை தரவுத்தளமான பாடு (PADU) தரவை முழுமையாகப் பயன்படுத்தும். ஒருவரின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு உதவி தேவைப்படுபவர்களை தீர்மானிக்கும் என பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, பாடு அமைப்பு மலேசியாவின் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தரவுகளின் களஞ்சியமாகும்.

இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை 10.55 மில்லியன் நபர்கள் பாடு அமைப்பில் தகவலை புதுப்பித்துள்ளனர்.

தற்போது, ​​இந்த அமைப்பு 2ஆம் கட்டத்தில் உள்ளது. குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நிகர செலவழிப்பு வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய தரவு பகுப்பாய்வாக இது உள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடு அமைப்பில் இதுவரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் டீசலை இலக்காகக் கொண்ட மானிய விண்ணப்பங்களுக்கு ஏன் படு தரவுகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து மூடா கட்சியின் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக்  மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பொருளாதார அமைச்சு அறிக்கையின் வழி பதிலளித்துள்ளது. 

எரிவாயு இலக்கு மானியம் புடி மடானி திட்டத்தின் வழி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் முழுமையாக பாடு அமைப்பின் தரவுகளை பயன்படுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 17-

இணைய பகடிவதையால் உயிரிழந்த ஈஷா எனும் ராஜேஸ்வரி மரண வழக்கில் கைதான பெண்ணுக்கு நீதிமன்றத்தில் வெறும் 100 வெள்ளி அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ஒரு பெண்ணின் உயிர் வெறும் 100 வெள்ளிக்குதான் சமமா என்று மஇகா மகளிர் அணி ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை மாய்த்துக் கொள்ளக் காரணமான குற்றத்தை ஒப்பிடும் போது இந்த தண்டனை மிகவும் இலகுவானதாகும். இந்த தண்டனை நியாயமற்றதாகக் கருதப்படுகிறது. மேலும்  இணைய அச்சுறுத்தலின் விளைவுகளின் தீவிரத்தையும் இது பிரதிபலிக்கவில்லை என மஇகா மகளிர் பிரிவுத் தலைவி என்.சரஸ்வதி தெரிவித்தார்.

இணைய பகடிவதை என்பது பாதிக்கப்பட்டவரின் மீது ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் குற்றமாகும். இந்த அழுத்தமானது ஒருவரை தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டும். ஈஷாவின் வழக்கு அதற்கு உதாரணமாகும். அப்படி பட்ட குற்றத்திற்கு வெறும் 100 வெள்ளி அபராதம் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என அவர் சொன்னார்.

ஆகையால், தற்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.  இணைய மிரட்டல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான அவர் வலியுறுத்தி கூறினார்.

ஈஷா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பி.ஷாலினுக்கு நேற்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வெறும் 100 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பில் பலரும் தங்களின் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர்,ஜூலை 17-

மறைந்த ஈஷா எனும் ராஜேஸ்வரியின் இணைய பகடிவதை வழக்கு தொடர்பாக இருவர் குற்றம் சாட்டப்பட்டார்கள்.

அந்த இருவரில் ஒருவருக்கு மட்டும் 100 வெள்ளி அபராதம் விதித்த கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பால் உலகமே அதிர்ச்சியடைந்து.

அதே நேரத்தில், அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த ஒருவருக்கு,  மதுபானம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு பிரம்படியும் விதித்த தீர்ப்பளித்தது. இந்த இரு வழக்கின் தண்டனைகள் தொடர்பான வித்தியாத்தை பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக எனக்கும் சில கருத்துக்கள் உள்ளது அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என சிகாம்புட் தொகுதி மஇகா தலைவரும், 

டைனமிக் சினார் சமூகநல அமைப்பின் தலைவருமான டத்தோ ந.சிவகுமார் அறிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே சகோதரி ஈஷாவிடம் வன்முறை, ஆபாசம் மற்றும் முரட்டுத்தனமான கருத்துக்களை தெரிவித்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்ட PDRM க்கு நன்றி. போலீசார் இந்த விவகரத்தில் தங்களின் கடமையை  மிக சிறப்பாக  செய்திருக்கிறார்கள். 

மேலும் மாஜிஸ்திரேட்டும் தற்போதுள்ள சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டுள்ளது

என்றும் கூறலாம். இந்த வழக்கில் சிறு குற்றச் சட்டம் 1955 (சட்டம் 336) பிரிவு 14ன் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், அதே பிரிவின் கீழ் தண்டிக்கப்படலாம்.

அவ்வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு, அதாவது 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறு குற்றச் சட்டம் 1955 (சட்டம் 336) பிரிவு 14 இல் வழங்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டத்துறை அலுவலகத்தால் பத்திரிகைகளில் அறிக்கை விடப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் எந்த மறுபரிசீலனையும் இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படி அச்சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டிருந்தால் எதற்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட அதே 100 வெள்ளி அபராத தொகையை மீண்டும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்டது?

அரசாங்கம் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும், சட்டம் 336 இன் உள்ளடக்கம் மற்றும் பொருத்தத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் இப்போது நேரம் வந்துவிட்டது. 

ஆனால் எனது கேள்வி என்னவென்றால் இணையச் பகடிவதை செயல்களுக்கு ஏன் சட்டம் 336ன் கீழ் தண்டனை விதிக்கப்படுகின்றன? 

ஆகவே அரசாங்கம் சைபர் செயல்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்கும் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து இணையச் சட்டத்தை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றுங்கள். இணைய பகடிவதையால் இன்னொரு ஈஷா பாகிக்கப்படும்  வரை காத்திருக்க வேண்டாம் என அவர் கருத்துரைத்தார்.

கோலாலம்பூர், ஜூலை 17-

ஈஷா என்ற ராஜேஸ்வரியை இணைய பகடிவதை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றத்தில் வெறும் 100 வெள்ளி அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பெண்ணுக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அப்பெண்ணுக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விளக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இணைய பகடிவதை வரையறையை நாம் மறுபரிசீலனை செய்து அதற்கான தகுந்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கோபத்தை உண்டாக்கும் மற்றும் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பி.ஷாலினிக்கு 100 வெள்ளி அபராதத்தை விதித்தது. இவரின் இந்த வழக்கு செக்‌ஷன் 14 சிறு வகை குற்றங்கள் சட்டம் 1955இன் கீழ் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோல திரெங்கானு, ஜூலை 17-
எப்ஃஏ கிண்ண போட்டியின் அரையிறுதி ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை சுல்தான் மிஸான் ஜைனால் அமிடின் அரங்கில் நடைபெறவுள்ளதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பை உறுதி செய்ய 351 போலீஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

கால்பந்த ரசிகர்களிடையே ஆத்திரமூட்டும் வகையில் தடைசெய்யப்பட்ட பதாகைகள் அல்லது பேனர்கள் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் கொண்டு வரக்கூடாது என்பதற்காக நுழைவு வாயில் மற்றும் மைதானப் பகுதியில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என கோல திரெங்கானு மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏசிபி அஸ்லி தெரிவித்தார்.

பார்வையாளர் தங்களின் அணிக்கு சரியான முறையிலும் உயர்ந்த விளையாட்டு நோக்கத்திலும் ஆதரவை காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பார்வையாளர்கள் அரங்கத்திற்குள் பட்டாசுகள், தலைக்கவசம், தண்ணீர் போத்தல்கள், கண்ணாடி போத்தல்கள், டின் குளிர்பானங்கள், லைட்டர், தீப்பெட்டி, லேசர் போன்றவற்றை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளதாக அஸ்லி கூறினார்.

எப்ஃஏ கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் திரெங்கானு எப்ஃசியும் சிலாங்கூர் எப்ஃசியும் களம் காணவுள்ளனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


கோலாலம்பூர், ஜூலை 17-
நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்க பெர்சத்து கட்சி பாஸை போன்று வலுவான கட்சியாக இப்பொழுது இருந்து மாற்றம் பெற முன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினரான மாஸ் எர்மியாத்தி சம்சூடின் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பெர்சத்து மக்கள் ஆதரவை ஈர்க்கும் வகையிலும், தலைமையை வலுப்படுத்தவும், கூடுதல் உறுப்பினர்களை சேர்க்கவும், புதிய யுக்திகளை கையாளவும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் அதிக நேரம் இல்லை என்பதால், இந்த அக்டோபரில் நடக்கும் கட்சித் தேர்தலில் பின் புதிய தலைவர்களை தேடுவது அவசியமாகும்.

பொதுத் தேர்தலின் கடைசி நிமிடத்தில் வேட்பாளர்களாக முன்னிலைப்படுத்தக் கூடிய இளைஞர்களை கண்டறிவது சாத்தியமற்றதாகும் என அவர் கூறினார்.

அந்த வகையில் எதிர்க்கட்சி கூட்டணியிலுள்ள பாஸ் அதன் கட்சியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. பாஸ் கட்சி தொடங்கப்பட்டது முதல் பல ஆண்டுகளாக அது எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. இருந்தபோதும் மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு பலத்த ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது. 

ஆகையால் அக்கட்சியை உதாரணமாக கொண்டு பெர்சத்து கட்சி வலுவடைவதுடன் பாஸ் கட்சியின் யுக்திகளை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமைத்துவத்தில் பெர்சத்து கட்சி இன்னும் வலுவடையும் என்ற நம்பிக்கையும் தனக்கு உண்டு எனவும் மாஸ் எர்மியாத்தி சம்சூடின் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்.

கோலாலம்பூர், ஜூலை 16-

மறைந்த சமூக ஊடக ஆர்வலரான ஈஷா என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரி வழங்கு தொடர்பாக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஷாலினிக்கு வெ.100  அபராதம் விதிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் நீதிபதியான அருண் ஜோதி எம்.செல்வர்வம், குற்றம் சாட்டப்பட்ட  ஷாலினி பெரியசாமி (வயது 35) என்பவருக்கு வெ.100 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஷாலினி பெரியசாமி என்ற நபர் கடந்த ஜூலை 1ஆம் திகதி டிக் டாக் கணக்கின் மூலம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி

அவதூறு கருத்துக்களைத் தெரிவித்ததாகவும்,  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இதனிடயே ஷாலினி மீது செக்‌ஷன் 14 சிறு குற்றங்கள் சட்டம் 1955 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீது அதே குற்றச்சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.

இம்மாதம் 5ஆம் தேதி ராஜேஸ்வரி ஸ்தாப்பாக்கிலுள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதன் தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ் புகாரை தொடர்ந்து துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

- காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 16-

பலத்த காற்றிலும் லங்காவி விமான நிலையத்தில் விமானம் ஒன்று  பாதுகாப்பாக தரையிறங்குவதைக் காட்டும் வைரலான காணொளி சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றது.

முகநூலில் லங்காவி கினி பதிவேற்றிய 29 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ மூலம், போயிங் 737 விமானம் ஓடுபாதையில் தரை இறங்குவதற்கு முன் வலுவான குறுக்கு காற்றுகளை எதிர்த்துப் போராடுவதைக் அந்த காணொளி காட்டுகிறது.

அச்சமயம் சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், விமானி திறமையாக விமானத்தை வழிநடத்தி பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை செயல்படுத்தினார்.

விமானத்தின் கேப்டன் உண்மையிலேயே திறமையானவர்.இதை போன்ற சம்பவங்களை காண்பது அரிதாகும்.  அப்போது உள்ளே இருந்த பயணிகள் எப்படி உணர்ந்தார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்த அற்புதமான சாதனை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. பலர் கருத்துகள் பிரிவில் விமானியின் அசாத்திய திறமையை பாராட்டினர்.

கோலாலம்பூர், ஜூலை 16-

மறைந்த சமூக ஊடக ஆர்வலரான ஈஷா என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரி அப்பாஹுவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக 43 வயதான லோரி ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதை அடுத்து சதீஸ்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டுலால் பிரதர்ஸ் 360 என்ற தனது TikTok கணக்கின் மூலம் மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இணைய வசதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, வெ.50,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இம்மாதம் 5ஆம் தேதி ராஜேஸ்வரி ஸ்தாப்பாக்கிலுள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதன் தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ் புகாரை தொடர்ந்து துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

-காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 16-

ராஜேஸ்வரி எனும் ஈஷா மரண வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் "டூலா பிரதர்ஸ்" என்பவர் மீது இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

டிக் டாக் பகடிவதையில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்ட  இந்திய பெண் ஈஷா மரணம் தொடர்பாக கடந்த வாரம் இரு நபர்களை போலீசார் விசாரணக்காக கைது செய்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட அந்த இருவரும் ஈஷாவிடம் இணைய பகடிவதை செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் அவர்களின் மீது தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் "டூலா பிரதர்ஸ்"எனும் நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

ஈஷாவின் மரணம் குறித்து மேலும் சில டிக் டாக் பிரபலங்கள் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்களை செய்து வந்தனர். இதன் தொடர்பாக கடந்த ஜூலை 13 ஆம் திகதி ஈஷாவின் தாயார் தன் மகளை பற்றி வீன் விமர்சனங்களை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படியும் அவர் மரணமடைந்தும் அவரை பற்றி பலர் அவதூறு பேச்சுகளை பேசுவதாகவும் கோம்பாக் தலைமை போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து மேலும் சிலர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈஷாவின் மரணம் தொடர்பாக யாரும் டிக் டாக்கில் சர்ச்சைகளை எழுப்ப வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் உத்தரவு விதிக்கப்பட்டும் அதனை மீறி ஒரு சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 16-

வாடகைக் காரை அனுப்பச் சென்ற நூர் ஃபார் கார்த்தினி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் அவரின் காதலன் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இளம் பெண் காணாமல்போனதாக புகார் கிடைத்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அந்த 24 வயதுடைய ஆடவரை போலீசார் கைது செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ உசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அந்த ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பின்னர்தான் உலு சிலாங்கூர், கம்போங் ஸ்ரீ கெலேடாங்கிலுள்ள செம்பனைத் தோட்டத்திலிருந்து அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இருந்தபோதும் இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதனை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

தடுப்புக் காவல் உத்தரவை பெற சம்பந்தப்பட்ட நபர் கோல குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த புதன்கிழமை காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட நூர் ஃபார் கார்த்தினியின் (வயது 25) உடல் நேற்று மாலை 6 மணியளவில் செம்பனை தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜூலை 16-

நாட்டின் 17ஆவது பேரரசராக சுல்தான் இப்ராஹிம் வரும் சனிக்கிழமை அரியனை அமரவுள்ளதை தொடர்ந்து கோலாலம்பூரில் 14 சாலைகளை போலீசார் தற்காலிகமாக மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரியனை அமர்வு விழாவை தொடர்ந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஜாலான் செமாந்தான், ஜாலான் டாமன்சாரா, ஜாலான் இஸ்தானா, கோலாலம்பூர்-சிரம்பான் எக்ஸ்பிரஸ்வே, ஜாலான் கூச்சிங், டத்தோ ஓன் சாலை வட்டம், ஜாலான் பார்லிமன், ஜாலான் துன் ரசாக், ஜாலான் கியா பெங், ஜாலான் ராஜா சுலான், ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலை, ஜாலான் துங்கு அப்துல் அலிம் சாலை ஆகியவை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் ருஸ்டி ஈசா தெரிவித்தார்.

அரியனை விழா சுமுகமாக நடப்பதை உறுதிப்படுத்தவும் முக்கிய பிரமுகர்களுடன் உடன் செல்வதற்கும் போக்குவரத்தை கட்டுபடுத்துவதற்கும் 387 போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனமோட்டிகள் சம்பந்தப்பட்ட சாலைகளை தவிர்க்கும்படியும் கடமையிலுள்ள போலீசாரின் ஆலோசனையை கேட்டு நடக்கும்படியும் அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், ஜூலை 15-
அரசாங்க அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி புடி மடானி அமைப்பு உருவாக்கப்பட்டது என்று நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

இந்த அமைப்பை உருவாக்க எந்த வெளி ஆலோசகர்களும் பயன்படுத்தப்படவில்லை என்றார் அவர்.

இந்த அமைப்பு திறந்த டெண்டரைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்த அமைப்பு ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய தகவல்களின் சேகரிப்பு என்பது உதவி தேவைப்படுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியாகும். அவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை  தவறிவிடாமல் இருக்க புடி மடானி உருவாக்கப்பட்டதாக லிம் ஹுய் யிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

லண்டன், ஜூலை 15- 

லண்டனில் 2 தினங்களாக நடந்த  கம்பன் விழாவில்,  கலந்துக்கொண்ட  ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் " சொல்வேந்தர்" டத்தோ ஸ்ரீ எம். சரவணன்  முதல் நாள் பேருரை ஆற்றினார்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாள் நடைப்பெற்ற  அந்த விழாவில் , லண்டன்  அறிவு கட்டளை  டத்தோ ஸ்ரீ எம். சரவணனுக்கு  " செந்தமிழ்ச் செல்வர்" என்ற விருதை வழங்கி அவரை கௌரவித்தது.

மலேசியா மட்டும் இல்லாமல்  உலக நாடுகள் மத்தியில் இலக்கியம் , தமிழ் மொழி,  தமிழ் சார்ந்த முன்னேற்றத்திற்கு  டத்தோ ஸ்ரீ சரவணன்  தமிழுக்காக எடுத்து வரும் முயற்சியை கௌரவிக்கும் வகையில் அவருக்கு  இந்த விருது வழங்கப்பட்டது.

மலேசியாவைப் பொறுத்தவரை துன் சாமிவேலுக்கு பிறகு எழுத்தாளர்களையும் தமிழ் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆற்றி வரும் பங்கு பாராட்டக்குரியது.

குறிப்பாக டத்தோ ஸ்ரீ சரவணன்  சென்ற நூல் வெளியீட்டு விழா என்பது கணக்கில் அடங்காதது . ஒரு சிறப்பு பிரமுகராக மட்டும் கலந்துக் கொள்ளாமல், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மிக பெரிய தொகையைக் கொடுத்து அந்த நூலை வாங்குவது மட்டும் அல்லாது, சமுதாயத்தில் வளர்ச்சி அடைந்த பிரமுகர்களையும் நூலை வாங்க ஊக்குவித்து படைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

அதோடு மலேசியாவிலும் உலக அரங்கிலும்  டத்தோ ஸ்ரீ சரவணன்  பெயர் இடம்பெறாத தமிழ் சார்ந்த விழாவும் இல்லை, சமயம் சார்ந்த விழாவும் இல்லை.

அந்த வகையில் சொல்வேந்தருக்கு லண்டன் மண் "செந்தமிழ்ச் செல்வர்" என்ற மகுடத்தை சூட்டியுள்ளது.


லண்டன், ஜூலை 15- லண்டனில் 2 தினங்களாக நடந்த  கம்பன் விழாவில்,  கலந்துக்கொண்ட  ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் " சொல்வேந்தர்" டத்தோ ஸ்ரீ எம். சரவணன்  முதல் நாள் பேருரை ஆற்றினார்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாள் நடைப்பெற்ற  அந்த விழாவில் , லண்டன்  அறிவு கட்டளை  டத்தோ ஸ்ரீ எம். சரவணனுக்கு  " செந்தமிழ்ச் செல்வர்" என்ற விருதை வழங்கி அவரை கௌரவித்தது.

மலேசியா மட்டும் இல்லாமல்  உலக நாடுகள் மத்தியில் இலக்கியம் , தமிழ் மொழி,  தமிழ் சார்ந்த முன்னேற்றத்திற்கு  டத்தோ ஸ்ரீ சரவணன்  தமிழுக்காக எடுத்து வரும் முயற்சியை கௌரவிக்கும் வகையில் அவருக்கு  இந்த விருது வழங்கப்பட்டது.

மலேசியாவைப் பொறுத்தவரை துன் சாமிவேலுக்கு பிறகு எழுத்தாளர்களையும் தமிழ் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் ஆற்றி வரும் பங்கு பாராட்டக்குரியது.

குறிப்பாக டத்தோ ஸ்ரீ சரவணன்  சென்ற நூல் வெளியீட்டு விழா என்பது கணக்கில் அடங்காதது . ஒரு சிறப்பு பிரமுகராக மட்டும் கலந்துக் கொள்ளாமல், டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மிக பெரிய தொகையைக் கொடுத்து அந்த நூலை வாங்குவது மட்டும் அல்லாது, சமுதாயத்தில் வளர்ச்சி அடைந்த பிரமுகர்களையும் நூலை வாங்க ஊக்குவித்து படைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

அதோடு மலேசியாவிலும் உலக அரங்கிலும்  டத்தோ ஸ்ரீ சரவணன்  பெயர் இடம்பெறாத தமிழ் சார்ந்த விழாவும் இல்லை, சமயம் சார்ந்த விழாவும் இல்லை.

அந்த வகையில் சொல்வேந்தருக்கு லண்டன் மண் "செந்தமிழ்ச் செல்வர்" என்ற மகுடத்தை சூட்டியுள்ளது.

அம்பாங், ஜூலை.14-

சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னையர், தந்தையர் தின விழாவில் 250 பேருக்கு அன்பளிப்புகள் கூடிய அருஞ்சுவை உணவு விருந்தும் வழங்கப்பட்டது.

இன்று அம்பாங் இண்டா சமூக மண்டபத்தில் சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் மிகவும் விமரிசையாக இவ்விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றிய பிரபல மருத்துவர் திரு அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் குறித்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதோடு பலருக்கு இலவசமாக மெடிக்கல் பற்றுச்சீட்டுகளையும் கொடுத்தார்.

நாடாறிந்த சமூக சேவையாளர் செந்தூல் விஜி, சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ சிவா, தட்சனா,  ஏஎஸ்பி முத்தையா அம்பாங், டத்தோ குணாஜி, சிவமலர் உட்பட பலரும் இந்த விழாவில் சிறப்பு செய்யப்பட்டனர்.

ஓவ்வோர் ஆண்டும் சிலாங்கூர் அன்பு இதயம் சங்கத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தந்தையர்களின் தியாகங்களை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அன்பளிப்புகள் வழங்கப்படுவதாக கணேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் ஆலோசகர் பாலகுரு, பொருளாளர் கவிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-காளிதாசன் இளங்கோவன்

சுங்கை பூலோ, ஜூலை.13-

மெட்ரிக்குலேஷன் வாய்ப்பை பெறுவதற்கு 10A பெற்ற மாணவர்கள் முன்வந்து அதற்கான விண்ணப்பத்தை செய்ய  வேண்டும் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  கூட்டுறவு  துறை துணையமைச்சரும் சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணம் வலியுறுத்தினார்.

எஸ்.பி.எம் தேர்வில் 10A பெறும் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்கப்படும் என  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். நிச்சயம் பிரதமர் சொன்னதை செய்வார் என தெரிவித்த ரமணன் ஆனால் அதற்கான முறையான விண்ணப்பத்தை செய்வதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

ஆகவே  மெட்ரிக்குலேஷன் வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக அதற்கான விண்ணப்பத்தை செய்து கொள்ள வேண்டும். மெட்ரிக்குலேஷன் குறித்த எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் களைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அவ்வகையில் அப்படி முறையாக விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் என்னை சந்தியுங்கள் நிச்சயம் நான்  அதற்கு சிறந்த தீர்வு காண வழி வகுப்பேன் என டத்தோ ரமணன் உறுதியளித்தார்.

இன்று சுங்கைபூலோவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற 159 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சுங்கைபூலோ தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று  இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு, பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் எஸ்பிஎம் தேர்வில் 7ஏக்குப் மேல் எடுத்த 159 மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட ரி.ம 72,350 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட தொகை நிச்சயம் அம்மாணவர்களுக்கு  பயன் தரும் வகையில் இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பேங்க் ரக்யாட்  செய்த இந்த உதவியைப்போன்று மற்ற ஏஜென்சிகளும் மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் வாரியக் குழு உறுப்பினர் டத்தோ ஹாஜி ஷம்ரி சாலே, தலைமை நிர்வாகி சைபுல் ரிஷால், துணையமைச்சரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-காளிதாசன் இளங்கோவன்

ரவூப், ஜுலை 12-

ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. எல்லா நிலைகளிலும் பள்ளிக்குத் துணையாய் நிற்கின்ற அவர்களையும் அங்கீகரிக்கலாமே! 

இதனை நனவாக்கும் வகையில், “அர்ப்பணிப்புக்கு ஓர் ஆராதனையும் முன்னாள் மாணவர்கள் சங்கமமும்” எனும் தலைப்பில், இங்கு சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 70ஆம், 80ஆம், 90ஆம் ஆண்டுகளைளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சிறப்பிக்கப்படவுள்ளார்கள். 

எதிர்வரும் 14/7/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 மணி வரை பள்ளி மண்டபத்தில் நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சியை ஜொகூர் மாநில குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி. வே.இராஜகோபால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.

சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான டி.எஸ்.பி. வே. இராஜகோபால், இந்நிகழ்ச்சியில் முதன்மை பிரமுகராகக் கலந்து கொள்வதில் பள்ளி நிர்வாகம் பெருமிதம் அடைவதாக தலைமையாசிரியர் இல.கருணாநிதி தெரிவித்தார். 

பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், பள்ளிப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் உரை, அவர்களின் நீங்காத நினைவுகள் பகிர்வு, நினைவுச் சின்னம் வழங்குதல், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்தல் போன்ற அங்கங்கள் இடம்பெறுகின்றன. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும், சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு தலைமையாசிரியர் இல.கருணாநிதியும், பெ.ஆ.ச.தலைவர் ஐ.சண்முகநாதனும் அழைக்கின்றனர்.

கோலாலம்பூர், ஜூலை 12-

பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம்  இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்களை நிறுவி கம்பன் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர்  செல்வந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள்

அண்மையில் ஸ்ரீலங்காவில் நடந்த கம்பன் விழாவில் சிறப்புப் பிரமுகராகச் சென்று  பேருரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து  இப்போது லண்டனில் நடக்கவிருக்கும் கம்பன் விழாவிற்கும் சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள்  லண்டன்  சென்றடைந்தார்.

அரசியலும் இலக்கியமும் ஆன்மீகமும் ஒரு சேர  தாங்கி பிடிக்கும்  டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள், உலகத் தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும், இலக்கியவாதியாகவும் வலம் வருகிறார் என்பது மலேசியத் தமிழர்களுக்கு பெருமை.

அந்த வகையில் நாளை 13, மறுநாள் 14ஆம் தேதிகளில் 

லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள டத்தோ ஸ்ரீ லண்டன்  சென்ற நிலையில் ஏறப்பாட்டு குழுவினர் அவரை விமான நிலையத்தில் மரியாதை செய்து வரவேற்றனர்.


கோலாலம்பூர், ஜூலை 11-
சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க தீர்க்கமாகச் செயல்படுமாறு தகவல் தொடர்புத் துறை அமைச்சு மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (SKMM) ஆகியோருக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

இன்று காலையில் அரண்மனையில் பேரரசரை சந்தித்தபோது அவர் மேற்கண்டவாறு கூறியதாக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.

அந்த அமர்வில், அண்மையில் இணைய பகடிவதைக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்ட இஷா என்ற ராஜேஸ்வரியின் மரணத்தை பற்றி பேரரசரிடம் பேசியதாக அவர் சொன்னார்.

சமூக ஊடகங்களில் எழும் பிரச்சினையை களைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேரரசர் உத்தரவிட்டார். மேலும் சமூக ஊடகங்கள் பலி வாங்கும் தளமாகவும் நம்மிடையே பிளவை ஏற்படுத்தும் கருவியாக இருப்பதை நாம் தவிர்க்க வேண்டும் என சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஆகையால் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சு மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தும் என ஃபாமி தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


புக்கிட் மெர்தாஜாம், ஜூலை 11-
தாமான் ஸ்ரீ ரம்பாய் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து இரு இளம் பெண்களின் உடல்கள் உப்பியதுடன் தூர்நாற்றம் வீசும் நிலையில் மீட்கப்பட்டன.

நேற்று மாலை 5.30 மணியளவில் அவ்வழியே நடந்து சென்றவர் காருக்குள் உடல்களை கண்டு போலீசுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பெர்டா தீயணைப்பு நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

பூட்டியிருந்த காரின் கதவை சிறப்பு கருவியை கொண்டு அவர்கல் திறந்ததுடன் சடலங்களை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவ்விரு பெண்கள் சுமார் 5 நாடுகளுக்கு முன்பு இறந்திருக்கலாம்  என பினாங்கு தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக அவ்விரு பெண்களின் உடல்களும் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை.9-

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமர்த்தமாக ம.இ.கா  துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ எம் சரவணனை சந்திக்க மலேசிய வருகை புரிந்தார்.

இன்று காலை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை மரியாதை நிமர்த்தமாக சந்தித்த  அளுநர் செந்தில் தொண்டமான், மாலை  ம.இ.கா வின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை சந்தித்தார்.

இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்பில் இந்திய சமுதாயம் குறிப்பாக  தமிழ் சமுதாயத்தின் நல திட்டம் மற்றும் அவர்களின் வாழ்வாரதார திட்டம் தொடர்பாக இரு நாடுகளின் பங்களிப்பு குறித்து  பேசப்பட்டது.

இதில் ம.இ.கா தேசியத் தலைவர் இலங்கை வாழ் தமிழர்கள் தொடர்பான விவகாரத்தில் ம.இ.கா என்றும் துணை நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  இலங்கை தமிழர் வாழ்வாதாரத்திற்கு எப்போதும் ம.இ.கா சார்பாக குறல் கொடுப்பேன் என தெரிவித்தார்.

கோலாலம்பூர் ஜூலை-9

பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம்  இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்களை நிறுவி கம்பன் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர்  செல்வந்தர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் அவர்கள் அண்மையில் ஸ்ரீலங்காவில் நடந்த கம்பன் விழாவில் சிறப்புப் பிரமுகராகச் சென்று  பேருரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து  இப்போது லண்டனில் நடக்கவிருக்கும் கம்பன் விழாவிற்கும் சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள்  லண்டன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலும் இலக்கியமும் ஆன்மீகமும் ஒரு சேர  தாங்கி பிடிக்கும்  டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும், இலக்கியவாதியாகவும் வலம் வருகிறார் என்பது மலேசியத் தமிழர்களுக்கு பெருமை.

அந்த வகையில் எதிர்வரும் ஜுலை 13, 14ஆம் தேதிகளில் லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள டத்தோ ஸ்ரீ லண்டன் செல்லவிருக்கிறார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மலேசிய மண்ணின் மனமும் வீசுகிறது , மலேசிய  உலக மேடையில் பேசப்படுகிறது.

கோலாலம்பூர், ஜூலை 9-

இணைய பகடிவதைக்கு  பல பெண்கள் பலியாகி வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்று            ம இகா   மகளிர் அணி தலைவி சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடக்க கூடாது.  உயிரைப் பறிக்கும் இணையப் பகடிவதையை ம இகா மகளிர் அணி வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் சொன்னார்.

நெஞ்சை பதற வைக்கும் இதுபோன்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையாக உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் மிகவும் விலைமதிப்பற்றது என்று அவர் சொன்னார்

இணைய பகடிவதைக்கு இளம் வயது பெண்கள் பலியாகி வருவதை தடுத்து நிறுத்த சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

இளம் வயது பெண்கள் உட்பட இளம் தலைமுறையை குறி வைத்து சில கும்பல்கள் பகடிவதையை செய்து வருகிறது.

இணைய பகடிவதைக்கு இலக்கான இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் ஃபாமி பட்ஸில் கூறி இருப்பதை வரவேற்கிறோம்.

இணைய பகடிவதைக்கு மேலும் ஒரு உயிர் பலியாகாமல் இருப்பதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மஇகா தேசிய மகளிர் அணி வலியுறுத்துகிறது என்று சரஸ்வதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


தாப்பா, ஜூலை 9-
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கை நோக்கிச் செல்லும் வழியின் 330.8ஆவது கிலோ மீட்டரில் லோரியுடன் ஆம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளான சம்பவத்தில் துணை மருத்துவ அதிகாரியான இந்திய பெண் பலியானார்.

அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 30 வயதுடைய இந்திய மாது வண்டியின் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். 41 வயதுடைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ஆம்புலன்ஸ் செரஸிலுள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளியை இறக்கிவிட்டு மீண்டும் ஈப்போவிற்கு சென்றுக் கொண்டிருந்த வழியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தாப்பா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் நாயிம் அஸ்னாவி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டி சாலையின் இடது புறத்தில் சென்றுக் கொண்டிருந்த லோரியின் பின்னால் மோதியுள்ளது. இதனால் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண் இடுக்கில் சிக்கி உயிரிழந்ததாகவுன் இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர் ஜூலை - 8

மலேசிய கட்டிட வடிவமைப்பாளர்  சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் வழங்கப்படும் கிங்டன் லோ விருது கடந்த 43 ஆண்டுகளாக கட்டிட வடிவமைப்பு துறையில்  மிக பெரிய அளவில் சாதனை புரிந்த டத்தோ பி. காசி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த உயரிய விருதின் வழி கட்டிட வடிவமைப்பு துறையில் டத்தோ பி. காசி வழங்கிய சேவையை பாராட்டும் வகையில் அச்சங்கம் அவரை கௌரவித்தது.

கட்டிட வடிவமைப்பில் ஒரு இந்தியர் மிக பெரிய அளவில் சாதனை புரிந்து அவருக்கு இப்படி ஒரு கௌரவிப்பு அந்த துறையில் வழங்கப்பட்டதை தொடர்ந்து அதனை  கொண்டாடும் வகையில் பலர் டத்தோ பி. காசியை பாராட்டி வருகின்றனர்

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், ஜூலை 7-

டிக் டாக் பகடிவதையில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துக் கொண்ட  இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரியின் இறுதி அஞ்சலியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் கலந்துக்கொண்டார்.

இன்று இவரின் இல்லத்துக்கு விரைந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர்  ஈஷாவின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஈஷாவின் மரணம் நியாயமற்றது, அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதன் தொடர்பாக நேற்று செந்தூல் மாவட்ட காவல் நிலையத்திலும் போலீஸ் புகார் செய்யப்பட்டது.

இத்தகவலை அறிந்த அமைச்சர் நேரடியாக அவரின் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொண்டார்.

அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் இளங்கோவன்

படம்: தகவல் தொடர்புத்துறை அமைச்சு


கோலாலம்பூர், ஜூலை 6-
இளம் வயதில் அதாவது 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்ஐவி நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் புதியதாக நுழையும் மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனையை கட்டாயமாக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவதிலும் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாததால், இந்த  நோய் சம்வங்கள் பரவல் பல்கலைக்கழகம் அளவில் கவனிக்கப்படாமல் போனது என மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (கேஎம்யுஎம்) இடைக்காலத் தலைவர் நஜிரா அப்துல்லா தெரிவித்தார்.

எனவே, பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் எச்ஐவி பரிசோதனையை கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையானது பல்கலைக்கழக தங்கு விடுதிக்கு நுழைவதற்கு முன்பு அல்லது முதல் வருடத்தில் சேருவதற்கு முன்பு மாணவர்களிடன் உடல்நலப் பரிசோதனை செய்வது போன்றது என அவர் சொன்னார்.

இதன் மூலம் எச்ஐவி நோய் சம்பவ விகிதத்தை குறைக்கலாம், ஏனெனில் நீண்ட காலமாக பாதிக்கப்பட்ட மாணவர்களும் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் எச்ஐவி சோதனை செய்யததும் இல்லை என்று நஜிரா கூறினார்.

 

கோலாலம்பூர், ஜூலை 6-
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 24  விழுக்காடு வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 தேர்தல் மையங்கள் மாலை 6 மணிக்கு மூடப்படும். கடந்த மாநில தேர்தலில் இத்தொகுதியில் 76.88 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

இந்த தொகுதியில் 39,279 பதிவுப் பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அதில் 57 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் ஜொஹாரி ஹரிப்பினுன் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலும் நேரடி போட்டியை சந்தித்துள்ளனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

புத்ராஜெயா, ஜூலை.5-

எச்ஆர்டி கோர்ப் கணக்கு தணிக்கை அறிக்கை தொடர்பில் எம்ஏசிசியில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாய்மி தாவூத் கூறினார்.

எச்ஆர்டி கோர்ப் நிதி தொடர்பான பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக எச்ஆர்டி கோர்ப் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தான் இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தலைமையகத்திற்கு புகார் செய்ய சென்றதாக அவர் தெரிவித்தார்.

எச்ஆர்டி கோர்ப்பின் கணக்கு தணிக்கை அறிக்கை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எம்ஏசிசி அதிகாரிகளிடம் ஒப்படைக்கக்கப்பட்டது.

குறிப்பாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் உத்தரவின் பேரில் புகாரும் செய்யப்பட்டது.

இந்த ஆவணங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வுகளை செய்யலாம். சரி பார்க்கலாம்.உண்மையிலேயே இக் கணக்கறிக்கையில் முறைகேடுகள் இருந்தால் அது தொடர்பில் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

அந்த விசாரணைக்கு ஒத்துழைக்க அமைச்சும் எச்ஆர்டி கோர்ப்பும் தயாராக உள்ளது

மேலும் நியாயமான முறையில் விசாரணை நடத்த எம்ஏசிசி அதிகாரிகளும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

ஆகவே விசாரணை முடிவுக்காக அனைவரும் காத்திருப்போம் என்று மனிதவள அமைச்சில்  நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ கைரூல் டிஷாய்மி தாவூத் கூறினார்.

இந்த விசாரணை முடியும் வரை யாரும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

 

கோலாலம்பூர், ஜூலை 5-
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய தேர்தலில் குளறுப்படியை ஏற்படுத்தி தேர்தலின் முடிவு அறிவிக்கப்படாமல் போனது குறித்து ஆலய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.இராமன் அவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ கே.தமிழ்செல்வன் மீதும் தேர்தல் அதிகாரிகள் ஐவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார்.

நடந்து முடிந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய தேர்தலில் தலைவர் பதவிக்கு டத்தோ க.தமிழ்செல்வனும் பி.இராமனும் போட்டியிட்டனர். தேர்தலின் போது 462 வாக்காளர்கள் பதிவு செய்த வேளையில் 461 பேர் வாக்களித்தனர். அதில் இராமனுக்கு 250 வாக்குகள் கிடைத்த வேளையில் டத்தோ க.தமிழ்செல்வன் 206 வாக்குகளை பெற்றார். 5 செல்லுபடி ஆகாத வாக்குகளாகும்.

தேர்தலில் குளறுபடிகள் உள்ளதாகவும் கள்ள ஓட்டு போடப்பட்டிருப்பதாகவும் கூறி டத்தோ தமிழ்செல்வன் தேர்தலின் முடிவை மறுத்தார்.

அதன் பின்னர் வாக்கு பெட்டிகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு மறுநாள் குவாந்தான் ஆர்ஓஎஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆர்ஓஎஸ் அதிகாரிகள் மூவர் தலைமையில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. அந்த முடிவுலும் தனக்குதான் அதிக வாக்குகள் கிடைத்தது உறுதி செய்யப்பட்டதாக இன்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இராமன் தெரிவித்தார்.

தேர்தல் முடிவை ஆர்ஓஎஸ் அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் அதிகாரிகள்தான் அறிவிக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர். ஆனால் தேர்தல் அதிகாரிகளோ ஒருதலைபட்சமாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் எங்களால் எந்த அறிவிப்பை செய்ய முடியாது என கூறிவிட்டதாக இராமன் தெரிவித்தார்.

ஆகையால் இந்த விவகாரத்திற்கு முறையான தீர்வுக் காண தான் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் டத்தோ தமிழ்செல்வன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது வழக்கு தொடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

தேர்தலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் மறுதேர்தலுக்கு செல்லலாமே என நிருபர் ஒருவர் கேட்டபோது, நான் எதற்கு மறுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும். தேர்தல் குழுவை தேர்ந்தெடுத்தது டத்தோ தமிழ்ச்செல்வன் தரப்பு, வாக்கு சீட்டுகளை அவர்களிடம் ஒப்படைத்ததும் அவர் தரப்புதான். உறுப்பினர்களில் வாக்காளர்களை உறுதி செய்ததும் அவர்களின் தரப்பாக இருக்கும் பட்சத்தில் அவரே தேர்தலில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறுவது வேடிக்கையாக உள்ளதாக இராமன் தெரிவித்தார்.
  
இம்மாதம் 3ஆம் தேதி தெமர்லோ நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அறுவர் மீது வழக்கு தொடக்கப்பட்டதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வழக்கு நிர்வாகம் நடத்தப்படும் என்றும் இராமன் தரப்பின் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் எஸ்.செல்வம் சண்முகம் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜூலை 4-

டீசல் மானிய கட்டுப்பாட்டு முறை அமலாக்கத்திற்கு வந்த பிறகு டீசல் கடத்தல் சம்பவங்கள் குறைந்துள்ள வேளையில், ரோன் 95 பெட்ரோல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி டீசல் மானிய கட்டுப்பாட்டு முறை அமலுக்கு வந்த பின்னர் இதுநாள் வரை 14 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் இதன் வழி 68,457 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி தெரிவித்தார்.

டீசல் மானியம் கட்டுப்பாட்டு முறை அமலுக்கு வருவதற்கு முன்னர் இதே காலக்கட்டத்தில் 65 கடத்தல் சம்பவங்கள் பதிவாகிய வேளையில் 520,803 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

டீசல் மானியம் கட்டுப்பாட்டு முறை செயல்படுத்தப்படுவதற்கு முன்னும் பின்னும் 20 நாள் காலத்தை ஒப்பிடுவதன் அடிப்படையில், டீசல் எண்ணெயை தவறாகப் பயன்படுத்திய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அவர் சொன்னார்.

இருந்தபோதும் டீசல் மானிய கட்டுப்பாட்டு முறை அமலாக்கத்திற்கு பின்னர் ரோன் 95 பெட்ரோல் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதாவது இதுவரை 46 சம்பவங்கள் பதிவாகிய வேளையில், 14,011 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மே 20 முதல் ஜூன் 9 வரையிலான காலகட்டத்தில் 17,064 லிட்டர் சம்பந்தப்பட்ட 37 பறிமுதல் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது என டத்தோ அர்மிஸன் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 3-

இந்திய தொழில்முனைவோர்களுக்கான மொத்த ஒதுக்கீடு குறித்தும், ஸ்புமி - பெண் திட்டங்கள் வழி பலனடைந்தோர் விவரம் குறித்தும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அதிரடி தகவலை தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வணிகத் துறையில் அதிகமான இந்தியர்களை ஈடுபடச் செய்வதிலும், அவர்களின் வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும் நான் அதீத முனைப்புச் செலுத்தியதில்  கடந்த ஐந்தே மாதங்களில் 2,225 தொழில்முனைவோர்களுக்கு 32.55 மில்லியன் ரிங்கிட் கடனுதவியை பெற்றுள்ளனர்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை அமைச்சின் கண்காணிப்பில் உள்ள தெக்குன், அமானா இக்தியார் (ஏ.ஐ.எம்), பேங்க் ராக்யாட் ஆகிய நிதியகங்கள் வழி, இந்திய தொழில்முனைவோர்களுக்குப் பிரத்தியேக வியாபாரக் கடனுதவிகளை ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

‘தெக்குன் ஸ்புமி’ நிதியகப் பிரிவின் கீழ், புதிதாய் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் இன்னொரு வியாபாரக் கடனுதவி களத்தை உருவாக்கி, அதன் கீழ் 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து, பெண் தொழில்முனைவோர்களுக்கான அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் கீழ், இந்தியப் பெண்களுக்காக “பெண்” (P.E.N.N) எனும் புதிய வியாபாரக் கடனுதவியை அறிமுகம் செய்து, கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியையும் அறிவித்தேன். 

அதோடு நில்லாமல், பேங்க் ராக்யாட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய தொழில்முனைவோர்களுக்காக ‘பிரிஃப்-ஐ’ (BRIEFF-I) எனும் புதிய கடனுதவி திட்டத்தை அறிமுகம் செய்து, பிரத்தியேகமாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆண்டு தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பிரச்சாரங்கள் - விளக்கக்கூட்டங்கள் வழி, கடந்த 31 மே 2024 வரை, தெக்குன் ஸ்புமி நிதிகயகத்தின் வழி  822 இந்தியத் தொழில்முனைவோர்களுக்கு 17.355 மில்லியன் ரிங்கிட் பகிரப்பட்டுள்ளதாகவும், ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’  எனும் புதிய கடனுதவித் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

தெக்குன் நிதியகத்தின் 'ஸ்புமி’ பிரிவின் வழி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 31 மே 2024 வரை 29,136 இந்திய தொழில்முனைவோர்களுக்கு 457.7 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

புதிதாய் அறிமுகம் கண்ட ஏ.ஐ.எம் - பெண் திட்டத்தின் வழி, இதுவரை 1,347 இந்தியப் பெண் தொழில்முனைவோர்களுக்கு 10.85 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 43 பேருக்கு 3.8 மில்லியன் கடனுதவி அங்கீகரிக்கபட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரிஃப்-ஐ கடனுதவித் திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இதுவரை 140 இந்திய தொழில்முனைவோர்கள் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

தெக்குன் ஸ்புமி, தெக்குன் ஸ்புமி கோஸ் பிக், ஏ.ஐ.எம். - பெண், பேங்க் ராக்யாட் பிரிஃப்-ஐ ஆகிய வியாபாரக் கடனுதவித் திட்டங்கள் வழி, இந்தியத் தொழில்முனைவோர்களை முன்னேற்றும் கடப்பாட்டில் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை அமைச்சு முழு அக்கறையும் ஈடுபாடும்  கொண்டிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

-காளிதாசன் இளங்கோவன்

 

கோலாலம்பூர், ஜூலை 2-
பூமிபுத்ரா ஒதுக்கீட்டைப் பாதிக்காமல், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் எவ்வாறு இடமளிக்க முடியும் என்பதை விளக்குமாறு அரசாங்கத்திடம் மசீச தலைவர் வீ கா சியோங் கேட்டுக் கொண்டார்.

இனம் பாராமல் எஸ்பிஎம் தேர்வில் 10ஏக்களுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேசனில் வாய்ப்பு அளிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பை வீ வரவேற்றார். ஆனால் சமீபத்திய மெட்ரிகுலேஷன் நுழைவுத் தேவைகளில் 10ஏ பெற்ற சீன மாணவர்களுக்கு இடமளிக்கும் சவாலை அவர் தனது முகநூல் பக்கத்தில் எடுத்துக்காட்டினார்.

பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் சேர்க்கைக்கான கொள்கை மாறவில்லாத பட்சத்தில், 10ஏ பெற்று தேர்ச்சியடைந்த அனைத்து சீன  மாணவர்களும் எப்படி மெட்ரிகுலேசனில் வாய்ப்பு வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.

எஸ்டிபிஎம்-க்கு மாற்றான மெட்ரிகுலேஷன், பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90 சதவீத இடங்களையும், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 சதவீத இடங்களையும் வழங்குகிறது.

பூமிபுத்ரா மாணவர்களுக்கான தற்போதைய ஒதுக்கீட்டை ஒப்பிடும்போது திறனின் அடிப்படையில் சேர்க்கை செய்யப்படுமா என்று ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய கொள்கையின் கீழ் பூமிபுத்ரா ஒதுக்கீடு பாதிக்காமல் அனைத்து சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும் எப்படி வாய்ப்பு வழங்கப்பட முடியும். அல்லது காலி இடங்களுக்கான மாணவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதா என அவர் வினா எழுப்பினர்.

இதற்கிடையே, இந்த புதிய கொள்கையின் கீழ் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிடுவார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. ஆகையால் இந்திய மாணவர்களுக்கென மெட்ரிகுலேசனில் 2,500 சிறப்பு இடங்களை அரசு ஒதுக்கும்படி செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய மாணவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படாமல் இருக்கவும், உயர்கல்வியில் சம வாய்ப்புகளைப் பெறவும் இந்த நடவடிக்கை அவசியம் என முன்னாள் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 2-

தரவுத்தள அமைப்பான PADU-வின் இரண்டாம் கட்ட பதிவை முறையே அரசாங்கம் திறக்கவுள்ளது.

இதனால், இந்த திட்டத்தில் இதற்கு முன்னர் பதிவு செய்யாத நபர்கள் நிர்ணயிக்கப்படும் காலத்திற்கு ஏற்ப தங்களின் தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம் என பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.

PADU தரவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.

எதிர்காலத்தில், PADU தரவுகள் அரசாங்கத் திட்டங்களை உருவாக்குவதிலும், உதவி பெறுபவர்களை அடையாளம் காண்பதிலும் முக்கியக் குறிப்பாக இருக்கும்" என்று அவர் மக்களவையில் வாய்மொழியாகப் பதிலளித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 2-

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அனுமதி கிடைத்தால் பாலஸ்தீனத்திற்கு அமைதி காக்கும் படைகளை நியமிக்கும் அம்சத்தில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான பிரபோவோ சுபியாண்டோவுடன் தொலைப்பேசியில் இதன் தொடர்பில் பேசியதாகவும் இதற்கு அவர் முழு ஆதரவு வழங்கியதுடன் இரு நாடுகள் மட்டுமின்றி இந்த ஒத்துழைப்பு ஆசியான் ரீதியில் நல்கப்பட வேண்டும் என்பதை அவர் வரவேற்றதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தின் மனிதாபிமான சூழ்நிலையைத் தொட்டு, ஐ.நா.வினால் அனுமதி வழங்கப்பட்டால், இந்தோனேசியாவுடன் அமைதி காக்கும் படையை நியமிக்கும் அம்சம் உட்பட இதர உதவிகளுக்கும் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அவர் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை 2-

எதிர்க்கட்சியினரின் வெறுப்பு அரசியலில் எனக்கு எவ்வளவு பட்டப்பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டாலும் நாட்டை நிர்வகிப்பதில் தனது கவனத்தை அது பாதிக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சுங்கைப் பாக்காப் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் எனக்கு பல பட்டப்பெயர்களை வைப்பது எனக்கு தெரியும். என்னை யூத ஏஜெண்டு என்றும் நாட்டை சீனவிற்கு விற்பது உள்ளிட்ட பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

அவர்கள் என்னை எப்படிதான் அழைக்கவில்லை. பிலேக்ரோக் விவகாரத்தில் என்னை யூத ஏஜெண்டு என்று கூறுகின்றனர். ஹம்மாஸை ஆதரத்தாலும் என்னை வெறுக்கின்றனர்.

ஆகையால் இதை பற்றி நான் பொருட்ப்படுத்தவில்லை. இதை விட என் கடமைதான் எனக்கு முக்கியம். அவர்கள் என்னை பற்றி பேசும் அனைத்தும் அரசியல் வெறுப்பு என நிதியமைச்சின் மாதந்திர கூட்டத்தில் பிரதமர் கூறினார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூலை -1

சமீபகாலமாக மிக பெரிய அளவில் பேசப்பட்டு வரும் கின்ராரா  தமிழ்ப்பள்ளி  நில விவகாரத்தில்  மலேசிய இந்தியர்களின் தாய் கட்சி என கூறும் ம.இ.கா-வும் அந்த கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் வாயை திறக்க வில்லை என சமூகவலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கின்ராரா  தமிழ்ப்பள்ளிக்கு அருகே அடுக்குமாடி வீடு அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் 2 வழி சாலை-யை 4வழி சாலையாக மாற்ற திட்டமிடல் நடத்தப்பட்டு ,சாலையை அமைக்க  கின்ராரா தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டிச்சாலை , பாலர்பள்ளி ம்ற்றும் கணினி  அறை  அமைக்கப்பட்ட நிலம்  தேவை படுவதாக பேச்சு வார்த்தை நடத்தபட்ட நிலையில், பொதுமக்களும் அரசு  சாரா இயக்கங்களும் பொங்கி எழுந்து எதிர்ப்பை காட்ட தொடங்கிவிட்டனர். 

அதோடு அந்த சாலை மேம்பாட்டில் ஒரு ஆலயமும் பாதிக்கப்பட போவதாக கூறப்படுகிறது.

மேம்பாடு என்றால் தமிழ்ப்பள்ளியும் ஆலயமும்தான் இவர்கள் கண்களை உறுத்துமா என பொதுமக்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் ம.இ.கா அமைதியாக இருப்பது மட்டும் இல்லாமல் அக்கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்  இதுவரை வாயை திறக்காமல் மௌனமாக இருப்பதாக சமூக  வலைத்தளத்தில் கேள்வி எழுப்பபட்டு வருகிறது. ம.இ.கா சிலாங்கூர் மாநில தலைவர் எங்கே?

ம.இ.கா இளைஞர் பிரிவு எங்கே? கல்வி குழு எங்கே?  என கேள்விகள் எழுப்பபட்டு வருகிறது. இந்த நாட்டில் ம.இ.கா இருக்கும் வரை தமிழ்ப்பள்ளி காக்கப்படும் என கூறும் ம.இ.கா இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், ஜூலை 1-

உரிமை அரசியல் கட்சியின் பதிவு நிலையை வெளியிடுமாறு அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் பி.ராமசாமி உள்துறை அமைச்சர் சைப்புடின் நசுத்தியோனை வலியுறுத்தியுள்ளார்.

உரிமை கட்சியின் பதிவு தொடர்பில் ஆர்ஓஎஸ் அமைதி காத்து வருவதால் அவர் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பே உரிமை கட்சியின் பதிவு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள வேளையில் இதுநாள் வரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஆகையால் எங்களின் விண்ணப்பத்தை சைப்புடின் நசுத்தியோன் நிராகரித்தார் அல்லது ஏற்றுக் கொண்டார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பி.ராமசாமி வலியுறுத்தினார்.

இல்லையென்றால் ஆர்ஓஎஸ் மீதும் உள்துறை அமைச்சின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூலை 1-

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பின்னணி, இனம் பாராமல் மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரதமர் அறிவிப்பு செய்ததை தொடர்ந்து கல்வி அமைச்சும் உயர்க்கல்வி அமைச்சும் ஆராய்வை மேற்கொண்டு வருகின்றன.

இதன் தொடர்பிலான அறிவிப்பு கூடிய விரைவில் வழங்கப்படும் எனவும் இரு அமைச்சுகளும் ஆராய்வை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் கல்விக்கு முக்கியதுவம் அளிப்பதையும் அனைத்து சிறந்த மாணவர்களுக்கும் கல்வி சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதை எடுத்துகாட்டுகிறது.

சரியான நேரத்தில் பிரதமர் இந்த அறிவிப்பை செய்ததற்கு நன்றி. மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கிய அறிவிப்பாக இருக்கும் என அவர் சொன்னார்.

முன்னதாக, இனம் மற்றும் மாநிலம் பொருட்படுத்தாமல் எஸ்பிஎம் தேர்விக் 10ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட முடிவுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு முதல் மெட்ரிகுலேஷன் படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், ஜூலை 30-

முக்கியமான தலைவர்களின்  பின்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ம.இ.கா உறுப்பினர்களின் மனதைக் கவர்ந்து இழுத்தால் அவர்களுக்கு  வெற்றி கிட்டும், அதற்காக முதல் நிலை உதவி தலைவராக வருவது எல்லாம் சாத்தியம் இல்லை எனவும் அந்த இடம் டத்தோ டி. மோகனுக்கு உரியது எனவும் ம.இ.கா உறுப்பினர்கள்  டத்தோ டி.மோகன் பிரச்சார வருகையின் போது திட்டவட்டமாக தெரிவித்தனர்.

டத்தோ டி.மோகனை அரசியலில் ஒரு படி இறக்க  உட்கட்சி அரசியல் நடப்பதாக  சமீபகாலமாக  ஒரு பேச்சு நிலவுகிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேல்மட்ட தலைவர்களின் ஆதரவில் நிற்கிறேன் என ஒரு சிலர் வாக்கும் சேகரித்து வருகின்றனர்.

ஆனால் (உங்களுக்காக நான்  டி. மோகன்) என்ற வரியோடு இப்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் டத்தோ டி. மோகன் செல்லும் இடம் எல்லாம்  எங்கள் முதல் நிலை உதவி தலைவர் நீங்கள் தான் என கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான காணொளியும் தற்போது டிக் டோக்கில் வைரல் ஆகி வருகிறது. 

செய்தி :வெற்றி விக்டர்

கோலாலம்பூர், ஜூன்.29-

(E -TOURIST VISA ) இ-சுற்றுலா விசாவின் மூலம் மலேசியர்கள் 30 நாட்களில் இருமுறை இந்தியாவிற்கு சென்று வரலாம் என்று இந்தியத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த புதியப் பயண விதிமுறைச் சலுகையை மலேசியர்கள் பெறலாம்.

இந்த இ-சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பம் செய்ய மலேசியர்கள் இந்தியத் தூதரகத்தின் அகப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள indianvisaonline  எனும்   இணையத்தளத்திற்கு சென்று மேல் விவரம் பெறலாம்.

இதனிடயே இந்த புதிய விதிமுறைகளைக் கொண்ட இந்தியாவிற்கான இ-சுற்றுலா விசாவை பெறுவதற்கு கூடுதல்  கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை.

இந்நிலையில்  இ-பிசினஸ், இ-கான்பரன்ஸ், இ-மெடிக்கல், இ-மெடிக்கல் அட்டென்டன்ட், இ-ஆயுஷ், இ-எமர்ஜென்சி எக்ஸ் இதர விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டபடி விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூன்.29-

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) கீழுள்ள அனைத்து துணைச் சட்டத்தின்படி  போக்குவரத்துக் குற்றங்களுக்கான புதிய கூடுதல் கட்டணத்தை  ஜூலை 1 ஆம் திகதி முதல் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நடைமுறைப்படுத்துகிறது.

மோட்டார் சைக்கிளுக்கான சமன் கட்டணம் ஒன்று முதல் 15 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM30 விதிக்கப்படும் என்றும்

16 முதல் 30 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM50 விதிக்கப்படும் என்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

31 முதல் 60 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM80 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்குகான சமன் கட்டணம் ஒன்று முதல் 15 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு  RM50 விதிக்கப்படும். 

16 முதல் 30 நாட்கள் வரையிலான கட்டண காலத்திற்கு RM80 விதிக்கப்படும். 31 முதல் 60 நாட்கள் ரையிலான கட்டண காலத்திற்கு RM100 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெந்தோங், ஜூன்.29-

கெந்திங் மலைக்குச் செல்லும் பாதையின் கிலோமீட்டர் 16.5-ல் இன்று சுற்றுலா பேருந்து ஒன்று  கவிழ்ந்ததில் இரண்டு சீன நாட்டை சேர்ந்த சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிர் பிழைத்தனர்.இவ்விபத்தில் பலியானவர்களில் இருவர் பேருந்துக்கு அடியில் சிக்கி உயிர் இழந்தனர்.

தற்போது அவர்களின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.43 மணியளவில் ஏற்ப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு அவசர அழைப்பு வந்தது , உடனே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் படையின் உதவி இயக்குனரான இஸ்மாயில் அப்துல் கானி தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தில் 17  சீன சுற்றுப்பயணிகள் பயணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது..

இந்த விபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் உட்பட மூன்று உள்ளூர் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக இஸ்மாயில்  தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

ரவூப், ஜூன் 28-

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத் தேர்தலில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கும் கள்ள வாக்கு விவகாரத்திற்கும் முறையே தீர்வு காணப்படாத நிலையில், தேர்தலை ஒட்டி ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தலைவரை அறிவிக்கும் அதிகாரத்தை அறுவர் அடங்கிய தேர்தல் குழு கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்தி, நடப்புத் தலைவர் டத்தோ க.தமிழ்செல்வன் போலீஸ் புகார் செய்துள்ளார். 

தேர்தலுக்காக அச்சிடப்பட்ட 500 வாக்குச் சீட்டுகளை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணிப் பார்த்து உறுதி படுத்தத் தவறிய தேர்தல் குழுவினர், பின்னர் நீண்ட வரிசையில் நின்ற வாக்காளர்களின் அடையாளத்தை மறு உறுதிப்படுத்தாமல் வாக்குச் சீட்டை வழங்கி, தேர்தலின் அடிப்படை விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் குழுவில் மஇகா தலைவர்களான டத்தோ எம்.பி.நாதன், டத்தோ எம்.தேவேந்திரன், என்.சுப்பிரமணியம், ஜி.அரிகிரும்ஷ்ணன், டி.சிவபிரகாசம், எம்.தர்மகவுண்டர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

 

தனது போலீஸ் புகாரில் இந்த அறுவரின் பெயரையும் குறிப்பிட்டுள்ள டத்தோ தமிழ்செல்வன், அப்புகாரில் மேலும் தெரிவித்திருப்தானது:-

தேர்தல் குழுவினர் வாக்களிப்பு பகுதியை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை. வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தியப் பின், அப்பகுதியை விட்டு வெளியேறாமல் அங்கேயே கும்பலாக இருந்தனர். 

பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 462. தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கையில், மொத்தம் 461 வாக்குகள் கிடைத்திருப்பதாக தேர்தல் குழு தெரிவித்தது. 

இதில் எனக்கு 206 வாக்குகளும், பி.ராமனுக்கு 250 வாக்குகளும் கிடைத்தன. செல்லா வாக்குகள் 5. பயன்படுத்தப்படாத வாக்குச் சீட்டுகள் 54. ஆக மொத்தம், 515 வாக்குச் சீட்டுகள் வாக்குப் பெட்டிக்குள் இருந்தன. 

இதற்கு முன்னதாக தங்களிடம் 500 வாக்குச் சீட்டுகள் இருப்பதாக தேர்தல் குழுவினர் அறிவித்தனர். பிறகு, வாக்குப் பெட்டிக்குள் கூடுதலாக 15 வாக்குகள் எங்கிருந்து எப்படி வந்தன? 

கண் முன் கள்ள வாக்குகள் இருப்பது உறுதியான நிலையில், உறுப்பினர் அல்லாதோருக்கும் வாக்குச் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

மற்றொரு நிலவரத்தில், 2.00 மணிக்கு தொடங்கப்படவிருந்த பொதுக்கூட்டம், தாமதமாக 2.40 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் தேர்தலும் தாமதமாகலாம் என்று கருதிய சுமார் 15 முதல் 20 உறுப்பினர்கள், வாக்களிப்பு தொடங்கப்படுவதற்கு முன்னதாகவே என்னிடம் முறையே சொல்லிவிட்டு விடைபெற்றனர். 

இந்நிலையில், 461 வாக்களர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் குழுவினர் அறிவித்ததில் எனக்குப் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும், பகாங் மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்டிராத ஒரு கும்பல் வாக்களித்திருப்பதாக எனது ஆதரவாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். 

மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலய சட்டவிதிகளின் படி, பகாங் மாநிலத்தை வசிப்பிடமாகக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலில் 15 கள்ள வாக்குகள் ஊடுருவியிருந்ததால் எனது ஆதரவாளர்கள் தேர்தலை ரத்துச் செய்யக் கோரினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தேர்தல் முடிவு குறித்து ஆர்.ஓ.எஸ். பதில் சொல்லட்டும் என்று கூறிய தேர்தல் அதிகாரிகள், மாரான் மாவட்ட போலீஸ் தலைவரின் மேற்பார்வையோடு, வாக்குப் பெட்டிகளை பூட்டுப் போட்டு, மாரான் சுங்கை ஜெரிக் போலீஸ் நிலைய லாக்காப்பில் வைத்தனர். 

மறுநாள் திங்கட்கிழமை, வாக்குப் பெட்டிகளை குவாந்தான் ஆர்.ஓ.எஸ்.க்குக் கொண்டுச் சென்றனர். எனது பிரதிநிதியாக ரவி வடிவேலு சென்றார். அங்கு ஆர்.ஓ.எஸ். அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் எனக்கு மேலும் இரண்டு வாக்குகள் குறைந்திருந்தன. 

இதனைக் கண்டு ஆர்.ஓ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது எனக்கும் பேரதிர்ச்சி ஏற்படுத்தியதோடு, இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்திவிட்டது என்று டத்தோ தமிழ்செல்வன் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், ஆர்.ஓ.எஸ்.அதிகாரிகள் இவ்விவகாரத்தில் நாங்கள் எந்த முடிவும் கொடுக்க முடியாது என்று தெரிவித்ததோடு, ஆலயத்தின் சட்டவிதிக்கு உட்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். 

அதன் அடிப்படையில், ஓர் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்து, மறுதேர்தல் நடத்துவதற்கு ஆலய நிர்வாகம் முயற்சித்து வரும் நிலையில், அன்றையத் தேர்தல் முழுமைப் பெறாமால் நிறுத்தப்பட்டதால், இன்னமும் நானே அதிகாரப்பூர்வ தலைவர் என்று டத்தோ தமிழ்செல்வன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

அவசரக் கூட்டம் நடத்துவதற்கு முன், தேர்தல் குழுவினர் தங்கள் வசமுள்ள வாக்குச் சீட்டுகளை, பொதுக்கூட்டம் நடைபெற்ற நாள் தொடங்கி 7 நாட்களுக்கும் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவற்னால் தேர்தல் குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ தமிழ்செல்வன் குறிப்பிட்டார். 

மற்றொரு நிலவரத்தில்,தேர்தல் குழுத் தலைவர் என்ற  முறையில், டத்தோ எம்.பி.நாதன் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் பி.ராமன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்ததாகச் சுட்டிக்காட்டிய டத்தோ தமிழ்செல்வன், அவர் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்றார். 

தேர்தல் குழுவில் நியமிக்கப்பட்ட டத்தோ எம்.பி.நாதனை, அக்குழுவின் தலைவராக யாரும்

முன்மொழிந்து வழிமொழியவில்லை. அவர்தான் தேர்தல் குழுத் தலைவர் என்று அன்றைய பொதுக்கூட்டக் குறிப்பிலும் குறிப்பிடவில்லை. 

மேலும், தேர்தலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதால், தேர்தல் அங்கம் முழுமைப்பெறாமல் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. அந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டது முதலே அந்தத் தேர்தல் குழுவினர் தங்களின் அதிகாரத்தை இழந்து விட்டனர். 

இந்நிலையில் அந்த அறுவர் அடங்கிய குழுவினர், குறிப்பாக டத்தோ எம்.பி.நாதன், தலைவர் பதவிக்காக நடந்த தேர்தல் அடிப்படையில் யார் ஆலயத்தின் தலைவர் என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட முடியாது! மாறாக, தேர்தலில் நடந்துள்ள குளறுபடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் அக்குழுவினர் பதில் சொல்ல வேண்டும் என்று டத்தோ தமிழ்செல்வன் குறுப்பிட்டார். 

தேவை ஏற்பட்டால், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

- காளிதாசன் இளங்கோவன்

 

கோலாலம்பூர், ஜூன் 28-
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை 14,490 இணைய மோசடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அதனால் வெ.581 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் துணையமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட மொத்த இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 25,479 ஆகவும், 2023 இல் 34,495 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. மொத்த இழப்பு 2022 இல் வெ.851 மில்லியனுக்கும் அதிகமாகவும், 2023 இல் வெ.1 பில்லியனுக்கும் அதிகமாகும் பதிவாகியதாக அவர் மக்களவையில் கூறினார்.

கடந்த மே மாதம் வரை இணைய மோசடி சம்பவங்கள் தொடர்பில் 7,960 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் 5,933 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. புக்கிட் அமானின் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 3,689 குற்றத் தடுப்பு நிகழ்ச்சிகளை நடத்தி சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊழல் குற்றங்களை முறியடிக்கும் வகையில், குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் திறம்பட வழக்குத் தொடர தற்போதுள்ள சில சட்டங்களைத் திருத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.

மோசடி சம்பவங்களுக்கு ஆளாகும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பக்காத்தான் ஹராப்பானின் சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் விவியன் வோங் கேட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூன் 27-

இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்படுவதாக கூறப்படும் 'அன்வாரை எதிர்த்து மக்கள்' என்ற பேரணியை அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தொடரக்கூடாது என போலீஸ் எச்சரித்துள்ளது.

இந்த பேரணிக்கான அனுமதி அமைதி பேரணி சட்டம் பிரிவு 736 கீழ் பெறப்படவில்லை. ஆகையால் இந்த பேரணி நடத்தப்பட்டால் அது சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும் என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

கடந்த 14ஆம் தேதி இந்த பேரணிக்கான அனுமதி பெற விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான முக்கிய அம்சமான நில உரிமையாளரின் அனுமதி பெறுவதும் முக்கியமாகும். முறையான அனுமதி இல்லாததா இப்பேரணியை நடத்த முடியாது. தொடர்ந்து நடத்தினால் செக்‌ஷன் 9(5) 736 அமைதி பேரணி சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இந்த பேரணி புத்ராஜெயாவிலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்ல வளாகத்தில் நடத்த ஏற்பாட்டாளர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த பேரணியின் ஏற்பாட்டாளர்களான மூவரிடன் கடந்த 22ஆம் தேதி போலீஸ் வாக்குபதிவையும் செய்துள்ளது.

ஆகையால் அனுமதி பெறாத இந்த பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் போலீஸ் வலியுறுத்தியது.

-காளிதாசன் தியாகராஜன்

பட்டர்வொர்த், ஜூன் 26-

இன்று அதிகாலை 2 மணியளவில் சுங்கை லோக்கான், ஜாலான் பெர்மத்தாங் பாருவில் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பெரோடுவா மைவி ரகக் காரில் பயணித்த 41 மற்றும் 54 வயதுடைய ஆடவர்களின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காரை நிறுத்த சொன்னபோது, அவர்கள் காரை வேகமாக செலுத்தியதுடன் தப்பிக்க போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி போலீசாரும் துப்பாக்கியல சுட்டதில் அவ்விருவருன் உயிரிழந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட காரிலிருந்து இரு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விருவர் மீது போதைப்பொருள் மற்றும் குற்றவியல்  சம்பந்தப்பட்ட சுமார் 12 குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக பினாங்கு போலீஸ் படை அறிவித்துள்ளது.

கோலாலம்பூர், ஜூன் 26-

சுற்றுலா துறை கலை கலாச்சார துறையின் துணை அமைச்சரின் பரிந்துரைக்கேற்ப லங்காவி இஸ்லாமியர்களிம் சுற்றுலா தளமாக மாற்றப்பட்டால் அது நாட்டின் சுற்றுலா துறைக்கு பெரும் நஷ்டத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என மசீச கூறுகிறது.

இந்த பரிந்துரையை முன் வைத்து துணை அமைச்சரின் செயல் அவரின் குறுகிய சிந்தனையை காட்டுகிறது என மசீசவின் உதவித் தலைவர் வீ ஜெக் செங் தெரிவித்தார்.

லங்காவி என்பது அழகிய கடல்கரையை கொண்ட பகுதி. அங்கு வரி வசூல் இல்லாததால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையளிக்கின்றனர். ஆகையால் அந்த பகுதி இஸ்லாமியர்களின் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டால் அது நாட்டின் சுற்றுலா துறைக்குதான் பாதிப்பு என தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

கோலாலம்பூர், ஜூன் 26-

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத்தின் கார் நிறுத்துமிட பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என ஒரு சந்திப்பு இன்று நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி, ஆலய அறங்காவலர் டத்தோஶ்ரீ எம். சரவணன், ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ்  மற்றும் ஆலய பொறுப்பாளர்கள்  கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில், திருமுருகன் ஆலயத்தின் கார் நிறுத்தும் இடத்திற்கு விரைந்து தீர்வு காணபட வேண்டும் என டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் தேசிய தடயவியல் மையத்தின் கட்டுமான தளத்தை சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து  ஆலய நிர்வாகத்தை சந்தித்து  அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தலைநகரில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக திகழும்  திருமுருகன் ஆலயம் சமீபத்தில் மிக பிரமாண்டமாக சீரமைக்கபட்டது.

தற்போது இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கார்களை நிறுத்துவதற்கு பெரும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகையால் ஆலயத்தின் கார் நிறுத்துமிட வசதியை  அமைப்பதற்கு சுகாதார அமைச்சு நிலம் ஒதுக்க வேண்டும் என மஇகாவின் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் சுகாதார அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

சுங்கைபூலோ, ஜூன்.25-

சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.

ஆர்ஆர்ஐ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்காக 6 ஏக்கர் மாற்று நிலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கு நிலம் கிடைத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தொடர்ந்து பல இப்பிரச்சினைகள் ஏற்ப்பட்டு பள்ளி நிலப்பிரசானை இழுப்பறியாக இருந்தது. அச்சமயம் பள்ளி கட்டுவதற்காக  வேறொரு நிலமும் அடையாளம் காணப்பட்டு  பலப் பிரச்சினைகள் ஏற்பட்டது.

தற்பொழுது இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு   முறையாக கெசட் செய்யப்பட்ட அந்த 6 ஏக்கர் நிலம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.

இனியும் இவ்விவகாரத்தில் யாரும் குழப்பம் விளைவிக்காமல் ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளியை எவ்வாறு சிறப்பாக கட்டுவது என்பது குறித்து திட்டமிடவேண்டும். மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் இந்தியர்களின் பிரச்சினைக்கு நான் தொடர்ந்து உதவி செய்து வருகிறேன். அவ்வகையில் இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை பெற்றுத்தர கல்வி அமைச்சுவிடம் பரிந்துரை செய்வேன் என பாப்பாராயுடு தெரிவித்தார்.

அதே வேளையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி நிர்வாகமும் பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால் இத்தமிழ்ப்பள்ளி விரைவில் கட்டப்படும் என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழுவில் ஒரு சில பிரச்சினைகள் உள்ளது.இப்பிரச்சினைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன் /தீபன் கிருஷ்ணன்


கோலாலம்பூர், ஜூன் 25-
செந்தூல் , ஜாலான் காசிப்பிள்ளை அருகிலுள்ள ஆற்றில் ஆடவரின் சடலம் கிடந்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்வம் அறிந்து போலீஸ்காரர்களும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

மாலை 4 மணியளவில் அங்கு மக்களும் அதிகமாக கூட தொடங்கினர். உள்ளாடையுடன் கிடந்த அந்த சடலம் ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை. உடல் வீக்கமடைந்து காணப்பட்டது.

மேலும் அந்த உடல் நீரில் கிடக்காமல் கரையோரமாக கிடந்ததாலும் உடலில் காயங்கள் இருப்பதுபோல் தென்பட்டதாலும் அங்கு கூடிய மக்கள் இது கொலையாக இருக்கக்கூடும் என முனுமுனுத்தனர்.

இருந்தபோதும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் போலீசார் இச்சம்பவம் பற்றிய முழு விவரங்களை வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.

கோலாலம்பூர்,ஜூன் 25-

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதை இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் எம்.கந்தன் (எண் 37) தெரிவித்தார்.

நமது சமூகம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்ற முன் வந்திருக்கிறேன். 

மஇகாவில் நீண்ட காலம் அயராது பணியாற்றிய எனது அருமை பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஆசியோடு நான் அரசியலில் அடுத்த கட்டத்திற்கு காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

என் பாட்டி கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் மஇகா மகளிர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினராக இருந்து அளப்பரிய சேவை ஆற்றியவர்.

நான் ஓர் இளங்கலை பட்டதாரி தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி துறையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறேன்.

இதன் வழி மஇகாவில் எதிர்கால வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் சார்ந்து புதிய திட்டங்களை நான் கொண்டு வருவேன். குறிப்பாக மஇகா கட்டவிருக்கும் புதிய கட்டுமானத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என்பதோடு, இந்திய சமுதாயத்தின் நல் வாழ்விற்கு எனது உண்மையான அர்ப்பணிப்பு இருக்கும்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டிடும் என்னை பேராளர்கள் வெற்றி பெற செய்யும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  நாம் ஒன்றிணைந்து மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினால் நம் சமுதாயம் மென்மேலும் முன்னேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

செய்தி: தீபன் கிருஷ்ணன்/ காளிதாசன் இளங்கோவன்


ஈப்போ, ஜூன் 25-
பெர்சாம், தாமான் ரெஸ்து ஜெயாவில் சொந்த தாயை கொலை செய்ததாக வேலை இல்லாத இந்திய ஆடவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தமிழ்மொழியில் வாசிக்கப்பட்டபோது புரிவதாக குற்றம் சாட்டப்பட்ட கே.எஸ்.குகன் (வயது 36) தலையை அசைத்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் உள்ளதால் குற்றப்பதிவு செய்யப்படவில்லை.

இம்மாதம் 12ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் காலை 9.30 மணிக்குள் இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் எஸ்.இந்திரா (வயது 60) கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோலாலம்பூர், ஜூன் 25-
பேரா மாநில கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் சென்ற பேருந்து கண்ணாடியை கல் வீசி உடைத்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 8.49 மணியளவில் என்கேவிஇ நெடுஞ்சாலையில் வடக்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அந்த பேருந்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கல் வீசியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட 17 மற்றும் 20 வயதுடைய அவ்விருவரையும் பேரா கால்பந்து அணியின் ஆதரவாளர்கள் பிடித்து சுங்கை பூலோ காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவ்விருவர் மீது முந்தைய குற்றப்பதிவுகல் எதுவும் இல்லை. அவர்கள் மீது தற்போது செக்‌ஷன் 427 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஷாருல்நிஷாம் ஜாபார் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த இரு காணொளி பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


ஜொகூர் பாரு, ஜூன் 25-
ஒருவருக்கு தெரியாமலே அவர் மீது காப்புறுதிக்கு விண்ணப்பம் செய்து, அதன் பின்னர் காப்புறுதி பணத்திற்காக அந்நபரை கொலை செய்யும் கொடூரச் செயல் ஜொகூரில் நடந்து வந்துள்ளது.

அந்த வகையில் ஆடவர் ஒருவர் மீது உயிரிழப்பு காப்புறுதி திட்டத்தில் வெ.5 லச்சத்திற்கு காப்புறுதியை பெற்ற அந்த கும்பல் சம்பந்தப்பட்ட நபரை சாலை விபத்து வழி கொலை செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 23 முதல் 49 வயதுடைய உள்நாட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளதாக ஜொகூர் மாநில போலீஸ் படைத் தலைவரும் போலீஸ் ஆணையருமான எம்.குமார் தெரிவித்தார்.

காப்புறுதி பதிவு செய்யப்பட்ட நபரின் போலி கையெழுத்தை பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரின் வாரிசு எனக் கூறி அவருக்கே தெரியாத நபரின் பேரில் காப்புறுதி பணம் பெறப்பட்டு வந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த இன்னும் சிலைரையும் போலீசார் தேடி வருவதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், ஜூன் 23-

கடந்த 1988ஆம் ஆண்டு முதல் மஇகாவில் இணைந்து கட்சியின் வளத்திற்காகவும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் சேவையாற்றியுள்ளதாக இம்முறை மத்திய செயலவைக்கு போட்டியிடும் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் (எண் 40) தெரிவித்தார்.

சுமார் 36 ஆண்டுகளாக கட்சியில் அங்கம் வகித்துள்ளதுடன் பல பொறுப்புகளை வகித்து சமுதாயத்திற்காக சேவையாற்றியுள்ளதாக கெடா மாநில மஇகா தலைவருமான அவர் சொன்னார்.

மேலும் அவர் முன்னாள் கெடா மாநில மத்திரி புசாரின் சிறப்பு அதிகாரியாகவும், செனட்டராகவும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் அரசியல் செயலாளராகவும் இருந்து அவர் சேவையாற்றியுள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தாம் செயல்படுவதாகவும் கட்சியின் புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்லவும் தான் தயாராக இருப்பதாக கூறிய அவர், கிளைத் தலைவர்களும் பேராளர்களும் முழுமையான ஆதரவை வழங்கி தன்னை வெற்றிப் பெற செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 23-

கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 49ஆவது கண்ணதாசன் விழாவில் ஐவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஜாலான் ஈப்போவிலுள்ள செண்டியார் மண்டபத்தில் காலை 10 மணி தொடங்கி கண்ணதாசன் விழா பாடல்களுடனும் சிறப்பு பேச்சாளர்களின் படைப்புகளுடன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் முத்தாய்ப்பு அங்கமாக தமிழ் ஆரவளர்கள் மற்றும் தமிழ் கலைஞர்கள் என ஐவருக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 246 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை எழுத்தாளரும் தமிழ் ஆர்வளருமான முரசு நெடுமாறன், கலைமாமணி கலைவாணி, நாட்டின் புகழ்ப்பெற்ற பாடகர்களான எம்.எஸ்.பிரிட்டோ மற்றும் தண்டபாணி உட்பட டத்தின்ஸ்ரீ கோமதி தெய்வீகன் ஆகியோருக்கு நிகழ்ச்சியின் கதாநாயகனும் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் விருது வழங்கி கௌரவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன், படம்: காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூன் 22-

மஇகா உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ தி.மோகன், டத்தோ முருகையா, டத்தோ அசோஜன், டத்தோ நெல்சன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இன்று மஇகா துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில செயற்குழு ஆகியவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லாத படசத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஏகமனதாக தேர்வுப்பெற்ற வேளையில் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு நால்வர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

டத்தோ தி.மோகன்(எண் 1), டத்தோ முருகையா எண்(2), டத்தோ அசோஜன் (எண் 4) ஆகியோர் தங்களின் பதவியை தக்கவைத்து கொள்ள போட்டியிடும் வேளையில் டத்தோ நெல்சன் (எண் 3) முதல் முறையாக உதவித் தலைவருக்கு போட்டியிடுகிறார்.

மேலும் 21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு 45 பேர் போட்டியிடுகின்றனர். 

மாநில பொறுப்பாளர்களுக்கு கிளந்தான், சபா, விலாயா, திரெங்கானு, கெடா,ஜொகூர் ஆகிய மானிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் போட்டி உண்டு.

-காளிதாசன் தியாகராஜன் / தீபன் கிருஷ்ணன்

கோலாலம்பூர், ஜூன் 22-

இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் கட்சியான மஇகாவில் ஜாதியை வைத்தும் பணத்தை கொடுத்தும் ஓட்டு கேட்கும் போக்கு கூடாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகா வலுவான கட்சி. அதற்கென ஒரு கௌரவம் உண்டு. ஆகையால் அதற்கு களங்கம் விளைக்கும் வகையில் நடந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

இன்று மஇகாவின் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில குழுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 

வேட்பு மனு தக்காலுக்கு பிறகு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

-காளிதாசன் தியாகராஜன்

சுபாங் ஜெயா,ஜூன் 21-

ஹரி ராயா ஐடிலாடாவை முன்னிட்டு சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) சிலாங்கூர் மாநிலம் முழுவதும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 10 நாட்களில் 14,417 குற்றங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில் கடந்த ஜூன் 10ஆம் திகதி முதல் 19ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 57,491 வாகனச் சோதனைகள் பதிவு செய்யப்பட்டதாகக் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) துணை இயக்குநர் டத்தோ அகமட் கமருஞ்சமான் மெஹாட் கூறினார்.

ஜேபிஜே மேற்கொண்ட இந்த பரிசோதனையின் விளைவாக 13,417 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் 14,417   நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் அகிகமாக பதிவு செய்யப்பட்ட சம்மன்களில் 11,118 வழக்குகள், வாகன தடை அறிவிப்புகள் (1,338 குற்றச்சாட்டுகள்), வாகன சோதனை அறிவிப்புகள் (1,407 குற்றச்சாட்டுகள்) மற்றும் வாகன பறிமுதல் அறிவிப்புகள் (544 குற்றச்சாட்டுகள் ) குறித்து அதிகமாக பதிவு செய்யப்பட்ட சம்மன் நோட்டீஸ்களாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும் இவற்றில் அதிகமாக பதிவுசெய்யப்பட்ட குற்றங்களில்  தொழில்நுட்ப சிக்கல்களும் ஆகும்,

 அவை 4,697 குற்றச்சாட்டுகள், அதைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த ஓட்டுநர் உரிமம் (CDL) (3,022 குற்றச்சாட்டுகள்), காலாவதியான மோட்டார் வாகன உரிமம் (LKM) (2,320 குற்றச்சாட்டுகள்), காப்பீடு இல்லை (1,893 குற்றச்சாட்டுகள்) மற்றும் மற்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும் என இன்று பெட்டாலிங் ஜெயா செலாடன் டோல் பிளாசா 5 இல் நடைபெற்ற ஓப்ஸ் HRAA பின் அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

ரவுப், ஜூன் 21-

ரவுப் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற செந்தமிழ் விழா போட்டிகளில் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வாகை சூடி அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். 

இத்தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்து மொத்தம் 6 மாணவர்கள் கலந்து கொண்டனர்; எல்லாப் பிரிவுகளிலும் பரிசுகளை வென்றனர். 

பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பவித்ரா சுதாகர் இரண்டாம் நிலையில் வென்றார். திருக்குறள் மனனப் போட்டியில் பங்கேற்ற ஜனனி சுதாகர் இரண்டாம் பரிசை வென்று, மாநில அளவில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் விழாவிற்கு தேர்வாகி, சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். 

பேச்சுப் போட்டியில் புனிதமலர் ஜெயசீலன் மூன்றாம் நிலையில் வென்றார். கவிதை போட்டியில் வேதாஶ்ரீ காளிதாசன் மூன்றாம் பரிசை வென்ற நிலையில், லாவண்யா மணி நான்காம் நிலைக்கு தேர்வானார். திருக்குறள் போட்டியில் பிரபு சரவணன் மூன்றாம் நிலை பரிசை வென்றார். 

கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை தமிழ்மொழி பாடக்குழு தலைவர் ஆசிரியை சு.சுபியம்மா தலைமையிலும், இப்பள்ளியின் தமிழ்மொழி பாட ஆசிரியர்களின் துணையுடனும் மாணவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் இல.கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களைச் சிறப்பாக தயார்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

மேலும், சிறப்பான நடனத்தை வழங்கிய பள்ளி மாணவர்களுக்கும் அவர்களைச் சிறப்பாக தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

போட்டி நடைபெற்ற ரவுப் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு பணம் கொடுத்த பெ.ஆ.சங்கத்திற்கும், மாணவர்களைச் சிரமம் பாராமல் அழைத்துச் சென்ற பெ.ஆ.சங்கத் துணைத் தலைவர் காளிதாசன், ஆசிரியை கா.தேவராணி, ஆசிரியை குமாரி சு.கீர்த்தனா ஆகியோருக்கும் தலைமையாசிரியர் நன்றி தெரிவித்தார்.  

இதற்கிடையில், வெற்றிப் பெற்ற சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்த பெ.ஆ.ச தலைவர் ஐ.சண்முகநாதன் தனது சார்பில் அனைவரையும் சிறப்பு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர்  ஜுன்- 16

நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை. அவர்களை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இத்தினத்தில் அனைத்து தந்தைக்கும் என் இனிய தந்தையர் தின வாழ்த்துகள் என ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர்  கேசவன் கந்தசாமி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நம்மை உயர்த்திய தாய் -தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நடைமுறை இப்போது குறைந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது.

இதே போல் அவர்களின் அற்பனிப்பை போற்றி , அவர்களுக்கும் நேரம் ஒதுக்கும்படி இளைஞர்களை கேட்டுக்கொண்டார் கேசவன் கந்தசாமி .

கொழும்பு ஜூன் - 16

3 -வது நாளாக கொழும்பு-வில் நடைப்பெற்று வரும் கம்பன் விழாவில் இன்று தனியுரை  கருத்தரங்கு நடைப்பெற்றது.

இதில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கலந்துக் கொண்டார்.

அதோடு அந்த நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.அந்த கண்காட்சியை பார்வையிட்ட டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்

இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்க பட வேண்டும் என்றும், புத்தக வடிவில் பல படைப்புகள் வரவேண்டும். 

அதற்கு கடந்த காலங்களை போல் புத்தகம் வாசிக்கும் பழக்கம்  மேலோங்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ எம் .சரவணன்  கண்காட்சியின் போது தெரிவித்தார்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்..

 

தனது கடமையில் சற்றும் விலகாமல் இருக்கும் தந்தையர்களை இந்த தந்தையர் தினத்தில் கொண்டாடி மகிழ்வோம். 

தான் கடந்து வந்த சிரமங்களையும், சிக்கல்களையும் மறைத்துத் தன் பிள்ளைகள் அந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என எண்ணும் தந்தையர்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துகள்.

'மாதா பிதா குரு தெய்வம்' 'தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' 

இப்படித் தாயைப் புகழும் அதே கணத்தில், தந்தைக்கும் அந்த புகழில் பங்கு உண்டு என்பதை நாம் மறுக்கவோ, மறக்கவோ இயலாது. ஒரு குடும்பத்தில் தந்தை சரியாக தனது கடமையைச் செய்தால்தான், தாயால் சரியான முறையில் தன் குழந்தைகளை வளர்க்க முடியும், குடும்பத்தைக் காக்க முடியும். 

கடந்த காலங்களைப் போல குடும்பத்தின் பொறுப்பு,  குடும்பத்திற்குப் பொருளாதாரம் ஈட்டும் பொறுப்பு தந்தைக்கு மட்டுமே என்று இல்லாமல் இருந்தாலும்,  பொருளாதாரத்தின் பெரும் பங்கு தந்தையின் தோள்களிலேயே  சுமக்கப்படுகிறது.

அயராமல் உழைப்பதும், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும்,  பிள்ளைகளைச் சிறிது கண்டிப்போடு வளர்ப்பதும் ஒரு தந்தையின் கடமை. காலம் மாறிவிட்டது குழந்தைகளிடம் நட்பு முறையில் பழக வேண்டும் என்று நாம் சொன்னாலும், தந்தைக்கே உரிய அந்த கண்டிப்பு இருக்கத்தான் வேண்டும்.

இப்படித் தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பைப் போற்றுவதற்கு இந்த ஒரு நாள் மட்டும் போதுமா.  ஒவ்வொரு நாளும் மதித்துப் போற்றத் தக்கவர் தந்தை என்றாலும் இந்த ஒரு நாள் முழுதும் அவருக்காக ஒதுக்கி அன்பு பாராட்டுவோம். வயதான காலத்ததந்தையரை, தந்தையரை முதியோர் இல்லத்தில் விடாமல் இருப்போம். 

மீண்டும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

செர்டாங், ஜூன் 15-

தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆடவர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இங்குள்ள தாமான் செர்டாங் பெர்டானா  தாமான் எஸ்பி 5 அருகே கிலோ மீட்டர் 12.45 இல் கே.எல்.ஐ.ஏ  எக்ஸ்பிரஸ் செல்லும் பாதையைக் கடக்கும்போது வங்காளதேச ஆடவர் ரயில் மோதி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த  போலீசாருக்கு இரவு 8.45 மணியளவில் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் எஎ அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் சம்பந்தப்பட்ட ஆடவர் பாதுகாப்பு வேலியை அகற்றி அத்துமீறி நுழைந்து தண்டவளத்தை கடப்பது கண்டறியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-தீபன் கிருஷ்ணன்


பெந்தோங், ஜூன் 14-
கெந்திங் மலையிலுள்ள  கெந்திங் ஸ்காய்வேல்ட் டீம் பார்க்கிலுள்ள கட்டடத்தில் தீ ஏற்பட்டது.

இன்று மாலை 4.55 மணியளவில் அந்த கட்டடத்தின் 2ஆவது மாடியில் தீப்பற்றியதாகவும் அதன் பின்னர் கட்டடத்தின் 4ஆவது மாடி வரை தீ பரவியதாகவும் பகாங் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தீயை அணைக்க கெந்திங், பெந்தோங், ஜண்டா பாய்க் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 21 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

கெந்திங் மலையில் ஏற்பட்ட தீச்சம்பவம் தொடர்பிலான புகைப்படங்களும் காணொளி பதிவுகளும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கிள்ளான்,ஜூன் 14-

கடந்த வாரம் இங்குள்ள பண்டார் பொட்டானிக்கில் உள்ள  குடியிருப்பு பகுதியில் தனது மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.சூரிய ராஜ் (வயது 31) மாஜிஸ்திரேட் சித்தி ஜுபைடா மஹத் முன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு புரிந்துக்கொண்டு தலையசைத்தார்.

மேலும் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் கொலை வழக்கு இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கு குற்றச்சாட்டுகளின்படி, கடந்த ஜூன் 7ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 7 மணி வரை பண்டார் பொட்டானிக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீட்டு அறையில் ஏ.கிர்ஷாஷினி (வயது 28) என்பவரை கொலை செய்ததாக அவரின் கணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

302ஆவது பிரிவின்படி, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 பிரம்படிகளுக்குக் குறையாமல் தண்டிக்கப்படலாம்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், அரசுத் துணை வழக்கறிஞர் நூருல் ஜன்னா அய்மி இந்த வழக்கை  தொடர்ந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் விளைவாக,  காலை 7 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும், 28 வயதான பாதிக்கப்பட்டவர் படுக்கையில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிடந்தார் என்றும் கண்டறியப்பட்டது. 

திருமணமாகி இரண்டு வருடங்களான நிலையில், ஆறு மாதக் குழந்தையும் உண்டு. தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

ரவூப், ஜூன் 14-

நேற்று ஜூன் 13ஆம் தேதி ரவூப் தமிழ்ப்பள்ளியின் 50ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்  கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது. 

இப்பொதுக் கூட்டத்தில் கடந்த 2023 எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்று தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்த ரவவூப் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். 

ரவூப் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அவர்களுக்குச் சிறு ஊக்குவிப்புத் தொகையை வழங்கிச் சிறப்பித்தது. இவ்வூக்குப்புத் தொகையை பொது கூட்டத்தில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்ட ரவூப் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதிநிதி எடுத்து வழங்கினார். 

சிறந்த தேர்ச்சிப் பெற்ற ரவூப் தமிழ்பள்ளியின் முன்னாள் மாணவர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

கோலாலம்பூர்,ஜூன் 14-

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட மாபிக் எனப்படும் மலேசிய பையோடெக்னோலோஜி தகவல் மையத்தின் அறிவியல் ஐந்திரம் திட்டம் குறித்து

மித்ரா தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று மித்ரா நடவடிக்கை குழுத் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி. பிரபாகரன் கூறினார்.

அவ்வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவியல் வழர்ச்சிக்காக தொடங்கப்பட்ட இந்த மாபிக் எனப்படும் மலேசிய பையோடெக்னோலோஜி தகவல் மையத்தின் அறிவியல் ஐந்திரம் திட்டத்தை தொடக்கி வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் கூறினார்.

நாட்டில் உள்ள 525 தமிழ்ப்பள்ளிகளுக்கும் அறிவியல் ஐந்திரம் நாளிதழை கொண்டு சேர்ப்பதுடன் அறிவியல் போட்டி உட்பட பல திட்டங்களை மேற்கொண்டு வருவதற்கு இத் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் மகாலட்சுமி பல முயற்ச்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டக்கூடியதாகும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் திவேட் துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்காக உள்ளது.

இதன் அடிப்படையில் தான் மித்ரா இத் திட்டத்திற்கு 7 லட்சம் வெள்ளியை நிதியாக வழங்கியது.

வரும் 2026ஆம் ஆண்டு வரை மாபிக் இத் திட்டத்தை மேற்கொள்ளும்.இதுபோன்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் மேம்பாடு காணும் திட்டங்களில் மித்ரா அதிக கவனம் செலுத்துகிறது.

இது வரும் காலங்களிலும் தொடரும். அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் மேம்பாடு, உதவித் திட்டங்களை மித்ரா வகுத்து வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் கட்டம் கட்டமாக  அமலுக்கு கொண்டு வரப்படும் என்று பிரபாகரன் கூறினார்.

-காளிதாசன் இளங்கோவன்

 

ரவூப், ஜூன் 13-
11.06.2024 தேதி முதல் 13.06.2024 தேதி வரை காளி இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற ரவூப் வட்டாரச் சதுரங்கப் போட்டியில் அனைத்துப் பிரிவிலும் இந்திய மாணவர்கள் முதல்நிலையில் வாகைசூடி நம் இந்திய சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

B12 L - சஞ்சீவன் தியாகராஜன்
B12P - ப்ரிதிகா இராமநாயிடு
B15 L - தமிழ்க்கதிர் சரவணன்
B15 P - டர்மித்தா இராமநாயிடு
B18 L - தமிழ்ச்சுடர் சரவணன்
B 18 P - டர்ஷனா அன்பாராஜன்

மேற்கண்ட அனைவரும் முதல் பரிசை வென்றனர். இவர்களைத் தவிர்த்து இன்னும் பல இந்திய மாணவர்கள் மற்ற நிலைகளிலும் பரிசை வென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ரவூப் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த வெற்றி பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

கோலாலம்பூர், ஜூன் 13-

தீயில் பாதிப்படைந்த தமிழன் உதவும் கரங்கள் சேவை மையத்தின் சீரமைப்பு பணிக்கு துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ  அகமட் ஜாஹிட் ஹமிடி வெ.10,000 நிதியுதவி வழங்கினார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தீயில் பாதிப்படைந்த சேவை மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட  துணைப் பிரதமரின் இந்திய பிரிவு சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி துணை பிரதமர் வழங்கிய வெ.10,000 நிதியுதவியை தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளியிடம் நேரடியாக ஒப்படைத்தார்.

தமிழன் உதவும் கரங்கள் எனும் இயக்கத்தின் வாயிலாக முரளி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பல சமூக சேவைகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறித்ததே. 

மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறையில் இருந்து  வெளியே வருபவர்களுக்கும் தங்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து நீண்ட நாளாக இச்சேவையை தமிழன் உதவும் கரங்கள் இயக்கம் செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது பத்துமலை மேல்குகைக்கு மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலியுடன் அழைத்து செல்லும் சேவையையும் இவர்கள் செய்து வருகின்றனர்.

அதே வேளையில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு பல வழிகாட்டல்களை அவர் வழங்கியுள்ளனர். இந்நிலையில் தீயில் அழிந்த அவரின் மையத்தை சீரமைக்கும் நோக்கில் துணைப் பிரதமர் 10 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கியதாக அதிகாரி அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.

மேலும் இந்த சேவை மையத்தை மீண்டும் சீரமைப்பு செய்ய கூடுதல் தொகை தேவைப்படுவதால் பொதுமக்களும் இதற்கு தாராளமாக உதவிக்கரம் நீட்டலாம் என தலைவர் முரளி கேட்டுக்கொண்டார்.

-காளிதாசன் இளங்கோவன்


லிப்பிஸ், ஜூன் 13-
உடல்பயிற்சி பயிற்றுநரான பிரபாகரன் தேவர் @ டாக்டர் கேஜே (வயது 27) 13 மணி நேரம் உடல்பயிற்சியும் எடைத் தூக்கியும் செய்த சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

பகாங், லிப்பிஸை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி மறுநாள் காலை 10.30 மணி வரை உடல்பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளார்.

இவரின் இச்சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்கான அங்கீகாரத்தை அதன் தலைவர் செல்வராணி முத்தையா டாக்டர் கேஜே-க்கு எடுத்து வழங்கினார்.

இச்சாதனையை புரிய கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இச்சாதனையை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நாட்டிற்கும் குறிப்பாக பகாங் மாநிலத்திற்கு பெருமையை சேர்த்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாக டாக்டர் கேஜே சொன்னார்.

இச்சாதனையை புரிய என்னுடைய தாயார் எஸ்.சுகுணாமலரும் (வயது 66) நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

அடுத்த முயற்சியாக வரும் செப்டம்பர் மாதத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் 12 மணிநேரம் உடற்பயிற்சி செய்து influencer book of world record மற்றும் Malaysia book of record சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் கேஜே-வின் சாதனைக்கு தமிலன்ஸ் பாராட்டுகளை தெரிவித்து கொள்வதுடன் இதனை அடுத்து அவர் புரியவுள்ள உலக சாதனைக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், ஜூன் 13-

நான்கு வருடங்களுக்குப் பிறகு கொழும்பு ஸ்ரீலங்காவில் மலரும் கம்பன் விழாவில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்ற விருக்கிறார் ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன். அதனை முன்னிட்டு இன்று கொழும்பு புறப்படுகிறார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணனின் தமிழ் ஆளுமையை உலகத் தமிழர்கள் கொண்டாடும்  சொல்வேந்தராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்த மூலை முடுக்கானாலும் தமிழும், தமிழ் சார்ந்த உறவுகளும் இருக்கும் இடத்தில் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருப்பதைப் பல வேளைகளில் கண்கூடாகக் காண முடிகிறது. அதனால்தான் தமிழ் சார்ந்த உலக மேடையில் டத்தோஸ்ரீ சரவணன் உரை அரங்கேறுகிறது.

அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் 4 ஆண்டுகளுக்குப் பின் மலரும் கம்பன் விழா மிகவும் விமரிசையாக, உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களின் வருகையால் கலைகட்ட விருக்கிறது.  

அந்த விழாவில் கலந்து கொள்ள தனது குழுவோடு செல்லவிருக்கும் டத்தோ ஸ்ரீ சரவணன்  மலேசியத் தமிழர்களின் பெருமையை கடல் கடந்தும் நிலைநாட்டி வருகிறார்.

பத்து பகாட், ஜூன் 12-

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கை நோக்கிச் செல்லும் வழியின் கிலோமீட்டர் 123.6 இல் BMW காரும் லோரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

BMW காரில் பயணித்த  வியட்நாமியப் பெண் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி மரணமடைந்ததோடு அவரோடு அந்த காரில் பயணம் செய்த அனைவரும் இவ்விபத்தில் உயிரிழந்தனர்.

முன்னதாக இரவு 8.15 மணி அளவில் இந்த கார் விபத்து ஏற்ப்பட்டதும் இரண்டு வியட்நாமிய பெண் உட்பட ஒரு உள்நாட்டு கார் ஓட்டுநரும் இவ்விபத்தில் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்தில் உயிரிழந்த அனைவரின் முழு விவரங்களும்  இதுவரை கிடைக்கப்படவில்லை.

கூடிய விரைவில் இந்த விபத்து தொடர்பான அறிக்கையை போலீசார் வெளியுடுவார்கள் என நம்பப்படுகிறது.

-காளிதாசன் இளங்கோவன்

கோம்பாக், ஜூன் 11-

கோம்பாக்கில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இருந்து தாயார் கொண்டு வந்த பீஹுன் மற்றும் பொரித்த முட்டையை சாப்பிட்டு உயிரிழந்த இளைஞரின் மரணம் குறித்து யார் மீதும் குறை கூற விரும்பவில்லை என அவரின்  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

17 வயதான லூத் இஜாரின் தந்தையான கமால் பயான், 53 தனது மூன்றாவது மகனுக்கு நேர்ந்த சம்பவத்தால் தான் வருத்தத்துடன் இருப்பதாகவும் நடந்ததை தற்செயலாகக் கருதுவதாகவும் கூறினார்.

இன்று செலாயாங் மருத்துவமனையில்  நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தனது மகனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதை தான் புரிந்துக் கொண்டதாக அவர் கூறினார்.

என் மகன் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருந்தது உண்மைதானா என்பதை அறிய பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டும். வேதியியல் துறையின் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் படுவதற்கு கால தாமதம் ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்த உணவில் விஷத்தன்மை இருப்பதாக பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது .ஒரு குழந்தையும் இதில் இறந்துள்ளது.

என் மனைவி இந்த உணவை எடுத்து வந்து கொடுத்ததால் தான் இந்த சம்பவம் ஏற்பட்டது. இதனால் அவரை நான் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஏனென்றால் இதுவரையில் எங்களுக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த பள்ளியின் பெயரை குறிப்பிடுவதற்கு கூட எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என பிரேத பரிசோதனை அறைக்கு வெளியில் இருந்த போது அவர் போலீஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

இங்குள்ள சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை (JAIS) நிர்வகிக்கும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீஹுன் மற்றும் பொரித்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு விஷம் காரணமாக இரண்டு வயது சிறுமியும் 17 வயது சிறுவனும் இறந்ததாக நம்பப்படுகிறது.

நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரிடம் இருந்து புகார் அறிக்கைகளைப் பெற்றதாகத்

கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நூர் அரிஃபின் முகமட் நசீர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

பத்து பகாட், ஜூன் 11-

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் போலீஸ் அதிகாரியின் காவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நீட்டித்தது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376 இன் படி விசாரணையை முடிக்க காவல்துறைக்கு உதவும் வகையில் மாஜிஸ்திரேட் நுராசிதா ஏ ரஹ்மான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 26 வயதான சந்தேகநபர், கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிறுமியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அந்த ஆடவர் கடந்த ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு சம்பவம் ஏற்படுவதற்கு இரண்டு நாள் முன்பு சம்பந்தப்பட்ட ஆடவரோடு whatsapp மூலம் தொடர்பில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-காளிதாசன் இளங்கோவன்

Recent News