loader
மின் படிக்கட்டு கட்டுவதற்கு  அனுமதி கிடைக்கவில்லை! பிரதமர் - மந்திரி பெசார் வாக்குறுதி என்னவானது டான்ஸ்ரீ நடராஜா கேள்வி?

மின் படிக்கட்டு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை! பிரதமர் - மந்திரி பெசார் வாக்குறுதி என்னவானது டான்ஸ்ரீ நடராஜா கேள்வி?

கோலாலம்பூர், டிச 29-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு கட்டுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

மின் படிக்கட்டு கட்டினால் முதியவர்கள் தாராளமாக மேலே சென்று முருகனை வழிபட்டு திரும்பலாம்.

நாங்களும் அனுமதி கொடுக்க கோரி பலமுறை கோரிக்கையை முன் வைத்து விட்டோம்.

ஆனால் இன்று வரையிலும் அனுமதி கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு அனுமதி கிடைத்தால் திட்டமிட்டபடி கட்டி முடிப்போம்.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து விட்டோம்.

வரும் தைப்பூசம் கொண்டாட்டத்தின் போது ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இருப்பினும் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்குறுதி என்னவானது என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

பக்தர்களின் நலன்களுக்கான பத்துமலையில் பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

3,000 பேர் அமரக் கூடிய பல்நோக்கு மண்டபம் கட்டும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இத் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

இந்நிலையில் தான் இவ்வாண்டு தொடக்கத்தில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தலைவர்கள் பத்துமலைக்கு வந்தனர்.

அப்போது இப் பிரச்சினைக்கு எல்லாம் விரைவில் தீர்வுக் காணப்படும். அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார் என்று
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், அஸ்ட்ரோ நிறுவனத்தை சேர்ந்த ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News