loader
உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் உறுப்பினர்களாக 23 பேர் பதவி ஏற்பு!கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்

உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் உறுப்பினர்களாக 23 பேர் பதவி ஏற்பு!கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கெஅடிலான் சார்பில் 10 பேரும் டிஏபியை பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியை சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.

ப.புவனேஸ்வரன், வீ.முருகன், ச.ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய உறுப்பினர்களாவர்.

டிஏபியை பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவர் உட்பட அமானா கட்சியை சேர்ந்த துரை அன்பழகன் என்பவரும் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின்  தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News