loader
கை ஏந்தும் சமுதாயமாக  இருக்ககூடாது கை கொடுக்கும் சமுதாயமாக திகழ வேண்டும்!

கை ஏந்தும் சமுதாயமாக இருக்ககூடாது கை கொடுக்கும் சமுதாயமாக திகழ வேண்டும்!

கோலாலம்பூர், ஜன.11-

என் இனம் என் மக்கள் சாதிக்க வேண்டும். நம் சமுதாயத்தின் உருமாற்றம்  கல்வி வாயிலாக நடக்க வேண்டும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன்  எஸ்.எம்.சி கல்வி நிலையத்தின் கந்த வேள்வி நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக துவக்கி வைத்து பேசும் போது இதனை  தெரிவித்தார்.

அந்த வகையில் கடந்த 40 ஆண்டு காலமாக  டான்ஸ்ரீ தம்பிராஜா செய்த  கல்வி புரட்சியால் 60 ஆயிரம் பட்டதாரிகள்  இங்கு உருவாகி உள்ளனர்.

கல்வி விவகாரத்தில் சமரசமே  கிடையாது. அந்த வகையில் எஸ்.எம்.சி மற்றும்  மக்கள் குரல் எனக்கு புரிகிறது. (யூ.பி.எஸ்.ஆர் - பி.டி 3)
வேண்டும் என்ற குரலை நிச்சயம்  நான் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

கை ஏந்தும் சமுதாயமாக நாம் இருக்க கூடாது, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு  கை கொடுக்கும் சமுதாயமாக  நாம் திகழ வேண்டும்.

அந்த வகையில் நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

சில மாணவர்களுக்கு  கல்வி சரியாக பிடி கொடுக்கவில்லையா? கவலை வேண்டாம் அவர்களை தொழில் கல்விக்கு  வழி நடத்துங்கள், வன்முறை  என்ற சாயம் நம்மை விட்டு செல்ல வேண்டும் அதற்கு பெற்றோர்கள் மிக பெரிய பங்கை வகுக்க வேண்டும் எனவும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News