loader
பப்லிக் கோல்ட் நிறுவனத்தின் திரிபல் டைமண்ட் உயரிய விருது விழா: 14 பேர் கௌரவிக்கப்பட்டனர்!

பப்லிக் கோல்ட் நிறுவனத்தின் திரிபல் டைமண்ட் உயரிய விருது விழா: 14 பேர் கௌரவிக்கப்பட்டனர்!

கோலாலம்பூர், ஜன.12-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமாக விளங்கும் Public Gold, உலகம் முழுவதிலுமிருந்து வந்த Public Gold Business Owners (PGBOs)-ஐ FY2024/25 Triple Diamond Recognition Ceremony என்ற உயரிய விருது விழாவிற்கு, பண்டார் உத்தாமாவில் உள்ள One World Hotel-இல் சிறப்பாக வரவேற்றது.

இந்த பிரமாண்ட விழாவில், மொத்தம் 14 சிறந்த சாதனையாளர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கௌரவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை Public Gold Group-இன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் Dato’ Seri Louis Ng அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB)-இன் மேலாண்மை இயக்குநர் Datin Seri Yvonne Lim மற்றும் PGMall-இன் செயல்பாட்டு தலைமை அதிகாரியும், இந்த உயரிய விழாவின் ஏற்பாட்டுத் தலைவருமான Jerry Ng ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2008ஆம் ஆண்டு பினாங்கில் எளிய முறையில் தொடங்கப்பட்ட Public Gold, இன்று உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மலேசியாவில் 30 கிளைகள், இந்தோனேசியாவில் 7 கிளைகள், மேலும் சிங்கப்பூர், துபாய் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களுடன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது, 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன், மதிப்புமிக்க உலோகத் துறையில் பிராந்திய அளவில் முன்னணி இடத்தை Public Gold உறுதியாக தக்க வைத்துள்ளது.
புதுமையை அடிப்படையாகக் கொண்ட பிராண்டாக விளங்கும் Public Gold, 2023ஆம் ஆண்டு முதல் மலேசியா முழுவதும் உலகின் முதல் ஃபின்டெக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Gold ATM-ஐ அறிமுகப்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

அதன் சமீபத்திய முன்னேற்றமாக, Emirates Gold நிறுவனத்துடன் மேற்கொண்ட மூலோபாய கூட்டாண்மையின் மூலம், Dubai Precious Metals Conference (DPMC) 2025-இல் இந்த ஃபின்டெக் Gold ATM-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி தங்கத்தை எளிதில் அணுகக்கூடிய புதிய காலகட்டத்தைத் தொடங்குவதோடு, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை முக்கியமான ஃபின்டெக் புதுமை மையங்களாகவும் நிலைநிறுத்துகிறது.

2008ஆம் ஆண்டு தொடக்கம் முதல், Public Gold RM23.5 பில்லியன் மொத்த விற்பனை வருவாயை ஈட்டியுள்ளதுடன், தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதுவரை 88 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 52 டன் தங்கம் மீள வாங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட சமீபத்திய வணிக விரிவாக்கங்களின் மூலம், Public Gold ஒரு நம்பகமான பிராந்திய பிராண்டாக மட்டுமல்லாது, உலகளாவிய நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இன்றைய Public Gold-இன் வெற்றிக்கு, அதன் Public Gold Business Owners (PGBOs)-இன் அசாதாரண அர்ப்பணிப்பும், விசுவாசமான வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே முக்கிய காரணங்களாகும்.

அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.

இந்த மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ‘From Vision to Legendary Leadership’ என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாண்டின் Triple Diamond Recognition Ceremony நடத்தப்பட்டு, சிறந்த சாதனைகளும் தலைமைத்துவ திறமைகளும் வெளிச்சமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News