loader

All News

 

கோலாலம்பூர், ஜூன் 28-
சுங்கை பக்காப் இடைத்தேர்தலை அரசாங்கத்திற்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்றுமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் விதமாக மாற்றுவது பொருத்தமற்றது என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

ஏனென்றால், சமூகத்தின் குரலாக விளங்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த நடவடிக்கை ஜனநாயக செயல்முறையை மாசுபடுத்தும் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பிரச்சாரங்கள் மேலோட்டமானவை. வாக்குப் பெட்டியில்தான் வாக்கும் ஜனநாயகச் செயல்பாடும் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் போராட்டம் நடத்துவது அவ்வளவு ஏற்புடையதல்ல.

உண்மையில் மக்களுக்காக உழைக்கக்கூடிய மற்றும் அவர்களின் குரலை தெரிவிக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுதான் அவசியம் என அவர் சொன்னார்.

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவியான பட்லினா, பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலின் அறிக்கை குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் அபிடினுக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜொஹாரி அரிஃபினுக்கும் இடையே போட்டி நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


கோலாலம்பூர், ஜூன் 24-
நாட்டிற்கு அந்நிய முதலீட்டூ வரவுகள் அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் அறிவிப்புகள் மட்டுமே வருவதாகவும் முதலீடுகள் எதுவும் வருவதுபோல் இல்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் இருந்து அதிகளவான அந்நிய நேரடி முதலீடு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்பாடுகள் எதுவும் இல்லை என அவர் சொன்னார்.

அரசு செய்துள்ள பெரும்பாலான அறிவிப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகும். அவை நிரந்தர முதலீட்டு ஒப்பந்தம் கிடையாது. 

கடந்த மார்ச் மாதம், பிரதமர் அன்வார் இப்ராஹிம், பல நாடுகளுடனான நாட்டின் வெற்றிகரமான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பணியின் விளைவாக, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாட்டிற்கு வெ.76.1 பில்லியன் அளவிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடிந்தது என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு (யுஏஇ) மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், தொழில்நுட்ப ஜாம்பவான்களான டெஸ்லா, என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை மலேசியாவில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.

நாட்டிற்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ள அந்நிய முதலீட்டு தொகையை உறுதிப்படுத்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

முதலீடு செய்வதாக இதுவரை பிர நாடுகள் கூறுவது மலேசிய அரசாங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதியாகும். ஆனால் வாக்குறுதியை நிரைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என துன் மாகதீர் தெரிவித்துள்ளார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


கோலாலம்பூர், ஜூன் 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவு தெரிவித்த பெர்சாத்து எம்.பி.க்கள் 6 பேரின் இருக்கைகள் காலி செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது இன்று தொடங்கும் மக்களவை அமர்வின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் கன்டாங், லாபுவான், ஜெலி, குவா முசாங், கோல கங்சார் மற்றும் தஞ்சோங் கராங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளை காலி செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு மக்களவையின் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோலாலம்பூர், ஜூன் 5-
மலேசிய மடாணி கொள்கையின் கீழ் மனித உரிமை முக்கியதுவம் அடங்குகிறது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உடன் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயத்தை அவர் முன்வைத்தார்.

நாட்டின் வளம், மக்களின் அமைதி என்ற குறிக்கோளுடன் செயல்படும் நாடு கண்டிப்பாக மனித உரிமை என்பதை மறந்துவிடக்கூடாது. ஜக்கிய நாடுகளின் மனித உரிமை குழுவுடன் தொடர்பை வளர்த்து கொள்ளவும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் மனித உரிமை விழிப்புணர்பை ஏற்படுத்தவும் அரசாங்கம் வோகர் மற்றும் அவரின் பேராளர்களை நாட்டிற்கு அழைத்ததாக பிரதமர் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்


கோலாலம்பூர், மே 29-
Budi Madani மானிய உதவித் திட்டத்தின் பதிவு, மத்திய தரவுத்தள மையத்தில் (PADU)  சாத்தியமான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க பேச்சாளர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

PADU-இன் கீழ் கடந்த மார்ச் 31ஆம் தேதி பதுவுக்கு பதிவு செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்ட தனிநபர்களுக்கான மாற்று முயற்சியாக Budi Madani செயல்படுகிறது என்று அவர் விளக்கினார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்றாலும், Budi Madani  விவரங்களை விளக்க நிதி அமைச்சு விரைவில் செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஓர் அமர்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட Budi Madani திட்டம் வாயிலாக தீபகற்ப மலேசியாவில் உள்ள B40 மற்றும் M40 வருமான பிரிவைச் சேர்ந்த தனிநபர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் சிறு விவசாயிகள ஆகியோர் வெ.200 மாதாந்திர பண உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அவர் சொன்னார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர், மே 24-

சமீப காலமாக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது ஊடகவியலாளர்களை தவறாக விமர்சனம் செய்யும்  அரசியல் சார்ந்தவர்கள்  போக்கை கண்டித்து,
தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவல் தொடர்பு துறை அமைச்சர்  ஃபாமி ஃபட்ஸிலிடம்  புகார் கொடுக்க உள்ளதாக மிஜா எனப்படும் மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குணாளன் மணியம்,  தமிழ் லென்ஸ் இணைய ஊடக ஆசிரியர்  வெற்றி விக்டர்,  ஊடகவியலாளர் புவனேஸ்வரன், பவளச் செல்வன்,  நந்தகுமார்,   மற்றும் இன்னும் சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

மிஜாவின் கண்டனத்திற்கு ஆதரவு கொடுத்து இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் நிலைப்பெற வேண்டும். அரசியல்வாதிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என NUJ எனப்படும்  தீபகற்ப மலேசிய ஊடகவியாளர் சங்கம் தங்களின் கண்டனத்தை தெரிவித்தது.

அதனை தொடர்ந்து, இன்று சரவா ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்த தகவல் தொடர்பு துறை  அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில்  அவர்களிடம்  ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் அவசியமானது. இந்த நாட்டில்  தகவல்களை கொண்டுச் சேர்க்க ஊடகம் மிக பெரிய பங்கை வகிக்கிறது என்பதை அரசியல் தலைவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.

ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஊடகங்களை அவர்களின் கடமையை செய்ய விடுங்கள், அவர்கள் வெளியிடும் செய்தியில் மாற்று கருத்து இருந்தால் அதற்கு முறையாக மாற்று கருத்து தெரியுங்கள். ஆச்சுறுத்துவது சரியான நடைமுறை இல்லை.

இந்த விவகாரத்தில் எனக்கு இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.  முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம்.
நிச்சயம் ஊடகவியலாளர்களையும் , சங்கத்தையும்  அழைத்து பேசுவேன்.
அவர்கள் புகார் கொடுத்த நபர்களையும் அழைத்து பேசுவேன்  என அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

-வெற்றி விக்டர்

Kuala Lumpur : Meskipun unggul di gelanggang Paralimpik Tokyo  dengan memecahkan rekod dunia acara lontar peluru kategori F20 (masalah pembelajaran ), kemenangan muhamad ziyad zolkefli yang meraih pingat emas acara itu dibatalkan.

Ia selepas dia serta dua lagi peserta lain dari Ecuador dan Australia difahamkan menerima protes daripada kem ukraine kerana dikatakan lambat memasuki 'call room' atau bilik persediaan atlet sebelum turun beraksi.

Menurut Twitter rasmi jawantankuasa penganjur Olimpik dan Paralimpik Tokyo,Tokyo 2020 pingat emas diberikan kepada atlet dari Ukraine, Maksym Koval.

Terdahulu pada aksi di Stadium Olimpik, ziyad mencetuskan  kegembiraan kepada  kontijen negara  apabila mengungguli acara berkenaan dengan melakar rekod dunia 17.94m sekali gus memperbaharui rekod dunia miliknya sendiri 17.29m yang dilakukan pada kejohanan Olahraga Para Dunia  2017 di london.

Balingan emas itu dilakukan Ziyad pada percubaan ketiga  namun percubaan keempat 17.62m juga tidak mampu ditandingi peserta lain pada aksi yang berlangsung di stadium olimpik itu.

"Update Tokyo - Masih dalam perbincangan antara perwakilan tekninal dengan tiga negara yang protes balas Ukraine iaitu Malaysia, Australia dan Ecuador.

Sementara itu , Perdana Menteri Datuk Seri Ismail Sabri Yaakob memuatnaik  pesanan  di facebook rasmi beliau kepada  wira negara  -

"Kepada Ziyad, anda tetap juara di hati kami,
memecahkan rekod dunia adalah perkara yang luar biasa! Saya dan Keluarga Malaysia sangat berbangga dengan anda!

Sama-samalah kita berdoa agar kemenangan pingat emas kekal ditangan Malaysia" 

Pesanan semangat  dari Perdana Menteri Datuk seri Ismail Sabri Yaacob disambut baik oleh Rakyat Malaysia.

Recent News