loader

All News

வட அமெரிக்கா, ஜூலை 4-
வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் பேரமைப்பு (FeTNA) 38-வது தமிழ் மாநாட்டின் முதல் நாளான இன்று, Raleigh மாநாட்டு மையத்தில், முதன்மை உரை வழங்கியதில் மகிழ்ச்சி என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

FiTEN - FeTNA International Tamil Entrepreneur Summit, உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின் தொடக்க நிகழ்வுடன் தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து திரண்டுள்ள நமது சமுதாயத்தின் திறமைமிக்க தொழில்முனைவோர், பார்வையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டை ஒரு உலகத் தரத்திலான தீர்வுகளை உருவாக்கும் தளமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என அவர் சொன்னார்.

நாளைய தலைமுறை எதிர்கொள்ளும் மாற்றங்கள், சவால்கள் எதுவாக இருந்தாலும், நமது பாரம்பரியத்தையும், மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்வைத்து, தொழில் முனைவோர்களின் மூலமாக நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கியத்தின் உயிருள்ள செய்தியை மறுபடியும் உலகிற்கு நினைவூட்டும் விதமாக, இந்த மாநாடு அனைவருக்கும் திறந்தவெளி தளமாக அமைந்துள்ளதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

லண்டன், ஜூலை 3-
லிவர்பூல் அணியின் பிரபல தாக்குதல் ஆட்டக்காரரான டியோகோ ஜோத்தா கார் விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டியோகோ ஜோத்தாவின் மரண
செய்தி உலக அளவிலான கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

28 வயதான டியோகோ ஜோத்தா தனது 26 வயதான தம்பி ஆண்ட்ரே சில்வாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது அவர் செலுத்திய கார் A-52 நெடுஞ்சாலையில் உள்ள Palacios de Sanabria என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பற்றியது.

இந்த விபத்தில் சிக்கிய
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தகவலை தெரிவித்தனர். 

மேலும் மருத்துவரகள் அக்காரில் பயணித்த டியோகோ ஜோத்தா மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரும்  இறந்ததை உறுதிப்படுத்தினர்.

கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி, தனது நீண்ட காலத் துணைவி ரூட் கார்டோசோவைத் திருமணம் செய்த இரண்டு வாரங்களுக்குள் இந்தத் துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டியோகோ ஜோத்தா -  ரூட் கார்டோசோவா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வேளையில் சமூக ஊடகங்களில் அவரின் உயிரிழப்புக்கு வீரர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-காளிதாசன் இளங்கோவன்

வாஷிங்டன்,ஜூன் 24-
இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின.

இதற்கு பதிலடியாக நேற்றிரவு(ஜூன் 23) ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என டிரம் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,ஜூன் 24-
இஸ்ரேல் ஈரான் இடையே மூன்று வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின.

இதற்கு பதிலடியாக நேற்றிரவு(ஜூன் 23) ஈரான் ஏவுகணைகளால் கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று(ஜூன் 24) இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என டிரம் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், ஜூன் 5-
ஆப்கானிஸ்தான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இதனால் அங்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது,ஆப்கானிஸ்தான்,மியான்மர்,சாட், காங்கோ,எக்குவடோரியல் கினியா,எரித்திரியா,ஹைட்டி,ஈரான்,லிபியா,சோமாலியா,சூடான் மற்றும் ஏமன் உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

மேலும்

அமெரிக்காவிற்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் புருண்டி,கியூபா,

லாவோஸ்,சியரா லியோன்,டோகோ,துர்க்மெனிஸ்தான்,வெனிசுலா ஆகியவை அடங்கும்.

பாதுகாப்பு கருதி சில நாட்டினரை நாங்கள் குடியேற அனுமதிக்க முடியாது. இதனால் தான் இன்று ஏமன், சோமாலியா, ஹைட்டி, லிபியா மற்றும் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன்.

 

சமீபத்தில் கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், வெளிநாட்டினர் சிலர் அமெரிக்காவிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

 

ரோம், ஏப். 21-
ரோமன் கத்தோலிக் திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார் என்று வாடிகன் வெளியிட்ட வீடியோச் செய்தியில் தெரிவித்துள்ளது.

போப் அவர்களின்  மறைவு குறித்து வாடிகனின் தொலைக்காட்சியில் கார்டினல் கேவின் பாரல் கூறியதாவது:

அன்பான சகோதர சகோதரிகளே, எங்கள் பரிசுத்த தந்தை போப் பிரான்சிஸின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 7.35 மணிக்கு ரோம் ஆயராக இருந்த பிரான்சிஸ், இறைவனின் வீட்டிற்குத் திரும்பினார் என அவர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ். இவர் வாடிகன் நகரத்தில் வசித்து வந்தார். பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த போப் அவர்கள் 38 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் சற்று தேறிய நிலையில் கடந்த  மார்ச் 23 ஆம் திகதி மீண்டும் வாடிகன் திரும்பி தனது வழக்கமான பணிகளை பார்க்கவும் தொடங்கினார்.

நேற்று நடைபெற்ற ஈஸ்டர் முன்னிட்டு கத்தோலிக்கர்களுக்கு ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி காலை போப் பிரான்சிஸ் காலமானதாக, வாடிகன் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அவரது மறைவிற்கு, பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

கோலாலம்பூர், ஏப்.3-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இன்று காலை (மலேசிய நேரம்படி அதிகாலை 4 மணிக்கு) வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் இந்த அறிவிப்பை செய்துள்ளார்.

அறிவிப்பின் போது டிரம்ப் வைத்திருந்த அட்டவணையின்படி, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா 11ஆவது இடத்தில் இருந்தது.

மலேசியா, அமெரிக்கப் பொருட்களுக்கு 47 சதவீத வரி விதித்துள்ளதாகவும், அந்நாட்டின் பரஸ்பர கட்டணத்தை 24 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாகவும், இது அந்த விகிதத்தில் பாதியை விட சற்று அதிகம் என்றும் அவர் கூறினார்.

சீனா மற்றும் சிங்கப்பூருக்குப் பிறகு, மலேசியப் பொருட்களுக்கான இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கேப் கேனவரல், மார்.19-

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர்.

அவர்களை மீட்க சென்ற 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று அதிகாலை புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

 

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.

இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

தற்பொழுது அந்த இரு வீரர்களும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

கோசானி, மார்.17-

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், 'பல்ஸ்' என்ற இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது.

இதில், நேற்று அந்நாட்டின் பிரபல ஹிப் ஹாப் இசைக்குழுவான டி.என்.கே., குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது.

அதை காண கேளிக்கை விடுதியில் 1,500க்கும் மேற்பட்டோர் கூடினர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

அதிகாலை 3:00 மணியளவில் இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், கூட்டத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில் பைரோடெக்னிக்ஸ் எனப்படும் நீண்ட நேரம் எரியும் மத்தாப்புகள் கொளுத்தப்பட்டன

அதிலிருந்து விழுந்த தீப்பொறிகளால் அரங்கத்தில் தீ பிடித்தது.

இதை கவனித்த இசைக்குழுவினர், அனைவரையும் வேகமாக வெளியேறும்படி மைக்கில் அறிவித்தனர்.

இருப்பினும் மளமளவென பரவிய தீயால் கட்டடத்திற்குள் கரும்புகை சூழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, 60 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மேலும் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்

வாஷிங்டன், மார்ச்.3-

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி டிரம்ப் உத்தரவிட்டார்.

தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புடினைப் பற்றி கவலைப்படுவதைக் குறைத்து, சட்டவிரோத குடியேற்றங்கள், வன்கொடுமை சம்பவங்கள், போதைப்பொருள் மற்றும் கொலைகாரர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதைப் பற்றி அதிக நேரம் கவலைப்பட வேண்டும்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் நான் பதவியேற்ற முதல் ஒரு மாதத்திற்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை வரலாற்றுச் சிறப்புமிக்க அளவிற்குக் குறைக்க முடிந்தது.

நமது நாட்டின் மீதான படையெடுப்பு முடிந்துவிட்டது. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் எல்லை ரோந்துப் படையினரால் 8,326 சட்டவிரோத குடியேறிகள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் அனைவரும் விரைவாக நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

வாஷிங்டன்,ஜன.13-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் நீடித்து வரும் காட்டுத்தீயால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரவு முற்றிலும் நாசமாகியுள்ளது.

1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் என 14 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 354 தீயணைப்பு வாகனங்கள், 84 விமானங்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, லாஞ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்த காட்டுத்தீயில் 16 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

லோஸ் ஏஞ்சல்ஸ், ஜன 11-

அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸில் பற்றிய காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ள நிலையில், அப்பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடப்பதால் போலீசார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் காட்டுத் தீ ஏற்பட்டது. மழையில்லாமல் வறண்டு புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப் பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை காற்றுத் தீ பற்ற காரணமாக கூறப்படுகிறது.

லோஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள நகரம் என்பதால் அங்கு வேகமாக வீசும் காற்று, காட்டுத் தீ மற்ற இடங்களுக்கு பரவும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

 

பாலிசேட்ஸ், ஈட்டன், கென்னத் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், லோஸ் ஏஞ்சல்ஸ் எல்லைப் பகுதியில் உள்ள வென்டுரா கவுன்ட்டியில் புதிதாக நேற்று காற்றுத் தீ பற்றியுள்ளது. இதுவரை லோஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதில், பாலிசேட்ஸ், ஈட்டன் அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயால் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், அலுவலக கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. 1.76 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, தீயில் சிக்கியுள்ளவர்களை தேடி மீட்டு வருகின்றனர்.

 

கொழும்பு, ஜன 7-

இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் துபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-881 விமானம்,

இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05:05 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-174 விமானம் என்பன மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று காலை 06:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 07.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனி படிப்படியாக குறைந்து தற்போது விமான நிலையம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால், விமான சேவைகள் சாதாரணமாக நடைபெறுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோலாலம்பூர், டிச. 28-

நோர்வேவில் உள்ள அஸ்வாட்நெட் ஏரியின் அருகே கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த சுற்றுலா பேருந்து விபத்தில் நான்கு மலேசியர்கள் காயமடைந்துள்ளனர் என விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.

விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில், இந்த நான்கு மலேசியர்கள் லோஃபோட்டனில் உள்ள தோன் என்ற தங்கும் விடுதியில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சொற்ப காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பயணிகள் சிலர் லோஃபோட்டனில் உள்ள தோன் தங்கும் விடுதி மற்றும் ஸ்டோக்மார்க்னெஸில் உள்ள ஹோட்டல் ரிச்சர்ட் ஆகிய இரு தங்குமிடங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மலேசிய துதரகம் நார்வே அதிகாரிகளுடன் இணைந்து சம்பவம் தொடர்பான மேலும் தகவல்களை கண்டறிந்து வருவதுடன், பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

விபத்தின் பின்னணியில் கடுமையான குளிர்கால வானிலை, கனமழை, கடும் காற்று மற்றும் 1,500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிகழ்விடத்தின் இடர்பாடுகள் மீட்புப் பணிகளை சிரமமாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26ஆம் திகதி அன்று, உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி அருகில் உள்ள ஏரியில் விழுந்தது.

சீனா, சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, சுடான், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அப்பேருந்தில் இருந்துள்ளனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப்பணிகள் கடுமையான வானிலை சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், மீதமான பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

உதவி தேவைக்கு தொடர்பு கொள்ள
மலேசிய தூதரகத்தின் உதவி தேவைப்படும் நிலையில், ஸ்டாக்ஹோம் துாதரகத்தை கீழே உள்ள தொடர்பு வழிகளில் அணுகலாம்:தொலைபேசி: +46 8440 8400 (பொது விசாரணை) / +46 73 536 9152 (ஆபத்து நேரத்தில்)
மின்னஞ்சல்: mwstockholm@kln.gov.my

-காளிதாசன் இளங்கோவன்

அஸ்தானா, டிச.26-

கஸகஸ்தானின் மேற்குப் பகுதியில் பறந்த  Azerbaijan Airlines இன்  Embraer 190 ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

பாகுவிலிருந்து தெற்கு ரஷியாவின் குரோஸ்னி நோக்கிச் சென்ற 67 பயணிகளைக் கொண்ட விமானம், கஸ்பியன் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அக்டாவ் நகரின் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என கஸகஸ்தானின் துணை பிரதமர் கனாட் போசும்பாயேவ் Interfax எனும்  ரஷியாவின் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 150 மீட்பு பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி வருகின்றனர் என 
கஸகஸ்தான் அவசரநிலை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விபத்திற்கு காரணம் இன்னும்  தீர்மானிக்கப்படவில்லை. 
கஸகஸ்தான் அரசு விபத்துக்கான விசாரணையைத் தொடங்கியுள்ளதை தெரிவித்தாலும், விபத்து காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

விமானத்தில் 62 பயணிகள் உட்பட , 5 விமான குழு உறுப்பினர்கள், மொத்தம்  67 பேர் விமானத்தில் இருந்ததாக Azerbaijan Airlines அறிவித்துள்ளது. முதலில் விமானம் வானில் பறக்கும் போதே பறவைகளுடன் மோதியதாக விமானி வெளியிட்ட தகவளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே கஸகஸ்தான் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட பட்டியலின்படி  விமானத்தில் 37 அசர்பைஜானியர்கள், 6 கஸகஸ்தானியர்கள் , 3 கிர்கிஸ்தானியர்கள் மற்றும் 16 ரஷியர்கள் விமானத்தில் இருந்துள்ளனர்.

 விபத்து தொடர்பான எந்த தகவலையும் இந்த நேரத்தில் வெளியிட முடியாது  என்று அசர்பைஜான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின்  விசாரணை அதிகாரிகள் தற்பொழுது  விபத்துத் தளத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுவரையில் விமானத்தின் ப்ளாக் பாக்ஸ் எனும் பறக்கும் தரவுகளை பதிவு செய்யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


அதோடு வியத்தில் 
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க மருத்துவ குழுவை கொண்டு செல்ல ஆஸ்தானாவிலிருந்து சிறப்பு  விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக கஸகஸ்தானின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

-காளிதாசன் இளங்கோவன்

வாஷிங்டன், டிச 17-
அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில், 17 வயது மாணவி ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவியும் உயிரிழந்துவிட்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. பயன்படுத்துவதற்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாஷிங்டன், டிச 14-

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். தற்போதைய அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு சிறையில் உள்ள 1,500 கைதிகளுக்கு கருணை வழங்கிய பைடன், அவர்களின் தண்டனைக் காலத்தை குறைத்துள்ளார். அதேசமயம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 39 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு வழங்கினார்.

இது குறித்து பைடன் வெளியிட்டுள்ள செய்தியில், 'செய்த தவறுக்கு வருந்தி, மறுவாழ்வில் ஈடுபடுவோருக்கு, அதிபர் என்ற முறையில் கருணை காட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி.

எனவே, தங்கள் சமூகங்களை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 39 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது என கூறினார்.
நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1,500 பேரின் தண்டனைகளையும் நான் குறைத்துள்ளேன். அவர்களில் பலர் இன்றைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் குறைந்த தண்டனைகளைப் பெறுவர்' என, தெரிவித்துள்ளார்.

சியோல், டிச 4-

தென்கொரியாவில் அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந் நாட்டின் நாடாளுமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, தான் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார்.

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. எதிர்க்கட்சிக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர்.

 

இந்நிலையில்,  தாராளவாத கொள்கைகளை பின்பற்றும் தென் கொரியாவை, வட கொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரநிலை ராணுவ சட்டம் பிரகடனப்படுத்தப்படுகிறது' என்று  அதிபர் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது; நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. நாட்டை போதைப்பொருள் புகலிடமாகவும், நாட்டில் குழப்பமான நிலையை உருவாக்கவும் எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். கூடிய விரைவில் தேச விரோத சக்திகளை ஒழித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவேன்' என்றும் கூறினார்.


அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே வெளியிட்ட இந்த அறிவிப்பால் தென் கொரியாவில் பதற்றமான சூழல் நிலவியது. நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது. பார்லிமென்ட் சுற்றிலும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தி ராணுவத்தின் ஆட்சியை கொண்டு வருவதற்கு எதிர்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கட்சிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நாடு முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து தென்கொரியா நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்தது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள், ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேர் அவசரநிலையை எதிர்த்து ஓட்டளித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ராணுவ ஆட்சியை அமல் செய்யும் பிரகடனத்தை திரும்ப பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இதனால் அந்த நாட்டில் 12 மணி நேரம் நிலவிய பெரும் குழப்பம் முடிவுக்கு வந்தது.

 

 

பைத்துல்முகாடிஸ், நவ.24-
கிழக்கு லெபனானின் Baalbek மாகாணத்தில் உள்ள பல நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகம் மற்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனடோலு ஏஜென்சியின் கூற்றுப்படி, ஷ்முஸ்டார் நகரில் உள்ள ஒரு வீட்டை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில் நான்கு குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ராஸ் அல்-ஐன் நகரில் 18 பேர் காயமடைந்தனர் மற்றும் ஹூர்தலா நகரில் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

Zahle மாவட்டத்தில், Bekaa மாகாணத்தில், Harat al-Fikani பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

கடந்த அக்டோபரில் இருந்து, லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 3,600 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 15,300 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ஏவுகணைகளை அடுத்து தற்போது பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் வடகொரிய முகாம்களை உக்ரைன் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யா நகரங்கள் மீது தாக்குதலுக்கு பயன்படுத்தலாம் என ஜோ பைடன் நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தும் அனுமதியும் உக்ரைன் பெற்றுள்ளது.

இந்த நிலையில், வடகொரியாவின் இராணுவ தளபதிகள் தங்கியிருந்த முகாம்கள் மீது உக்ரைன் Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தி, முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு உலக நாடுகள் பல கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஜோ பைடன் நிர்வாகம் தங்களின் ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தும் அனுமதியை வழங்கியிருந்தது.

தொடர்ந்து பிரித்தானியாவும் Storm Shadow ஏவுகணை தொடர்பில் அனுமதி அளித்துள்ளது. இந்த திடீர் நகர்வுகள் மற்றும் ரஷ்யாவின் கடும்போக்கு நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒருபகுதியாக தங்களின் அணு ஆயுத பயன்பாடு தொடர்பிலான கோட்பாட்டை ரஷ்யாவும் திருத்தியுள்ளது. இதுவும் பல மேற்கத்திய நாடுகளை அச்சத்தில் தள்ளியுள்ளது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள சுரங்க கட்டுப்பாட்டு அறையில் தங்கியிருந்த வடகொரியாவின் தளபதிகள் மற்றும் ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜெருசலேம், நவ 18-

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிவைத்து, அவரது வீட்டில் இரண்டு குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஓராண்டைக் கடந்தும் தொடர்கிறது.

இதேபோல், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு மீதும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி, மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள கேசராஸ் பகுதியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதே வீட்டில் பயங்கரவாதிகள் நேற்று இரண்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

 

டோக்கியோ, நவ 12-

ஜப்பானில், ஆளும் லிபரெல் டெமாக்ரடிக் கட்சியின் ஷிகெரு இஷிபா வயது 67, நேற்று நடந்த பார்லிமென்ட் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் ஜப்பானின் பிரதமராக தேர்வானார்.

ஜப்பானின் லிபரெல் டெமாக்ரடிக் கட்சிக்கு அந்நாட்டு பார்லிமென்டின் இருசபைகளிலும் பெரும்பான்மை இருந்ததால், 2021 இல் அக்கட்சியை சேர்ந்த புமியோ கிஷிடா பிரதமராக தேர்வானார்.

இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் பதவி விலகினார்.

அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த தேர்தல் நடைபெற்றது.

ஒன்பது பேர் போட்டியிட்டனர். இதில், ஷிகெரு இஷிபா தேர்வானார். இதை தொடர்ந்து, அக்டோபர் 27 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 465 இடங்களை உடைய ஜப்பான் பார்லிமென்டில், இஷிபா பெரும்பான்மை இழந்தார்.

 

இந்நிலையில், அந்நாட்டு பார்லி சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. இதில், பிரதமர் தேர்வு நடந்தது.

 

அதில், இஷிபாவுக்கு ஆதரவாக 221 ஓட்டுகளும், எதிர்க்கட்சி தலைவரான யோஷிஹிகோ நோடாவுக்கு 160 ஓட்டுகளும் கிடைத்தன.

இதை தொடர்ந்து, ஷிகெரு இஷிபா ஜப்பான் பிரதமராக மீண்டும் தேர்வானார்.

 

வாஷிங்டன், நவ 6-
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் தேர்தல் நடந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே உலக மக்களின் பார்வையாக இருக்கும். இம்முறை நடைபெற்ற அதிபர் தேர்தல் கடந்தகால தேர்தல்களின் போது நிகழ்ந்த பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது.

நடப்பு தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர், முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயகக்கட்சி வேட்பாளர், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையேதான் போட்டி. ஓட்டுப்பதிவு முடிந்து முடிவுகள் கொஞ்சம், கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

அந்நாட்டில் உள்ள 50 மாகாணங்களில் உள்ள 538 பிரதிநிதிகளில் 270 பேர் ஆதரவு பெறும் வேட்பாளர் தேர்தலில் அதிபராக வெற்றி பெற முடியும். தொடக்கம் முதலே டிரம்ப் அபரிமிதமான முன்னிலையில் இருந்தார்.

 

கடிகார முள்ளின் வேகம் நகர, நகர முன்னிலை நிலவரத்தில் வித்தியாசம் இருந்ததே தவிர வேறு முக்கிய மாற்றங்கள் காணப்படவில்லை. தேர்தல் முடிவு வெளியான நிமிடத்தில் இருந்தே டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

 

ஜகார்த்தா, நவ4-
இந்தோனேசியாவில் நுசா டெங்கரா பிளோர்ஸ் தீவில் உள்ள 
எரிமலை வெடித்ததில்  9 பேர் உயிரிழந்தனர்.

 இதனால் இலே புரா மாவட்டத்தில் துலிபாலி கிராமம், நோபோ, நுரபெலன் மற்றும் ரியாங் ரீட்டா ஆகிய 4 கிராமங்களில்  எரிமலையின் சீற்றங்கள் பரவி அப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததில் பலர் பலத்த காயமுற்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட இரண்டாவது எரிமலை வெடிப்பு இதுவாகும். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் மவுண்ட் மராபி பகுதியில், கடந்த அக் 27 ஆம் தேதி எரிமலை வெடித்தது. இதனால், அருகிலுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் எந்த உயிரிழப்பும் அதிர்ஷ்டவசமாக ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாஷிங்டன், செப் 24-

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் ஆதரவு இருக்கும் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அமெரிக்காவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த  பிரதமர் மோடி இத்தகவலை தெரிவித்தார்.

அமெரிக்கா, நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு உறவுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இது, ஒரு மாதத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜெலென்ஸ்கி இடையே இரண்டாவது சந்திப்பு ஆகும்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், '
 நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைன் பயணத்தின் போது எடுத்த முடிவுகளை செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மோதலைத் தீர்ப்பதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தெரிவித்தேன். உக்ரைனில் உள்ள மோதலை தீர்க்கவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

சியோல், செப் 12-
தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நைரோபி, செப் 12-
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் விட முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விமான நிலையங்களை பராமரிப்புக்காக குத்தகை விடும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. மேலும்  சில நாடுகளிலும் விமான நிலையங்களை அதானி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து வருகிறது. இதில் கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் ஒன்று.

இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதானி நிறுவனம், புதிய ஓடுபாதை, புதிய முனையத்தை கட்டி, புதுப்பிக்க இருக்கிறது. ஒப்பந்தம் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனம் இதனை பராமரிக்கும். இப்படியான ஒப்பந்தத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று விமான நிலைய ஊழியர்கள் எச்சரித்திருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்கள் இது குறித்து கூறுகையில், "தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம், எங்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிபோகும். மட்டுமல்லாது அதிரடியான ஆட்குறைப்பு நடத்தப்படும். எனவேதான் நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக நைரோபிக்கு வரும் விமானங்கள் சில திருப்பிவிடப்பட்டிருக்கின்றன.

டாக்கா, ஆகஸ்ட் 5-

டாக்காவில் மாணவர்கள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதலில், 14 போலீசார் உட்பட 92 பேர் உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், 'பாகுபாடுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற பெயரில், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பேலீஸ் மற்றும் ராணுவம் போராட்டங்களை தடுக்க முயற்சி செய்து வருகின்றன.

இதனிடையே டாக்கா உட்பட நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் நேற்று மிகத் தீவிரமானது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி, போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். 

இதை எதிர்த்து, ஆளுங் கட்சியின் மாணவர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகள் வீடுகள், சொத்துகளுக்கு தீ வைப்பது, கல்வீசி தாக்குவது என, வன்முறை சம்பவங்கள் நடந்தன.

மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் மற்றும் ராணுவமும் களமிறங்கியது. இதனால் நேற்று ஒரு நாளில், 14 போலீசார் உட்பட, 92 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சிங்கப்பூர், ஜூலை 31-
குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பான இணைய பயன்பாட்டிற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் உரிமத் தேவைகளுக்கு சமூக ஊடக தளங்கள் சாதகமாக பதிலளிக்கின்றன என்றும் இது அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாமி பட்ஸில் கூறினார்.

சிங்கப்பூருக்கு மூன்று நாள் வேலைப் பயணத்தின் போது பல்வேறு சமூக ஊடக தளங்களின் பிரதிநிதிகளுடனான தனது சந்திப்பில், மலேசிய சட்டங்களுக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், அவர்கள் செயல்பாட்டில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

சமூக ஊடக தளங்களுடனான சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அந்தந்த சமூக ஊடக தளங்களுக்கு மலேசியா ஒரு முக்கியமான சந்தை என்பதும் இந்த சந்திப்பில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில், Meta, Google, TikTok மற்றும் Tencent போன்ற பல்வேறு சமூக ஊடகத் தளங்களின் அதிகாரிகளைச் சந்தித்து புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பைப் பற்றி அவர் விளக்கினார். மேலும் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தளங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றியும் அந்த கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டதாக ஃபாமி தெரிவித்தார்.

காத்மாண்டு,ஜூலை 26-

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் விமானி இருந்த காக்பிட் பகுதி தனியாக உடைந்து விழுந்ததால் விமானி மனீஷ் உயிர் தப்பினார்.மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர்.

  நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது.

பராமரிப்பு பணிக்காக சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.

இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர். இரு விமானிகளில் ஒருவரான மனீஷ் சக்யா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், காத்மாண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானி மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற கேள்விக்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ராம் தத் அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, ஓடுதளம் அருகே தாழ்வாக பறந்தது. அப்போது, விமானத்தின் காக்பிட்டின் ஒரு பகுதி அங்கிருந்த கோல்கலனை மோதியதில்  அப்பகுதி மட்டும் துண்டாகி தனியாக விழுந்தது. 

உடைந்த காக்பிட் பகுதியில், விமானி மனீஷ் மட்டும் இருந்தார். கீழே விழுந்த மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர். மனீஷ் இருந்த பகுதி தனியாக விழுந்ததால்தான் அவர் உயிர் தப்பியது என கூறினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முன்னாள் விமான போக்குவரத்து துறை இயக்குனர் ரதீஷ் சந்திரலால் சுமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரீஸ்,ஜூலை 26-

உலக நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று ஜூலை 26 பிரான்ஸ் தலைநகர் பேரீஸில் கோலாகலமாக துவங்குகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி இன்று ஐூலை 26 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சம எண்ணிக்கையில் பங்கு கொள்கிறார்கள். மொத்தம் உள்ள 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள், 324 வகை பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

இம்முறை அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 592 பேரும் சீனாவில் இருந்து 338 பேரும் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கிறார்கள். ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

 

நியூயார்க்,ஜூலை.18-

நியூயார்க்கில் நடைபெற்ற ஏல நிகழ்வில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு சுமார்  44.6 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது வெ.208.05 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

ஏபெக்ஸ் (Apex) என்ற பெயருடைய 'ஸ்டெகோசொரஸின்' எலும்புக்கூடு 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இதுவே முழுமையானது என்றும் சோட்டேபிஸ் கூறினார்.

பழங்கால ஆராய்ச்சியாளர் ஜேசன் கூப்பருக்கு சொந்தமான தனியார் நிலத்தில் மே 2022 இல் இந்த ஏபெக்ஸ் (Apex) கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இது 3.3 மீட்டர் உயரமும், 27 அடி சுமார் 8.3 மீட்டர் நீளமும் கொண்டது, மொத்தம் 319 என மதிப்பிடப்பட்டதில் 254 புதைபடிவ எலும்பு கூறுகள் உள்ளன இதில் அடங்கும்.

வாஷிங்டன், ஜூலை.13-

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து  வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அவர்கள் சென்றடைந்தனர்.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விண்வெளியில் இருந்து தாங்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதாவும், வில்மோரும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்கள் 'எங்களை போயிங் விண்கலம் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும். இங்கு நாங்கள் சிக்கிக்கொண்டதாக நினைக்கவில்லை. சக விண்வெளி வீரர்களுக்கு உதவ, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை பார்க்கிறோம்' என அவர்கள் கூறியுள்ளனர்.


மாஸ்கோ, ஜூன் 28- 
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 

இதனால் அவ்விரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து தங்கள் ராணுவத்துக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. குறிப்பாக ரஷியா, அதிக சம்பளம், பாதுகாப்பு உதவியாளர்  பணி என பொய்யான வாக்குறுதிகளை அளித்து ராணுவத்தில் ஆட்களை சேர்த்து வருகிறது.

அப்படி சேர்க்கப்படும் நபர்களுக்கு வலுக்கட்டாயமாக போர்ப்பயிற்சி அளித்து அவர்களின் விருப்பத்திற்கு எதிராக போர் முனைக்கு அனுப்பப்படுகின்றனர். 

அப்படி கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்படும் நபர்கள் உக்ரைன் நடத்தும் தாக்குதல்களில் பலியாவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க ரஷியாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மெக்கா, ஜூன் 25-
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் ஹஜ் புனித யாத்திரை சென்றனர். 

மெக்காவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வெப்ப அலைக்கு மொத்தம் 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா சுகாதாரத்துறை மந்திரி பஹத் பின் அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இதில் அதிகபட்சமாக 660 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தியர்கள் 98 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 165 பேரும் இறந்து உள்ளனர். 

மேலும் ஜோர்டான், துனிசியா,மொரோக்கோ, அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளும் வெப்ப அலைக்கு இறந்து விட்டனர். இதில் முறையான பாதுகாப்பு இல்லாமல் நீண்ட தூரம் நடந்து வந்தவர்களும், வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் பேர் ஆவார்கள். 

மேலும் ஹஜ் புனித யாத்திரைக்கு புதிவு செய்யாமல் வந்த பலரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.


வாஷிங்டன், ஜூன் 24-
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமி மீது மோத கூடிய குறுங்கோள் பற்றிய ஆய்வை கடந்த ஏப்ரலில் மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை கடந்த 20ஆம் தேதி வெளியிட்டது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லாரெல் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில், சக்தி வாய்ந்த குறுங்கோள் ஒன்று பூமியை 72 சதவீதம் தாக்க கூடிய சாத்தியக்கூறு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

இதுதவிர, இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வாஷிங்டனில் செயல்பட்டு வரும் நாசா தலைமையகத்தின் கோள்கள் பாதுகாப்பு அதிகாரியான லிண்ட்லே ஜான்சன் கூறியுள்ளார்.

இதன்படி, வருகிற 2038-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதி (14.25 ஆண்டுகள் எச்சரிக்கை காலம்) பூமி மீது குறுங்கோள் மோதுவதற்கான வாய்ப்பு 72 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

எனினும், இந்த முதல்கட்ட ஆய்வில் குறுங்கோளின் அளவு, அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் நீண்டகால இயங்கு பாதை உள்ளிட்ட விவரங்களை சரியாக தீர்மானிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்து உள்ளது. இந்த குறுங்கோள் மோதலை தடுக்க போதிய அளவில் நாம் தயாராக இல்லை என்றும் நாசா தெரிவித்து உள்ளது.

லண்டன், ஜூன்.11-

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஏராளமான பழங்கால பொருட்கள் பல்வேறு நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அந்தவகையில் தமிழக கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 செ.மீ. உயரம் கொண்ட திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை ஒன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

16-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலையை பெறுவதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த சிலை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் அளித்து இருக்கிறது.

தற்போது பல்கலைக்கழக அறக்கட்டளை கமிஷனிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் 500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த வெண்கல சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்.

 

நியூயார்க், ஜூன் 6-
போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருந்தனர்.

ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பயணம் தடைபட்டது. தொழில் நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் இன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர், சுனிதா வில்லியம்ஸை சுமந்து கொண்டு விண்வெளி நிலையம் நோக்கி புறப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ்-வி ராக்கெட் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். அட்லஸ்-வி ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டார் லைனர் விண்கலம் தனியாக பிரிந்தது.

25 மணி நேர பயணத்திற்குப் பிறகு வியாழக்கிழமை (நாளை) அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது 3-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவார்.


மெக்சிகோ, ஜூன் 6-
மெக்சிகோவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிசோகன் மாகாணம் கோடிஜா நகர் மேயராக யோலன்டா சான்சஸ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் யோலன்டா
உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த யோலன்டாவை வழிமறித்தது. 

பின்னர் அதிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று யோலன்டாவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. இதில் தலை, கழுத்து, மார்பு பகுதி என பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் யோலன்டா சான்சஸ் உயிரிழந்தார்.

மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற விவகாரம் அங்கே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சியோல், மே.30-

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது. 

இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், காலனி பகுதிகள், சாணம் இருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்

 

வாஷிங்டன், மே 29-
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், கோடீஸ்வரருமான டொனால்டு டிரம்ப், ரியல் எஸ்டேட், ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். 2017 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார்.

அதிபர் பதவியை இழந்தது முதல் டிரம்ப் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஒரு சில வழக்குகளில் டிரம்ப் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதவிர அடுத்தடுத்து தொடரப்படும் வழக்குகளால் டிரம்பின் பல தொழில்கள் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே தன் மீதான வழக்குகளை எதிர்கொள்ள டிரம்புக்கு ரூ.800 கோடி வரை தேவைப்படும் என அவரது சட்ட நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க டிரம்ப் தனக்கு விருப்பமான ஜெட் விமானத்தை விற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.83 கோடி) மதிப்புடைய 1997 செஸ்னா ஜெட் விமானத்தை ஈரானிய-அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான மெஹர்தாத் மொயதியிடம் டிரம்ப் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. எனினும் என்ன தொகைக்கு விமானம் விற்கப்பட்டது என்கிற தகவல் வெளியாகவில்லை. இந்த மெஹர்தாத் மொயதி, கடந்த 2020 தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்துக்காக 2,45,000 டாலர் (சுமார் ரூ.2 கோடி) நன்கொடையாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

காசா, மே 29-
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளதால் அங்கு தாக்குதல்களை நடத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அதை பொருட்படுத்ததால் இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரபா நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றும் காசாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில் இதுவரை 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

சியோல், மே 28-
வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

இதனை தொடர்ந்து வரும் 3ம் தேதி 2வது ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா திட்டமிட்டு வருவதாக ஜப்பான் சமீபத்தில் கூறி இருந்தது. இந்த சூழலில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக இன்று தகவல் வெளியாகி இருந்தது. இதனிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வடகொரியாவின் புதிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை, ஏவுவதற்கான முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் முதல் கட்ட ராக்கெட் சோதனையில் நடுவானில் வெடித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

ஜெருசலேம், மே 28- இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக ரபா நகரை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம் அங்கு பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் முழுவதும் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என அறிவித்தது.

அதன்படி காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நேற்று சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்ந்துள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி இந்த தாக்குதலில் 23 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்தில் மேற்கு கரை பகுதியின் தலைமை நிர்வாக அதிகாரியான யாசின் ரபியாவும் பலியானதாக கூறப்படுகிறது. இவர் மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.


பெய்ஜிங்,மே 24-
தைவானில் புதிய அதிபர் பொறுப்பேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அந்நாட்டை சுற்றி வளைத்த சீன ராணுவம் நவீன ஆயுதங்களுடன் 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. 

இதனால், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து தைவான் தீவில் மக்கள் குடியேறினர். தைவான் தனது நாட்டின் ஓர் அங்கம் என்றே கூறி வரும் சீனா, தொடர்ந்து அந்நாட்டுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.

தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாலும் கடும் கோபத்தில் உள்ளது சீனா. இந்த நிலையில், தைவானை கடல் வழியாகவும் வான்வழியாகவும் முற்றுகையிட்டு தீவிர போர் பயிற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் மேற்கு திசையில் இருக்கிறது தைவான். அண்மையில், தைவான் நாட்டின் புதிய அதிபராக வில்லியம் லாய் பதவியேற்று இருந்தார். தங்களை யாரும் அச்சுறுத்த முடியாது என்று தைவானின் புதிய அதிபர் வில்லியம் ராய் பேசியிருந்த நிலையில், இரண்டு நாள் போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது சீனா.

தைவானின் அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் கோபமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாக இந்த போர் பயிற்சி அமையும்  என்று கூறினார். 

தனது ராணுவ பலத்தை காட்டும் விதமாக சீனா இந்த கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த போர் பயிற்சிக்கு Sword-2024A என பெயரிட்டுள்ளது.

டெஹ்ரான், மே 20-

ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துருக்கி நாட்டு ட்ரோன் விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து அந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போனதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியனும் உயிரிழந்தார்.

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைஷி. இவர், அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று மே.19 ஆம் திகதி ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டெஹ்ரான் நகரில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜோல்பாவில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

-காளிதாசன் இளங்கோவன்

 

பிரேக், மே 16-
மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). ஏற்கனவே 2 முறை பிரதமர் பதவி வகித்துள்ள ராபர்ட் பிகோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் ஆனார்.

நாட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற பிரதமரான ராபர்ட் பிகோ, ரஷியா ஆதரவாளரும் ஆவார். அவர் நேற்று தலைநகர் பிராடிஸ்லாவாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்களிடம் ராபர்ட் பிகோ உரையாடி கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராபர்ட் பிகோவின் வயிற்றில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த ராபர்ட் பிகோவை அதிகாரிகள் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ள பன்ஸ்கா பிஸ்ட்ரிகா நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை, மார்ச் 23-

 ம.இ.காவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் , இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனை இன்று சந்தித்தார்.  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. 

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். 

டத்தோ ஸ்ரீ  சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கையர் மலேசியாவில் பணிப்புறிவதற்காக  10 ஆயிரம் வேலைவாய்ப்பு வீசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு   அனுமதியை வழங்கியுள்ளார்.  அந்த முயற்சிக்காக 
இலங்கை பிரதமர்,   டத்தோ ஸ்ரீ சரவணனக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்தார். 

தற்போது இந்த  ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1,853 இளைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டத்தோ ஸ்ரீ சரவணன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார விழ்ச்சியில் இருந்து இலங்கையை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் சிறந்த நிர்வாகத்தின் வாயிலாக மிக விரைவாக இலங்கையை  அவர்கள் மீட்டெடுத்தனர். 

ஏனைய  நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அனுகுமுறைக்கு பாராட்டுக்களையும்  தெரிவித்தனர். 

அத்துடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க  மலேசிய அரசாங்கம் காத்திருப்பதாகவும் 
டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இலங்கை, மார்ச் 22-

இன்று மாலை இலங்கையில்  மட்டக்களப்பு  மாவட்ட , இஸ்லாமியர் அதிகமாக வாழும் காத்தன் குடி   பகுதியில்  5,000 இஸ்லாமியருடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் , சிறப்பு விருந்தினராக  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.

இலங்கை கிழக்கு மாகாணம் ஆளுநர்  செந்தில் தொண்டமான்  அழைப்பை ஏற்று டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை வெளியுறவு  அமைச்சர் எம்.யு.எம்.  அலி சப்ரி கலந்து கொண்டு  சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்குச் சிறப்பு செய்தார்.

5,000 இஸ்லாமியர் மத்தியில்  உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், அவர்களுடன் அமர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

காஸா, டிச.13-

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை பாய்ச்சும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கிவிட்டது என  அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

சுரங்கத்தில் கடல்நீர் பாய்ச்சும் நடவடிக்கை முழுமை அடைய ஒரு சில வாரங்கள் ஆகலாம். எவ்வாறாயினும், இஸ்ரேலிய இராணுவம் இந்த நடவடிக்கை குறித்த மேல் விவரங்கள் எதையும் அறிவிக்க வில்லை. மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூட இது தொடர்பில் பதிலளிக்கவில்லை.

ஹமாஸ் பதுங்கியிருக்கும் அந்த சுரங்கத்தில் பணயக்கைதிகள், போராளிகள் மற்றும் வெடிமருந்துகளும் மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடல் நீரை சுரங்கத்தில் பாய்ச்சுவதினால் காஸாவின் ஏரிகளில் உள்ள நல்ல நீர்கள் பாதிக்கப்படலாம்.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

காஸா, டிச.6

காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகளில் கடல்நீரை  பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய பம்ப் அமைப்பை இஸ்ரேல் நிறுவியுள்ளதாக அமெரிக்க அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு வடக்கே சுமார் 0.4 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தது ஐந்து பம்புகளை இஸ்ரேலிய இராணுவம் 

அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.இந்த பம்புகளை கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரக்கணக்கான கனமீட்டர் நீரை அனுப்பி  முழு சுரங்கப்பாதையும் 1 வாரத்திற்குள் வெள்ளத்தில் மூழ்கடிக்க முடியும்.

அவ்வகையில் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ்  விடுவிக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேல் இந்த பம்பைப் பயன்படுத்துவதை பற்றி பரிசீலிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

 ஹமாஸ் தனது பணயக்கைதிகளை பாதுகாப்பான  சுரங்கங்களில் மறைத்து வைத்திருப்பதாக முன்பு கூறியிருந்ததை வைத்து இந்த அனைத்து பணயக்கைதிகளும் சுரங்கங்களில் இருக்கலாம் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​இஸ்ரேல் சுரங்கப்பாதையை நாசப்படுத்துவது நியாயமானது என்றும், அதற்கான பல்வேறு வழிகளை ராணுவம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஜெருசலேம், அக்.26-

காஸா மீது தரைப்படை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்கொள்ளவிருக்கும்  நடவடிக்கை குறித்த நேரமோ அல்லது பிற தகவல்களையோ தெரிவிக்க அவர்  மறுத்துவிட்டார்.

ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனப் பகுதிக்குள் எப்போது ராணுவம் நுழையும் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசாங்கத்தின் சிறப்புப் போர் அமைச்சரவை முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

நாங்கள் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம். எப்போது, ​​எப்படி, எவ்வளவு என்பதை நான் விவரிக்க மாட்டேன். நாங்கள் செய்த பல்வேறு கணக்கீடுகளையும் நான் விரிவாகக் கூறமாட்டேன், அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களுக்குத் தெரியாது என்று நெதன்யாகு கூறினார்.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் 1400 பேர் பலியாகினர். அதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களாக காஸா பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது.

இதனிடையே இந்த தாக்குதலின் வழி 6,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், அக்.17-

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,200-ஐ  கடந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ்  நடத்திய தாக்குதலில் இதுவரையில் 1400 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் பாலஸ்தீன காசா முனை மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 2808 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரையில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் அடிப்படையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,266 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலியாகியதாக தகவல் கசிந்துள்ளது.ஹமாஸின் முக்கிய அரசியல் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா அல் மசினி இஸ்ரேல் நடத்திய  வான்வழி தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டுள்ளார்.

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள பனிரெண்டும் ஆளில்லாக் கலங்கள். 

1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை soft land செய்து வரலாறு படைத்தது ரஷ்யா. நிலவில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்தது ரஷ்யா. 

ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்று பதிவின் படி அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள்  சாதனை நொடிகள். அப்போது தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன.

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான்.

இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 விண்கலங்கள் மட்டுமே நிலவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியவை. மீதமுள்ள பனிரெண்டும் ஆளில்லாக் கலங்கள். 1959 ஆம் ஆண்டு முதன் முதலில் ரோபோவுடன் கூடிய விண்கலத்தை சோவியத் ரஷ்யா நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு லூனா 9 ஆய்வுக் கலத்தை soft land செய்து வரலாறு படைத்தது ரஷ்யா.

நிலவில் மென்மையாக தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்தது ரஷ்யா. ஆனால், அதற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலையில் அப்போலோ 11 ஆய்வுத் திட்டம் மூலம் நிலவில் மனிதனை கால்பதிக்க வைத்தது அமெரிக்கா. வரலாற்று பதிவின் படி அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடை பயின்ற நிமிடங்கள்  சாதனை நொடிகள். அப்போது தொடங்கி 1972ஆம் ஆண்டு வரை அப்போலோ திட்டம் மூலம் 9 முறை விண்கலங்களை அனுப்பி 12 பேரை நிலவில் கால் பதிக்க வைத்துள்ளது அமெரிக்கா.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி நிலவில் கடைசியாக கால்பதித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜீன் கோர்னென்.


முன்னாள் சோவியத் யூனியன் தான் முதன் முதலில் விண்கலத்தை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள் மூலம் நிலவின் தரையில் இருந்து முதல் புகைப்படங்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா சர்வேயர் என்ற திட்டத்தில் 5 ஆளில்லாக் விண் கலங்களையும், அப்போலோ என்ற திட்டத்தின் வழியாக மனிதர்களைக் கொண்ட ஆறு விண்கலங்களையும் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது.

அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லா விண்கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது. ஜப்பானும் நிலவு குறித்து தனது ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

சீன நிலவு ஆய்வுத் திட்டம் 2007-ல் Chang’e 1 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. நிலவின் மிகத் துல்லியமான 3D வரைபடத்தை உருவாக்குவதே சீனாவின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “யுடு”ரோவர் மூலம் சந்திரனில் மெதுவாக தரையிறங்கிய 3-வது நாடானது சீனா. மொத்தமாக, சீனா 7 முறை நிலவு பயணங்களை முடித்துள்ளது. 2030ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

ஆக இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகள் தான் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாடுகள். ஆனால், மர்மங்கள் நிரம்பிய நிலவின் தென்பகுதியில் இதுவரை எந்த நாடும் வெற்றிகரமாக தரையிறங்கவில்லை. அந்த வரலாற்று சாதனையை செய்து முடிப்பதற்காகத்தான் சந்திரயான்-3 தயாராகியபோது ரஷ்யாவின் லூனா-25 வெற்றிகரமாக நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு முன்பாக தென்துருவ தரையிறக்க சாதனை ரஷ்யாவிற்கு சொந்தமாகிவிடுமோ என உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் ரஷ்யாவின் முயற்சி பலனளிக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக லூனா-25 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவில்லை. 

ஆனால் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கி உலகின் முதல் சாதனை படைத்துள்ளது.

வாஷிங்டன், ஜூன் 30-

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண சென்ற 'டைட்டன்' நீர்மூழ்கி வெடித்து சிதறிய சம்பவத்தை தொடர்ந்து அதில் பயணித்த 5 கோடீஸ்வரர்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 1912ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் 'டைட்டானிக்' கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. அதன் சிதைந்த பாகங்களை பார்க்கும் ஆர்வத்தில் 5 கோடீசுவரர்கள் கடந்த 18ஆம் தேதி ஆழ்கடல் பயணம் மேற்கொண்டனர். ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்த 'டைட்டன்' நீர்மூழ்கியில் அவர்கள் பயணித்தனர்.

அவர்களை பற்றி 4 நாட்களாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் 22ஆம்  தேதி அறிவித்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பது தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் கனடா அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கியின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியது.

நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களுடன், மனித உடல் பாகங்கள் என கருதப்படும் பொருட்களும் மீட்கப்பட்டு இருப்பதாக கடலோர காவல்படை கூறியுள்ளது. 

இது, நீர்மூழ்கி பற்றிய விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீட்கப்பட்ட பாகங்கள், கனடா நாட்டின் நியூபவுண்ட்லேண்ட் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றை கனடாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். 

சர்வதேச விசாரணை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அந்த பாகங்கள் அமெரிக்காவுக்கு கொண்டு வந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க கடலோர காவல் படை கூறியுள்ளது.

 'டைட்டன்' நீர்மூழ்கி எப்படி வெடித்தது? இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பதை அறிய இந்த பாகங்கள் உதவும் என்று கடலோர காவல்படை தலைவர் ஜேசன் நியுபேயர் தெரிவித்தார். 

மேலும், மனித உடல் பாகங்களாக கருதப்படுபவை, பலியான 5 பேரின் உடல் பாகங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஜகார்த்தா ஜூன் 26

இந்தோனேசியாவில் மீனவர் ஒருவர் 20 ஆண்டுகாலமாக ஒரு முதலையுடன் நட்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த உலகில் சுயநலத்திற்காக பழகும் சில நண்பர்களை முதலை என்று அழைப்பதுண்டு .ஆனால் 59 வயதான அம்போ , ஒரு முதலையே நண்பராக வைத்துள்ளார்.

மீனவரான அம்போ நீண்டகாலமாக  தான் வசிக்கும் பகுதியில்  படகில் மீன் பிடித்து வாழ்கிறார். அப்படி  26வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்றபோது 1 மீட்டர் அளவிலான ஒரு  முதலையை ஆற்றின் ஓரம் கண்டுள்ளார்.

அப்போது பசியில் இருந்த முதலைக்கு. இவர் உணவு வழங்கினார். பிறகு அந்த முதலை அவரை பின் நோக்கி வந்தது. அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்  அந்த முதலை  காணாமல் போனது.

மறுநாள் அதே நேரம்  அவரின் படகு பக்கத்தில் அந்த முதலை வந்தது. அம்போவும் அந்த முதலைக்கு உணவு கொடுத்தார். இப்படி தினமும் அவரை காண அந்த முதலை வந்த போது இருவரும் நண்பர்களாகினர். அம்போ அந்த  முதலைக்கு ரிஸ்கா என பெயர் வைத்தார். இப்படி  இவர்களது நட்பு 26 வருடமாக நீடிப்பதாக அம்போ தெரிவித்தார். இப்போது ரிஸ்கா 4 மீட்டர் அளவில் வளர்ந்து பார்த்தாலே பயம் ஏற்படும் அளவில்  உள்ளது. இருந்தபோது அதே குட்டி முதலை போல் தன்னிடம் நடத்துக்கொள்ளும் ரிஸ்காவிற்கு ஒரு நாளைக்கு 3 கோழியை உணவாக தருவதாக  அம்போ தெரிவித்தார்.

தான் வீட்டில் இல்லாத போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் என் படகு பக்கத்தில் ரிஸ்காவிற்கு உணவு வைக்கும் படி  அண்டை வீட்டாரிடம் உதவி கேட்பேன். அவர்களும் உதவி  செய்வார்கள். இது நாள்வரை  ரிஸ்கா  பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அளவில் நடந்துக் கொள்ளவில்லை என்றாலும் நாங்கள் எப்போது எச்சரிக்கையுடன் பழகுவோம் என அம்போ தெரிவித்தார்.

வாஷிங்டன், ஜூன்.23-

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட நீர்மூழ்கிக் கப்பலில் சென்று காணாமல் போன ஐவர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

 டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் பார்வையிட  சென்ற ஐவர் பயணித்த கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த  ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐந்து நாள் தேடுதல் பணி முடிவுக்கு வந்ததுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு அடியில் சென்று காணாமல் போன இந்த நீர்மூழ்கி கப்பலை தேடும்படி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அவ்வகையில் அந்த நீர்மூழ்கிக் கப்பல், டைட்டானிக் அருகே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே டைட்டானிக் அருகே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கொண்டு அந்தக் கப்பல் சேதமடைந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, OCEANGATE EXPEDITIONS நிறுவனத்திற்குச் சொந்தமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல்  கடந்த ஞாயிற்றுக்கிழமை அதன் பயணம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பை இழந்தது .

இதனால் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. 

இந்த நீர்மூழ்கி கப்பலில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெரும் வர்த்தகர் ஷாஸடா டாவூட் (வயது 48), அவரின் மகன் சுலேமான் (வயது 19), பிரிட்டன் நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் ( வயது 58), போல் ஹென்ரி (வயது 77)  மற்றும் ஸ்டோக்டன் ருஷ் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், ஜூன் 21-
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கிரேப் ஹோல்டிங் நிறுவனம் அதன் மொத்த பணியாளர்களில் 11 விழுக்காடு அதாவது 1,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

செலவுகளை குறைப்பதற்கும் தரமான சேவை நீண்ட காலம் தொடர்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனி டான் தெரிவித்தார்.

தொற்று நோய் தாக்குதலுக்கு பின்னர் அதிக வேலையாட்கள் பணி நீக்கம் செய்வது இம்முறைதான். வணிக சூழலுக்கு ஏற்ப மறுசீரமைப்பு முயற்சியாக இது உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

2012இல் நிறுவப்பட்ட கிரேப் பயன்பாடு இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட எட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விநியோக சேவைகள், பயணம் மற்றும் நிதி சேவைகளை வழங்கிவருகிறது.

தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் அரை மாத சம்பளமும் சினைவு பரிசும் வழங்கப்படும் என் அந்தோனி டான் தெரிவித்தார்.

சோமாலியா,ஜூன்.11-
 
தெற்கு சோமாலியாவின் கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு கிடந்த பொருளை கையில் எடுத்துள்ளனர்.

அப்போது அந்த பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் 27 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன், ஜூன் 9-
கனடாவில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. இந்த தீயை அணைப்பதற்காக கனடா அரசாங்கம் அண்டை நாடுகளின் உதவியையும் நாடி உள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக அண்டை நாடான அமெரிக்காவிலும் பல இடங்கள் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு முகமூடி அணிந்து வெளியே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் காற்றின் தரம் குறித்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் அளவீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் நியூயார்க், பென்சில்வேனியா உள்பட முக்கிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியதாக பதிவாகி உள்ளது. இந்த அளவு 300-ஐ தாண்டினாலே ஆபத்து என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அங்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டு,மே 6-
 நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், டென்சி ஷெர்பா 1999 என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவரெஸ்ட் மலையேற்ற சாகச பயண வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோவில், எவரெஸ்ட் சிகரம் அருகே பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பதை அம்பலப்படுத்தி உள்ளார். வீடியோவுடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இங்கு மலையேற்ற குழுவினர் கூடாரங்கள் அமைத்து தங்கி சென்று உள்ளனர். இதுபோன்ற மோசமான முகாமை நான் பார்க்கவில்லை. ஏராளமான கூடாரங்களை விட்டுச் சென்றுள்ளனர். காலியான ஆக்சிஜன் சிலிண்டர்கள் சிதறிக் கிடக்கின்றன. கோப்பைகள், காகிதங்கள், பிளாஸ்டிக் என குப்பைக்கிடங்காக காட்சியளிக்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்கள் குப்பைகளை வீசி செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

எவரெஸ்டில் குப்பைகளை வீசி செல்வோர் மீது நேபாள அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லூக் போய்ஸ்நார்ட் தலைமையில் 10 மலையேற்ற வீரர்கள் அண்மையில் எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே 12 மைல் தொலைவில் உள்ள பகுதிகளில் 3.7 டன் குப்பைகளை அகற்றினர். இதுகுறித்து அவர் கூறும்போது, “எவரெஸ்ட் பகுதிகளில் குவியும் குப்பைகளில் 45 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். இமயமலையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.

 

காபூல், ஜூன் 6-
 ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி பாக்ஸ் நியூஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், அந்த மாகாண கல்வி துறை இயக்குநர் முகமது ரஹ்மானி கூறும்போது, நஸ்வான்-இ-கபோத் ஆப் பள்ளியில் 60 குழந்தைகளும் மற்றும் நஸ்வான்-இ-பைசாபாத் பள்ளியில் 17 குழந்தைகளும் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டனர்.

இந்த இரு பள்ளிகளும் ஒன்றுக்கொன்று அருகே உள்ளன. இந்த இரு பள்ளிகளை இலக்காக கொண்டு இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாங்கள் அனைத்து மாணவிகளையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

கல்வி துறை விசாரணையை தொடங்கி நடத்தி உள்ளது. இதில், 3-வது நபருக்கு பணம் கொடுத்து கொடூர தாக்குதலை நடத்த சிலர் திட்டமிட்டு உள்ளனர் என தெரிகிறது என ரஹ்மானி கூறியுள்ளார்.

எனினும், மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை அவர் வெளியிடவில்லை என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது. அண்டை நாடான ஈரான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவிகளை இலக்காக கொண்டு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் இதனுடன் நினைவு கூரப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான மாணவிகள் பாதிக்கப்பட்டனர். எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாரென்ற விவரங்களை பற்றிய எந்தவித தகவலும் வெளிவரவில்லை. எந்த வகை ரசாயனம், தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிய வரவில்லை.

ஸ்டாக்ஹோம், ஜூன் 5

 உடலுறவுக்கும் விளையாட்டுக்கும் தொடர்பு உள்ளதா? பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே பதில். ஆனால் தொடர்பு இருப்பதாக ஸ்வீடன் தெளிவுபடுத்துகிறது.

மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.


இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.

இந்த சாம்பியன்ஷிப் பல வாரங்கள் நீடிக்கும் மற்றும் பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் போட்டியிட வேண்டும். போட்டியில் 16 பிரிவுகள் உள்ளன. போட்டியாளர்கள் பொதுமக்கள் மற்றும் ஐந்து நடுவர் குழு அளித்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும் மற்றும் பங்கேற்பாளர்கள் முன்னேற போதுமான புள்ளிகளைப் பெற வேண்டும். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பாலியல் சார்புகளும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியின் போது மிகவும் சுறுசுறுப்பான ஜோடிகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். இது குறித்து ஸ்வீடிஷ் பெடரேஷன் ஆப் செக்ஸ் தலைவர் டிராகன் பிராட்டிச் கூறியதாவது:- உடலுறவை ஒரு விளையாட்டாக மாற்றுவது அவசியம், இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உற்சாகப்படுத்துகிறது. மேலும் இளைஞர்கள் பாதுகாப்பான மற்றும் மாறுபட்ட பாலியல் முறைகளை பயிற்சி செய்ய அனுமதிக்கிறது, எனவே இது போன்ற போட்டிகள் காலத்தின் தேவை என கூறினார். இந்த விளையாட்டில் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் பங்கேற்பாளரின் மகிழ்ச்சி நேரடியாக மதிப்பெண்ணை பாதிக்கிறது. ஸ்வீடிஷ் செக்ஸ் பெடரேஷன் செக்ஸ் ஒரு விளையாட்டாக படைப்பாற்றல், வலுவான உணர்ச்சிகள், கற்பனை, உடல் தகுதி, சகிப்புத்தன்மை மற்றும் செயல்திறன் தேவை என்பதை அங்கீகரிக்கிறது. இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி. இதுவரை சுமார் இருபது பேர் சாம்பியன்ஷிப்பிற்காக பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகதிசு, சோமாலியாவில் பாதுகாப்புப் படையினருக்கும், அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகதிசுவிலிருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர். முன்னதாக அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு தீவிரமாக நம்பி இருந்தது. இந்த நிலையில் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து உகாண்டா ராணுவத்தினர் அல்-ஷபாப் பயங்கரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுக்கு உதவிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாக்ஹோம், ஜூன் 4-
உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.

இந்தப் போட்டி வருகிற ஜூன் 8-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த போட்டியை நடத்த 'சுவீடன் செக்ஸ் பெடரேஷன்' ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வாஷிங்டன், ஜூன் 3-

நாம் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

40 முன்னணி சர்வதேச இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட எர்த் கமிஷன் குழு பூமி எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

அதிகப்படியான வளங்கள் சுரண்டல், அலட்சியம், பல சுயநலக் குற்றங்களால் பூமியை நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மனித ஆதிக்கம் பூமியின் முக்கிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மையை படிப்படியாக சீர்குலைத்து வருகிறது. எதிர்கால சந்ததியினர் மற்றும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் நாம் பெரும் ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.

புவி வெப்பமடைதல், வறட்சி, கடும் வெள்ளம் போன்ற சீற்றங்களால் பூமியின் ஆக்கிரமிப்புகளை நாம் கவனிக்கவில்லை என்றால் நிலைமை கைமீற அதிக காலம் எடுக்காது. ஆய்வின் ஒரு பகுதியாக, சமநிலை முற்றிலுமாக சீர்குலைந்து மிகவும் சிக்கலாக மாறிய பல பகுதிகளை ஆய்வுக் குழு கண்டறிந்து உள்ளது. இதனை ஹாட்ஸ்பாட் என அழைக்கிறார்கள். 

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கண்டத்திலும் இதுபோன்ற ஹாட்ஸ்பாட்கள் இருப்பது கவலையளிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பல பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஆசியாவில் கிரையோஸ்பியர் மலை விரைவான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. பனிப்பாறைகள் உருகுவதில் தொடங்கி, நடக்கக்கூடாத அனைத்து எதிர்மறை விளைவுகளும் அபாயகரமான வேகத்தில் நடந்து வருகின்றன. இதன் விளைவாக, முழு பிராந்தியமும் மிக விரைவில் சமூக மற்றும் பொருளாதார எழுச்சிகளை சந்திக்கும்" என்று இணை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கிறிஸ்டி ஏபி எச்சரித்து உள்ளார். 

நில பாதுகாப்பு தொடர்பாக சுமார் 8 வகையான குறிகாட்டிகள் முக்கியமானதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர். புவி ஆணையத்தின் ஆய்வில் 7 குறியீடுகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கீவ்,ஜூன்.02-

நேட்டோ அமைப்போடு சேர விரும்பும் உக்ரைனுக்கு எதிராக ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கி 15 மாதங்களாக நீடித்து வருகிறது. நவீன ராணுவ தளவாடங்கள், வான்வெளி தாக்குதல், கனரக பீரங்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ரஷியா உக்ரைனை அச்சுறுத்தி வந்தது. 

இந்தநிலையில் ராணுவவீரர்கள் பலர் போரில் இறந்த காரணத்தினால் இருநாடுகளிலும் களவீரர்கள் தட்டுப்பாடு நிலவியது.

இதன் அடுத்த கட்டமாக தற்போது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் உக்ரைன் தலைநகர் கீவில் 17 முறை டிரோன் தாக்குதலில் ரஷியா ஈடுபட்டது. ரஷியாவின் வான்வெளி ஆயுதங்களை இடைமறித்து தாக்கக்கூடிய நவீன வான்பாதுகாப்பு தளவாடங்களை உக்ரைன் ராணுவம் கொண்டுள்ளது. இடைமறிப்பின் போது வெடித்து சிதறும் டிரோன்களில் உதிரி பாகங்களில் சிக்கி பொதுமக்கள் இறந்து வருகிறார்கள்.

நேற்று கீவ் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் இறந்தனர். இதனால் கீவ் நகரில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்,ஜூன்.02-
சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு செய்தது. 

அதில் டெலிவிஷன் தொடர் பாணியில் ஒரு விளையாட்டு அரங்கை தயார் செய்து ஊழியர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது. அதில் பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே கட்டி தொங்கவிடப்பட்டது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

இதில் அந்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம் ஆறுமுகம் (வயது 42) என்பவர் ராட்சத பலூனை கைப்பற்றி வெற்றி பெற்றார். தமிழரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெற்றி பெற்ற ஆறுமுகத்திற்கு கூடுதல் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்கனவே கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கைக்கெடிகாரம் உள்பட பல பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்கியது நினைவுகூரத்தக்கது.

சிட்னி, ஜூன் 1-
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்று இருக்கிறார். 

இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மே 31ஆம் தேதி அர்னால்டு LVMH பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பிரெஞ்சு வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு துவங்கியதில் இருந்தே கடும் போட்டி நிலவி வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன், ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்தே, LVMH பங்குகள் பத்து சதவீதம் வரை சரிவடைந்து வருகின்றன. 

ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது. மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டாலர்களை ஈட்டியிருக்கிறார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். 

ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டாலர்கள் ஆகும்.

பீஜிங், ஜூன் 1-
தென் சீன கடல், தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது சமீப காலமாக மோசமான சூழலை நோக்கி சென்று வருகிறது.

இதைப்போல உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை பகைத்து வருகின்றன. உக்ரைனில் இருந்து ரஷியாவை வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தாவிடில், சீனாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு கமிஷன் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதை அதிபர் ஜின்பிங் தலைமையேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசும்போது, சீனாவுக்கு பாதுகாப்பு சவால் அதிகரிப்பதாகவும், எனவே எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருக்குமாறும் பாதுகாப்பு படையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.


தேசிய பாதுகாப்பு அமைப்பையும், அதன் திறனையும் நவீனமயமாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உண்மையான போர் மற்றும் நடைமுறை சிக்கல்களை கையாளுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஜின்பிங் கூறினார்.

மாஸ்கோ, மே 31-
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன. இதன் மூலம் உக்ரைனும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷியா வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளும் வீசப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் ஹோலோசிவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்தது. இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் கட்டிடம் தீப்பிடித்ததில் உடல் கருகி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கிடையே இடைமறித்து தாக்கப்பட்ட டிரோன்கள் கீழே விழுந்ததில் பெச்செர்ஸ்கி நகரில் 3 கார்கள் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ராணுவமும் ரஷியா மீது டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மாகாண கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோவ் தெரிவித்தார். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆண்ட்ரே கூறினார்.

பீஜிங், மே 31-
ரஷியா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். இதற்காக விண்வெளி துறையில் சீனா கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளது.

அந்தவகையில் 400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்தது. அதன்படி சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

திரிபோலி, மே 31-
லிபியா நாட்டில் 2011-ம் ஆண்டு அரசுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சிக்கு பின்னர், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை மற்றும் மோதல் போக்கும் காணப்பட்டது. இதனால், சண்டை, உள்நாட்டு குழப்பம் என்ற சூழலை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பயன்படுத்தி கொண்டது.

ஈராக் மற்றும் சிரியாவில் அடித்தளம் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு லிபியாவிலும் வளர்ச்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, 2015-ம் ஆண்டு திரிபோலி நகரில் கொரிந்தியா ஓட்டலில் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த படுகொலை பற்றி லிபியாவில் மிஸ்ரதா நகரில் உள்ள கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில், 23 பேருக்கு மரண தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுதவிர, ஒரு நபருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்பே, 3 பேர் உயிரிழந்து விட்டனர். 3 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

டோக்கியோ, மே 31-
கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது. ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்திருந்தது. மேலும் தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருதார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் டுவீட் செய்தது.

இந்த சூழலில் வட கொரியா இன்று (புதன்கிழமை) தெற்கு நோக்கி விண்வெளி செயற்கைக்கோளை ஏவியது என்றும், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் அவசர எச்சரிக்கைகள் மற்றும் சுருக்கமான வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டது என்றும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

பியாங்யாங், 
கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக  வடகொரியா ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை மேற்கொண்டு வருகிறது.

 இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது.

ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்துள்ளது. எனவே தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

லிமா,மே.30-
 புவி வெப்பமாதல் காரணமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் ஒழுங்கற்ற காலநிலை நிலவி ஏற்படுவது எல்நினோ விளைவு என அழைக்கப்படுகிறது. 

அதன்படி தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இதனை சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை என கூறப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் உள்ள 131 மாவட்டங்களில் அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்து பெரு அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

நியூயார்க், மே.30-

சூரிய மண்டலத்தில் நாம் வாழும் பூமியை சுற்றி பல குறுங்கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றின் பயணம், பாதை உள்ளிட்டவற்றை பற்றி அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், 100 அடி நீளமுள்ள குறுங்கோள் ஒன்று பூமிக்கு மிக நெருக்கத்தில் இன்று வரக்கூடும் என நாசா தெரிவித்து உள்ளது. இதேபோன்று பூமியை நெருங்கி வரும் மொத்தம் 5 குறுங்கோள்களின் பட்டியலை நாசா வெளியிட்டு உள்ளது.

அவற்றில் 2023 JZ4 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு விமானம் அளவுக்கு பெரியது. 100 அடி நீளத்திற்கு, பூமியை 14.3 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி செல்கிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 57,885 கி.மீ. ஆக இருக்கும்.

2021 KO2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், 28 அடி நீளத்திற்கு, பஸ் அளவுக்கு பெரியது. இது 37.5 லட்சம் மைல் தொலைவில் இன்று பூமியை நெருங்குகிறது. அப்போது மணிக்கு 50,215 கி.மீ. வேகத்தில் அது பயணிக்கும்.

2023 KV3 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, பூமியை 29.6 லட்சம் மைல் தொலைவில் இன்று நெருங்கி வருகிறது. இதேபோன்று, 2023 KV2 என பெயரிடப்பட்ட குறுங்கோள் ஆனது, ஒரு பஸ் அளவுக்கு பெரியது. 73 அடி நீளத்திற்கு, 15.8 லட்சம் மைல் தொலைவில் பூமியை இன்று நெருங்கி செல்கிறது. 2023 KU2 என பெயரிடப்பட்ட குறுங்கோள், ஒரு பஸ் அளவுக்கு பெரிய, 36 அடி நீளம் கொண்டது. இது பூமியை 6.75 லட்சம் மைல் தொலைவில் நெருங்கும்போது அதன் வேகம் மணிக்கு 52,800 கி.மீ. ஆக இருக்கும்.

பெய்ஜிங், மே.29-

 சீனாவில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் அரசாங்கத்துக்கு சென்றன.
 
 அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை சீன அரசாங்கம் மேற்கொண்டது. இதில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந்த நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம் ரெட் ரிவர் நகரில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவத்தில்  மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில்  பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரபலமாக நடைபெற்று வந்த இந்த மோட்டார் சைக்கில் பேரணியில் ஏற்ப்பட்ட இச்சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர் . நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 28 ஆயிரம் பேர் தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் இப்பேரணியில்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சியோல், மே.29-

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு பறந்த  விமானத்தின் கதவை ஆடவர் ஒருவர் திறந்ததில் அதில் பயணித்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த ஆடவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதில் அந்த ஆடவர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார். எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான், மே 28-
சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. 

அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் அப்போதைய சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த சீனா இதுபோன்ற செயலில் அமெரிக்கா இனி ஈடுபட்டால் தைவான் மீது படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய்-இங்-வென் கடந்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை அவர் சந்தித்து பேசியது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

அதுமுதல் தைவான் எல்லையில் சீனா அடிக்கடி போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கள் நாட்டு எல்லையில் 33 சீன போர் விமானங்கள் தென்பட்டதாகவும், அந்த போர் விமானங்கள் தைவானின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகவும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மீண்டும் அதிகரித்து உள்ளது.

அமெரிக்கா, மே 28-
இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக தீபாவளி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல்வேறு எம்.பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது கிரேஸ் மெங் கூறுகையில், `தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அதனை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவும் இந்த சட்டம் வாய்ப்பாக இருக்கும்' என கூறினார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கும் சட்டத்தை சமீபத்தில் இயற்றிய நிலையில் தற்போது இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பீஜிங், மே 28-
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள டச்செங் பகுதியில் ஒரு பட்டாசு கடை உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர் மாயமாகி உள்ளதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அந்த கடை சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சியோல், மே 27-
தென் கொரியாவின் ஜேஜூ விமான நிலையத்திலிருந்து 194 பயணிகளுடன் இன்று தேயாகு விமான நிலையம் வந்தடைந்த ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321-200 ரக விமானம் தரை இறங்க தயாராகி கொண்டிருந்தது.

தரையில் இருந்து சுமார் 200மீ உயரத்தில் விமானம் இருந்தபோது, அவசரகால வெளியேற்ற கதவின் அருகே அமர்ந்திருந்த ௩௦ வயது மதிக்கத்தக்க நபர் கதவை திறந்துள்ளார். இதனால் விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திடீரென திணறல் ஏற்பட்டது.

பிறகு சரியாக மதியம் 12.40 மணி அளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் 9 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பயணி கதவை திறந்தது குறித்து காரணம் எதுவும் சொல்லப்படாத நிலையில் ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவசரகால கதவுகளை நிர்வகிப்பதற்கான நெறிமுறைகளை பின்பற்றியதா என்பதை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பேஜிங்,மே 26.
சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின.

பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது.

மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் பரவல் மெல்ல தலை தூக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பு மாத இறுதியில் ஒரு வாரத்தில் 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இதேபோல் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிட்னி, மே 26-
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் பாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் மாறுவதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலன் பாடோர், மே 26-
கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சுக்பாதர் மற்றும் கென்டி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பெய்த கனமழையில் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மின்சாரம் இல்லாததால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. இதற்கிடையே கால்நடை மேய்க்க சென்ற 130-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வந்தது. அதன்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 125 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 2 பேர் இறந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் சுமார் 2.90 லட்சம் கால்நடைகள் பலியாகி உள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிட்னி, மே.25-
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் உலோகங்கள் உருக்கும் ராட்சத எந்திரங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை சோதனை செய்துள்ளனர்.

அந்த எந்திரங்களை என்ஜினீயரிங் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்தபோது அவற்றின் உள்ளே பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. 

300 கிலோ அளவில் மெத்தபேட்டமைன் என்னும் உயர்ரக போதைப்பொருளை கைப்பற்றி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் எந்த நாட்டில் இருந்து வந்தது, கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அமெரிக்கா, மே 23-
தென்அமெரிக்க நாடான கயானாவின் மஹ்டியாவில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மீட்பு படையினர் விடுதிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் அதிகாலை நேரம் மாணவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக செத்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாஷிங்டன்,மே.23-

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளிக்கு பல செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது. அதன் கிளை நிறுவனமான புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தற்போது வணிக குழுவை அனுப்பி உள்ளது.

ஆக்சியம் ஸ்பேஸ்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இந்த வணிக குழு கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆக்சியம் ஸ்பேஸ்-1 கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

காத்மாண்டு, மே.22-

எவரெஸ்ட் சிகரத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மலையேறும் பருவத்தில் இது  10ஆவது மரண எண்ணிக்கையாகும்.

இம்முறை 40 வயதான ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உயிரிழந்துள்ளார்.மலையேறும் நடவடிக்கையில் அவர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை எவரெஸ்ட் மலையேறும் நடவடிக்கையின் போதும் 5 மரண சம்பவங்கள் பதிவாகிறது.2019ஆம் ஆண்டு 11 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 4 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளனர்.

அவ்வகையில் ஒரு துயரச்சம்பவமாக இம்முறை மலேசியாவைச் சேர்ந்த அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கோப் மரணமடைந்தார்.

அதே வேளையில் அங்கு  முஹம்மத் ஹவாரி ஹஷிம் எனும் மலேசியர் காணாமல் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்ரிட், மே.22-
ஸபெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்தது. அங்கு பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக தீ மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனால் காடுகளை சுற்றியுள்ள கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தீயணைப்பு படையினர் அந்த காட்டுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 8 ஆயிரத்து 500 எக்டேர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன், மே 22.
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 89 லட்சத்து 82 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 29 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 29 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 80 ஆயிரத்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

காத்மாண்டு, மே.22-

இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.

நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார். 

கடந்த 2010-ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ, மே 21.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் இன்று 451வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அதேவேளை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் போருக்கு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் இந்தியா உள்பட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கியும் கலந்துகொண்டார். அவர் ஜி7 நாடுகளின் தலைவர்களை சந்தித்தார். அதன் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு கடந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி கூறுகையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மற்றும் தனிப்பட்ட முறையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த மோதலை அரசியல், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இது மனிதாபிமானம், மனித மதிப்பு தொட்ர்பான பிரச்சினையாக பார்க்கிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் தொலைபேசியில் பேசியுள்ளோம். நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் நேருக்கு நேர் சந்தித்துள்ளோம். உக்ரைன் போர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகத்திலும் பல்வேறு பாதிப்புகளை போர் ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

மாஸ்கோ, மே 21-
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒராண்டாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் சர்வதேச நாடுகள் உக்ரைன் அரசுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

அதே சமயம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. கடந்த வெள்ளியன்று மேலும் நூற்றுக்கணக்கான ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷிய அரசு தடை விதித்துள்ளது.

மாஸ்கோ, மே 21-
ரஷியாவின் வெளியுறவு துறை துணை மந்திரி அலெக்சாண்டர் கிரஷ்கோ அந்நாட்டின் 31-வது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான கவுன்சில் கூட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறும்போது, மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக போர் சூழலை அதிகரிக்கும் வகையிலான நிலைப்பாட்டை எடுக்கும் நிகழ்வை நாம் காண முடிகின்றது.

இதனால், அவர்களுக்கு பெரிய அளவிலான ஆபத்துகள் ஏற்பட கூடும். நாங்கள் திட்டமிடும்போது, இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படும். எங்களது இலக்குகளை அடைய அனைத்து தேவையான விசயங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் சட்டவிரோத போருக்கு எதிராக ஒன்றாக நிற்போம் என ஜி-7 நாடுகள் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Recent News