அஸ்தானா, டிச.26-
கஸகஸ்தானின் மேற்குப் பகுதியில் பறந்த Azerbaijan Airlines இன் Embraer 190 ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 38 பேர் உயிரிழந்தனர்.
பாகுவிலிருந்து தெற்கு ரஷியாவின் குரோஸ்னி நோக்கிச் சென்ற 67 பயணிகளைக் கொண்ட விமானம், கஸ்பியன் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அக்டாவ் நகரின் அருகே விபத்துக்குள்ளானது.
இந்த விமான விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என கஸகஸ்தானின் துணை பிரதமர் கனாட் போசும்பாயேவ் Interfax எனும் ரஷியாவின் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குகின்றனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 150 மீட்பு பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி வருகின்றனர் என
கஸகஸ்தான் அவசரநிலை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கஸகஸ்தான் அரசு விபத்துக்கான விசாரணையைத் தொடங்கியுள்ளதை தெரிவித்தாலும், விபத்து காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
விமானத்தில் 62 பயணிகள் உட்பட , 5 விமான குழு உறுப்பினர்கள், மொத்தம் 67 பேர் விமானத்தில் இருந்ததாக Azerbaijan Airlines அறிவித்துள்ளது. முதலில் விமானம் வானில் பறக்கும் போதே பறவைகளுடன் மோதியதாக விமானி வெளியிட்ட தகவளில் தெரியவந்துள்ளது.
இதனிடையே கஸகஸ்தான் போக்குவரத்து அமைச்சு வெளியிட்ட பட்டியலின்படி விமானத்தில் 37 அசர்பைஜானியர்கள், 6 கஸகஸ்தானியர்கள் , 3 கிர்கிஸ்தானியர்கள் மற்றும் 16 ரஷியர்கள் விமானத்தில் இருந்துள்ளனர்.
விபத்து தொடர்பான எந்த தகவலையும் இந்த நேரத்தில் வெளியிட முடியாது என்று அசர்பைஜான் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் விசாரணை அதிகாரிகள் தற்பொழுது விபத்துத் தளத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரையில் விமானத்தின் ப்ளாக் பாக்ஸ் எனும் பறக்கும் தரவுகளை பதிவு செய்யும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதோடு வியத்தில்
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க மருத்துவ குழுவை கொண்டு செல்ல ஆஸ்தானாவிலிருந்து சிறப்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக கஸகஸ்தானின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
-காளிதாசன் இளங்கோவன்
0 Comments