loader
நண்பர்கள்  சிலரை முதலை என்று அழைப்போம்..  26 வருடமாக ஒரு முதலையை நண்பராக வைத்துள்ளார் அம்போ!

நண்பர்கள் சிலரை முதலை என்று அழைப்போம்.. 26 வருடமாக ஒரு முதலையை நண்பராக வைத்துள்ளார் அம்போ!

ஜகார்த்தா ஜூன் 26

இந்தோனேசியாவில் மீனவர் ஒருவர் 20 ஆண்டுகாலமாக ஒரு முதலையுடன் நட்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த உலகில் சுயநலத்திற்காக பழகும் சில நண்பர்களை முதலை என்று அழைப்பதுண்டு .ஆனால் 59 வயதான அம்போ , ஒரு முதலையே நண்பராக வைத்துள்ளார்.

மீனவரான அம்போ நீண்டகாலமாக  தான் வசிக்கும் பகுதியில்  படகில் மீன் பிடித்து வாழ்கிறார். அப்படி  26வருடங்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்றபோது 1 மீட்டர் அளவிலான ஒரு  முதலையை ஆற்றின் ஓரம் கண்டுள்ளார்.

அப்போது பசியில் இருந்த முதலைக்கு. இவர் உணவு வழங்கினார். பிறகு அந்த முதலை அவரை பின் நோக்கி வந்தது. அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்  அந்த முதலை  காணாமல் போனது.

மறுநாள் அதே நேரம்  அவரின் படகு பக்கத்தில் அந்த முதலை வந்தது. அம்போவும் அந்த முதலைக்கு உணவு கொடுத்தார். இப்படி தினமும் அவரை காண அந்த முதலை வந்த போது இருவரும் நண்பர்களாகினர். அம்போ அந்த  முதலைக்கு ரிஸ்கா என பெயர் வைத்தார். இப்படி  இவர்களது நட்பு 26 வருடமாக நீடிப்பதாக அம்போ தெரிவித்தார். இப்போது ரிஸ்கா 4 மீட்டர் அளவில் வளர்ந்து பார்த்தாலே பயம் ஏற்படும் அளவில்  உள்ளது. இருந்தபோது அதே குட்டி முதலை போல் தன்னிடம் நடத்துக்கொள்ளும் ரிஸ்காவிற்கு ஒரு நாளைக்கு 3 கோழியை உணவாக தருவதாக  அம்போ தெரிவித்தார்.

தான் வீட்டில் இல்லாத போது அந்த குறிப்பிட்ட நேரத்தில் என் படகு பக்கத்தில் ரிஸ்காவிற்கு உணவு வைக்கும் படி  அண்டை வீட்டாரிடம் உதவி கேட்பேன். அவர்களும் உதவி  செய்வார்கள். இது நாள்வரை  ரிஸ்கா  பகுதி வாழ் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அளவில் நடந்துக் கொள்ளவில்லை என்றாலும் நாங்கள் எப்போது எச்சரிக்கையுடன் பழகுவோம் என அம்போ தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News