loader
வெளிநாட்டு முதலீடுகள்  அதிகரித்துள்ளதாக அரசு அறிவிக்கிறது: ஆனால் செயல்பாடுகள் இல்லை! -துன் மகாதீர்

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாக அரசு அறிவிக்கிறது: ஆனால் செயல்பாடுகள் இல்லை! -துன் மகாதீர்


கோலாலம்பூர், ஜூன் 24-
நாட்டிற்கு அந்நிய முதலீட்டூ வரவுகள் அதிகரித்துள்ளதாக அரசு அறிவிப்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் அறிவிப்புகள் மட்டுமே வருவதாகவும் முதலீடுகள் எதுவும் வருவதுபோல் இல்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் இருந்து அதிகளவான அந்நிய நேரடி முதலீடு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்பாடுகள் எதுவும் இல்லை என அவர் சொன்னார்.

அரசு செய்துள்ள பெரும்பாலான அறிவிப்புகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகும். அவை நிரந்தர முதலீட்டு ஒப்பந்தம் கிடையாது. 

கடந்த மார்ச் மாதம், பிரதமர் அன்வார் இப்ராஹிம், பல நாடுகளுடனான நாட்டின் வெற்றிகரமான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பணியின் விளைவாக, இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, நாட்டிற்கு வெ.76.1 பில்லியன் அளவிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடிந்தது என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு (யுஏஇ) மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், தொழில்நுட்ப ஜாம்பவான்களான டெஸ்லா, என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை மலேசியாவில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.

நாட்டிற்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ள அந்நிய முதலீட்டு தொகையை உறுதிப்படுத்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.

முதலீடு செய்வதாக இதுவரை பிர நாடுகள் கூறுவது மலேசிய அரசாங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதியாகும். ஆனால் வாக்குறுதியை நிரைவேற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என துன் மாகதீர் தெரிவித்துள்ளார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News