loader
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலை அரசாங்கத்தின் மீதான வாக்கெடுப்பாக மாற்றுவது பொருத்தமற்றது! -பட்லினா சிடேக்

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலை அரசாங்கத்தின் மீதான வாக்கெடுப்பாக மாற்றுவது பொருத்தமற்றது! -பட்லினா சிடேக்

 

கோலாலம்பூர், ஜூன் 28-
சுங்கை பக்காப் இடைத்தேர்தலை அரசாங்கத்திற்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்றுமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை, குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் விதமாக மாற்றுவது பொருத்தமற்றது என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

ஏனென்றால், சமூகத்தின் குரலாக விளங்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த நடவடிக்கை ஜனநாயக செயல்முறையை மாசுபடுத்தும் என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பிரச்சாரங்கள் மேலோட்டமானவை. வாக்குப் பெட்டியில்தான் வாக்கும் ஜனநாயகச் செயல்பாடும் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் போராட்டம் நடத்துவது அவ்வளவு ஏற்புடையதல்ல.

உண்மையில் மக்களுக்காக உழைக்கக்கூடிய மற்றும் அவர்களின் குரலை தெரிவிக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுதான் அவசியம் என அவர் சொன்னார்.

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவியான பட்லினா, பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலின் அறிக்கை குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ள சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் அபிடினுக்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜொஹாரி அரிஃபினுக்கும் இடையே போட்டி நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

0 Comments

leave a reply

Recent News