loader
ஊடகச் சுதந்திரம் அவசியமானது!  ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுவிப்பதை  நான் வன்மையாக கண்டிக்கிறேன்! -அமைச்சர்  ஃபாமி ஃபட்ஸில்

ஊடகச் சுதந்திரம் அவசியமானது! ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் விடுவிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! -அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில்

 

கோலாலம்பூர், மே 24-

சமீப காலமாக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது ஊடகவியலாளர்களை தவறாக விமர்சனம் செய்யும்  அரசியல் சார்ந்தவர்கள்  போக்கை கண்டித்து,
தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவல் தொடர்பு துறை அமைச்சர்  ஃபாமி ஃபட்ஸிலிடம்  புகார் கொடுக்க உள்ளதாக மிஜா எனப்படும் மலேசிய இந்திய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குணாளன் மணியம்,  தமிழ் லென்ஸ் இணைய ஊடக ஆசிரியர்  வெற்றி விக்டர்,  ஊடகவியலாளர் புவனேஸ்வரன், பவளச் செல்வன்,  நந்தகுமார்,   மற்றும் இன்னும் சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

மிஜாவின் கண்டனத்திற்கு ஆதரவு கொடுத்து இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் நிலைப்பெற வேண்டும். அரசியல்வாதிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என NUJ எனப்படும்  தீபகற்ப மலேசிய ஊடகவியாளர் சங்கம் தங்களின் கண்டனத்தை தெரிவித்தது.

அதனை தொடர்ந்து, இன்று சரவா ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்த தகவல் தொடர்பு துறை  அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில்  அவர்களிடம்  ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் அவசியமானது. இந்த நாட்டில்  தகவல்களை கொண்டுச் சேர்க்க ஊடகம் மிக பெரிய பங்கை வகிக்கிறது என்பதை அரசியல் தலைவர்கள் நினைவில் வைக்க வேண்டும்.

ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஊடகங்களை அவர்களின் கடமையை செய்ய விடுங்கள், அவர்கள் வெளியிடும் செய்தியில் மாற்று கருத்து இருந்தால் அதற்கு முறையாக மாற்று கருத்து தெரியுங்கள். ஆச்சுறுத்துவது சரியான நடைமுறை இல்லை.

இந்த விவகாரத்தில் எனக்கு இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.  முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம்.
நிச்சயம் ஊடகவியலாளர்களையும் , சங்கத்தையும்  அழைத்து பேசுவேன்.
அவர்கள் புகார் கொடுத்த நபர்களையும் அழைத்து பேசுவேன்  என அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்தார்.

-வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News