கோலாலம்பூர், ஜூன் 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முக்கு ஆதரவு தெரிவித்த பெர்சாத்து எம்.பி.க்கள் 6 பேரின் இருக்கைகள் காலி செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பது இன்று தொடங்கும் மக்களவை அமர்வின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புக்கிட் கன்டாங், லாபுவான், ஜெலி, குவா முசாங், கோல கங்சார் மற்றும் தஞ்சோங் கராங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளை காலி செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு மக்களவையின் சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments