loader
மஇகாவுடன் இணைந்து  மக்கள் சக்தி கட்சி செயல்படும்!  இந்தியர்களின் ஒற்றுமை மூலம் நமது அரசியல் பலத்தை மேலோங்கச் செய்வோம்!  – டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

மஇகாவுடன் இணைந்து மக்கள் சக்தி கட்சி செயல்படும்! இந்தியர்களின் ஒற்றுமை மூலம் நமது அரசியல் பலத்தை மேலோங்கச் செய்வோம்! – டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்

உலு திராம், நவ.28-

மஇகாவின் 80ஆவது ஆண்டு மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன், இந்திய சமூகத்தினர்மத்தியில் கட்சியின் உருமாற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுஎன்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன்தெரிவித்தார்.

 

குறிப்பாக, மஇகாவின் இந்தியர் புளுபிரிண்ட் (Indian Blueprint) மீண்டும் கொண்டுவரப்படும்என்று அம்னோ தேசியத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட்ஜாஹிட் ஹமிடி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

மூன்று மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு இந்தியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையும், அவர்களின் வாக்குகள் தேசிய முன்னணிக்கு ஆதரவாகத் திரும்பியிருப்பதும் முக்கியமானஅரசியல் மாற்றமாகும்.

 

மஇகா என்பது இந்தியர்களின் தாய்க்கட்சி. இதனை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையிலும், இந்திய மக்களுக்கான தனது சேவைகளைமஇகா தொடர்ந்து ஆற்றி வருகிறது என்றார்.

 

தற்போதைய மடானி அரசாங்கத்தில் மித்ரா அமைப்பு இடம்பெற்றிருந்தாலும், அதன்செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மித்ரா மூலம் இந்திய சமூகத்தினருக்குகுறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது கவலைக்குரியதாகும் என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.

 

எனவே, இந்திய சமூகத்தின் நலனையும் அரசியல் பலத்தையும் பாதுகாக்க மஇகாவுடன்மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்படத் தயாராக உள்ளது.

 

இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நமது அரசியல் சக்தி மேலும்வலுப்பெறும். பிரிந்து செயல்படுவதைக் காட்டிலும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமேஇந்திய சமூகத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் வலியுறுத்திப் பெற முடியும்என்றும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News