மலேசிய இந்தியர்களின் தொழில்திறன் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், மஇகாவுக்குச்சொந்தமான டேவ் கல்லூரியை தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி மையமாக(TVET) மாற்றுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ டி.மோகன்தெரிவித்தார்.
மஇகாவின் 80ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இத்திட்டம் 2027ஆம்ஆண்டில் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த டிவெட் மையத்தின் வாயிலாக ஒரே நேரத்தில் சுமார் 2,500 மாணவர்கள்தொழில்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளைப் பெற முடியும்.
குறிப்பாக, எதிர்கால வாகனத் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, மின்சாரவாகனங்களை (EV) பழுதுபார்ப்பதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பக் கருவிகள்மற்றும் உபகரணங்கள் இம்மையத்தில் இடம்பெறும்.
மேலும், ஆளில்லா விமானமான டிரோன் தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துவதுதொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய இளைஞர்களுக்குப் புதிய தொழில்நுட்பத் திறன்களை வழங்கி, வேலைவாய்ப்புச்சந்தையில் அவர்களின் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, டேவ் கல்லூரியை டிவெட் மையமாக உருவாக்குவதற்கான திட்டத்தைச்செயல்படுத்துவதில் மஇகா கவனம் செலுத்தி வருவதாக டத்தோ டி.மோகன் மேலும்கூறினார்.
0 Comments