loader
இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நஜீப் தொடங்கிய Indian Blueprint மீண்டும் கொண்டுவரப்படும்!

இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக நஜீப் தொடங்கிய Indian Blueprint மீண்டும் கொண்டுவரப்படும்!

உலுதிராம், நவ.28-

 

இந்தியச் சமுதாயத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிமுகப்படுத்திய Indian Blueprint திட்டத்தைமீண்டும் கொண்டுவருவோம் என்று துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீடாக்டர் அஹ்மட் ஜாஹிட் அமிடி உறுதியளித்துள்ளார்.

 

கடந்த 2017ஆம் ஆண்டு இந்த புளுபிரிண்ட் கொண்டு வரப்பட்டது. அடுத்த ஆண்டு இதனைநான் தொடர்வேன். மஇகா இந்த புளுபிரிண்டை இப்பொழுதே மறு ஆய்வு செய்ய வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்வதுடன், இந்தியர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு தேசியமுன்னணி தொடர்ந்து பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

 

மஇகாவின் 80ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியச் சமுதாயத்தின்முழுமையான ஆதரவு கிடைத்தால் அவர்களுக்காக இன்னும் கூடுதலான திட்டங்களையும்உதவிகளையும் முன்னெடுக்க முடியும் என்றார்.

 

மேலும், இந்தியச் சமுதாயத்திற்கான அமானா சஹாம் முதலீட்டுத் திட்டத்திற்கு 1.5 மில்லியன் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ள நிலையில், அதனை 3 மில்லியனாக உயர்த்தி வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

 

அம்னோவும் மஇகாவும் தலா 80 ஆண்டுகால அரசியல் வரலாற்றைக் கொண்ட கட்சிகள்என்றும், இரு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

 

இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவற்றைக்கடந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். உண்மையான நட்பு என்பதுமனதிலிருந்து வர வேண்டும். அத்தகைய நட்பும் உறவும்தான் அம்னோவுக்கும் மஇகாவுக்கும்இடையே நிலவ வேண்டும் என்றார்.

 

கடந்த காலங்களில் ஏற்பட்ட பிளவுகள் இனி தொடரக்கூடாது. இனி புதிய அத்தியாயத்தைஎழுத வேண்டிய நேரம் இது. மஇகாவின் துணையின்றி அடுத்த பொதுத் தேர்தலை தன்னால்எதிர்கொள்ள முடியாது என்றும், இரு கட்சிகளும் இணைந்துதான் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா கடந்த காலத்தைப் போல குறைந்தது ஐந்துநாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

 

ஜொகூரில் நான்கு தொகுதிகளில் மஇகா வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், சிரம்பானில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் தேசிய முன்னணியின் ஆட்சி தொடர்வதாகக்குறிப்பிட்டார். வரும் தேர்தலில் மஇகா கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றும் என்றநம்பிக்கையும் அவருக்கு இருப்பதாகத் தெரிவித்தார்.

 

மூன்று மாநிலங்களில் மட்டுமே நீல அலை வீசும் என்ற நிலை மாறி, அடுத்த பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் தேசிய முன்னணியின் நீல அலை வீசும் என்றும் அவர் நம்பிக்கைதெரிவித்தார்.

 

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து, நாட்டை ஆளும் தகுதியும் அனுபவமும் தேசியமுன்னணிக்கே உள்ளது என்பதை மக்களிடம் மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.

 

அம்னோவும் மஇகாவும் இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியச் சமுதாயத்தின்நலன்களைப் பாதுகாத்து, அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களைச்செயல்படுத்த முடியும் என்றும் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News