உலு திராம், நவ.27-
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கடந்த 80 ஆண்டுகளாக ஆற்றியுள்ளசேவைகளையும் சாதனைகளையும் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லத் தவறியதேகட்சியின் முக்கிய குறையாக உள்ளது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீஎஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மஇகா இன்று தனது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைக்கொண்டாடும் வேளையில், கட்சியின் கடந்தகாலப் பயணத்தையும் சாதனைகளையும்நினைவுகூர்வதுடன், அடுத்த 80 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்துநிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பலர் மஇகாவைப் பற்றிப் பேசினாலும், கட்சி தனதுபணிகளைச் செய்து கொண்டிருப்பதால் அதிகம் பேசுவதில்லை என்றார்.
கட்சி என்னென்ன சாதனைகளைச் செய்துள்ளது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது அவசியம். குறிப்பாக, மக்களுடன் நெருக்கமாக இருக்கும் கிளைத் தலைவர்கள்கட்சியின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றுஅவர் வலியுறுத்தினார்.
நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டில் மஇகாவின் அடுத்தகட்டப் பயணம் குறித்துவிரிவாக விவாதிக்கப்படும். கடந்த 80 ஆண்டுகளில் கட்சி என்ன செய்துள்ளது, அடுத்த 80 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்என்றும் அவர் கூறினார்.
இந்தியச் சமுதாயம் தொடர்ந்து ஆதரவு வழங்கினால்தான் மஇகா அடுத்தகட்ட வளர்ச்சியைநோக்கி நகர முடியும். அதேவேளையில், கட்சியினர் தங்களது பணிகளை முறையாகவும்திட்டமிட்டும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனால் கட்சிக்கே பாதிப்பு ஏற்படும்என்பதை ஜொகூர், மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உணர்த்தியுள்ளதாக அவர்சுட்டிக்காட்டினார்.
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவதுதான் மஇகாவின் பாணி என்று குறிப்பிட்டஅவர், கட்சி அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருவதாகத்தெரிவித்தார்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, முன்பு அரை ஏக்கராக இருந்த மஇகா தலைமையகத்திற்கானநிலப்பரப்பை இரண்டு ஏக்கராக விரிவுபடுத்தும் வகையில் நிலம் வாங்கியிருப்பதை அவர்சுட்டிக்காட்டினார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் கட்சியினரிடையே புதியவிழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தொகுதித் தலைவர்கள் சிறப்பானமுறையில் இந்தக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளனர் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், கட்சியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளையதலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1,300 பேர் கலந்து கொண்டனர். பேராளர் மாநாட்டிற்குமுன்னதாக நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்றநிகழ்ச்சியாக இது அமைந்துள்ளதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
0 Comments