உலு திராம், நவ.27-
மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் 80 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கும்மஇகாவின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த, கிளை அளவில் சிறந்த தலைவர்களைஉருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர்டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஜொகூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்உரையாற்றிய அவர், கட்சியின் அடித்தளமாக விளங்கும் கிளைகள் வலுவாக இருந்தால்தான்தேசிய அளவில் கட்சியைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றார்.
மஇகாவின் 50ஆம் ஆண்டு மற்றும் 60ஆம் ஆண்டு விழாக்கள் துன் சாமிவேலுதலைமையில் கொண்டாடப்பட்டன. தொடர்ந்து 70ஆம் ஆண்டு விழா டான்ஸ்ரீசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. தற்போது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைடான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம் என்றுஅவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய நிகழ்ச்சியில் தனக்குச் சிறப்புரை ஆற்றுவதற்கான வாய்ப்பை டான்ஸ்ரீவிக்னேஸ்வரன் வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவரிடம் காணப்படும் பண்புகளும்தலைமைத்துவ அணுகுமுறையும் அனைத்து தலைவர்களிடமும் இருக்க வேண்டும் என்றார்.
மலேசியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மஇகா ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. சுபாங் விமான நிலையம், நாடாளுமன்றக் கட்டடம், கோலாலம்பூர் அனைத்துலக விமானநிலையம் (KLIA) உள்ளிட்ட நாட்டின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் நமது தலைவர்கள்முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவப் பண்புகளும் செயல்பாடுகளும் தேசியஅளவில் மட்டுமின்றி, கிளை அளவிலும் பின்பற்றப்பட வேண்டும். எதிர்காலத்தில் கட்சியைவழிநடத்தவுள்ள தலைவர்கள் சரியான பாதையில் பயணிப்பதுடன், அடிமட்ட அளவில்இருந்து நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்ததலைமைத்துவத்தை உருவாக்க முடியும் என்றார்.
கட்சியின் கிளைகள் வலுவாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்தக் கட்சியும் பலவீனமடைந்துவீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த அவர், தேசிய அளவில் ஒற்றுமையாகஇருப்பது மட்டுமே போதாது; அந்த ஒற்றுமை கிளை அளவிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும்என்றார்.
தேசிய அளவில் ஒற்றுமையைக் கடைப்பிடித்துவிட்டு, கிளை அளவில் பிளவுபட்டுச்செயல்பட்டால் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யமாக இருந்தாலும் அது அழிந்துவிடும் என்றும்அவர் வலியுறுத்தினார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் கட்சி 80 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்துபயணிப்பது சாதாரணமானதல்ல. எனவே, மஇகாவின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும்பாதுகாப்பதுடன், எதிர்காலத் தலைமுறையினரிடம் கட்சியின் பொறுப்புகளை ஒப்படைக்கும்வகையில் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த டத்தோடி.முருகையா மற்றும் அவரது குழுவினருக்குத் தனது நன்றியையும் பாராட்டையும்டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
0 Comments