loader
எண்ணெய் சேமிப்பு மையமாக மட்டுமின்றி, பிராந்திய எரிசக்தி மற்றும் கடல்சார் மையமாக உருவெடுக்கும் பெரும் ஆற்றல் பெற்றது பெங்கராங்!

எண்ணெய் சேமிப்பு மையமாக மட்டுமின்றி, பிராந்திய எரிசக்தி மற்றும் கடல்சார் மையமாக உருவெடுக்கும் பெரும் ஆற்றல் பெற்றது பெங்கராங்!

கோலாலம்பூர், நவ 26-

ஜோகூர் மாநிலம் பெங்கராங்கை வெறும் எண்ணெய் சேமிப்பு மையமாக மட்டுமின்றி, ஆசியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் கடல்சார் வர்த்தக மையமாக உருவாக்க மலேசியா முயற்சிக்க வேண்டும் என Maritime Network Sdn Bhd நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

ஆசியாவில் பாதுகாப்பான எண்ணெய் சேமிப்பு வசதிகளுக்கான தேவை அதிகரித்து வருவது மலேசியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

பெங்கராங்கின் ஆழ்கடல் துறைமுக வசதிகள், மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல்களான VLCC கப்பல்களைக் கையாளும் திறன் ஆகியவை அதன் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளன.

 

ஆகவே அங்கு கூடுதலாக இரண்டு மில்லியன் கன மீட்டர் எண்ணெய் சேமிப்புத் திறனை உருவாக்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

எண்ணெய் சேமிப்புடன் கப்பல் போக்குவரத்து, தளவாடங்கள், பொறியியல் மற்றும் கடல்சார் சேவைகளையும் ஒருங்கிணைத்து விரிவான தொழில்துறைச் சூழலை உருவாக்க வேண்டும் என ஜெயேந்திரன் கேட்டுக்கொண்டார்.

 

இதன் மூலம் உள்ளூர் நிறுவனங்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கும் அதிக பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

 

மேலும், சிங்கப்பூர் போன்ற பிராந்திய மையங்களுடன் போட்டியிடும் வகையில் முதலீட்டுக்கு ஏற்ற சூழல், விரைவான அனுமதி நடைமுறைகள் மற்றும் திறமையான துறைமுகச் சேவைகளை மலேசியா உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News