கெப்போங், நவம்பர் 26-
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, கெப்போங் சரோஜா அடுக்குமாடிக் குடியிருப்பில் கே.ஆர்.டி. அமைப்பின் ஏற்பாட்டில், கெப்போங் நாடாளுமன்றத் தொகுதி PEMADAM அமைப்புடன் இணைந்து தீபாவளி நலத்திட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், 40 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தீபாவளி அன்பளிப்பாகப் பண அன்பளிப்பும் (அங்கப்பாவ்) வழங்கப்பட்டன.
மேலும், நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று, பங்கேற்றவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின.
வசதி குறைந்த குடும்பங்களுடன் தீபாவளித் திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.டி. அதிகாரி டினேஷ் அ/பெ காளியப்பன், கே.ஆர்.டி. தலைவர், பி.ஜி.ஆர். (பி) டத்தோ டாக்டர் வினோத் மற்றும் துணைத் தலைவரான
திரு. முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
சமூக நலனையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி, அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
0 Comments