loader
மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவை: டிபிகேஎல் 2027 நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன்! -பி.பிரபாகரன்

மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவை: டிபிகேஎல் 2027 நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன்! -பி.பிரபாகரன்

பத்து, நவ.25-

 

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) 2027ஆம் ஆண்டுக்கான RM3.30 பில்லியன்நிதிநிலை அறிக்கை, மக்கள் நலனையும் அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புறவளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பத்து நாடாளுமன்றஉறுப்பினர் பி.பிரபாகரன் வரவேற்றுள்ளார்.

 

கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.15 விழுக்காடு அதிகரித்துள்ள இந்த நிதிநிலைஅறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவைவழங்கும் திட்டம் முக்கியமானதாகும்.

 

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில், இறுதிச் சடங்குகளுக்கான செலவைக்குறைத்து, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாகஅமையும். குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இதுஉதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், பொதுவீடுகள் மற்றும் மக்கள் வீட்டுத் திட்டங்களின் பராமரிப்புக்காக RM254.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 2,817 வீடுகளைக் கொண்ட நான்கு ருமா மஜ்லிஸ் திட்டங்களும் மாதம் RM1,000 வாடகையில்செயல்படுத்தப்படவுள்ளன.

 

குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொழுதுபோக்குவசதிகளை மேம்படுத்த RM7 மில்லியனும், மூத்த குடிமக்களுக்கான இரு பகல்நேரபராமரிப்பு மையங்களுக்கு RM4.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளையில், MYSchoolBus@Wilayah திட்டத்தின் மூலம் குறைந்த விலை வீட்டுவசதிப்பகுதிகளைச் சேர்ந்த 6,028 மாணவர்கள் பயனடையும் வகையில் RM7.28 மில்லியன்ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நகர்ப்புற பாதுகாப்பை மேம்படுத்த சாலைப் பராமரிப்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் நிலச்சரிவுகண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு RM292.5 மில்லியனும், வெள்ளப் பிரச்சினைகளைக்கையாள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளைப் பராமரிக்க RM46.4 மில்லியனும்ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 22 கிலோமீட்டர் நடைபாதைகளை அமைக்க RM55 மில்லியன் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பது ஆரோக்கியமான நகர்ப்புற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

 

இந்த நிதிநிலை அறிக்கை வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் மக்கள் நலன் சார்ந்த மாநகரத்தை உருவாக்குவதற்கான திட்டமாகும்.

 

இத்திட்டங்கள் அனைத்தும் வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுத்தப்படுவதைஉறுதிசெய்ய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் DBKL-உடன் இணைந்துசெயல்படத் தயாராக இருப்பதாகவும் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

 

இதற்கிடையே, பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனா யோ மற்றும்கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News