சுபாங் ஜெயா, நவ.26-
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தேர்தலில் டாக்டர் சீனு அணியில்போட்டியிட்ட அனைவரும் அபார வெற்றிப் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் தலா 83 வாக்குகளைபெற்ற வேளையில் அணி ஒன்றில் போட்டியிட்டவர் போட்டியிலிருந்து வாப்பஸ் பெற்றுக்கொண்டதால் டாக்டர் சீனுவின் அணியினர் 5 பதவிகளை வென்று நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
தலைவர் பதவிக்கு அணி 1-இல் போட்டியிட்ட சி.கிருஷ்ணன் 74 பெற்ற வேளையில் அணி2-இல் போட்டியிட்ட டாக்டர் சின்னையா என்ற சீனு 89 வாக்குகளை பெற்று தலைவர்பதவியை வென்றார்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சீனு, தான் அளித்த அனைத்துவாக்குறுதிகளை நிரைவேற்றுவேன் என்றதுடன் அந்நிய தொழிலாளர் விவகாரத்தில்கூடுதல் அக்கரை காட்டுவேன் என்றார்.
மேலும் சங்கத்தில் போட்டிகள் நிகழ்ந்தாலும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள்தான். ஆகையால் அனைவருடனும் இணைந்து சங்கத்தை இன்னும் செம்மையாகவழிநடத்துவேன் என்றார் அவர்.
இதற்கிடையில் அவரின் அணியினரை வெற்றிப் பெற செய்த சங்க வாக்காளர்களுக்குநன்றியை தெரிவித்து கொண்ட அவர், அவர்கள் அழித்த ஆதரவை மதிக்கும் வகையில்முழுமனதுடன் செயல்படவுள்ளதாக கூறினார்.
நேற்று மாலை சுபாங்கிலுள்ள டோர்செட் தங்கு விடுதியில் பிரிமாஸின் 26ஆவது ஆண்டுக்கூட்டம் நடந்த பிறகு தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் தலைவர், து.தனைவர், உ.தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு போட்டிகள் நடந்ததுகுறிப்பிடத்தக்கது.
0 Comments