loader
முதல் மலேசிய இந்திய கலைஞருக்கு கோல்டன் ஹார்ஸ் விருது!  நடிகர் நந்தகோபால் மோகனை பிரிமாஸ் கௌரவித்தது!

முதல் மலேசிய இந்திய கலைஞருக்கு கோல்டன் ஹார்ஸ் விருது! நடிகர் நந்தகோபால் மோகனை பிரிமாஸ் கௌரவித்தது!

சுபாங் ஜெயா, நவ.25-

மலேசிய இந்திய நடிகர் நந்தகோபால் மோகன், தைப்பேயில் நடைபெற்ற 63ஆவதுகோல்டன் ஹார்ஸ் விருது விழாவில் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வென்று தனதுதிரையுலகப் பயணத்தில் புதிய மைல்கல்லைப் பதித்துள்ளார்.

 

மலேசியா – தைவான் கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘சயாங் சயாங்’ (Sayang Sayang) திரைப்படத்தில் செவித்திறன் குறைபாடுடைய இளம் வயதினராக நடித்ததற்காக அவருக்குஇந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற விருது விழாவில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற 26 வயதான நந்தகோபால் மோகன், உள்ளூர் நாடக மேடைகளில் தனது கலைப் பயணத்தைத்தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப்பெற்றுள்ளார்.

 

குறிப்பாக, கோல்டன் ஹார்ஸ் விருதைப் பெறும் முதல் மலேசிய இந்திய நடிகர் என்றபெருமையையும் நந்தகோபால் மோகன் பெற்றுள்ளார்.

 

இவரின் தந்தை மோகன் உணவக உரிமையாளர் என்பதனால் பிரிமாஸ் 26ஆவது பொதுக்கூட்டத்தில் அவருக்கு சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் சிறப்பு செய்து வாழ்த்தினார்.

 

அவரது இந்தச் சாதனை மலேசிய இந்தியக் கலைஞர்களின் திரையுலகப் பயணத்தில் ஒருபுதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதுடன், மலேசிய இந்திய நடிப்புத் துறையினருக்கும்பெருமை சேர்த்துள்ளது.

0 Comments

leave a reply

Recent News