கோலாலம்பூர், நவ.25-
மலேசிய இந்திய உணவகத் துறையில் நிலவி வரும் ஆள் பற்றாக்குறைப் பிரச்சினையைச்சமாளிக்க, உணவக உரிமையாளர்கள் சுயசேவை முறையை அறிமுகப்படுத்துவதுடன், முடிந்தவரை மலேசியர்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று மலேசிய இந்தியஉணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) கௌரவத் தலைவர் டத்தோ ஆர். ராமலிங்கம்பிள்ளை வலியுறுத்தினார்.
பிரிமாஸ் சங்கத்தின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்களைச் சந்தித்துப்பேசியபோது, அனைவரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினையாக ஆள் பற்றாக்குறையேஇருப்பதை அறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
1992ஆம் ஆண்டு அந்நியத் தொழிலாளர்களை முறையாகப் பதிவு செய்யாவிட்டால் பிரம்படிவழங்கப்படும் என்று அப்போதைய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, பிரிமாஸ்நிர்வாக உறுப்பினர்கள் கடுமையாக உழைத்து உணவகங்களில் பணியாற்றிய அந்நியத்தொழிலாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்தக் காலகட்டத்தில் இந்தியப் பிரஜைகளை இந்திய உணவகங்களில் அதிக அளவில்பணியமர்த்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இந்தியஉணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது என்று அவர் பழையஅனுபவங்களை நினைவுகூர்ந்தார்.
தற்போது நிலவும் ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ள உணவக உரிமையாளர்கள் தங்களின்செயல்பாட்டு முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, உணவகங்களில் சுயசேவை முறையை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும். இதன் மூலமே உணவகத் துறையில் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியும் என்றார்.
அதேவேளையில், முடிந்தவரை மலேசியர்களையும் வேலைக்கு அமர்த்த உணவகஉரிமையாளர்கள் முன்வர வேண்டும். ஆள் பற்றாக்குறை என்பது இந்திய உணவகஉரிமையாளர்கள் மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல; பிற இனத்தவர்களின்உணவகங்களும் இதே சவாலை எதிர்கொண்டு வருகின்றன என்பதையும் அவர்சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிதாக உணவகத் தொழிலில் ஈடுபடும் உரிமையாளர்கள் பிரிமாஸ் சங்கத்தில்இணைந்து உறுப்பினர்களாக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், உறுப்பினர்களுக்குச்சேவையாற்றுவதற்காகவே சங்கம் செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
0 Comments