loader
பிரிமாஸ் தேர்தலுக்குப் பின்னர் இரு அணியினரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்!  டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் வலியுறுத்து

பிரிமாஸ் தேர்தலுக்குப் பின்னர் இரு அணியினரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்! டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ.23-

 

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) தலைவர் பதவிக்கானதேர்தலில் போட்டியிடும் இரு அணியினரும் தேர்தலுக்குப் பின்னர் கருத்து வேறுபாடுகளைக்களைந்து, ஒற்றுமையுடன் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்று லோட்டஸ்குழுமத்தின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் கேட்டுக்கொண்டார்.

 

பிரிமாஸ் தலைவர் பதவிக்காக டாக்டர் சீனு தலைமையிலான அணி போட்டியிடுகிறது. அந்தஅணியினர் தம்மைச் சந்தித்து மரியாதை செலுத்தியதுடன், சிறப்பும் செய்ததாக அவர்குறிப்பிட்டார்.

 

பிரிமாஸ் தேர்தலில் போட்டியிடும் இரு அணியினருமே இச்சங்கத்திற்காக நீண்டகாலமாகஉழைத்தவர்கள் என்றும், அவர்களின் சேவைகளையும் பங்களிப்புகளையும் தாம்மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இன்று தேர்தலில் களமிறங்கியுள்ள அனைவரும் கடந்த காலங்களில் சங்கத்தின்வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள். இவர்களின் முயற்சியினால்தான் உணவகத் துறையில்நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிந்தது.

 

எனவே, இந்தத் தேர்தலில் இரு அணியினருக்கும் தமது ஆதரவு உண்டு. சங்கத்தின்ஜனநாயக நடைமுறைக்கு வலுசேர்க்கும் வகையில் நடைபெறும் இப்போட்டியைத் தாம்வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

 

தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்த அணியினர் ஒதுங்கிவிடாமல் வெற்றிபெற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தனிப்பட்ட போட்டிகளைக் கடந்து, உணவக உரிமையாளர்களின் நலன்களையும் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியையும்முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ ரெனாதுரைசிங்கம் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News