loader
பிரிமாஸ் தேர்தல்:பொய்யான தகவலை பரப்பாதீர்! ஆரோக்கியமான போட்டியே அவசியம்; பொறாமைக்கு இடமில்லை!

பிரிமாஸ் தேர்தல்:பொய்யான தகவலை பரப்பாதீர்! ஆரோக்கியமான போட்டியே அவசியம்; பொறாமைக்கு இடமில்லை!

கோலாலம்பூர், நவ.23-

 

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) தேர்தலில் போட்டி என்பதுஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர, பொறாமை மற்றும் தவறான தகவல்களைப்பரப்பும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்று தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர்சீனு தெரிவித்தார்.

 

பிரிமாஸ் தேர்தலில் எண்.2-இல் தமது அணியினர் போட்டியிடுவதாகக் குறிப்பிட்ட அவர், மற்றொரு அணியினர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் தெரிவிக்காத கருத்துகளையும் அவர்கூறியதாகத் தகவல்களை வெளியிட்டு வருவது உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

இத்தகைய செயல்பாடுகள் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கத்திற்கும் தர்மசங்கடமான சூழலைஉருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

வியாபாரமாக இருந்தாலும் சரி, சங்கமாக இருந்தாலும் சரி, போட்டி என்பது அவசியமானஒன்று. ஆனால், அந்தப் போட்டியில் பொறாமை இருக்கக்கூடாது. அனைவரும்ஒருவரையொருவர் மதித்து, ஆரோக்கியமான முறையில் போட்டியிட வேண்டும் என்று அவர்வலியுறுத்தினார்.

 

மேலும், டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் இரு அணியினருக்கும் ஆதரவு வழங்கி வருகிறாரேதவிர, குறிப்பிட்ட ஓர் அணிக்கு மட்டும் தனிப்பட்ட ஆதரவைத் தெரிவிக்கவில்லை. எனவே, அவரது பெயரைப் பயன்படுத்தி தவறான கருத்துகளை உறுப்பினர்கள் மத்தியில்பரப்பக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

இதனிடையே, பிரிமாஸ் உறுப்பினர்களின் நலனுக்காகவும், சங்கத்தின் வளர்ச்சிக்காகவும்முழுமையாக உழைக்கத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் சீனு, இம்முறை தமதுஅணியினரும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

அந்த வாக்குறுதிகள் அனைத்தும் எதிர்வரும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில்அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அவற்றைச் செயல்படுத்துவதில் தமது அணிஉறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

தாம் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தால், முன்னாள் தலைவர் டத்தோராமலிங்கத்தைப் போன்று அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன். தலைவர் பதவிக்கு இரண்டுதவணைகள், அதாவது ஆறு ஆண்டுகள் வரை வாய்ப்பிருந்தாலும், தாம் வெற்றி பெற்றால்மூன்றே ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை நிறைவேற்றிக்காட்டுவேன் என்றும் உறுதியளித்தார்.

 

இதற்கு முன்னர் சங்கத்திற்காகத் தாம் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து, உறுப்பினர்கள்தமக்கு நன்றி தெரிவித்து கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். அந்த அங்கீகாரமே தொடர்ந்துஉறுப்பினர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற தமது நம்பிக்கையை மேலும்வலுப்படுத்தியுள்ளது என்றார்.

 

எனவே, பிரிமாஸ் உறுப்பினர்கள் இத்தேர்தலில் உண்மையான மாற்றத்தையும், சங்கத்தின்எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு சிந்தித்துச் செயல்பட வேண்டும். தமதுஅணியின் திட்டங்களுக்கும் சேவைக்கும் ஆதரவு வழங்கி எண்.2-க்கு வாக்களிக்க வேண்டும்என்றும் டாக்டர் சீனு கேட்டுக்கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News