பெட்டாலிங் ஜெயா, நவ.23-
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) தேர்தலில் யார் வெற்றிபெற்று தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும், அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒரேகுழுவாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று லோட்டஸ் குழுமத்தின் தலைமைஇயக்குநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் வலியுறுத்தினார்.
வரும் 25ஆம் தேதி புதன்கிழமை சுபாங் ஜெயா டொர்செட் தங்கும் விடுதியில்நடைபெறவுள்ள பிரிமாஸ் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பில்கருத்துரைத்த அவர், இம்முறை இரண்டு அணிகள் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், உறுப்பினர்கள் சங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
சங்க உறுப்பினர்களின் தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிகவும் அவசியமாகும். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமின்றி, தோல்வியடைந்தவர்களும் சங்கத்தின்வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.
சங்கத்திற்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களையும், தொடர்ந்து சேவையாற்றிவருபவர்களையும் உறுப்பினர்கள் அடையாளம் கண்டு தங்களின் ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரிமாஸ் சங்கம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் அன்றைய மஇகா தேசியத் தலைவர் துன்சாமிவேலு பெரும் ஆதரவும் உதவியும் வழங்கியதை நினைவுகூர்ந்த டான்ஸ்ரீ ரெனாதுரைசிங்கம், சங்கத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் ஒற்றுமை அடிப்படையானதுஎன்றார்.
சங்கத்தின் விதிமுறைகளின்படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு தவணைகள் மட்டுமே தலைவர்பதவியை வகிக்க முடியும். இதற்கு முன்னர் டத்தோ சுரேஷ் தலைவராகப் பொறுப்பு வகித்தநிலையில், இம்முறை தலைவர் பதவிக்கு சி. கிருஷ்ணன் (எண் 1), டாக்டர் சீனு (எண் 2) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இம்முறை தலைவர் பதவி மட்டுமின்றி, சங்கத்தின் ஐந்து நிர்வாகப் பதவிகளுக்கும் போட்டிநடைபெறுகிறது.
எனவே, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்குஇடமளிக்காமல், பிரிமாஸ் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியையும் உறுப்பினர்களின்நலனையும் முன்னிறுத்தி அனைவரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்று அவர்மீண்டும் வலியுறுத்தினார்.
0 Comments