கோலாலம்பூர், நவ.23-
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) தலைவர் பதவிக்குப்போட்டியிடும் சி.கிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தனிப்பணிக்குழு ஒன்று அமைக்கப்படும்என்று தெரிவித்துள்ளார்.
உணவகத் துறையில் நிலவும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளைஇப்பணிக்குழு முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரிமாஸ் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும்முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக நாடு தழுவிய அளவில் உள்ள உணவகஉரிமையாளர்களை நேரடியாகச் சந்தித்து, குறிப்பாகப் புதிதாக உணவகத் தொழிலைத்தொடங்கியுள்ள உரிமையாளர்களைச் சங்கத்தில் இணைப்பதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என்றார்.
அதேபோன்று, அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மூலம் உணவக உரிமையாளர்களுக்குக்கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சலுகைகளை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைச்சங்க உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், உணவகத் துறையின்வளர்ச்சிக்கும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமைஅளிக்கப்படும் என்று சி.கிருஷ்ணன் கூறினார்.
மேற்கண்டவற்றை அவர் தனது தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தார்.
0 Comments