பேராக்
கல்வியில் தாம் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற பயணத்தில் சங்கநதியைசேர்ந்த முருகேசன் - அம்மு தம்பதியரின் புதல்வி பவித்திரா வெற்றி அடைந்துள்ளார்.
உலோகத் தொழில் துறையை சேர்ந்த வர்த்தகர் முருகேசனின் மூத்த பிள்ளையானபவித்திரா நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலக தொடர்பு துறையில் முதுகலை பட்டம் பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கல்வியயே என்னுடைய நோக்கம் என்பதில் பவித்திரா உறுதியாக இருந்துள்ளார். தற்பொழுது விரிவுரையாளர் உதவியாளராக மலாயா பல்கலைக்கழகத்தில் பணி புரிந்துவருகிறார்.
அடுத்து, முனைவர் பட்டம் படிப்பையும் அனைத்துலக தொடர்பு துறையில் நிறைவு செய்வதுதம்முடைய நீண்ட நாள் கனவாகும் என பவித்திரா கூறினார்.
மேலும் இந்த வெற்றியை தம்முடைய குடும்பத்திற்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, தன்னுடைய மகள் தொடர்ந்து கல்வியில் வெற்றிநடை போட என்றும்குடும்பம் உறுத்துணையாக இருக்கும் என கூறினார்.
பவித்திராவின் இந்த வெற்றி பயணத்தில் தாயார் அம்மு பெரும் பங்காற்றியுள்ளார்
0 Comments