loader
மகாகவி பாரதியார் அன்று, இன்று, நாளை – சிறப்புக் கலந்துரையாடல்!  நிரஞ்சன் பாரதி, பேராசிரியர் முனைவர் அ. செல்லப்பெருமாள் பங்கேற்பு; டிசம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது!

மகாகவி பாரதியார் அன்று, இன்று, நாளை – சிறப்புக் கலந்துரையாடல்! நிரஞ்சன் பாரதி, பேராசிரியர் முனைவர் அ. செல்லப்பெருமாள் பங்கேற்பு; டிசம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது!

கோலாலம்பூர், நவ. 20 – 

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள், சிந்தனைகள் மற்றும் சமூகப் புரட்சிக்கருத்துகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மலேசியபிபிபி இளைஞர் அணி ஏற்பாட்டில் ‘மகாகவி பாரதியார் அன்று, இன்று, நாளை’ எனும்சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதிசிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். மலாயா பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர்இருக்கைப் பேராசிரியர் முனைவர் அ. செல்லப்பெருமாள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

 

பாரதியார் வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழல், பெண்களின் சமத்துவம், கல்வி, சுதந்திரம்குறித்த அவரது முற்போக்குச் சிந்தனைகள் இன்றைய காலகட்டத்திற்கும் எவ்வாறுபொருந்துகின்றன என்பதுடன், அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறையினரிடம்கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாகப்பேசப்படவுள்ளதாக பிபிபி இளைஞர் பிரிவுத் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை6.30 மணி வரை கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள விஸ்மா எம்சிஏவின் டேவான்சான் சூனில் நடைபெறுகிறது.

 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விமாணவர்கள் என மூன்று பிரிவுகளில் தமிழ்க் கட்டுரைப் போட்டியையும் மலேசிய பிபிபிஇளைஞர் அணி நடத்துகிறது.

 

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள்மற்றும் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் மாணவர்களிடையே தமிழ் இலக்கியஆர்வத்தையும் பாரதியாரின் படைப்புகள் மீதான புரிதலையும் வளர்க்க முடியும் என அவர்சொன்னார்.

 

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் மாணவர்களுக்கு 10 ரிங்கிட், பெரியவர்களுக்கு 20 ரிங்கிட், VIP பிரிவுக்கு 50 ரிங்கிட், VVIP பிரிவுக்கு 250 ரிங்கிட், MIP பிரிவுக்கு 500 ரிங்கிட் எனநிர்ணயிக்கப்பட்டுள்ளன. நுழைவுச்சீட்டுகளை Great Ticket மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

 

மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்இச்சிறப்புக் கலந்துரையாடலிலும் தமிழ்க் கட்டுரைப் போட்டியிலும் ஆர்வத்துடன்பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

மேலும், நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டி தொடர்பான விவரங்களுக்கு 019-221 2131 என்ற எண்ணில் ஏற்பாட்டுச் செயலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News