மலேசிய இந்தியர் காங்கிரஸின் (மஇகா) 80ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் தொடர்பானஏற்பாடுகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து நடைபெற்ற மத்திய செயலவைக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மஇகாவின் 80ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் ஜொகூர் மாநிலம், ஆஸ்டின் மண்டபத்தில்நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தை நாட்டின் துணைப் பிரதமரும் அம்னோ தேசியத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தொடக்கி வைப்பார்.
இதனிடையே, மஇகாவின் பொதுச் செயலாளராக டத்தோ ஆர்.டி. ராஜா மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீண்டகால அரசியல் அனுபவமும், கட்சியின் நிர்வாகப்பணிகள் குறித்த ஆழமான புரிதலும் இருப்பதால், இந்த நியமனம்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தெரிவித்தார்.
மேலும், விவசாயத் துறைக்கும் மஇகா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மஇகாவின் கீழ் புதிய பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் பொறுப்புகளைரமணா ஏற்றுக்கொள்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற காடிக் சட்டமன்றத் தேர்தலில் மஇகா பெற்ற வெற்றி குறித்துப்பேசிய அவர், தேர்தலில் கையாளப்பட்ட அணுகுமுறை சரியானதாக அமைந்ததாகக்குறிப்பிட்டார்.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் மேற்கொள்ளப்பட்டஅணுகுமுறைகளுக்குப் பின்னர், இம்முறை காடிக் சட்டமன்றத் தேர்தலில் பின்பற்றப்பட்டமுறை மிகவும் முறையானதாகவும், வாக்காளர்களின் முழுமையான ஆதரவைப்பெறுவதற்கும் உதவியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மஇகாவின் வெற்றிக்கு ஆதரவு வழங்கிய இந்திய வாக்காளர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொண்ட அவர், மக்களுக்கான சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்என்றும் உறுதியளித்தார்.
இந்தியச் சமுதாயம் இனியும் ஏமாற்றப்படக்கூடாது என வலியுறுத்திய டான்ஸ்ரீவிக்னேஸ்வரன், இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கமஇகா இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.
மேலும், இந்தியச் சமுதாயம் தனது தற்போதைய நிலையைத் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்ப சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மஇகா தொடர்ந்து இந்தியச் சமுதாயத்தின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும்வகையில் தனது சேவைகளை முன்னெடுக்கும் என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்தெரிவித்தார்.
0 Comments