loader
பிரிக்பீல்ட்ஸில் அமைதிப் போராட்டம்!  ‘DIWALI’க்கு பதிலாக ‘DEEPAVALI’ எனப் பயன்படுத்த வேண்டும் — டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தல்

பிரிக்பீல்ட்ஸில் அமைதிப் போராட்டம்! ‘DIWALI’க்கு பதிலாக ‘DEEPAVALI’ எனப் பயன்படுத்த வேண்டும் — டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தல்

கோலாலம்பூர்,அக்.14-

 

தீபாவளி பண்டிகையின் பெயரை ‘DIWALI’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, ‘DEEPAVALI’ எனப் பயன்படுத்த வேண்டும் என்றும், தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் தமிழ்மொழிக்கும் உரிய இடமளிக்க வேண்டும் என்றும் கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோராஜா சைமன் வலியுறுத்தியுள்ளார்.

 

சமயம், மொழி மற்றும் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கோலாலம்பூர்பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அமைச்சர் ஹனா யோவின் ஏற்பாட்டில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிசந்தையின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகையில், ‘DEEPAVALI’ என்பதற்குப்பதிலாக ‘DIWALI’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சமூகத்தினரிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

தீபாவளி சந்தையின் நுழைவாயில் பதாகையில் ‘DEEPAVALI’ என்ற சொல்லைப்பயன்படுத்துவதுடன், தமிழ் மொழியையும் இணைக்க வேண்டும் என்பதே தங்களின்கோரிக்கை என டத்தோ ராஜா சைமன் குறிப்பிட்டார்.

 

மேலும், நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரு தூண்களிலும் ‘DIWALI’ என்ற சொல்இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ஒரு தூணில் மயில் படம் வைக்கப்பட்டு அந்தஎழுத்துகள் மறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், மற்றொரு தூணில் ‘DIWALI’ என்ற சொல்இன்னமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

எனவே, பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினர்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

மொழி மற்றும் சொற்களின் பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் அதிகாரப்பூர்வமானவழிகாட்டுதல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட டத்தோராஜா சைமன், மலேசிய மொழி மற்றும் நூலகக் கழகமான Dewan Bahasa dan Pustaka வெளியீடுகளிலும் ‘DEEPAVALI’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

 

ஆகவே, தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் வகையில் ‘DEEPAVALI’ என்றசொல்லைப் பயன்படுத்துவதுடன், தமிழ் மொழி மற்றும் இந்தியக் கலாசாரத்தின்தனித்துவத்தையும் மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

இந்த அமைதிப் போராட்டத்தில் பொது அமைப்புகள், மக்கள் முற்போக்குக் கட்சியான பிபிபி(PPP) மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

சமயம், மொழி, கலாசாரம் ஆகியவற்றின் அடையாளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைவலியுறுத்தும் நோக்கில் இந்த அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

0 Comments

leave a reply

Recent News