loader
கப்பின் மலேசியாவின் நினைவு மலர் வெளியீடு!  9 பேருக்கு ‘கப்பின் பெர்டானா’ விருது வழங்கி கௌரவிப்பு!

கப்பின் மலேசியாவின் நினைவு மலர் வெளியீடு! 9 பேருக்கு ‘கப்பின் பெர்டானா’ விருது வழங்கி கௌரவிப்பு!

கோலாலம்பூர்,அக்.10- 

மலேசிய இந்தியர் சங்கங்களின் சம்மேளனமான கப்பின் மலேசியாவின் 9ஆம் ஆண்டுநிறைவு விழா மற்றும் நினைவு மலர் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

 

கப்பின் மலேசியாவின் தலைவர் டத்தோ தென்னரசு தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமானடத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, சமுதாயத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியஒன்பது பேருக்கு ‘கப்பின் பெர்டானா’ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ எம். சரவணன் விருதுகளை வழங்கிவிருதாளர்களைப் பாராட்டினார்.

 

சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பங்களித்து வரும்சேவையாளர்களை அங்கீகரிக்கும் நோக்கில் இவ்விருதுகள் வழங்கப்பட்டதாகத்தெரிவிக்கப்பட்டது.

 

கப்பின் மலேசியா அமைப்பு கடந்த 2011ஆம் ஆண்டு ஜொகூர் மாநிலத்தில்தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர், அமைப்பின் செயல்பாடுகளை நாடு முழுவதும்விரிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைப்பு அமைப்புகள்உருவாக்கப்பட்டன.

 

இதன் மூலம் மலேசிய இந்தியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, சமூகத்தின் நலன் மற்றும்மேம்பாட்டுக்காகச் செயல்படுவதில் கப்பின் மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது.

 

இதற்கிடையில், கோலாலம்பூர், ஜாலான் காசிப்பிள்ளையில் சுமார் நான்கு லட்சம் ரிங்கிட்செலவில் கப்பின் மலேசியாவுக்கான அலுவலகக் கட்டடம் வாங்கப்பட்டுள்ளதாக அதன்தலைவர் டத்தோ தென்னரசு தெரிவித்தார்.

 

அமைப்பின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், எதிர்காலச்செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் அலுவலகக் கட்டடம் உதவும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

 

கப்பின் மலேசியாவின் ஒன்பது ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் வகையில்நடைபெற்ற இந்நிகழ்வு, அமைப்பின் சாதனைகளை நினைவுகூர்வதோடு, சமுதாயத்திற்குச்சேவையாற்றியவர்களைப் பாராட்டும் நிகழ்வாகவும் அமைந்தது.

0 Comments

leave a reply

Recent News