loader
‘DIWALI’ பெயரை DEEPAVALI என்று மாற்றுங்கள்;  பிரிக்பீல்ட்ஸ் பதாகைகளுக்கு 3 நாள் கெடு விடுத்தார் டத்தோஸ்ரீ சரவணன்!

‘DIWALI’ பெயரை DEEPAVALI என்று மாற்றுங்கள்; பிரிக்பீல்ட்ஸ் பதாகைகளுக்கு 3 நாள் கெடு விடுத்தார் டத்தோஸ்ரீ சரவணன்!

கோலாலம்பூர்,அக்.10-

 

பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவுகள்மற்றும் பதாகைகளில் இடம்பெற்றுள்ள ‘DIWALI’ என்ற சொல்லை ‘DEEPAVALI’ என மாற்றவேண்டும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தக் கோரிக்கையை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றத் தவறினால், கூட்டரசுப் பிரதேசமஇகா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இவ்விவகாரம் தொடர்பாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கூட்டரசுப்பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ள டத்தோஸ்ரீசரவணன், மலேசிய இந்திய சமூகத்தின் மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களுக்குஉரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்மொழியைப் பேசுபவர்கள்என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த வகையில், ‘DEEPAVALI’ என்ற சொல் மலேசிய இந்திய சமூகத்தின் மொழி மற்றும்கலாச்சாரப் பின்னணிக்குப் பொருத்தமானது என்றும், ‘DIWALI’ என்பது இந்தி பேசும்வடஇந்திய சமூகத்தினரிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொல் என்றும் அவர்விளக்கியுள்ளார்.

 

மேலும், மலேசியாவில் தீபாவளிப் பண்டிகை ‘DEEPAVALI’ என்ற பெயரிலேயே அரசிதழில்வெளியிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில்பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மலேசிய இந்திய சமூகத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் மதிக்கும்வகையில், ‘DIWALI’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘DEEPAVALI’ பயன்படுத்தப்பட வேண்டும்என்பதே தமது நிலைப்பாடு என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரத்தில் அடுத்த மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கூட்டரசுப் பிரதேச மஇகா கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் திட்டவட்டமாகக்கூறியுள்ளார்.

 

இந்த விவகாரத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சரை நான் குறைக்கூறவில்லை. அவர் சீனர், அவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவரின் கட்சியில் தமிழர்கள் இருப்பதாக நான்நம்புகிறேன். ஆகையால் உடனடி மாற்றம் தேவை என அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News