கோலாலம்பூர், அக்.9 —
அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி முதலீடு செய்த ஏறக்குறைய 3,000 பேர், தங்களது முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இன்று தேசிய காவல் படை தலைமையகமான புக்கிட் அமானில் புகார் மனு அளித்தனர்.
தேசிய அளவில் செயல்படுவதாகக் கூறப்பட்ட முதலீட்டு நிறுவனத்தில் பணத்தை முதலீடுசெய்தவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், முதலீட்டுத் தொகையை மீட்டுத் தருவதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட முதலீட்டு நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக லாப ஈவையும், முதலீட்டுத்தொகைக்கு ஏற்ப பல மடங்கு வருமானத்தையும் வழங்குவதாக உறுதியளித்ததாகக்கூறப்படுகிறது. இந்த வாக்குறுதிகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்தில்பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
அவர்களில் பலர் ஆயிரக்கணக்கான வெள்ளியையும், கணிசமான எண்ணிக்கையிலானோர்லட்சக்கணக்கான வெள்ளியையும் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில்ஒருவர் மட்டும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வரை முதலீடு செய்துள்ளதாகவும்கூறப்படுகிறது.
முதலீட்டுத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், முதலீட்டாளர்களுக்கு வழக்கமாக லாப ஈவுவழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர், தங்களது முதலீட்டுத் தொகையை அதிகரித்ததுடன், தொடர்ந்து பணத்தையும் முதலீடுசெய்துள்ளனர்.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழக்கமாக வழங்கப்பட்டு வந்த லாப ஈவு திடீரெனநிறுத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சந்தேகமும் கவலையும் அடைந்த முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் தரப்பைத்தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, இது சாதாரண தொழில்நுட்பக்கோளாறு என்றும், விரைவில் பிரச்சினை சரிசெய்யப்பட்டு வழக்கம்போல லாப ஈவு மற்றும்கூடுதல் வருமானம் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பணம் திரும்பக் கிடைக்காததால் முதலீட்டாளர்களின்கவலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து விளக்கம் கேட்டபோது, நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவர் திரும்பிவந்ததும் பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகமுதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், அதுவரை போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என்றும் நிறுவனத்தின் தரப்பில்கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காலம் கடந்தும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில், தங்களது பணத்தைஇழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் ஒன்றிணைந்து போலீசில் புகார்அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, ஏறக்குறைய 3,000 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பில், இன்று புக்கிட் அமான் தேசிய காவல் படைதலைமையகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு, முதலீட்டாளர்களின்பணம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டஅனைவருக்கும் அவரவர் முதலீட்டுத் தொகையை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி முதலீடு செய்த தாங்கள்தற்போது பெரும் நிதி நெருக்கடியையும் மன உளைச்சலையும் எதிர்கொள்வதாகக் கூறியமுதலீட்டாளர்கள், இந்த விவகாரத்தில் விரைவான தீர்வு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனச் செய்தியாளர்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்தனர்.
0 Comments