loader
நாளை 6 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்: புகைமூட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்!

நாளை 6 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்: புகைமூட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகளில் மாற்றம்!

கோலாலம்பூர், அக். 8-

தற்போது நிலவி வரும் புகைமூட்டம் நிலைமையைத் தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9, 2026 அன்று நாட்டின் பல பகுதிகளில் பள்ளிகள் மூடப்படுவதாக கல்விஅமைச்சர் பட்லினா சிடேக் தனது முகநூல் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி, ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியபகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மூடப்படும்.

 

மேலும், பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்படும். புத்ராஜெயா முழுவதும் உள்ள பள்ளிகளும் நாளை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, பெர்லிஸ், பேராக், பினாங்கு, சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகியபகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.

 

புகைமூட்டம் தொடர்பான நிலைமையை அனைத்து மாநில கல்வித் துறைகளும் (JPN), மாவட்ட கல்வி அலுவலகங்களும் (PPD) தொடர்ந்து கண்காணிக்குமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளன. நிலைமைக்கு ஏற்ப தேவையான உடனடி நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகளை மூடுவது பெற்றோர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்என்பதை கல்வி அமைச்சு புரிந்துகொள்வதாகவும், எதிர்காலத்தில் பள்ளிகள் மூடுவதுதொடர்பான முடிவுகள் முடிந்தவரை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான மாற்று ஏற்பாடுகளைச்செய்வதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பள்ளிகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும்மாநில கல்வித் துறைகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மாணவர்கள் மற்றும் பள்ளி பணியாளர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் தொடர்ந்துமுதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News