loader
மலேசிய-இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் கலை பண்பாடு மற்றும் நட்புறவை மேம்படுத்த இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையொப்பம்

மலேசிய-இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் கலை பண்பாடு மற்றும் நட்புறவை மேம்படுத்த இரு வழி புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையொப்பம்

மலேசிய மற்றும் இந்திய நாட்டு கலைஞர்கள் மத்தியில் நிலவும் கலை, பண்பாடு மற்றும்நட்புறவு நிலைகளை அடுத்த உயர் நிலைக்கு மேம்படுத்தும் நோக்கில்,இரு வழி  புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மலேசிய நாட்டின் பிரசித்திபெற்ற இயக்கமானமிக்காஸ்-டெலி ஸ்டாருக்கும்,;(MICAS-TELESTAR) தமிழ் நாட்டின் தமிழ்க் கலை இசைசங்கமம் இயக்கத்திற்குமிடையில் கையொப்பமானது.

மலேசிய நாட்டின் இயக்கத் தலைவர் எஸ்.பி.மணிவாசகமும் தமிழ் நாட்டின் முன்னாள்ஐ.ஏ.ஸ் அதிகாரியும் மதுரையின் முன்னாள் கலெக்டரும்,தமிழ் கலை இசை சங்கமத்தின்நிறுவனரும் ,மிகச் சிறந்த கலைஞருமான உயர்திரு காமராஜும் இந்த இருவழி ஒப்பந்தத்தில்கையொப்பமிட்டனர்.

இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்ச்சியினை மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் , உலக தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவருமான தொழிலதிபர் டத்தோ கோபாலகிருஷ்ணன்தலைமை தாங்கி சிறப்புச் சேர்த்தார்.

இவ்வொப்பந்தத்தின் வாயிலாக இரு நாட்டு கலைஞர்களும் தகுந்த வழிமுறையுடன்முறையாக அந்தந்த நாட்டிக்கு பயணமேற்கொண்டு கலை மேம்பாட்டிற்கு பங்காற்றுவர். கலை நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டுபுற கலைப்படைப்புகள்,நடனங்கள் எனபல்வேறு கலை சார்ந்த அரங்கேற்றங்கள் நடைபெற இவ்விரு இயக்கங்களும் பாடுபட்டு, அத்துறை கலைஞர்களை கௌரவித்து உகந்த மரியாதையையும் வழங்கும் என உறுதிகொண்டுள்ளனர்

முதல் கட்டமாக “ சென்னையில் பொன்னந்தி மாலைப் பொழுது”எனும் பிரமாண்டமானகலை மாலை அரங்கேற்றம் கண்டது. மலேசிய கலைஞர்களும் இந்திய கலைஞர்களும்இணைந்து 4 மணி நேர இசை சங்கமித்தினர். இத்தகைய கலை பரிமாற்றம் 2027-ஆம்ஆண்டு மலேசிய நாட்டில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் இக்கலை விழா இருநாட்டிலும் நடத்த உறுதி கொண்டுள்ளனர்.

இந்திய ஏற்பாட்டுக்குழுத் தலைவர் உயர்திரு காமராஜ் பேசுகையில்,” இது உயர் நட்பால்ஏற்பட்ட உறவு, கலை ஈடுபாட்டாலும் புரிந்துணர்வாலும் அமையப்பட்ட பந்தம், இதனைதேர்த்தியாக வளர்ப்பது நம் தலையாய கடமையாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

மறுமொழி கூறிய மிக்காஸ்-டெலி ஸ்டார் தலைவர் எஸ்.பி.மணிவாசகம், இந்தியாவுடன்குறிப்பாக தமிழ் நாட்டுடன் நீண்ட கலை கலாச்சார மற்றும் பண்பாட்டு உறவினை மலேசியத்தமிழர்கள் கொண்டுள்ஏனர் என்பதோடு, அதனை அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லமுனைந்திருப்பதே இந்த புதிய வியூகத்திட டம் என கருத்துருத்தார். தலைவர் காமராஜ் மேல்கொண்ட நம்பிக்கையே இந்த கூட்டு முயற்சியின் அஸ்திவாரம் என்பதோடு , மலேசியகலைஞர்கள் சங்கத் தலைவர் டத்தோ கோபாலகிரிஷ்ணன் வழங்கியிருக்கும் நல்லாதரவும்நல்லாசியுமே எங்களுக்கு உத்வேகத்தை வழங்கிற்று என புகழாரம் சூட்டினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய டத்தோ கோபாலகிருஷ்ணன், இந்த கூட்டு உடன்படிக்கைமிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், அது முழுமையாக அமலாக்கம் காண தாம்முழுமையாக கண்கானிக்கவிருப்கதாக கூறியதோடு, இரு தரப்பினருக்கும் தனதுவாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில் மலேசியக் கவிஞர் சீராகியின்”ஜாலியானந்தா” சிந்தனை புரட்சி நூல்விமரிசையாக அறிமுகம் கண்டது.

செவிக்கினிய கீதங்கள், அறுசுவை உணவு , பாராட்டு வைபவம் என “செனனையில்பொன்னந்தி மாலைப் பொழுது” வெற்றிகரமான திருவிழாவாக அசதிற்று என்பதுவெள்ளிடைமலை.

0 Comments

leave a reply

Recent News