loader
மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் மலேசிய தொழிலதிபர் கிருபாகரனுக்கு பாராட்டு விருது!

மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் மலேசிய தொழிலதிபர் கிருபாகரனுக்கு பாராட்டு விருது!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உலக கால் பாதத்தை முன்னிட்டு நடைபெற்ற மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில், மலேசிய தொழிலதிபர் கிருபாகரனுக்கு பாராட்டு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

உலக கால் பாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழக அரசின் முன்னாள் செயலாளர் முனைவர் ராஜாராம், நந்தகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசியாவில் மருத்துவத் துறையிலும் தொழில் துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் கிருபாகரனுக்கும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் தொழில்துறையில் அவர் ஆற்றிவரும் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

0 Comments

leave a reply

Recent News