loader
Damoxin ஆன்டிபயாடிக் குறித்து பியோன் பயோமெடிக் நிறுவனம் ஆராய்ச்சி

Damoxin ஆன்டிபயாடிக் குறித்து பியோன் பயோமெடிக் நிறுவனம் ஆராய்ச்சி

கோலாலம்பூர்:
பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணனுக்கு சமர்ப்பணமாக Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பியோன் பயோமெடிக் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் எம். பரமேஸ்வரன் இதனை கூறினார்.

மறைந்த பேராசிரியர் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் எளிதாக மறக்க முடியாத ஒரு நபர் ஆவார்.

மருத்துவத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து பல மருந்துகளையும் அவர் கண்டுப்பிடித்துள்ளார்.

குறிப்பாக ஆயுர்வேதம் கொண்டு பல்வேறு மருந்துகளை அவர் கண்டுப்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தான் அவர் இறப்பதற்கு முன் Damoxin ஆன்டிபயாடிக்கை கண்டுப்பிடித்தார்.

ஆனால் இந்த ஆன்டிபயாடிக் முழுமையாக மக்களை சென்றடையவில்லை.

ஆகவே எங்கள் நிறுவனம், அனைத்துலக மானவ் ரச்னா ஆய்வகத்துடன் இணைந்து இந்த Damoxin ஆன்டிபயாடிக் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் அது நிச்சயம் சுகாதார அமைச்சிடம் அனுப்பி அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்யப்படும் என்று பரமேஸ்வரன் கூறினார்.

 

0 Comments

leave a reply

Recent News