loader
நாகாஸ் உணவக உரிமையாளர் ‘ராஜா’ நாகராஜனுக்கு இறுதி அஞ்சலி

நாகாஸ் உணவக உரிமையாளர் ‘ராஜா’ நாகராஜனுக்கு இறுதி அஞ்சலி

நாகாஸ் உணவகத்தின் உரிமையாளர் ‘ராஜா’ என அழைக்கப்படும் ரெ. நாகராஜன் மறைவையொட்டி, அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது.

 

அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, மலரஞ்சலி செலுத்தி இறுதி மரியாதை செலுத்தினர்.

 

ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், லோட்டஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா இராமலிங்கம், டத்தோ ரெனா நாகசுந்தரம், டத்தோ கீதாஞ்சலி, டத்தோ ஆர். அருணாசலம் உள்ளிட்டோர், பத்திரிகையாளர்கள் மற்றும் இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த நாகராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள், தொழில் வட்டாரத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

leave a reply

Recent News