loader
மறைந்த ரெ. நாகராஜன் (ராஜா) அவர்களுக்கு டத்தோ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா ராமலிங்கம் பிள்ளை ஆழ்ந்த இரங்கல்

மறைந்த ரெ. நாகராஜன் (ராஜா) அவர்களுக்கு டத்தோ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா ராமலிங்கம் பிள்ளை ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS-ன் முக்கிய உறுப்பினரும், உணவகத் தொழிலின் வளர்ச்சிக்காக பல்வேறு வகைகளில் பங்களிப்பு செய்தவருமான உயர்திரு. ரெ. நாகராஜன் (ராஜா) அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.

அன்னார் இயற்கை எய்திய செய்தி, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி, உணவகத் தொழில்துறையினரிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவகத் தொழிலின் வளர்ச்சிக்கும், தொழில்துறையினரின் நலனுக்கும் அன்னார் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். குறிப்பாக, PRIMAS சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்துறை சார்ந்த முயற்சிகளில் அன்னார் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையையும் துயரைத் தாங்கும் சக்தியையும் வழங்க பிரார்த்திக்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

– டத்தோ ரெனா துரைசிங்கம்
டத்தோ ரெனா ராமலிங்கம் பிள்ளை

 

0 Comments

leave a reply

Recent News