மலேசியாவின் புகழ்பெற்ற பாடகியாக வலம் வரும் லாவண்யா, தனது இனிமையான குரல் வளத்தால் பழைய மற்றும் புதிய திரைப்படப் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளார்.
மலேசியா மட்டுமின்றி தமிழகம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் நடைபெறும் இசைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து பங்கேற்று தனது இசைத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த பாடகி லாவண்யா, தமிழக அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தார். அப்போது, அமைச்சரின் முன்னிலையில் ‘குமரிப் பெண்ணின் உள்ளத்திலே’ என்ற பாடலை இனிமையாகப் பாடினார்.
லாவண்யாவின் குரல் வளத்தையும் பாடும் திறமையையும் பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், “உங்களுக்கு சிறந்த குரல் வளம் உள்ளது” எனப் பாராட்டினார்.
தமிழக அமைச்சரிடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, பாடகி லாவண்யாவின் இசைப் பயணத்தில் கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து பல்வேறு இசை மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் லாவண்யா, இசைத்துறையில் மேலும் பல சாதனைகளையும் சிறப்புகளையும் பெற வாழ்த்துகள்.
0 Comments