திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமணத்தைத் தொடர்ந்து, வைரவன்பட்டியில் உள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் மணமக்களின் திருமண விருந்து விமரிசையாக நடைபெற்றது.
அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேத்தியும், தங்கவேலு–தங்கமணி அவர்களின் பேத்தியும், பாலசுப்பிரமணி–புவனா தம்பதியரின் மகளுமான தங்கமணி MBA அவர்களுக்கும், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் இராமசிவராமன்–தனலட்சுமி தம்பதியரின் மகன் சிவ வெங்கட்ராமன் BE அவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர்–காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகே வைரவன்பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் திருமண விருந்து சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் வாசித்து, மணமக்களிடம் வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
0 Comments