loader
சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி) ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்; பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி) ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள்; பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

பெஸ்தாரி ஜெயா, ஜூலை 15-
பெஸ்தாரி ஜெயா சுங்கை டாரா ஸ்டார்த்மோர் தோட்டம் (கல்லுகுழி)
அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில்  2026 ஆம் ஆண்டுக்கான ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் ஜூலை 17 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் ஆடி வெள்ளி பூஜை ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் ஆடி வெள்ளி வழிபாடுகள் நடைபெறுவதாக ஆலயத்தின் தலைவர் திரு.இராம கணேசன் தெரிவித்தார்.

நிறைவாக செப்டம்பர் 4-ஆம் தேதி கோகுலாஷ்டமி மற்றும் மகாலட்சுமி பூஜை நடைபெறவுள்ளது.
ஆடி மாதம் முழுவதும் நடைபெறும் அனைத்து சிறப்பு வழிபாடுகளிலும் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், சிறப்பு பூஜைகளுக்கான உபயம் மற்றும் காணிக்கை வழங்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தை 016-3758273 (ஆலயத்தலைவர்) அல்லது 016-8417335 ( ஆலய அர்ச்சகர்) என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்

0 Comments

leave a reply

Recent News