loader
பினாங்கு மாநில அரசின் உயரிய விருதைப் பெற்று 'டத்தோஸ்ரீ' அந்தஸ்தில் கௌரவிக்கப்பட்டார் டான்ஸ்ரீ முருகன் துரைசாமி!

பினாங்கு மாநில அரசின் உயரிய விருதைப் பெற்று 'டத்தோஸ்ரீ' அந்தஸ்தில் கௌரவிக்கப்பட்டார் டான்ஸ்ரீ முருகன் துரைசாமி!

பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, சமூக மற்றும் பொதுச் சேவைகளுக்காக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முருகன் த/பெ துரைசாமி அவர்களுக்கு, Darjah Gemilang Pangkuan Negeri (D.G.P.N.) என்ற உயரிய மாநில விருது வழங்கப்பட்டு, அதனுடன் “டத்தோஸ்ரீ” என்ற கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது, மதம், சமூக நலன், மாநில வளர்ச்சி மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையையும், பல ஆண்டுகளாக வழங்கி வரும் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கப்பட்டதையொட்டி, மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, Dato’-Dato’ Indian Muslim Malaysia அமைப்பின் நிறுவனர் YH. Dato’ Mohammed Gazali bin Haji Mohd Hussain தனது வாழ்த்து செய்தியில், டத்தோ’ ஸ்ரீ முருகன் துரைசாமி அவர்கள் நல்ல உடல்நலம், மேலும் பல வெற்றிகள் மற்றும் இறையருளுடன் தொடர்ந்து சமூகத்திற்கும், பினாங்கு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்தின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் D.G.P.N. விருது வழங்கப்பட்டிருப்பது, டத்தோஸ்ரீ முருகன் துரைசாமியின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

 

0 Comments

leave a reply

Recent News