loader
Parti Wawasan Negara – WAWASAN NEGARA அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றது!

Parti Wawasan Negara – WAWASAN NEGARA அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றது!

புத்ராஜெயா, ஜூலை 11-
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரை பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara – WAWASAN NEGARA) என மாற்றியதை, மலேசிய சங்கங்களின் பதிவுத் துறை (RoS) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பெயர் மாற்றம் 2026 ஜூலை 6 அன்று RoS-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரம், அக்கட்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதுடன் மலேசிய அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் பரவலான அரசியல் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

பார்ட்டி வாவாசான் நெகாரா (Parti Wawasan Negara), பெரிக்கத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) கூட்டணியின் முக்கிய அங்கக் கட்சிகளில் ஒன்றாக குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் கூட்டணியின் அரசியல் வலிமையும் எதிர்கால திசையும் மேலும் வலுப்பெறும் என நம்பப்படுகிறது.

0 Comments

leave a reply

Recent News