loader
இரு விருதுகளை வென்று எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை ! I -NEXTECH புத்தாக்க போட்டியில் மிளிர்ந்த நம் மாணவர்கள் !

இரு விருதுகளை வென்று எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை ! I -NEXTECH புத்தாக்க போட்டியில் மிளிர்ந்த நம் மாணவர்கள் !

ஜாசின், ஜூலை 6-

i-NEXTECH புத்தாக்க போட்டியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரு விருதுகளை வென்று சாதித்துள்ளனர்.

i-NEXTECH 2026 எனும் 3ஆவது அனைத்துலக அடுத்த தலைமுறை புத்தாக்க தொழில்நுட்பக் கண்காட்சி ஜாசினில் நடைபெற்றது.

மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து மொத்தம் 239 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இருந்து ஸ்ரீ திருமுருகன் சக்தீஸ்வரன், திவ்யா தருமராஜ், தனுஸ்ரீ பிரவின் குமார் ஸ்ரீ தர்ஷன் சக்தீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமையாசிரியர் அனுராதா, பொறுப்பாசிரியர் நிர்மலா ஆகியோர் தலைமையில் இம்மாணவர்கள்  இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

கடும் சவால்கலுக்கு மத்தியில் எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
இரு விருதுகளை வென்றனர்.

ஜூனியர் கண்டுபிடிப்பாளர் பிரிவில் தங்கப் பதக்கம், சிறந்த விளக்கக் காணொளிக்கான சிறப்பு விருதும் அவர்கள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News